search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருவமழை"

    நாட்டின் பல பகுதிகள் கடந்த ஆண்டில் வறட்சியாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் பருவமழை நன்றாகவும், பரவலாகவும் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #IMD #rainfallin2019 #2019monsoon #monsoonseason
    புதுடெல்லி:

    புவி வெப்பமயமாதலின் விளைவாக உலகம் முழுவதும் பருவநிலைகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பல நாடுகளில் பெருமழையும், சில நாடுகளில் மழை பொய்த்தும் மக்களை இன்னலுக்கு  உள்ளாக்கி வருகிறது.

    சமீபகாலமாக, இந்தியாவின் சில பகுதிகளிலும் மழைக்காலங்களில் அளவுக்கதிகமான மழைப்பொழிவால் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் பல கோடி ஏக்கர் அளவிலான பயிர்கள் பாழாகிப் போகின்றன. அதேவேளையில், பல பகுதிகளில் எதிர்பார்த்த அளவில் பருவமழை பெய்வதில்லை.

    இதன் விளைவாக இங்கு வானம் பார்த்த பூமியாக கிடக்கும் பல கோடி ஏக்கர் அளவிலான விளைநிலங்கள் போதிய விளைச்சலை பெற முடியாமல் பயிர்கள் வாடியும் கருகியும் போகின்றன. கோடைக்காலத்தில் அடிக்கும் கடுமையான வெயிலால் நிலத்தடி நீராதாரமும் வற்றிப்போவதால் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் தாகத்தால் பரிதவிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.


    இதனால் மண் வளத்தையும் வானத்தில் இருந்து கிடைக்கும் மழை வளத்தையும் மட்டுமே நம்பி வாழும் நம் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

    பயிர் செய்வதற்காக வங்கிகளில் வாங்கிய கடன்களையும், அறுவடைக்காலம் வரை குடும்பத்தை பராமரிக்க வாங்கிய இதர வெளிக்கடன்களையும் செலுத்த முடியாமல் கடன் நெருக்கடிக்கும் உள்ளாகின்றனர். இவர்களில் பலர் கடன்காரர்களின் தொல்லையை சமாளிக்க முடியாமலும் தொடர்ந்து குடும்பத்தை நல்ல முறையில் நிர்வகிக்க இயலாத விரக்தியிலும் மனமொடிந்து தற்கொலை செய்து கொள்வது நமது நாட்டில் தொடர்கதையாகவும் தீராத துயரமாகவும் இருந்து வருகிறது.

    இந்நிலையில், வேதனையில் வாடும் நம் நாட்டின் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக ‘இந்த ஆண்டில் பருவமழை நன்றாகவும், பரவலாகவும் இருக்கும்' என்னும் மகிழ்ச்சியான தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

    இதன் மூலம் இந்த ஆண்டில் சம்பா சாகுபடி (ஆடிப்பட்டம்) செய்யும் விவசாயிகள் நல்ல பலனை அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #IMD #rainfallin2019 #2019monsoon #monsoonseason
    சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைந்துள்ளதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த அளவே மழை பெய்து இருக்கிறது.

    சென்னையில் இதுவரை வடகிழக்கு பருவமழை 84 செ.மீ. பெய்து இருக்க வேண்டும். ஆனால் 35 செ.மீ. மட்டுமே பெய்துள்ளது. கடந்த 2003-ம் ஆண்டில் 31 செ.மீ. மழைதான் பெய்து இருந்தது. தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.

    பொதுவாக சென்னை மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 140 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் இந்த ஆண்டு 83 செ.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது.

    கடந்த 2003-ம் ஆண்டில் 31 செ.மீ. மழையே பெய்து இருந்ததால் அப்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உருவானது. அதே நிலை தற்போதும் ஏற்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர். சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகள் மூலம் இன்னும் 2 மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்க முடியும்.



    எனவே குன்றத்தூர் அருகே உள்ள சிக்கராயபுரம் மற்றும் எருமையூரில் உள்ள கல்குவாரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் ரெட்டேரி, அயனம்பாக்கம், பெரும்பாக்கம் ஏரிகளில் இருந்து குடிநீர் வழங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    மேலும் நெய்வேலியில் 240 மீட்டர் ஆழத்தில் 9 ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைத்து அதன்மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    பருவமழையை எதிர்கொள்ள மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் 2 ஆயிரம் மணல் மூட்டைகளும் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் 2 ஆயிரம் மணல் மூட்டைகளும், சவுக்கு கம்புகளும் தயார் நிலையில் உள்ளன.
    பொன்னேரி:

    வடகிழக்கு பருவ மழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொன்னேரி ஆரணி ஆற்றின் கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஆற்றின் இருபுறங்களிலும் முள்செடிகள் அகற்றப்பட்டு ஜே.சி.பி. எந்திரம் மூலம் கரைகள் பலப்படுத்தப்படுகின்றன.

