search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • 76 தனியார் பள்ளி பஸ்களில் குறைபாடு கண்டறியப்பட்டு, மீண்டும் ஆய்வுக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
    • பிரச்சினை இருந்தால் அதனை சரிசெய்து விட்டே வாகனங்களை இயக்க வேண்டும்

    கோவை,

    போக்குவரத்து துறை, பள்ளி கல்வித் துறை, காவல் துறை சார்பில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்பணியை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வை யிட்டார்.

    பின்னர், கலெக்டர் கிராந்திகுமார்பாடி பள்ளி வாகனங்களின் டிரைவர்க ளிடம் கூறியதாவது:-

    தினந்தோறும் வாகன ஓட்டுநர்கள் தங்களது வாகனங்கள் நல்ல நிலையில் உள்ளதா? என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

    பிரச்சினை இருந்தால் அதனை சரிசெய்த பிறகு தான் வாகனங்களை இயக்க வேண்டும். கோவை மாவட்ட சாலைகளில் அதிக வாகன போக்குவரத்து காரணமாக சில நேரங்களில் நெரிசல் ஏற்படுகிறது. அதுபோன்ற நேரங்களில் வாகன ஓட்டுநர்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்று வர வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தக்கூடாது. குழந்தைகளை பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பதுதான் உங்களு டைய பொறுப்பாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, மொத்தம் 230 பள்ளிகளைச் சேர்ந்த 1355 தனியார் பள்ளி வாகனங்களில், நேற்று 901 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டன. இதில், 76 வாகனங்களில் அவசர கால கதவுகள் திறக்காதது, தீயணைப்பு கருவி காலா வதி, காமிரா பொருத்தாதது உள்ளிட்ட குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்து மீண்டும் சம்மந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காண்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுதவிர, 378 வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. ஏற்கனவே, ஊரக பகுதிகளை சேர்ந்த பள்ளி வாகனங்களுக்கு மேட் டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சியில் கூட் டாய்வு நடைபெற்றுள்ளது என்றனர். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில் பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பான், கண்காணிப்பு காமிராக்கள் இருந்தாலும் இக்கட்டான சூழலை எதிர்கொள்ள பயிற்சி பெற வேண்டும். திறமையான, எந்த சூழலையும் சமாளிக்கக் கூடிய டிரைவராக இருக்க லாம். அத்தகைய அதீத நம்பிக்கையில் மொபைல் போன் பேசிக் கொண்டே பஸ்களை இயக்கினால் கவனம் இல்லாமல் டிரைவர் ஓட்டுகிறார் என குழந்தைகள் நினைப்பர். அவர்களுக்கு பயம் ஏற்படும். நமது நடத்தை மிகவும் முக்கியம். அது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். பயத்தை ஏற்படுத்தக் கூடாது.

    குழந்தைகள் வீட்டில் இருந்தால் பெற்றோர் பொறுப்பு. பள்ளிக்குள் சென்று விட்டால் ஆசிரி யர்கள் பொறுப்பு. அதேபோல் பஸ்களில் அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளுக்கு டிரைவர்க ளே பொறுப்பு. பொறுப்பை உணர்ந்து அவரது செயல் கள், நடத்தை, பாதுகாப்பு உணர்வை அளிக்கும் வகை யில் இருக்க வேண்டும் என்றார்.

    • சுப்பிரமணி கோவில்பாளையத்தில் இ-சேவை மையத்திற்கு பணம் அனுப்ப சென்றார்.
    • எதிரே வந்த மோட்டார் சைக்கிள், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

    பொள்ளாச்சி,

    சேலம் மாவட்டம் ஒமலூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது47). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். அண்மையில் நடந்த வாகன விபத்தில் சுப்பிரமணியின் மனைவி இறந்து விட்டார்.

    இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுப்பிரமணி தனது மகன்களுடன், கோவை கிணத்துக்கடவு அருகே வடக்குபாளையம் கோபாலபுரத்திற்கு வந்தார்.

