என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சட்டம்"
- பா.ஜ.க பிரமுகர்களின் வீடுகளை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
- சமஸ்கிருத மொழியே இல்லாத போது, கண்டிப்பாக மனுதர்மத்தை பின்பற்றியே ஆக வேண்டும்.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும், இந்துக்களை இழிவு படுத்தும் வகையில் பேசிய தி.மு.க எம்.பி ஆ.ராசாவை கண்டித்தும் முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க கட்சி பிரமுகர்களின் வீடுகளை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து அமைதிப்பூங்காவாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ ஆகிய இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காந்தி ஜெயந்தியை ஒட்டி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்று சொல்லிக் கொள்ளும் திமுக தலைமையிலான அரசு ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? இந்த ஊர்வல அனுமதியை தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடக்கின்றன.
மேலும் இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய ஆ.ராசாவை வன்மையாக கண்டிக்கிறேன்.
3000 ஆண்டுகளுக்கு முன் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மனுஸ்மிருதி நூலை குறிப்பிட்டு,
இவ்வாறு மிக மோசமாக பேசி உள்ளார்.
சமஸ்கிருத மொழியே இல்லாத போது, கண்டிப்பாக மனுதர்மத்தை பின்பற்றியே ஆக வேண்டும் என்று யாரும் நிர்பந்தம் செய்யாத போது எதற்காக இதை பேச வேண்டும்?
மற்ற மதத்தினரின் நூல்களில் உள்ள குறைகளை பற்றி ஆ.ராசா பேசுவாரா?
தொடர்ச்சியாக இந்து மதத்தை இழிவு படுத்துவோர், மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறிப்பட்டுள்ளது.
சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் நேற்று இரவு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பாட்டினையே உதாரணமாக கூறலாம். கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில், மதுரை மாநகருக்குள் நுழையமுடியாமல் இருந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது மதுரை நகரில் அதிகாலையில் எந்த ஒரு அச்சமும் இன்றி நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதுவே தற்போது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்பதற்கு முன் உதாரணமாக கூறலாம். மு.க.ஸ்டாலின் தினந்தோறும் மிக தரக்குறைவான வார்த்தைகளால் என்னை திட்டி பிரசாரம் செய்து வருகிறார்.
அவர் ஒரு கட்சியின் தலைவர் என்ற நிலையினை அறிந்து பண்புடன் பேசவேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி மக்கள் நலம் காக்கும் சிறப்பான கூட்டணி. ஆனால் தி.மு.க சந்தர்ப்பவாத கூட்டணியாக அமைத்துள்ளது. தி.மு.க மக்கள் நலனை ஒருபோதும் கருத்தில் கொண்டதில்லை. இதற்கு உதாரணமாக அண்மையில் பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு ரூ.1000 வழங்கியதை தடுக்க பல்வேறு முயற்சி செய்தததையே கூறலாம்.
அதேபோல் தமிழக ஏழை தொழிலாளர்களுக்கு அரசு 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை தடுக்க பல்வேறு முயற்சிகள் செய்து தோல்வி கண்டுள்ளனர்.
நான் தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினத்திலிருந்து, மாநிலம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் பெரும் பகுதி மு.க.ஸ்டாலினால் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக தூண்டப்பட்டவையாகும்.
இப்போராட்டங்களுக்கு உரிய முறையில் தீர்வுகண்டு தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று வருகிறது. வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க சூழ்ச்சிகரமான தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. கடந்த காலத்தில் நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் அளிப்பதாக கூறிய தி.மு.க.வினர் தமிழகத்தில் எத்தனை நபர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கினார்கள் என கூறமுடியுமா?
அதே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினால் பிரதமர் வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்ட, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்யும்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டப்படும் எனவும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என கூறி பிரசாரம் செய்துள்ளார்.
