search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு சுவாசிக்க முடியாமல் மூச்சுத் தினறல் ஏற்பட்டுள்ளது.
    • தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை துடியலூரை அடுத்து உள்ள அசோகபுரம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள ெரயில்வே பாலம் அருகில் கொட்டப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக இங்கு குப்பைகள் மலை போல் குவிந்துள்ளன. இங்கு அடிக்கடி மர்ம நபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்து விடுவதால் தீ விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு இங்குள்ள குப்பைகளில் இருந்து புகை வந்துள்ளது. தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது.இதன் காரணமாக அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு சுவாசிக்க முடியாமல் மூச்சுத் தினறல் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து கவுண்டம்பாளையத்தில் உள்ள கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    • நடிகர் சத்யராஜின் சகோதரியான அபராஜிதா பண்ணை வீட்டில் யானைகள் தண்ணீரை குடித்து விட்டு செல்வது வழக்கம்.
    • இறந்தது ஒரு வயதுடைய காட்டு யானை என்பதும், இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதும் தெரியவந்தது.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பாலமலை அருகே நாயக்கன்பாளையம் கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் நடிகர் சத்யராஜின் சகோதரியான அபராஜிதாவுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு வெளியே ஒரு கீழ்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது.

    வனத்தை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள் அவ்வப்போது இங்கு வந்து தண்ணீரை குடித்து விட்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த காவலாளி நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டார்.

    அப்போது தொட்டிக்குள் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான காவலாளி, சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவல் அறிந்ததும் பெரியநாயக்கன்பாளையம் வன அலுவலர் செல்வராஜ், தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தொட்டிக்குள் கிடந்த குட்டி யானையை பார்த்தனர்.

    அப்போது தொட்டிக்குள் கிடந்த யானை ஒரு வயதுடைய காட்டு யானை என்பதும், இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதும் தெரியவந்தது. காட்டு யானைகளுடன் தண்ணீர் குடிக்க வந்த போது தவறி தொட்டிக்குள் விழுந்து இறந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மண்டல உதவி பாதுகாவலர் செந்தில்குமார், உள்ளிட்ட வன அலுவலர்கள், மருத்துவர் சுகுமார் விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து இறந்த குட்டி யானையின் உடலை தொட்டியில் இருந்து வெளியே எடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காக அந்த தொட்டி உடைக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து குட்டி யானை உடற்கூராய்வு செய்யப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதற்கிடையே இன்று அதிகாலை நேரத்தில் 11-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி பண்ணை வீட்டுக்கு வந்தன. அந்த யானைகள் இறந்த குட்டி யானையை தேடி வந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த யானைகள் வீட்டுக்குள் நுழையாதவாறு வனத்துறையினர் தடுத்து பட்டாசு வெடித்து, அந்த யானைகளை வனத்திற்குள் விரட்டினர்.

    இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில் பண்ணை வீட்டுக்கு வெளியே தண்ணீர் தொட்டி உள்ளதால் யானைகள் அடிக்கடி இங்கு வந்து தண்ணீர் குடித்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

    அவ்வாறு வந்த ஒரு குட்டி யானை தான் தொட்டிக்குள் விழுந்து இறந்துள்ளது. அந்த குட்டி யானையை தேடி நேற்று 11-க்கும் மேற்பட்ட யானைகள் வந்தன. அந்த யானைகளும் இந்த தண்ணீர் தொட்டியில் நீர் அருந்துவதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளன என்றனர்.

    • ரெங்லால் மீனா கடந்த ஒரு வாரமாக தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
    • 2 நாட்கள் ஆகியும் வீட்டின் கதவு திறக்காமல் இருந்தது.

    கோவை,

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ரெங்லால் மீனா (25). இவர் சோமனூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளம் பராமரிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் இவர் கடந்த ஒரு வாரமாக தலைவலியால் அவதிப்பட்டு போத்தனூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    பின்னர் இவர் வீட்டிற்க்கு அருகில் உள்ள கடையில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் 2 நாட்கள் ஆகியும் வீட்டின் கதவு திறக்காமல் இருந்தது. இதனையடுத்து அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து கரும்மத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். மேலும் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி சுரேஷ்குமாரின் செல்போனை வாலிபர் திருடினார்.
    • சுரேஷ்குமார் கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் நேற்று இரவு மது வாங்குவதற்காக டாஸ்மாக் கடையில் கூட்டம் அலைமோதியது. அப்போது ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது43) என்பவரும் அங்கு மது வாங்குவதற்காக டாஸ்மாக் கடையில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சுரேஷ்குமாரின் செல்போனை திருடி விட்டு தப்பித்து ஓடி விட்டார். இதுகுறித்து சுரேஷ்குமார் கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் அந்த வாலிபர் ராயபுரம் பகுதியை சேர்ந்த தீப்ஸ்வர் என்ற பிரில் (31) என்பவர் தெரியவந்தது. அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதன் அடிப்படையில் வழக்குகள் விசாரணையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கேசவமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு கோவைக்கு சென்றார்.
    • அரை பவுன் தங்க கம்மல் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை மாயமாகி இருந்தது.

