search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • பசு மாடுகளுக்கு ஏற்படும் பெரியம்மை நோயானது வைரஸ் நோயாகும்.
    • நாட்டு மாடுகளை விட கலப்பின மாடுகளில் இந்த பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.

    கோவை,

    மாடுகளில் ஏற்படும் பெரியம்மை நோய் பாதிப்பை தடுக்கும் வழிமுறைகள் குறித்து கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொர்பாக அவர் கூறியதாவது: பசு மாடுகளுக்கு ஏற்படும் பெரியம்மை நோயானது வைரஸ் நோயாகும். ஈ, கொசு, உண்ணிகள் போன்ற கடிக்கும் பூச்சிகள் மூலம், பாதிக்கப்பட்ட மாடுகளில் இருந்து மற்ற மாடுகளுக்கு பரவுகிறது. இதுதவிர, நோயுற்ற மாடுகளின் எச்சம், ரத்தம், கொப்புளங்கள், விந்தணுக்கள் மூலமும் பரவுகிறது. இதன்மூலம் கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. நாட்டு மாடுகளை விட கலப்பின மாடுகளில் இந்த பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.

    மாடுகளுக்கு அதிக காய்ச்சல், பசியின்மை, சோர்வு, உடல் எடை குறைதல், கண்களில் வீக்கம், நீர் வடிதல், அதிக உமிழ்நீர் சுரப்பு, பால் உற்பத்தி குறைதல், தலை, கழுத்து கால்கள், இனப்பெருக்க உறுப்புகள் போன்றவற்றில் 2 முதல் 5 செ.மீ அளவுக்கு கொப்புளங்கள் தென்ப டுதல் இந்நோயின் அறிகு றிகள் ஆகும். கொப்புளங்கள் உறுதியாக, வட்டமாக நன்கு உப்பியிருக்கும். பெரிய கொப்புளங்கள் கீழ் பிடித்து புண்ணாகி பின்னர், தழும்புகள் ஏற்பட்டு இறுதி வரை மறையாது. கொப்பு ளங்களில் புழுக்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது.

    நோயை தடுக்க நோயுற்ற மாடுகளை தனிமைப்படுத்து வதுடன், மாடுகளை பராமரிக்கும் இடத்தின் சுத்தம், சுகாதாரம் மிகவும் அவசியம். கிருமிநாசினியை கொண்டு கொட்டகையை சுத்தம் செய்ய வேண்டும். கொட்டகையை காற்றோட்டமாகவும், சூரிய ஒளி படுமாறும் அமைக்க வேண்டும். இந்த நோய்க் கென தனியே தடுப்பூசி இல்லை. இருப்பினும் வெள்ளாட்டில் அம்மை பாதிப்பை ஏற்படுத்தும் வைரசும் ஒரே மாதிரி இருக்கும்.எனவே, அந்த தடுப்பூசியே மாடுகளுக்கும் செலுத்தப்படுகிறது. பிப்ரவரி வரை 1.90 லட்சம் தடுப்பூசிகள் கோவையில் செலுத்தப்பட்டுள்ளன.

    மூலிகை வைத்திய முறையும் இந்நோய்க்கு சிறந்தது. பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு வெற்றிலை 10, மிளகு 10 கிராம், வெல்லம் ஆகியவற்றை அரைத்து தடவி விட வேண்டும்.

    காயத்துக்கு வெ ளிப்பூச்சாக குப்பைமேனி இலை, வேப்பிலை, துளசி இலை, மருதாணி இலை (ஒவ்வொன்றிலும் ஒரு கைப்பிடி), மஞ்சள்தூள் 20 கிராம், 10 பூண்டு ஆகியவற்றை அரைத்து, அரை லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யில் கலந்து கொதிக்க வைத்து ஆறவிட்டு, காயங்களை சுத்தப்படுத்திய பின், மருந்தை அதன் மேல் தடவ வேண்டும்.

    காயத்தில் புழுக்கள் இருப்பின் சீத்தாப்பழ இலையை அரைத்து தடவ வேண்டும். அல்லது பச்சை கற்பூரத்தை தேங்காய் எண்ணெய்யில் கலந்து காயத்தில் விட்டு, புழுக்களை அப்புறப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவிலில் வைத்து ஒரு பெண்ணை புரோக்கர் காண்பித்தார்.
    • இதுபற்றி வாலிபர் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    சூலூர்,

    சூலூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பெண் தேடி வந்தார். அவருக்கு 40 வயதை கடந்து விட்டது. இருந்தாலும் பெண் கிடைக்காமல் பல திருமண புரோக்கர்களை நாடினார்.