தமிழகத்தை பாலைவனமாக மாற்றும் எண்ணம் கொண்டவருக்கு நாம் வாக்களிக்கலாமா? தமிழக மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
விரைவில் நகர மற்றும் கிராமப்புற பகுதியில் வாழும் வீடு இல்லாத குடும்பங்களுக்கு, அரசு சார்பில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். பொள்ளாச்சியில் நடைபெற்ற மனித தன்மை அற்ற அந்த நிகழ்வினை வன்மையாக கண்டிக்கிறோம். அதில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாராக இருப்பினும் சட்டத்தின் முன் நிறுத்தி அரசு கடுமையான தண்டனையை பெற்றுத்தர தயாராக உள்ளது.
எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக்கல்லூரி, 11 கிலோ மீட்டர் தூர புறவழிச்சாலை, புதிய குடிநீர் திட்டம், புதிய நெடுஞ்சாலை கோட்ட அலுவலகம், மின்வாரிய கோட்ட அலுவலகம் மற்றும் சரபங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலங்கள், புதிய தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் புதிய கால்நடை மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வழங்கிய அ.தி.மு.க. அரசின் மக்கள் நலத்திட்டப்பணிகள் தொடர்ந்திடவும், காவிரி உபரி நீரினை கொண்டு எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நீர் நிலைகளை நிரப்புவதற்கான புதிய பாசனத்திட்டத்தினை நிறைவேற்றிடவும், நதி நீர் இணைப்புத் திட்டத்தின் மூலம் காவிரி கோதாவரி ஆற்றினை இணைப்பதன் வாயிலாக தமிழகம் முழுவதும் பாசன வசதி பெருகும்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நாளை மாலை நடைபெறும் என்று சட்டப் பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது.
இது சரியான நடவடிக்கை என்றாலும் கூட, மாலையில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், மேகதாது அணை விவகாரம் குறித்து முழுமையாக விவாதிக்க போதிய நேரம் கிடைக்குமா? என்ற ஐயம் எழுந்துள்ளது.
மேகதாது அணை குறித்த ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு தமிழகத்தின் எதிர்ப்பை பதிவு செய்யவும், அனுமதியை திரும்பப் பெறும்படி வலியுறுத்தவும் தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் உதவும். ஆனால், காவிரி சிக்கல் மட்டுமின்றி, கஜா புயல் பாதிப்புகள், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த ஏராளமான பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டியுள்ள நிலையில், சில மணி நேரங்கள் மட்டும் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை நடத்துவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுவதை தடுக்க இப்போதும் வாய்ப்புகள் உள்ளன. ஒன்று தமிழகத்தில் தாமிர உருக்காலைகளை அனுமதிப்பதில்லை என்று அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுத்து அறிவிப்பதாகும். இரண்டாவது, தமிழகத்தில் தாமிர உருக்காலைகளுக்கு தடை விதித்து தொழிற்சாலைகள் சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்வது ஆகும்.
நாளை மாலை நடைபெற உள்ள பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் இது குறித்து விவாதித்து சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற முடியும். எனவே, தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்.
அதில் மேகதாது அணை விவகாரம், கஜா புயல் பாதிப்புகள், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், சென்னை- சேலம் எட்டுவழிச் சாலை உள்ளிட்ட சிக்கல்கள் குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். அதன் நிறைவாக உரிய தீர்மானங்கள் சட்டங்களை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #SterlitePlant
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும். பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அவர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருந்தால் உடனே அவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்ய வேண்டும்.