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை காந்தி நகரை சேர்ந்தவர் கேசவமுருகன் (வயது60). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இணை செயலாளராக உள்ளார்.

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு கோவைக்கு சென்றார். பின்னர் நேற்று இரவு மீண்டும் அவர் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தார்.

    அங்கு வீட்டில் பீரோவில் இருந்த அரை பவுன் தங்க கம்மல் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை மாயமாகி இருந்தது.

    இவர் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர், வீட்டிற்குள் புகுந்து நகை பணத்தை திருடியது தெரியவந்தது.

    கேசவமுருகன் இதுகுறித்து வால்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக போலீசார் வீட்டில் சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் பார்வையிட்டு, விசாரித்து வருகின்றனர்.

    • குழந்தை திடீரென கால் இடறி சாலையில் விழுந்து விட்டது.
    • பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி சத்தியபிரியா(வயது22).

    இவர்களுக்கு 2½ வயதில் சுபிக்ஷா என்ற மகள் இருந்தார். சம்பவத்தன்று, சத்தியபிரியா தனது மகளுடன் அருகே உள்ள கடைக்கு சென்றார்.

    பின்னர் மகளை தூக்கி கொண்டு நடந்து வந்தார். அப்போது குழந்தை தன்னை இறக்கி விடுமாறும், தான் நடந்து வருவதாகவும் கூறியது. இருப்பினும் தாய் இறக்கி விட மறுத்தார்.

    ஆனால் குழந்தை தொடர்ந்து அடம்பிடித்ததால் சத்தியபிரியா மகளை இறக்கி விட்டார். குழந்தை நடந்து சென்று கொண்டிருந்தது. வீட்டின் அருகே வந்த போது குழந்தை திடீரென கால் இடறி சாலையில் விழுந்து விட்டது.

    இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியான சத்தியபிரியா குழந்தையை தூக்கி கொண்டு அருகே இருந்த கிளினிக்கு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு குழந்தை பார்த்த டாக்டர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இதையடுத்து பெற்றோர் குழந்தையை அழைத்துக் ெகாண்டு, சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைகேட்டதும் பெற்றோர் கதறி அழுதனர். இது அங்கு இருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமியையும் அவரது தந்தையையும் தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
    • இதயைடுத்து சிறுமியின் தாய் காரமடை போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சத்யா (வயது 32). இவர்களது வீட்டின் அருகே முருகேசன் (20) என்பவர் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று சத்யாவின் 12 வயது மகள் தனது வீட்டு முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த முருகேசன், சிறுமியிடம் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என கேட்டு தகராறு செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டார். அவரது தாய் முருகேசனை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தகாத வார்த்தைகளால் பேசி சத்யாவை தாக்கினார். பின்னர் சிறுமியையும் அவரது தந்தையையும் தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து சிறுமியின் தாய் காரமடை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    • உக்கடம் பஸ் நிலையம் வரும்போது 2 வாலிபர்கள் குடிபோதையில் பஸ்சில் ஏறினர்.
    • போத்தனூர் போலீஸ் நிலையத்தில் கண்டக்டர் துரைமுருகன் புகார் செய்தார்.

    குனியமுத்தூர்,

    கோவை கிணத்துக்கடவு அருகே நாலாட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைமுருகன் (23) இவர் காந்திபுரம் -வெள்ளலூர் செல்லும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று காந்திபுரத்தில் இருந்து வெள்ளலூருக்கு பஸ் புறப்பட்டது. அப்போது உக்கடம் பஸ் நிலையம் வரும்போது இரண்டு வாலிபர்கள் குடிபோதையில் பஸ்சில் ஏறினர்.

