search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீக்கம்"

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக பொருளாளரை நீக்கம் செய்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #Vaiko #MDMK
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகப் பொருளாளர் எம்.செண்பகப் பெருமாள், கழக கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டு வருவதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Vaiko #MDMK
    ரஜினி கட்சி தலைமை நிர்வாகி இளவரசன் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். #RajiniMakkalMandram
    சென்னை:

    ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை பொறுப்பில் வி.எம்.சுதாகர் இருந்து வருகிறார். நீண்ட காலமாக ரஜினியுடன் இருந்துவரும் சுதாகர் அவரது ரசிகர் மன்றத்தையும் நிர்வகித்து வருகிறார். இவருக்கு துணையாக இருக்கும் வகையில் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை பொறுப்பில் ராஜு மகாலிங்கம் நியமிக்கப்பட்டார்.

    திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் தயாரிப்பு நிர்வாகியாக செயல்பட்டு வந்த ராஜு மகாலிங்கமும் சுதாகருக்கு துணையாக இருந்துவந்தார். சில மாதங்களில் ரஜினி மக்கள் மன்றத்தின் அமைப்பு செயலாளராகவும் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராகவும் டாக்டர் இளவரசன் நியமிக்கப்பட்டார்.

    இவர் பொறுப்புக்கு வந்த உடன் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நீண்ட காலமாக ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்து வந்த மூத்த நிர்வாகிகள் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் நீக்கப்பட்டது சர்ச்சையானது.

    இதற்கிடையே இளவரசன் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடந்த டிசம்பர் மாத இறுதியில் செய்தி வந்தது. இளவரசனை தொடர்புகொள்ள முடியாத நிலையில் ரஜினி மக்கள் மன்றத்திலும் இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

    ஆனால் நேற்று இளவரசன் நீக்கத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இளவரசனின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் விலக்கப்படுவதாக கூறினாலும் இளவரசன் நீக்கப்பட்டதில் ரஜினி மன்ற நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:-

    ரஜினி இளவரசன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தார். அவர் மீது மன்ற நடவடிக்கைகளில் வந்த புகார்களை விட அவரது தனிப்பட்ட செயல்பாடுகள் மீதும் பல புகார்கள் வர தொடங்கின. முக்கியமாக கடலூர், விருத்தாச்சலம், விழுப்புரம் மாவட்டங்களில் மணல் திருட்டு தொடர்பான புகார்களில் இளவரசன் பெயர் அடிபட்டது. இதுதான் அவர் நீக்கப்பட முக்கிய காரணமாக அமைந்தது.

    ரஜினி பேட்ட படத்திலேயே மணல் கொள்ளைக்கு எதிராக வசனம் பேசியிருந்தார். நதி இணைப்பு, காவிரி விவகாரம் என்று தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் தருபவர் ரஜினி. தனது கட்சியிலேயே மணல் கொள்ளைக்கு காரணமானவர் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் அவரை நீக்கி உள்ளார்.

    தமிழ்நாட்டில் மொத்தம் 66,573 பூத் கமிட்டிகள் இருக்கின்றன. இவற்றில் சுமார் 60 ஆயிரம் பூத் கமிட்டிகளை எங்கள் கட்சி சார்பில் நியமித்துவிட்டோம். உறுப்பினர் எண்ணிக்கையும் ஒரு கோடியை தாண்டி விட்டது. ரஜினி எதிர்பார்த்த இலக்கை தொட்டுவிட்டோம். எனவே ரஜினி விரைவில் கட்சி தொடங்குவார்.

    ஆனால் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பா அதற்கு பின்பா என்பதை இப்போது சொல்ல முடியாது. அது அவர் எடுக்கும் முடிவை பொறுத்தது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #RajiniMakkalMandram
    ராகேஷ் அஸ்தானா சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. #RakeshAsthana #CBI
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனராக பதவி வகித்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மத்திய அரசால் கடந்த அக்டோபர் மாதம் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மா, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக பதவி ஏற்றார். பின்னர் அவரை மத்திய அரசு தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக நியமித்ததால், அவர் பணியில் இருந்து விலகி விட்டார்.

    இதேபோல் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு, அவரது அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. இந்தநிலையில், ராகேஷ் அஸ்தானா நேற்று திடீரென்று சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.