அதுபோல் வழிப்பறி, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் மணல் கொள்ளை நடக்காமல் இருக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சாலை விபத்துகளை தடுக்க முக்கிய சாலைகளில் தடுப்புக்கம்பிகள் அமைத்து சீரான வேகத்தில் வாகனங்கள் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள், சாராயம் கடத்தலை தடுக்க அனைத்து சோதனைச்சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து, மதுபாட்டில்கள் கடத்தல், சாராய விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்களை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதுபோல் தொடர்ந்து ரவுடியிச செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வெள்ளைச்சாமி, சங்கர், வீமராஜ், திருமால், ரவிச்சந்திரன், இளங்கோவன், முத்துமாணிக்கம், ராஜேந்திரன், மகேஷ், கோமதி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் மாவட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தி வரும் அரசு வாகனங்களின் பராமரிப்பு குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பொதுமக்களின் வசதிக்காக அவசர உதவிக்கு நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு வாகனங்களில் அதன் செல்போன் எண்ணை ஒட்டும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
காஷ்மீரின் கதுவாவில் சிறுமி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும், உத்தரபிரதேசத்தின் உன்னாவ் நகரில் 17 வயது சிறுமி ஒருவர் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரால் கற்பழிக்கப்பட்ட சம்பவமும் கடந்த சில மாதங்களுக்கு முன் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 21-ந் தேதி மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. பின்னர் இந்த அவசர சட்டத்துக்கு பதிலாக புதிய சட்ட திருத்த மசோதாவை சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
குற்றவியல் சட்டம் (திருத்தம்) மசோதா 2018 என்ற இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கினார். இதன் மூலம் இந்த சட்டம் அமலில் வந்துள்ளது.
குற்றவியல் (சட்ட திருத்தம்) சட்டம் என அழைக்கப்படும் இந்த சட்டம், கடந்த ஏப்ரல் 21-ந் தேதி முதலே அமலுக்கு வந்ததாக கருதப்படும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.
இதன் மூலம் இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் 1872, குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 மற்றும் போக்சோ சட்டம் 2012 ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த புதிய சட்டம், கற்பழிப்பில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வழிவகுக்கிறது. குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை வழங்கப்படும். இதில் குறைந்தபட்ச தண்டனையாக 20 ஆண்டு அல்லது வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
இந்த சிறுமிகளை கூட்டு பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு வாழ்நாள் சிறை அல்லது மரண தண்டனையும் விதிக்க வகை செய்கிறது.
16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழிப்போருக்கான குறைந்தபட்ச சிறைத்தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டாக அதிகரிக்கப்படுகிறது. இது வாழ்நாள் சிறையாக அதிகரிக்கவும் வழி வகுக்கிறது. இந்த சிறுமிகளை கூட்டு பலாத்காரம் செய்வோருக்கு வாழ்நாள் சிறை விதிக்கப்படும்.
இந்த கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கவும் இந்த சட்டம் வழிவகுப்பது குறிப்பிடத்தக்கது. #President #RamNathKovind #DeathPenalty
அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிளவு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர்.
அதன்பிறகு கட்சி நலன் கருதி அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டது. இரு அணிகளும் ஒன்றாக இணைந்தது. அந்த அணிக்கே அ.தி.மு.க. கட்சி பெயரும், இரட்டை இலை சின்னமும் திரும்ப கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி கூட்டப்பட்டு அதில் அ.தி.மு.க. சட்ட விதிகள் மாற்றப்பட்டன. பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு, அதற்குப் பதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கப்பட்டன.
இந்நிலையில், அதிமுக சார்பில் அளிக்கப்பட்டிருந்த அறிக்கையில் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி 1976-ம் ஆண்டு முதல் இல்லை என்பது போல் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி 1976-ம் ஆண்டு முதல் பொதுச்செயலாளர் பதவி இல்லை என்றால் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் அக்கட்சியில் வகித்த பதவி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த குழப்பத்தை சரி செய்யும் வகையில், அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட அக்கட்சியின் சட்டவிதிகள் குறித்த அறிக்கையில், விதி 46-ஐ திருத்தம் செய்து சமர்ப்பிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #ADMK #electioncommisionofindia
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்த நீட் என்ற மரண கயிறு தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை சுக்கு நூறாக்கி அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளி உள்ளது.
திருச்சியில் பஸ் டிரைவர் மகள் சுபஸ்ரீ நீட் தேர்வு தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஏற்கனவே அனிதாவும், பிரதீபாவும் இதே நீட் தேர்வால் உயிரிழந்து உள்ளனர்.