    பஸ்சில் ஏறியது முதல் இருவரும் ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசிக்கொண்டு பிறருக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர். துரைமுருகன் அதை கண்டிக்கும் போது, அவரை இருவரும் சேர்ந்து மிரட்டினர். பஸ் பயணம் செய்பவர்களிடமும் தகாத வார்த்தைகளால் இருவரும் பேசி வந்தனர். போத்தனூர் ஜி.டி.டேங்க் பஸ் ஸ்டாப் அருகே வரும்போது இருவரும் எல்லை மீறி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி டிரைவர் பஸ்சை திருப்பி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தார். போலீஸ் நிலையத்திற்குள் பஸ் செல்வதை கண்டதும் ,ஒரு வாலிபர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். இன்னொருவரும் இறங்க முயற்சிக்கும் போது பயணிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் கண்டக்டர் துரைமுருகன் புகார் செய்தார்.

    போலீஸார் அந்த நபரிடம் விசாரணை செய்தபோது, அவர் சுந்தராபுரம் சில்வர் ஜூப்ளி விதியை சேர்ந்த ராகுல் (18)என்பது தெரியவந்தது. போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய பிரசாந்த் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பயணிகளுடன் பஸ் ஒன்று, போலீஸ் நிலையத்துக்குள் வந்து நின்ற சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும்.
    • முதல் குற்றத்திற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் மனித கழிவுகள், கழிவுநீர் மற்றும் பிறக்கழிவுகளை வாகனங்கள் மூலமாக முறையற்ற முறையில் வெளியேற்றுவதை தடுக்க பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் வினோத் கூறியதாவது:-

    மனித கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் 2 ஆண்டு செல்லத்தக்க வாகன உரிமம், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும்.

    இதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரம். உரிமம் பெற்றவர் தவிர வேறு எந்த நபரும் கட்டிடத்தில் இருந்து மனித கழிவுகள், கழிவுநீரை கொண்டு செல்வது மற்றும் அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்துவது சட்ட விதிமுறைகளுக்கு முரணானது. உரிய உரிமம் பெற்றவர்கள் உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி நேரம், வழி ஆகியவற்றை பின்பற்றி குறிப்பிடப்பட்ட இடத்தில் முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

    உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்டபடி ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்வதுடன் அந்த கருவி செயல்படுவதையும் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து தரவை அனுப்புவதையும் உறுதி செய்ய வேண்டும்.

    உரிமத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி விதிமீறல்கள் எதுவும் கண்டறியப்பட்டால் முதல் குற்றத்திற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம். 2-வது மற்றும் தொடர் குற்றங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம். தொடர் குற்றங்களை செய்தால் உரிமத்தை இடைநிறுத்தம் அல்லது ரத்து செய்வதுடன் குறிப்பிட்ட கருவி அல்லது உபகரணங்கள் உள்ளிட்ட எந்தவொரு வாகனத்தையும் அல்லது பொருட்களையும் பறிமுதல் செய்யவும் வழிவகை உள்ளது.இதேபோல மேட்டுப்பாளையம் நகராட்சியில் அகற்றப்படும் கழிவுகளை நகராட்சி நிர்வாகம் அறிவிக்கப்படும் இடங்களில் மட்டுமே அப்புறப்படுத்த வேண்டும். கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பதிவு செய்யாவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் குற்றவியல் வழக்கு தொடரப்படும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மணிகண்டன் குடிேபாதையில் காவியாஞ்சலி வயிற்றில் மிதித்தார்.
    • போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மதுக்கரை அருகே உள்ள முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). கூலித் தொழிலாளி. இவரது மனைவி காவியாஞ்சலி (21). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரிஸ்வந் (3) என்ற மகன் உள்ளார்.

    இந்தநிலையில் காவியாஞ்சலி 3 மாத கர்ப்பமாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் வேலைக்கு சென்று விட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதன் காரணமாக கணவன் -மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தனது மனைவி கர்ப்பிணி என்று கூட பாராமல் அவரது வயிற்றில் மிதித்தார். இதில் வலி தாங்க முடியாமல் காவியாஞ்சலி சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மீட்டு செட்டிப்பாளையம் அவ்வை நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருந்த காவியாஞ்சலிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது காவியாஞ்சலிக்கு கரு கலைந்தது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் தனது கரு கலைந்ததற்கு காரணமான தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இந்த பஸ் நிலையம் கடந்த 1984 -ம் ஆண்டு கட்டப்பட்டது.
    • பஸ் நிலையத்தை புனரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் கடந்த 1984 -ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கிருந்து கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பஸ்கள் வந்து செல்கின்றன.