    அங்கு தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். நேற்று சுப்பிரமணி கோவில்பாளையத்தில் இ-சேவை மையத்திற்கு பணம் அனுப்ப சென்றார். அவருடன் அவரது நண்பரான ராமு (46) என்பவரும் சென்றார். இவரும் கட்டிடத்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    மோட்டார் சைக்கிளை ராமு ஓட்ட, சுப்பிரமணி பின்னால் அமர்ந்து இருந்தார். கோவில்பாளையம் சென்று இ-சேவை மையத்தில் பணத்தை அனுப்பி விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது பொள்ளாச்சி-கோவை சாலையில் எஸ்.மேட்டுப்பாளையம் அருகே வந்த போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

    இதில், ராமு, சுப்பிரமணி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி சாலையில் வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, அவர்கள் 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, ராமு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    ெதாடர்ந்து பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விக்னேஷ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
    • விக்னேஷ் கடந்த 5 வருடங்களாக உறவுக்கார பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

    கோவை,

    பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் அருகே உள்ள சமத்தூரை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது22). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் அந்த பகுதியில் தனது தாய் ரங்கநாயகியுடன் வசித்து வந்தார். விக்னேஷ் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார்.

    அப்போது ரங்கநாயகி மகனுக்கு உணவு கொடுத்து விட்டு, தூங்குவதற்காக அருகே வசிக்கும் தனது மகளின் வீட்டிற்கு சென்று விட்டார். விக்னேஷ் மட்டும் தனியாக இருந்தார்.

    அப்போது விக்னேஷ், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான 17 வயது சிறுவன், கோகுல கிருஷ்ணன்(22) ஆகியோரை ஐ.பி.எல். கிரிக்கெட் பார்ப்பதற்காக வீட்டிற்கு அழைத்தார்.

    அதன்படி அவர்களும் வீட்டிற்கு வந்தனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் கோகு லகிருஷ்ணன் அங்கிருந்து சென்று விட்டார்.

    இதையடுத்து விக்னேசும், 17 வயது சிறுவனும் சேர்ந்து ஒன்றாக மது அருந்தி விட்டு தூங்கி விட்டனர்.

    மறுநாள் அதிகாலையில் விக்னேஷின் தாய் வீட்டிற்கு வந்தார். அப்போது வீடு திறந்து கிடந்தது. இதை யடுத்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் உள்ள அறையில் விக்னேஷ் தூக்கில் தொங்கி கொண்டி ருந்தார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் கதறி அழுதார். மேலும், அங்கு தூங்கி கொண்டிருந்த 17 வயது சிறுவனை எழுப்பி, மகனை மீட்டு 108 ஆம்பு லன்சுக்கு தகவல் தெரிவித்த னர்.அவர்கள் விரைந்து வந்து, பார்த்த போது, விக்னேஷ் உயிரிழந்து விட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், சப்-இன்ஸ்ெபக்டர் ரவி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்ப திவு செய்து, வாலிபர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரிக்க தொடங்கினர். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் வீட்டில் ஏதாவது கடிதம் எழுதி வைத்துள்ளாரா என்பதை அறிய வீடு முழுவதும் சோதனை மேற்கொண்ட னர். ஆனால் எதுவும் சிக்கவில்லை.

    தொடர்ந்து அவருடன் இருந்த 17 வயது சிறுவனிடம் விசாரணை நடத்தி விட்டு, அவரது செல்போனை வாங்கி பார்த்தனர்.

    அப்போது விக்னேஷ், சிறுவனின் செல்போனில் தனது இன்ஸ்டாகிராம் ஐ.டி.யை திறந்து, அதில் குறுஞ்செய்தி அனுப்பியதை கண்டு பிடித்தனர்.

    அதில், என்னுடைய சாவுக்கு நீதான் காரணம். என்னுடைய அம்மாவை தனி வீட்டுக்கு போக வெச்சுட்டில்ல. சத்தியமா சொல்றேன் என் சாபம், என்னுடைய அம்மா சாபம் உன்னை சும்மா விடாது என கூறப்பட்டிருந்தது.இதையடுத்து போலீசார் அந்த தகவலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், விக்னேஷ் கடந்த 5 வருடங்களாக உறவுக்கார பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

    ஆனால் அந்த பெண் அவரது காதலை ஏற்க வில்லை. கடந்த 3 மாதங்க ளாக விக்னேஷ், தனது காதலை ஏற்குமாறு அந்த பெண்ணிடம் கூறி வந் துள்ளார். ஆனாலும் அவர் ஏற்க மறுத்து விட்டார். இதனால் விக்னேஷ் மன உளைச்சலில் இருந்ததும், அந்த விரக்தியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரது தாயார் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 27-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல்நிலை குறைவு ஏற்பட்டது.
    • ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    திருப்பூர் அருகே ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் கருப்பன் (வயது72). இவர் காங்கேயம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த போக்சோ வழக்கில் கைதாகி கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் கைதியாக அடைக்கப்பட்டு இருந்தார்.