    மராமத்து பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் 2 ஆயிரம் மணல் மூட்டைகளும் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் 2 ஆயிரம் மணல் மூட்டைகளும், சவுக்கு கம்புகளும் தயார் நிலையில் உள்ளன.

    இந்த தகவலை பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் முருகன் தெரிவித்தார்.

    கேரளா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் எலி காய்ச்சலுக்கு நேற்று ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. #Leptospirosis #RatFever #KeralaFloodRelief
    திருவனந்தபுரம்:

    கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 488 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

    தற்போது வெள்ளம் வடிந்து, மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. அதே சமயம் மழைக்கு பிந்தைய தொற்றுநோய்களும் கேரள மக்களை அச்சுறுத்தி வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் கடந்த மாதம் 15-ம் தேதியில் இருந்து எலி காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியது. 

    இறந்த எலியின் உடலில் இருந்து வெளியாகும் புழுக்களின் மூலமாகவும், இதனால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் வெள்ள நீரில் கலந்ததாலும் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டது. வேகமாக பரவி வரும் இந்த தொற்று நோய்க்கு நேற்று முன்தினம் 11 பேர் உயிரிழந்தனர். 

    நேற்று எர்ணாகுளம் மற்றும் கோட்டயத்தில் தலா ஒருவர், திருச்சூரில் 8 பேர் என நேற்று மட்டும் 10 பேர் பலியாகினர். இதையடுத்து இதுவரை எலி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 74-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் சிலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்தபோது தொற்றுநோய் பரவி இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



    திருச்சூர் மாவட்டத்தில் 21 பேருக்கு எலிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் எலி காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிட்டதாகவும், மக்கள் அதுகுறித்து பீதியடைய தேவையில்லை என்றும் மாநில சுகாதாரத்துறை மந்திரி சைலஜா தெரிவித்துள்ளார்.

    மேலும் கோட்டயம் மாவட்டத்தின் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. #Leptospirosis  #RatFever #KeralaFloodRelief 

    உத்தரப்பிரதேச மாநிலத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை தொடர்பான சம்பவங்களால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #UPRain #UttarPradesh
    லக்னோ:

    பருமழை தீவிரத்தை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்தின் ஷாஜகான்பூர், சீதாப்பூர், அமேதி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கடும் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது. 

    வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரால் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஷாஜகான்பூரில் மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல் சீதாப்பூர், அமேதி, அவுராயா, ரேபரேலி, உன்னாவோ ஆகிய மாவட்டங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 14 பேர் வரை பலியாகியுள்ளனர். 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் மழையின் காரணமாக 8 கால்நடைகளும் இறந்தன.

    உத்தரகாண்ட் மாநிலத்திலும் தொடர் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள கெம்ப்டி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய எல்லையை தாண்டி நீண்ட தூரத்துக்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டதுடன், அங்குள்ள கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டன. #UPRain #UttarPradesh 

    மராட்டியம், குஜராத், அசாம், கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் பருவ மழைக்கு இதுவரை 465 பேர் பலியாகி உள்ளனர். #Monsoon
    மும்பை:

    மராட்டியம், குஜராத், அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா மாநிலங்களில் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அம்மாநிலங்களில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பல கிராமங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கி அவதிப்பட்டு வருகிறார்கள்.

    பலத்த மழையால் மும்பை மாநகரம் சில நாட்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்தது. இதேபோல் குஜராத், அசாம், மேற்கு வங்காளத்திலும் இயல்பை விட மழை அதிகமாக இருந்தது.

    வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பருவ மழைக்கு இதுவரை 465 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

    இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:-


    பருவமழைக்கு மகாராஷ்டிராவில் 138 பேரும், கேரளாவில் 125 பேரும், மேற்கு வங்காளத்தில் 116 பேரும், குஜராத்தில் 52 பேரும், அசாமில் 34 பேரும் பலியாகி இருக்கிறார்கள்.

    மகாராஷ்டிராவில் 22 மாவட்டங்களும், மேற்கு வங்காளத்தில் 22 மாவட்டங்களும், அசாமில் 21 மாவட்டங்களும், கேரளாவில் 14 மாவட்டங்களும், குஜராத்தில் 10 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    அசாமில் அதிகபட்சமாக 10 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 12 தேசிய மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்காளத்தில் 1.65 லட்சம் மக்களும், கேரளாவில் 1.43 மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். #Monsoon #flood
    ×