    அதேபோல ஆனைமலையைச் சேர்ந்த திருமண புரோக்கர் ஒருவர் பற்றி வாலிபருக்கு தெரியவந்தது. அந்த புரோக்கர் தன்னிடம் கேரளாவில் வரன் தேடும் பல பெண்களின் ஜாதகங்கள் உள்ளன, உங்களுக்கு நிச்சயம் பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பதாக அவர் தெரிவித்தார்.

    உடனே தனக்கு ரூ.60 ஆயிரம் அனுப்பி வைக்கும்படி புரோக்கர் தெரிவித்தார். வாலிபரும் அவரை நம்பி புரோக்கர் கொடுத்த வங்கி கணக்கிற்கு ரூ.60 ஆயிரம் அனுப்பி வைத்தார். அந்த புரோக்கர் மூலம் கேரளாவைச் சேர்ந்த புரோக்கர், சூலூர் வாலிபரை தொடர்பு கொண்டார். நீங்கள் ஆலத்தூர் அருகே மாங்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வாருங்கள், அங்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சி வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். உடனே வாலிபரும் கேரளா சென்றார். கோவிலில் வைத்து ஒரு பெண்ணை புரோக்கர் காண்பித்தார். வாலிபருக்கும் பெண்ணை பிடித்து போக திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். அடுத்தக்கட்டமாக கேரளாவில் இருந்து சிலர் சூலூர் வாலிபரின் வீட்டுக்கு வந்து சென்றனர்.

    அதன்பிறகு வாலிபர், ஆலத்தூர் புரோக்கரையும், பெண் வீட்டினரையும் தொடர்பு கொண்டு திருமணத்தை எப்போது வைத்து கொள்வது என விசாரித்தார். ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. உடனே ஆனைமலை புரோக்கரை பிடித்து வாலிபர் விசாரித்தார். அதற்கு அவர் வாலிபர் கொடுத்த பணத்தை கேரளாவைச் சேர்ந்த புரோக்கருக்கு கொடுத்து விட்டதாக தெரிவித்தார்.

    உடனே வாலிபர் கேரளாவுக்கு நேரில் சென்று விசாரித்தார். அப்போது அந்த பெண் வீட்டார் கொடுத்த முகவரி போலி என்பது தெரியவந்தது. மேலும் அந்த பெண் திருமணம் ஆனவர் என்பதும், வாலிபரை ஏமாற்ற மணப்பெ ண்ணாக காட்டியதும் தெரியவந்தது. பணம் பறிக்கும் நோக்கத்தில் ஆலத்தூர் புரோக்கர் மற்றும் பெண் குடும்பத்தினர் நாடகமாடிய விவரம் தெரியவந்தது.

    இதுபற்றி ஆலத்தூர் புரோக்கரை தொடர்பு கொண்டு வாலிபர் பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். ஆனால் அவர் பணம் திருப்பி கொடுக்க மறுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்தார். இதுபற்றி வாலிபர் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குன்னத்தூரை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது50). கூலி தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (55).

    இந்நிலையில் அமல்ராஜுக்கு குடி பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று இவர் குன்னத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்துவதற்க்கு சென்றார். அப்போது அளவிற்க்கு அதிகமாக மது அருந்திவிட்டு அந்த பகுதியில் மயக்கம் அடைந்து திடீரென அவர் நிலைகுலைந்து மயங்கி சுருண்டு விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அமல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்- மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்ப்பட்டது.
    • சதிஷ்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை,

    தஞ்சை மாவட்டம் கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார் (வயது 35). இவர் கோவை கோவில்பாளையத்தில் தங்கி வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா (21). இவர்களுக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்நிலையில் சதிஷ்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் தினமும் இவர் மது குடித்து விட்டு வந்து இவரது மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். சம்பவத்தன்று சதிஷ்குமார் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்ப்பட்டது. அப்போது வீட்டில் தனியாக இருந்த சதிஷ்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பின்னர் இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சதிஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இன்று காலை 6 மணியளவில் குடோனில் இருந்த கரும்புகை வந்தது.
    • பஞ்சு மெத்தை குடோனில் பற்றி எரிந்த தீயை 3 மணி நேரம் போராடி அனைத்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டை மேட்டை சேர்ந்தவர் முகமது சேக் (வயது 48).