    ஜெயிலில் இருந்த அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 27-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல்நிலை குறைவு ஏற்பட்டது.

    அப்போது திடீரென ஜெயிலில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த சக கைதிகள் இது குறித்து ஜெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகள் விரைந்து சென்று அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறை கைதிகளுக்கான வார்டில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோர் சம்பவம் குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • போலீசார் சிறுமிக்கு அறிவுரை கூறி அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 6-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    நேற்று வீட்டில் இருந்த சிறுமி, அருகே உள்ள கடைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இதையடுத்து அவரது பெற்றோர் கடைக்கு சென்று விசாரித்த போது, அவர் வரவில்லை என தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீடுகளில் தேடி பார்த்தனர்.

    ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உடனடியாக சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் சிறுமி மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமி, அதே பகுதியை சேர்ந்த பெயிண்டரான பிரதீபன்(25) என்பவருடன் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் எங்கு சென்றனர் என விசாரித்தபோது, அவர்கள் கரூரில் இருப்பது தெரிய வரவே போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு பிரதீபன், சிறுமியை திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமி மற்றும் அவரை திருமணம் செய்த பிரதீபனை பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    அங்கு வைத்து விசாரணை நடத்தி விட்டு, அவர்களை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் சிறுமியின் பெற்றோரை வரவழைத்து, சிறுமிக்கு அறிவுரை கூறி அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த பிரதீபனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சிறுமி இதே வாலிபருடன் மாயமானது, போலீசார் அவர்களை கண்டு பிடித்து சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்து, வாலிபரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்ததும், அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

    • இதில் 10 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
    • கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் ஜுன் 1-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்க உள்ளது.

    கோவை,

    கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவில் 56-–ம் ஆண்டுக்கான ஆண்கள் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 20–-ம் ஆண்டுக்கான பெண்கள் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை கூடைப்பந்து போட்டிகள், நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் 10 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

    4-வது நாளான இன்று நாச்சிமுத்து கோப்பை ஆண்கள் பிரிவுக்கான முதல் போட்டி இன்று காலை தொடங்கியது. அப்போது இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து, தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணி விளையாடியது.

    இதில் இந்திய கப்பல் படை அணி 73–- 35 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. அடுத்தபடியாக கேரளா மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் கேரளா மாநில மின்சார வாரிய அணி 96 –- 51 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் ஜுன் 1-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்க உள்ளது.

    • கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி, புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.
    • புட்டுவிக்கி புறக்காவல் நிலையம் 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பில் இருக்கும்.

    குனியமுத்தூர்,

    கோவை குனியமுத்தூரில் இருந்து உக்கடம் செல்லும் புட்டு விக்கி சாலையில் உள்ள புறக்காவல் நிலையம், புதிய கட்டிடங்கள் உடன் புனரமைக்கப்பட்டு உள்ளது.

    இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. அப்போது கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி, புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் சந்தீஸ், சண்முகம், மதிவாணன், சுகாசினி, உதவி கமிஷனர் ரகுபதிராஜா, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், புட்டுவிக்கி புறக்காவல் நிலையம் 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பில் இருக்கும்.

    அங்கு உள்ள போக்குவரத்து சாலையில் ஆங்காங்கே சிசிடிவி கண்காணிப்பு கேமராகள் பொருத்தப்படும. இதன்மூலம் அந்த பகுதியில் குற்றங்கள் குறைவதற்கு, இந்த புற காவல் நிலையம் ஏதுவாக அமையும் என்று தெரிவித்து உள்ளார்.

    • கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் இந்த ஆய்வு பணி நடந்தது.
    • அவசர நிலையில் இயக்க கூடாது. அவ்வாறு வாகனங்களை இயக்கும்போது தான் விபத்துக்கள் ஏற்படுகின்றது.