    அதேபோல் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், திருச்சி, கரூர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ் நிலையத்தில் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகளும் இயங்கி வருகின்றன. நாள்தோறும் மேட்டுப்பாளையம் பஸ்நிலையத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட பணிக்காகவும், வேலைக்கு செல்வோரும்,பள்ளி, மாணவ,மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட உள்நாடுகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் வந்தடைந்த பின்னர் மலைகளின் அரசி ஊட்டிக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் பஸ் நிலையம் கட்டப்பட்டு சுமார் 39 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் கட்டிடத்தின் பல பகுதிகள் விரிசல் அடைந்தும், சிதில மடைந்தும்,மேல் பூச்சுகள் இல்லாமல் பொலிவு இழந்தும் காணப்பட்டு வருகிறது.

    மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தை புனரமைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனையடுத்து தமிழக அரசு மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தை புனரமைக்க உத்தரவிட்டது. முதற்கட்டமாக மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனையொட்டி நேற்று திருப்பூர், கோவை பேருந்துகள் நிற்கும் இடங்களில் மண் பரிசோதனை ஆலோசகர்களால் மேற்கொள்ளப்பட்டது. மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் சுமார் 39 வருடங்களுக்கு இடித்து மீண்டும் புனரமைக்கப்பட உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் வினோத் கூறுகையில் பஸ் நிலையத்தை புனரமைக்கும் வகையில் முதற்கட்டமாக மண் பரிசோதனை ஆலோசகர்களால் பஸ் நிலைய பகுதிகளில் மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் ஆலோசகர்களால் அறிவிக்கப்பட்ட பின்னர் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த அறிக்கையினை ஆய்வு செய்த பின்னர் பஸ் நிலையத்தை புனரமைக்கும் பணி தொடங்கும் என தெரிவித்தார்.

    • இந்த திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்ததாரர்கள் தேர்வு ஏப்ரல் 18 -ந் தேதி நடைபெறுகிறது.

    கோவை,

    ஐகோர்ட்டு அறிவுறுத்தல்படி கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கூடுதலாக ரூ.10 பெற்றுக்கொண்டு விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலி பாட்டில்களை மீண்டும் கடையில் ஒப்ப டைத்து விட்டு கூடுதலாக வழங்கிய ரூ.10 -ஐ பெற்றுகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஜான் கூறியதாவது:

    கோவை மாவட்டத்தில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் 10-க்கு 10 என்ற அளவிலே உள்ளது. இதில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில் பெட்டிகளால் ஏற்கெனவே பணியாளர்களுக்கு போதிய இடவசதியில்லாமல் நெருக்கடி காணப்படுகிறது. தற்போது, காலி மது பாட்டில்கள் வைப்பதற்கு இடமில்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். காலி பாட்டில்களை திருடுவதற்கு வாய்ப்புள்ளதால் வெளியிலும் வைக்க முடியாத நிலை உள்ளது.

    திட்டம் செயல்பாட்டிற்கு வந்து 10 நாள்களுக்கு மேலாகியும் ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்படாததால் அனைத்து கடைகளிலும் காலி பாட்டில்கள் வைக்க இடமில்லாமல் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேபோல் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனால் ஏற்கெனவே பணிச்சுமையுடன் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தால் ஊழியர்களுக்கு மேலும் பணிச்சுமை அதிகரித்துள்ளது. விற்பனை நேரத்தில் காலி பாட்டில்களை பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காலிப்பாட் டில்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தினால் ஊழியர்கள் பணியாற்ற எளிதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பாக கோவை வடக்கு மண்டல டாஸ்மாக் மேலாளர் செல்வன் கூறியதாவது: காலி மதுபாட்டில்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்ததாரர்கள் தேர்வு ஏப்ரல் 18 -ந் தேதி நடைபெறுகிறது. ஒப்பந்ததா ரர்கள் நியமி க்கப்பட்டவுடன் காலி பாட்டில்கள் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின் மூலம் பொது இடங்களில் காலி பாட்டில்களை வீசிச் செல்லும் நிலை குறைந் துள்ளது என்றார்.

    கோவை, தெற்கு மண்டலத்தில் உள்ள 139 கடைகளில் கடந்த 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை 19 லட்சத்து 24 ஆயிரத்து 708 மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 14 லட்சத்து 4 ஆயிரத்து 565 பாட்டில்கள் மட்டுேம திரும்ப பெறப்பட்டுள்ளன. 5.20 லட்சம் பாட்டில்கள் திரும்ப வழங்கப்படாமல் உள்ளது.

    வடக்கு மண்டலத்தில் உள்ள 166 கடைகள் மூலம் கடந்த 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை 17 லட்சத்து 56 ஆயிரத்து 997 மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 12 லட்சத்து 91 ஆயிரத்து 506 காலி பாட்டில்கள் மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளன. 4.65 லட்சம் காலி பாட்டில் கள் வழங்கப்படாமல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×