    இவர் கோவைப்புதூர் அருகே உள்ள அறிவொளி நகரில் பஞ்சு மெத்தை குடோன் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

    இன்று காலை 6 மணியளவில் குடோனில் இருந்த கரும்புகை வந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மதுக்கரை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக தீயணைப்பு வீரர்கள் 10 பேர் 4 லாரிகளில் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பஞ்சு மெத்தை குடோனில் பற்றி எரிந்த தீயை 3 மணி நேரம் போராடி அனைத்தனர். இந்த விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மெத்தைகள் எரிந்து நாசமானது.

    இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பஞ்சு மெத்தை குடோனில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டி.ஐ.ஜி., விஜயகுமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் தலைமையில் நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் நிர்வாகிகள், கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

    கோவை,

    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கிடையே போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்பாட்டில் இருந்து கல்லூரி மாணவர்களை மீட்டு நல்வழிப்படுத்த வேண்டி ஆரம்பிக்கப்பட்ட முன் முயற்சி திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் மாவட்டக் காவல் அலுவலகத்தில் கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி., விஜயகுமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

    இதில் கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் பேசியதாவது:-

    கோவை மாவட்டத்தில் கல்லூரி நிர்வாகங்களின் ஒத்துழைப்பு மூலம் கல்லூரி மாணவர்களுக்கிடையே புழங்கும் போதைப் பொருள்களையும், விற்பவர்களையும் கட்டுப்படுத்த வருங்காலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கல்லூரி நிர்வாகம் மாணவர்களைக் கொண்டு போதைப் பொருள்களுக்கு எதிரான வாட்ஸ்-அப் குழுக்களை தொடங்க வேண்டும். அத்துடன் மாதம் ஒருமுறை காவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே நல்லுறவு ஏற்படுத்தவும், போதைப்பொருள் உபயோகத்தை முழுமையாக கட்டுப்படுத்தவும் வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பேசுகையில், கல்லூரி மாணவர்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தி போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்லூரிகளுக்கு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும்.

    கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பணியாற்றும் காவலர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிறப்பு பயிற்சி கொடுத்து அவர்கள் மூலம், மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மறுவாழ்வு மையங்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

    நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் நிர்வாகிகள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • இளம்பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது
    • இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் அக்கா மற்றும் அவரது கணவருக்கு தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வாலிபருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினார்.

    இதனால் இளம்பெண் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து உடலில் டீசலை ஊற்றி தீ பற்ற வைத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் தீ அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று இளம்பெண்ணை மீட்டனர்.

    பின்னர் அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இளம் ெபண்ணுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இளம்பெண்ணை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடக்கிறது.
    • பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக வருவதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    கோவை,

    அ.தி.மு.க பொதுச்செ யலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக முன்னாள் முதல் அமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை கோவைக்கு வருகை தருகிறார்.

    கோவை மாவட்ட அ.தி.மு.க சார்பில் கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடக்கிறது.

    இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நாளை மாலை சேலத்தில் இருந்து கார் மூலமாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவைக்கு வருகிறார்.

    கோவை வரும் எடப்பாடி பழனிசாமிக்கு கோவை-அவினாசி சாலையில் விமான நிலைய பகுதியில் இருந்து காளப்பட்டியில் விழா நடைபெறும் மண்டபம் வரைக்கும் அ.தி.மு.க தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    அவர்களின் வரவேற்பை பெற்றுக்கொள்ளும் அவர், பின்னர் காளப்பட்டியில் பாராட்டு விழா நடக்கும் மண்டபத்திற்கு செல்கிறார். பாராட்டு விழாவுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்குகிறார்.

    இந்த விழாவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். விழாவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்தி பேசுகிறார்கள்.

    இந்த விழாவில் கோவை மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.இந்த விழா முடிந்த பின்னர், எடப்பாடி பழனிசாமி கார் மூலமாக விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி கோவைக்கு வருகை தர உள்ளதால் அ.தி.மு.கவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். கோவை வரும் அவருக்கு மிக பிரம்மாண்டமான அளவில் வரவேற்பு அளிக்கவும் தயாராகி வருகிறார்கள்.

    • இளங்கோ கூலி வேலை செய்து வருகிறார்.
    • பணம் பறித்த ஸ்ரீஹரியை போலீசார் கைது செய்தனர்.

    கோவை,

    கோவை நீலிகோண ம்பாளையம் அருகே செட்டியார் தோட்டத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது50).