    கோவை,

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வருகி ஜூன் மாதம் 7-ந் தேதி முதல் திறக்கப்பட உள்ளது.

    இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

    கோவையில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் விபத்துகள் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையிலும், வாகனங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் செய்யும் பணி இன்று நடந்தது.

    கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் இந்த ஆய்வு பணி நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார் பாடி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    இந்த ஆய்வில் கோவையில் உள்ள 230-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் 1355 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    ஆய்வின் போது, பள்ளி வாகனத்தில் அவசர கால வழி, சி.சி.டிவி காமிராக்கள் உள்ளதா? படிக்கட்டுகள் குறைந்த உயரத்தில் உள்ளதா? முதலுதவி பெட்டி, மற்றும் டிரைவரின் பணி அனுபவம், வாகனம் ஓட்டுவதற்கு தகுதியான நிலையில் உள்ளதா? என்பது உள்ளிட்ட 17 அம்சங்கள் கொண்ட வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்தனர்.

    மேலும் ஓட்டுநர்களுக்கு கண்பரிசோதனை, உடல் பரிசோதனையும் தனியார் ஆஸ்பத்திரி சார்பில் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்வில் தீயணைப்புத் துறையின் சார்பில் ஓட்டுநர்களுக்கு தீ தடுப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

    பின்னர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

    கோவையில் உள்ள அனைத்து தனியார் பஸ்களிலும் கட்டாயம் கண்காணிப்பு காமிராக்கள், முதலுதவி சிகிச்சை பெட்டகங்கள் மற்றும் தீயணைப்பு கருவிகள் போன்றவைகள் வைத்திருக்க வேண்டும்.

    மேலும் வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் முறையான பயிற்சி பெற்றிருக்க வேண்டும். டிரைவர்கள் பள்ளி நேரத்தை குறித்து வாகனங்களை சரியாக இயக்க வேண்டும்.

    மேலும் அவசர நிலையில் இயக்க கூடாது. அவ்வாறு வாகனங்களை இயக்கும்போது தான் விபத்துக்கள் ஏற்படுகின்றது. எனவே டிரைவர்கள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். மேலும் அந்தந்த கல்வி நிறுவனங்களில் வாகனங்களை இயக்கம் டிரைவர்கள் அவ்வப்பொழுது வானங்களை பழுது பார்த்து சரி செய்து விட வேண்டும்.

    மோட்டார் சைக்கிளில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் பாதுகாப்பாக செல்ல வேண்டும். ஒரு சில பெற்றோர்கள் 3 குழந்தைகள் மற்றும் 4 குழந்தைகளை மோட்டார்சைக்கிளில் ஏற்றி செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து நடக்கின்றது.

    எனவே இதுபோன்ற செயல்களை குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செய்யாதீர்கள். மேலும் பள்ளி கல்லூரி வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் பள்ளி மாணவ,மாணவிகளிடம் பொறுப்பாக முறையாக பேச வேண்டும். நீங்கள் பேசும்வார்த்தைகளில் தான் அவர்களது எண்ணமும் மற்றும் வாகனங்களில் பயணிக்கும மாணவர்களின் பாதுகாப்பு அடங்கி உள்ளது. எனவே டிரைவர்கள் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் முறையாக பேச வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    • போதைப்பொருள் விற்பனையை தடுக்க தாங்கள் ஒவ்வொரு கடையாக சோதனை செய்து வருகிறோம்.
    • போலீசார் 7 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை குனியமுத்தூர்-பாலக்காடு மெயின் ரோடு ஞானபுரம் ஜங்சனில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    அங்கு நேற்று முன்தினம் இரவு 7 பேர் கொண்ட கும்பல் சென்றனர். அவர்கள் அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் தங்களை ஜமாத்தில் இருந்து வருவதாக அறிமுகம் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் போதைப்பொருள் விற்பனையை தடுக்க தாங்கள் ஒவ்வொரு கடையாக சோதனை செய்து வருவதாகவும், இங்கும் சோதனை செய்ய வேண்டும் என கூறி அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் அவர்கள் சோதனை செய்வது போல நடித்து ஊழியரை மிரட்டி அங்கிருந்த மொபைல் டேப், சிசிடிவி காமிரா மற்றும் ஒரு சிம்கார்டை கொள்ளையடித்து சென்றனர்.