நீட் தேர்வு மூலம் சிறந்த டாக்டர்களை உருவாக்க முடியும் என்ற வாதம் பொய்யானது. தமிழகத்தை சேர்ந்த தணிகாசலம் உள்ளிட்ட பல டாக்டர்கள் வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் சிறந்த மருத்துவர்களாக உள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ்-2வில் 91.9 சதவீதம் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் நீட் தேர்வில் 34-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிளஸ்-2 வில் 65 சதவீதம் பெற்ற பல மாநிலங்கள் முன்னணி இடத்தில் உள்ளது.
தமிழக மாணவர்களை அழிப்பதே மத்திய அரசின் நோக்கம். ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத் ஆலையை அனுமதி வாங்கி கண்டிப்பாக நடத்துவோம் என கூறி உள்ளார். அவருக்கு என்ன ஆணவம்?
மகாராஷ்டிராவில் ஆலையை உடைத்த போது அனில் அகர்வால் ஏன் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் செல்லவில்லை. ஸ்டெர்லைட் ஆலை தலைமை நிர்வாக அதிகாரி ராமநாத் போராடுபவர்கள் சமூக விரோதிகள் என கூறி உள்ளார்.
நானும் பல போராட்டங்கள் நடத்தி உள்ளேன. அப்படி என்றால் நானும் சமூக விரோதியா? அவர் நாவை அடக்கி பேச வேண்டும். போராட்டம் நடத்துபவர்கள் சில அமைப்புகள் மூலம் பணம் பெற்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று கூறி உள்ளார். இது போன்ற கருத்துக்களை கூற வேண்டாம்.
ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து ஓட்டுவோம் என கூறி உள்ளார். அவ்வாறு ஓட்டினால் ஆலை இருக்காது.
ஸ்டெர்லைட் ஆலை பாக்கெட்டில் தமிழக அரசு உள்ளது. மோடி பாக்கெட்டில் ஸ்டெர்லைட் முதலாளியா? பணமா என்பது தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko #SterlitePlant
கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம் கோவை காந்திபுரம் 10-வது வீதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 150 ஆண்டு காலத்தில் எந்த அரசாலும் தீர்க்கப்படாத காவிரி பிரச்சனைக்கு விடிவு தந்திருக்கும் பிரதமர் மோடிக்கு தமிழக விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கையெழுத்திட்ட மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தி.மு.க. -காங்கிரஸ் கட்சிகள் தமிழ மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. மத்தியில், மாநிலத்தில் அவர்கள் ஆட்சியில் இருந்த போது அவர்கள் ஒரு முறை கூட தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. வரும் காலத்தில் காவிரி விவகாரத்தில் ஏதாவது பிரச்சனை வந்தால் அதனை தீர்க்க கூடிய இடத்தில் தி.மு.க. -காங்கிரஸ் இருக்க வேண்டும்.
தூத்துக்குடி சம்பவத்தில் பயங்கரவாத சக்திகளை தடுக்க தமிழக அரசு தவறி விட்டது. இனி மேலாவது அதனை செய்ய வேண்டும். தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். அதன் பின்னர் அங்கு தேவையானவற்றை செய்வோம்.
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தமிழகத்திற்கு தொழிற்சாலை உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வருகிறது. ஆனால் எதை கொண்டு வந்தாலும் சிலர் திட்டமிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அவர்கள் தமிழகம் முன்னேற கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். அவர்கள் ஒன்றரை கோடி தமிழர்களை கொன்று குவித்து ராஜபக்சேவின் கைக்கூலிகள். அவர்களை ஒன்றரை கோடி தமிழர்களின் ஆவி சும்மா விடாது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் தேசத்துக்கு எதிராக செயல்பட்டதால் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் சி.ஆர். நந்தகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னராசு, தேசிய செயற்குழு உறுப்பினர் கல்யாண சுந்தரம், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோர் உடன் இருந்தனர். #BJP #PonRadhakrishnan #SVeShekher
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்