search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • தனுஷ் ஆதித்தன் 14.41 நிமிடத்தில் தாண்டி வெற்றி பெற்று தங்க பதக்கம் பெற்றார்.
    • ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்று தருவதே எனது ஒரே இலக்கு என்றார்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மேட்டுப்பாளையம் சந்தை கடையை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி மகேஸ்வரி. இவர் வீட்டு வேலை செய்து வருகிறார்.

    இவருக்கு தனுஷ் ஆதித்தன் (21). திவாகர் என 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் தனுஷ் ஆதித்தன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதி யாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் பள்ளி படிப்பு காலத்தில் இருந்து தடகள போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வந்துள்ளார்.

    இதனிடையே கடந்தாண்டு டிசம்பர் மாதம் கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்று இருந்தார்.

    இதில் 110 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் பங்கேற்றார். இதில் 14.06 நிமிடத்தில் தாண்டி முதல் பரிசை பெற்றுள்ளார்.

    இதையடுத்து இவர் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றார். அதில் 28 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் 14.41 நிமிடத்தில் தாண்டி வெற்றி பெற்று தங்க பதக்கம் பெற்றார்.

    இதையடுத்து லக்னோவில் இருந்து மேட்டுப்பாளையம் வந்த தனுஷ் ஆதித்தனுக்கு மேட்டுப்பாளையம் சர்வ வல்லமை விளையாட்டு குழுவினர் சால்வை அணிவித்து மாலை போட்டு வரவேற்பு அளித்தனர்.

    இதுகுறித்து தனுஷ் ஆதித்தன் கூறுகையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்று தருவதே எனது ஒரே இலக்கு என்றார்.

    • ெபாள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஸ்வநாதனுக்கு பாராட்டு விழா நடந்தது.
    • நிகழ்ச்சிக்கு முன்னதாக, ஒடிசா ரயில் விபத்தில் இறந்தோருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    ெபாள்ளாச்சி,

    எனது தந்தையே, என் வாழ்க்கையிலும், தொழிலிலும் முன்மாதிரி என பொள்ளாச்சியில் நடந்த பாராட்டு விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி விஸ்வநாதன் கூறினார்.

    ெபாள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஸ்வநாதனுக்கு பாராட்டு விழா பொள்ளாச்சியில் நடந்தது. வக்கீல் சங்க தலைவர் துரை வரவேற்றார்.

    விழாவில் நீதிபதி விஸ்வநாதன் பேசியதாவது:-

    பொள்ளாச்சியில் சிறு வயதில் படித்த அனுபவம் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. மேல் படிப்புக்காக வெளியூருக்கு சென்றாலும் மனதில் இருந்து பொள்ளாச்சியை நீக்க முடியாது.

    தந்தை எனக்கு கல்வியை கொடுத்ததால் நல்ல நிலைக்கு வந்துள்ளேன். ஒழுக்கத்தை எனது பெற்றோரிடம் இருந்தே கற்றுக் கொண்டேன்.

    உலகத்தில் உள்ள அனைத்து தாய்களும் தனது மகன் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பர். ஆனால் அவர்களது உழைப்பு, அர்ப்பணிப்பு வெளியில் யாருக்கும் தெரிவதில்லை.

    எனது தந்தையே என் வாழ்க்ைகயிலும், தொழிலும் முன்மாதிரியாக உள்ளார். தற்போதுள்ள வக்கீல்கள் கடுமையாக உழையுங்கள். நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களது வழக்கை செவ்வனே செய்ய முயற்சிக்க வேண்டும்.

    நமக்கு கடவுள் ஒரு பாதை வகுத்துள்ளார். அந்த பாதையில் கடமையை செவ்வனே செய்தால் அதற்கான பலன் கிடைக்கும்.

    எனது நீதிபதி பதவியை பொறுப்பாக பார்க்க விரும்புகிறேன். இதற்கு கடின உழைப்பு தேவையாகும். இந்த கண்ணோட்டத்தில் இருந்தால் தான், மக்களுக்கு நீதியை வழங்க முடியும். நான் ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் இந்த பொறுப்பில் உள்ளவரை நன்றாக பணியாற்ற கடவுள் மற்றும் பெரியோரின் ஆசி தேவை. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து வக்கீல்கள் சங்கம் சார்பில், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    பொள்ளாச்சி நீதிபதிகள், வக்கீல்கள் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக, ஒடிசா ரயில் விபத்தில் இறந்தோருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    • மொத்தம் 85 விளம்பர பலகைகள் நேற்று அகற்றப்பட்டுள்ளன.
    • விளம்பரப் பலகைகளை அகற்ற நோட்டீஸ் வழங்கி 5 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

    கோவை,

    கோவை மாநகரப் பகுதிகளில் ஒரே நாளில் 85 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

    கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே விளம்பர பலகைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் விளம்பர பலகை சரிந்து விழுந்து உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்ற உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் போலீசார் அடங்கிய குழு அமைத்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டார்.