    இவர் அந்த பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஸ்ரீஹரி (20). சம்பவத்தன்று இளங்கோ வீட்டில் இருந்தார். அப்போது ஸ்ரீஹரி அவரது வீட்டிற்கு சென்று மது அருந்துவதற்கு பணம் தரும்படி கேட்டார். இதனையடுத்து அவர் என்னிடம் பழனி முருகன் கோவிலுக்கு செல்வதற்கு மட்டுமே பணம் உள்ளது என தெரிவித்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீஹரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் இருந்த ரூ.250 பணத்தை பறித்தார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இது தொடர்பாக அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை திருடி சென்ற ஸ்ரீஹரியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மின்கம்பங்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டு அவற்றை மாற்றி அமைக்க உத்தர விடப்பட்டுள்ளது
    • சோலார் மின் வேலிகளை சட்டப்படி முறையாக பயன்படுத்துமாறும் வலியுறுத்த ப்பட்டது.

    கோவை,

    கோவை மாவட்ட வனப்பகுதிகளில் யானை வழித்தடங்களில் தாழ்வான மின்பாதைகளை அதிகாரி கள் ஆய்வு செய்தனர்.

    தருமபுரி மற்றும் கோவை வனப்பகுதிகளில் மின்சாரம் தாக்கி யானைகள் இறந்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள வனப் பகுதிகளில் தாழ்வான மின்கம்பங்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டு அவற்றை மாற்றி அமைக்க உத்தர விடப்பட்டுள்ளது.

    கோவை வனக்கோட்டத்தில் உள்ள வனப்பகுதிகள், வன எல்லைப் பகுதிகள், விளை நிலங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள கிராமங்களில் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மின் இணைப்புகள் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதா? சோலார் மின் வேலிகளில் திருட்டுத்தனமாக உயரழுத்த மின்சாரம் பாய்ச்சப்படு கிறதா என்பதையும் ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

    சீரநாயக்கன்பாளையம் கோட்டத்திற்குட்பட்ட மலையடிவார பகுதிகளில் உள்ள யானை வழித்தடங்களில் பழுதான மின்கம்ப ங்களை மாற்றுவதற்கும் மற்றும் தாழ்வாக உள்ள மின்பாதைகளை சரி செய்யும் பணி இன்று நடைபெற்றது.

    இதில் வள்ளியம்மன் கோவில் வீதி, கணபதி நகர், தி.ரு.வி.க காலனி, மருத மலை அடிவார பகுதிகள், சாடிவயல், பூண்டி, வடிவே லம்பாளையம், தொப்பிலி பாளையம், பெருமாள் கோவில் வீதி, சென்னனூர், கரடிமடை, மத்திபாளையம், தீத்திபாள ையம்பஞ்சாயத்து, அய்யாசாமி கோவில் சுற்று வட்டார பகுதி, ராமசெட்டி பாளையம், ஜெகநாதன் நகர், கே.பி.எஸ் காலனி, குப்பேபாளையம், வளைய ம்பாளையம், காளியம்பா ளையம், நரசீபுரம் மற்றும் கீரின் ஹோம் ஆகிய பகுதிகளில் நடந்தது.

    மேலும் பேரூர் வட்டத்துக்குட்பட்ட கலிக்கநாயகன்பாளையம் கிராமம், ஓணாப்பாளை யம், கிரீன் ஹோம் உள்ளிட்ட வனப் பகுதிக்கு ட்பட்ட யானை வழித் தடங்களில் பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வ ழுத்த மின்பாதைகள், மின்பாதைகளில் உள்ள மரங்கள் ஆகியவற்றை வருவாய்த்துறை, வனத்து றையினர் கொண்ட குழுவினர் கணக்கெடுத்துக் கொண்டனர்.

    அப்போது தாழ்வாக செல்லும் மின் இணைப்பு களால் வன உயிரினங்கள் குறிப்பாக யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், சோலார் மின் வேலிகளை சட்டப்படி முறையாக பயன் படுத்துமாறும் அப்பகுதி மக்களிடம் வலியுறுத்த ப்பட்டது. வன எல்லை ப்பகுதிகளில் தாழ்வாக மின் இணைப்புகள் அமைக்கப்ப ட்டிருந்தாலோ,

    சட்டத்து க்கு புறம்பாக மின்சாரத்தை பயன்படுத்தி மின்வேலி அமைக்கப்பட்டிருந்தாலோ இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    • அதிக கட்டணம் வசூலிப்பது தான் பிரச்சினைக்கு முக்கிய காரணம் என அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
    • கோவையிலிருந்து ஒரு கிலோ சரக்கு கையாள ரூ.130 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    கோவை,

    கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களிலும் விமான சேவை வழங்கப்படுகிறது.