    இதனால், அதிர்ச்சியடைந்த நிறுவன ஊழியர், குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    • பென்சனை உயர்த்தவேண்டும் என கூறி இ.பி.எப் பென்சன்தாரர்கள் நலசங்கம் சார்பாக கூட்டம் நடைபெற்றது.
    • ஜி.என்.மில்ஸ் தபால் நிலையம் அருகே 100க்கும் அதிகமானோர் தபால் அனுப்பினர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் பஞ்சாலை மற்றும் என்ஜினியரிங் கம்பெனிகளில் வேலை பார்த்து சுமார் 3 லட்சத்திற்கு மேற்பட்ட பென்சன்தார்கள்கள் உள்ளனர். அவர்கள் இதுவரை ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக பென்சன் பெற்று வருகின்றனர்.

    இதனை உயர்த்தவேண்டும் என கூறி இ.பி.எப் பென்சன்தாரர்கள் நலசங்கம் சார்பாக சென்னையில் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரலில் மணியோசை எழுப்பும் போராட்டம் நடந்தது.

    தொடர்ந்து மேலும் தமிழகம் முழுவதும் கடந்த 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பிரதமருக்கு தபால்கார்டு அனுப்பும் போராட்டம் நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக இன்று கோவை ஜி.என்.மில்ஸ் தபால் நிலையம் அருகே 100க்கும் அதிகமான இ.பி.எப் பென்சன்தாரர்கள் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். அனைவரையும் உறுப்பினர் தேவேந்திரன் வரவேற்றார். சங்க உறுப்பினர் மவுனசாமி சிறப்புரை–யாற்றினார்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பென்சனை உயர்த்துவதுடன் குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும். இடைகாலமாக மாதம் ரூ.3 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்கவேண்டும். இ.பி.எப் பென்சன்தாரர்களுக்கு இ.எஸ்.ஐ திட்டத்தை அமுல்படுத்தவேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தகுதியுள்ள அனைவருக்கும், உயர் பென்சன் வழங்க வேண்டும்.

    மூத்த குடிமக்களுக்கு பறிக்கப்பட்ட ரயில் கட்டண சலுகையை மீண்டும் அமுல்படுத்தவேண்டும் என கோசங்களை எழுப்பினர். தொடர்ந்து தபால் பெட்டியில் தபால்கார்டுகளை போட்டு அனுப்பினர்.

    • மாரிமுத்து தனது மகன் லோகேஸ்வரனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி தர மறுத்தார்.
    • மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் தற்கொலை செய்தார்.

    கோவை,

    கோவை நடுக்கல்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து . கூலித் தொழிலாளி. இவரது மகன் லோகேஸ்வரன் (23) . இவரும் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் லோகேஸ்வரன் தனது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் மாரிமுத்து மோட்டார் சைக்கிள் வாங்கி தர மறுத்துள்ளார்.

    இதனால் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மாரிமுத்து பக்கத்து வீட்டுக்கு சென்றார். இதில் விரக்தி அடைந்த லோகேஸ்வரன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாணவியின் தாய் நர்சிங் படிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
    • போலீசார் மாணவிக்கு அறிவுரை வழங்கினர்.

    வால்பாறை,

    வால்பாறை அருகே பச்சமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கு நர்சிங் படிப்பதற்கு விருப்பம் இருந்து வந்துள்ளது. இதனை அவரது தாயிடம் தெரிவித்தார்.

    ஆனால் அவரது தாய், தனது மகள் நர்சிங் படிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் வாழ்கையில் விரக்கி அடைந்த மாணவி வீட்டில் இருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டார்.

    சிறிது நேரத்தில் மாணவி மயக்கம் அடைந்தார். இதையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த அவரது தாய், தனது மகள் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    அங்கு மாணவிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இது குறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி கூறுகையில் எனக்கு நர்சிங் படிக்க விருப்பம் உள்ளது. ஆனால் எனது தாய் அதற்கு சம்மதிக்கவில்லை.

    இதனால் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன் என தெரிவித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவிக்கு அறிவுரை வழங்கிவிட்டு சென்றனர்.

    ×