    இதையடுத்து மாநகராட்சிப் பகுதிகளில் 100 வார்டுகளிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 80 சதவீத விளம்பரப் பலகைகள் ஏற்கெனவே அகற்றப்பட்டுவிட்டன.

    வடக்கு மண்டலத்தில் 26, கிழக்கு மண்டலத்தில் 8, மேற்கு மண்டலத்தில்16, தெற்கு மண்டலத்தில் 24, மத்திய மண்டலத்தில் 11 என மொத்தம் 85 விளம்பர பலகைகள் நேற்று அகற்றப்பட்டுள்ளன. குறிப்பாக பாலக்காடு சாலை, ஈச்சனாரி சாலை, பேரூர், ராமநாதபுரம், சிங்கா நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.

    மேலும், சில இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற நோட்டீஸ் வழங்கி 5 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களில் அகற்றப்படாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறி னார்.

    • தலையில் படுகாயம் அடைந்த ஹரிகிருஷ்ணன சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    தேனி மாவட்டம் கோவில்பட்டி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 21). இவர் மலுமிச்சம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று ஹரிகிருஷ்ணன் அதே கல்லூரியில் படிக்கும் ஆதித்யா என்பவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கினார். பின்னர் தனது நண்பரான கல்லூரி மாணவர் திருவாரூரை சேர்ந்த ஆகாஷ் என்பவரை பின்னால் அமர வைத்து மலுமிச்சம்பட்டியில் உள்ள கடைக்கு டீக்குடிக்க சென்றார்.

    பின்னர் 2 பேரும் நள்ளிரவு 2.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் திரும்பினர். மோட்டார் சைக்கிளை ஹரிகிருஷ்ணன் ஓட்டிச் சென்றார். கோவை - பொள்ளாச்சி ரோட்டில் சென்றனர்.

    அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்த ஹரிகிருஷ்ணன சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    படுகாயத்துடன் உயிருக்கு போராடிய ஆகாசை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இந்த தகவல் கிடைத்ததும் மதுக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் விபத்தில் இறந்த கல்லூரி மாணவர் ஹரிகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் செல்வகுமார் (20). சம்பவத்தன்று இவர் சுல்தான் பேட்டை- வடவேடம்பட்டி ரோட்டில் டிராக்டரை ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

    இதில் படுகாயம் அடைந்த செல்வகுமார் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்துது சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாலமுருகன் மற்றும் சூர்யாவை ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
    • ஷேக்கல்முடி போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் சக்தியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை முருகாளி எஸ்டேட்டை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 39). இவரது மகன் சூர்யா (12). இவர்கள் நேற்று முருகாளி எஸ்டேட்டில் இருந்து மொபட்டில் வால்பாறைக்கு சென்றனர்.

    அப்போது பெரியார் நகர் அருகே, எதிர்பாராதவிதமாக டிராக்டர் மோதியது. இதல் பாலமுருகன், சூர்யாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. எனவே அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்ககு கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தந்தை பாலமுருகன், மகன் சூர்யா ஆகிய 2 பேரும் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஷேக்கல்முடி போலீசார் வழக்கு பதிவு செய்து அதிவேகமாக டிராக்டர் ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தியதாக, டிரைவர் சக்தி (38) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் சூறாவளி காற்றும், பலத்த இடியும் மின்னியது.
    • ராமச்சந்திரன் தோட்டத்தில் 3 தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது.

    சூலூர்,

    கோவை சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி அருகே ராயர்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு ஊர் கவுண்டர் தோட்டம் என்னும் பகுதியில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

    இந்த தோட்டத்தில் தென்னை மரம் உள்பட பல்வேறு மரங்கள் உள்ளன. நேற்று மாலை சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையுடன் சூறாவளி காற்றும், பலத்த இடியும் மின்னியது.