    தினமும் இரவு 7.45 மணியளவில் கோவையில் தரையிறங்கும் விமானம் மீண்டும் 8.45 மணியளவில் சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்லும்.

    தினமும் பயணிகள் இருக்கைகள் முழுவதும் நிரம்பி இயக்கப்படும் இந்த விமானத்தில் சரக்குகள் மட்டும் மிக குறைந்த அளவே கையாளப்படுகின்றன.

    திருச்சி, கொச்சின் விமான நிலையங்களுடன் ஒப்பிடுகையில் கோவையில் அதிக கட்டணம் வசூலிப்பது தான் இப்பிரச்சினைக்கு முக்கிய காரணம் என அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவையில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட இரு வெளிநாடுகளுக்கு மட்டும் நேரடி விமான சேவை உள்ளது. ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது.

    இதில் ஒவ்வொரு முறையும் 3 டன் எடையிலான சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்படும் போதும் வாரம்தோறும் அதிகபட்சமாக 3 டன் ஒரு சில வாரங்களில் அதற்கு குறைவாகவே சரக்குகள் கையாளப்படுகின்றன.

    உதாரணமாக கோவையிலிருந்து ஒரு கிலோ சரக்கு கையாள ரூ.130 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருச்சியில் ரூ.100 மற்றும் கொச்சினில் ரூ.70 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

    இதனால் திருச்சி மற்றும் கொச்சின் விமான நிலையங்களில் இருந்து சிங்கப்பூருக்கு அதிகளவு சரக்குகள் கையாளப்படுகின்றன.

    கோவை விமான நிலையத்தில் சரக்கு கையாளும் அளவை அதிகரிக்கும் நோக்கில் விரைவில் பிரத்யேக அலுவலகத்தை திறக்க தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    அலுவலகம் திறக்கப்பட்ட பின் கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு பொறியியல்துறை சார்ந்த மற்றும் உணவு பொருட்கள் உள்ளடக்கிய பல்வேறு சரக்குகள் கையாள தற்போது விதிக்கப்படும் கட்டணத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ரூ.172.21 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா அமைக்க திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
    • முதல் கட்டமாக 45 ஏக்கரிலும், 2-ம் கட்டமாக 120 ஏக்கரிலும் பூங்கா அமைக்கப்படும்.

    கோவை,

    கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 165 ஏக்கர் பரப்பளவில் மத்திய ஜெயில் அமைந்துள்ளது.

    இந்த ஜெயிலை இடம் மாற்றி விட்டு அந்த இடத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

    இதை தொடர்ந்து முதல் கட்டமாக ஜெயில் வளாகத்தில் உள்ள 45 ஏக்கர் நிலம் செம்மொழி பூங்காவுக்காக மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.

    பின்னர் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் செம்மொழி பூங்கா திட்ட பணி மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டது.

    மாநகராட்சி வசம் உள்ள ஜெயில் இடத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.172.21 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கோவையில் செம்மொழி பூங்கா அமைக்க தமிழக சட்டசபையில், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

    பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் 2 கட்டங்களாக செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 45 ஏக்கரிலும், 2-ம் கட்டமாக 120 ஏக்கரிலும் பூங்கா அமைக்கப்படும்.

    இயற்கையை பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மாணவர்களின் கல்வி ஆராய்ச்சி சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றுக்கு பயன்தரும் வகையிலும் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறந்த பொழுது போக்குக்கு அளிக்கும் வகையிலும் உலக தரத்தில் இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது.

    பூங்காவில் வரலாற்று சிறப்புகளை அறியும் வகையில் குறிஞ்சி வனம், செம்மொழி வனம், மரவனம் ஆகியவை அமைகின்றன.

    பூங்காக்களின் வகை, அதன் தன்மைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மகரந்த பூங்கா, நறுமண பூங்கா, மூலிகை பூங்கா போன்ற 16 வகையான பூங்காக்கள் கலை நுட்பத்டன் அமைக்கப்பட உள்ளன.

    இந்த பூங்கா வளாகத்தில் விழா நடத்துவதற்கான மண்டபங்கள், உள் அரங்கம், வெளியரங்கம், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், விற்பனை அங்காடிகள், ஓய்வறைகள், திறந்தவெளி அரங்கம், உடற்பயிற்சி செய்யும் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×