    அப்போது திடீரென வெடிப்பு சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதில், தோட்டத்தில் இருந்த 3 தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் தென்னை மரங்கள் முற்றிலும் எரிந்து சேதமாகியது.

    இதுகுறித்து தோட்ட உரிமையாளர் ராமச்சந்திரன் கூறும் பொழுது வீட்டில் இருந்தபோது திடீரென பலத்த ஓசை கேட்டதாகவும் வெளியே ஓடி வந்து பார்த்தபோது தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது என்றார்.

    • பிரகாஷ் என்பவரை கஞ்சா விற்பனை செய்ததாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்தனர்
    • குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் குறித்த தகவலை போலீசாருக்கு தெரிவிக்கலாம்

    கோவை,

    கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 38) என்பவரை கஞ்சா விற்பனை செய்ததாக, பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி உத்தரவிட்டார்.

    இதன்படி பிரகாஷ் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் இதுவரை 20 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இவர்களில் 7 பேர் கஞ்சா குற்றவாளிகள். எனவே கோவை மாவட்டத்தில் குற்றசம்பவங்களில் ஈடுபடுவோர் குறித்த தகவலை 9498181212, 77081 00100 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    • சம்பவத்தன்று வீட்டில் உள்ள அனைவரும் காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினர்.
    • அய்யப்பராசு கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் அய்யப்பராசு (வயது 33). பெயிண்டர். இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் உள்ள அனைவரும் காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினர். நள்ளிரவு வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்க பணம், மோதிரம், வளையல், செயின், கம்மல் உள்பட 10 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    அதிகாலையில் எழுந்து பார்த்த போது பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அய்யப்பராசு அதிர்ச்சியடைந்தார். பின்னர்

    இது குறித்து அவர் கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். டனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கிய பெயிண்டர் வீட்டில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    தஞ்சாவூரை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி மீரா (29). கூலித் தொழிலாளி. இவர் சூலூர் அருகே உள்ள காடம்பாடியில் உள்ள தனியார் மில்லில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது அறைக்குள் நுழைந்த மர்மநபர் மீராவின் 1½ பவுன் கைசெயின், ரூ.7 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் அவருடன் தங்கி இருந்தவர்களின் 6 செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருநங்கைகள் முன்னிலையில் மருதமலை கோவிலில் திருமணம் செய்தோம்.
    • கணவரின் குடும்பத்தினர் அவரை காணவில்லை என பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    கோவை,

    ஈரோட்டை சேர்ந்தவர் மாளவிகா (வயது22).திருநங்கையான இவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார்.

    அப்போது அவர் கூறி–யதாவது:-என்ஜினீயரிங் பட்டதாரியான நான் சென்னி மலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறேன். நான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் இருந்தபோது புதுக்கோட்டையைச் சேர்ந்த கபடி பயிற்சியாளர் மணிகண்டன் (23)என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தோம். பின்னர் நாங்கள் திருமணம் செய்வது என முடிவு செய்தோம். அதன்படி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருநங்கைகள் முன்னிலையில் மருதமலை கோவிலில் வைத்து மாலை மாற்றி இருவரும் திருமணம் செய்தோம்.

    பின்னர் ஒத்தக்கால் மண்டபத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம்.

    இந்த நிலையில் எனது கணவரின் குடும்பத்தினர் அவரை காணவில்லை என பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி நாங்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பின்னர் எங்கள் 2 பேரையும் பீளமேடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு வந்த எனது கணவரின் குடும்பத்தினர் அவரை காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் அவர் மீண்டும் வரவில்லை. எங்கு சென்றார்? என்ன ஆனார்? என தெரியவில்லை. எனவே எனது காதல் கணவரை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

    • மாவட்ட வருவாய் அதிகாரி டாக்டர்.சர்மிளா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்கினார்
    • மானியத்தொகை உள்பட மொத்தம் 237 பேருக்கு 2 கோடியே 6 லட்சத்து 95 ஆயிரத்து 420 ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங் கப்பட்டு உள்ளன.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநா யக்கன்பாளையம் அருகே கூடலூரில் மாவட்ட வரு வாய் அலுவலகம் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் வடக்கு வருவாய் கோட்டாட்டாட்சி யர் கோவிந்தன், கூடலூர் நகராட்சி தலைவர் அறி வரசு, பேரூராட்சித்தலைவர் விஸ்வபிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி டாக்டர்.சர்மிளா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 80 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது சமூகப்பா துகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 60 ஆயிரமும், வருவாய் துறை மூலம் 79 பயனாளிகளுக்கு 7 லட்சத்து 26 ஆயிரத்து 971 ரூபாய் மதிப்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆதி திராவிடர் நலத்துறை மூலம் 57 பேருக்கு ஒரு கோடியே 60 லட்சத்து 5 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பில் இணையவழி பட்டாவும், மகளிர் சுய உதவிக்குழுவில் 2 பேருளுக்கு 28 லட்சம் மதிப்பிலான மானியத் தொகை, வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் 4 பேருக்கு 7 ஆயிரத்து 805 ரூபாய் மானியத்தொகை உள்பட மொத்தம் 237 பேருக்கு 2 கோடியே 6 லட்சத்து 95 ஆயிரத்து 420 ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இதில் தாசில்தார் தங்கராஜ், கமிஷனர் பால்ராஜ், சிறப்பு தாசில்தார்கள் யமுனா, சரண்யா, நகராட்சி துணைத்தலைவர் ரதி ராஜேந்திரன், வேளாண்மை உதவி இயக்குநர்கள் சபி அஹமது, நந்தினி, சபின் அஹமதுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அந்நியன் சேட் மீது ஏற்கனவே கஞ்சா, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
    • சப்-இன்ஸ்பெக்டர் அந்நியன் சேட்டை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூ ரை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் என்ற அந்நியன் சேட் (வயது 50). கூலித் தொழிலாளி.

    இவர் மீது ஏற்கனவே கஞ்சா, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.நேற்று இரவு 9.30 மணியளவில் போதையில் இருந்த அந்நியன் சேட் வெள்ளலூரில் உள்ள புறக்காவல் நிலையத்துக்கு சென்றார். அங்கு போத்தனூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் ராஜதுரை என்பவர் பணியில் இருந்தார்.

    அப்போது அங்கு சென்ற அந்நியன் சேட் சப்-இன்ஸ்பெக்டரிடம், சந்தோஷ் என்பவர் என்னி டம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கினார். ஆனால் நீண்ட நாட்களாக அவர் பணத்தை திருப்பி தரவில்லை. எனவே அந்த பணத்தை உடனடியாக வாங்கி கொடுக்க முடியுமா முடியாதா என கேட்டார்.

    அதற்கு சப்-இன்ஸ்பெக்டர் போதையில் உளராதே என கூறி அந்நியன் சேட்டை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். வீட்டிற்கு சென்ற அவர் பெட்ரோல் பாட்டிலுடன் மீண்டும் புறக்காவல் நிலையத்துக்கு வந்தார்.

    அங்கு வைத்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீ பற்ற வைத்தார். கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்நியன் சேட்டை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    • இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததில், பனை, தென்னை மரங்கள், வாழைகள் வேருடன் சாய்ந்தன
    • கோவை ரெயில் நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் தேங்கியதால், போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக கோடை மழை பெய்தது.

    எனவே அனல் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான காலநிலை நிலவியது. இந்த நிலையில் நேற்று காலை நல்ல வெயில் இருந்தது. அதன்பிறகு மாலை நேரத்தில் கருமேகங்கள் திரண்டு வந்தன. அடுத்த சில நிமிடங்களில் இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இதனால் கோவை மாநகரில் உள்ள பெரிய கடை வீதி, காந்தி பார்க், லாலி ரோடு, ரெயில் நிலையம், ராமநாதபுரம், காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், செல்வபுரம், சரவணம்பட்டி, ஆகிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து சாலையில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. எனவே அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனஓட்டிகள் மழையில் நனைந்தபடி மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு செல்வதை பார்க்க முடிந்தது.

    கோவை ரெயில் நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் தேங்கியது. எனவே அங்கு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் தடாகம், கீரணநத்தம், வேடப்பட்டி, குரும்பபாளையம் ஆகிய பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதிலும் குறிப்பாக பேரூர் பகுதியில் சூறாவளியுடன் கனமழை பெய்தது.

    றித்து தகவலறிந்த தீயணைப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர்.கோவை மாவட்டத்தில் நேற்று மட்டும் சராசரியாக 53 மி.மீ. மழை பெய்து உள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

    சின்கோனா-1, கல்லாறு-3, வால்பாறை-2, வால்பாறை தாலுகா-2, சூலூர்-12, கோவை தெற்கு-19, பீளமேடு விமான நிலையம்-6.40, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்-7.69.

    ×