    சி.பி.ஐ. இணை இயக்குனரான அருண்குமார் சர்மா, டி.ஐ.ஜி. மனிஷ் குமார் சின்கா, சூப்பிரண்டு ஜெயந்த் ஜே நாயக்னாவரே ஆகிய மேலும் 3 அதிகாரிகளும் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.  #RakeshAsthana #CBI

    இந்தியா அமைப்பின் நிர்வாகிகள், கடந்த ஆண்டில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஹரேந்திர சிங்கை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. #HarendraSingh
    புதுடெல்லி:

    இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த மே மாதம் ஹரேந்திர சிங் பொறுப்பு ஏற்றார். ஆனால் அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணியின் செயல்பாட்டில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏதும் இல்லை. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் ஆசிய விளையாட்டில் களம் இறங்கிய இந்திய அணி இறுதி சுற்று வாய்ப்பை இழந்து வெண்கலப்பதக்கம் மட்டுமே பெற்றது. ஒடிசாவில் நடந்த உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி கால்இறுதியுடன் வெளியேறியது.

    இந்த நிலையில் ஆக்கி இந்தியா அமைப்பின் நிர்வாகிகள், கடந்த ஆண்டில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஹரேந்திர சிங்கை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. ஹரேந்திர சிங் ஏற்கனவே இந்திய ஜூனியர் ஆக்கி அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார். அவரது பயிற்சியின் கீழ் ஜூனியர் அணி 2016-ம் ஆண்டு உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது. அதனால் மறுபடியும் அவர் ஜூனியர் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்.

    சீனியர் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை நியமிப்பதையொட்டி, விண்ணப்பங்களை வரவேற்று விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். அதுவரை இந்திய அணியின் மேற்பார்வையாளர்களாக உயர்செயல்பாட்டு இயக்குனர் டேவிட் ஜான் மற்றும் அணியின் பகுப்பாய்வு பயிற்சியாளர் கிறிஸ் சிரியலோ ஆகியோர் இருப்பார்கள் என்று ஆக்கி இந்தியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது ஏன்? என்ற பரபரப்பு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. #OPS #Raja #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி, ஓ.ராஜா. பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரான இவர், அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருந்தார். கட்சியில் எந்த பதவியும் வகிக்காவிட்டாலும் தேனி, மதுரை பகுதியில் செல்வாக்கு மிகுந்தவராக வலம் வந்தார்.

    இவரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி கட்சித்தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-



    அ.தி.மு.க.வின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அ.தி.மு.க.வின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் விதத்தில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஓ.ராஜா (பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவர்) அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். இவருடன் அ.தி.மு.க.வினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவர் பதவிக்கு அவர் மனுதாக்கல் செய்திருந்தார். இது அ.தி.மு.க.வினருக்கு பிடிக்காததால், கட்சிக்குள் பூசல் வெடித்தது. எனினும் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவராக ஓ.ராஜா தேர்வானதாக நேற்று அறிவிப்பு வெளியானது.

    இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் அவரை நீக்குவதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.ராஜாவின் அண்ணனும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டனர்.

    ஜெயலலிதா உயிருடன் இருந்த நேரத்தில், ஓ.ராஜா மீது கொலை வழக்கு புகார் எழுந்ததை தொடர்ந்து கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக ஆன நேரத்தில், மதுரை, தேனி மாவட்ட அ.தி.மு.க.வில் ஓ.ராஜாவின் தலையீடு அதிகரித்தது. இதன் காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரம் தெரிவித்தது.

    ஓ.பன்னீர்செல்வமே தனது தம்பியை கட்சியில் இருந்து நீக்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.  #OPS #Raja #ADMK


    இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் இயங்கிய 2 போலி கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #IndianElectionCommision #Twitter
    புதுடெல்லி:

    பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபல பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் அன்றாட நிகழ்வுகள் குறித்த தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  அதில் டுவிட்டர் வலைத்தளமும் ஒன்று.

    ஆனாலும், பிரபலங்களின் பெயர்களில் போலி அக்கவுண்ட் வைத்து செயல்பட்டு வருபவர்களை கண்டறிந்து டுவிட்டர் நிறுவனம் அவர்களது கணக்குகளை நீக்கி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் 2 போலி கணக்குகள் செயல்பட்டு வந்ததை கண்டறிந்த டுவிட்டர் நிறுவனம் இன்று அந்த கணக்குகளை இன்று அதிரடியாக நீக்கியுள்ளது.



    இதுதொடர்பாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் போலியாக 2 டுவிட்டர் கணக்குகள் இயங்கி வந்தன.  @Election Comm மற்றும் @DalitFederation என்று தனித்தனியான பெயரில் இயங்கி வந்த இந்த கணக்குகளை ஆயிரக்கணக்கானோர் பின்பற்றி வந்துள்ளனர்.

    இந்திய தேர்தல் ஆணையத்திற்கு என்று அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு எதுவும் இல்லை. இது மக்களை தவறாக வழிநடத்த கூடும் என்பதால், டுவிட்டர் நிறுவனத்திடம் தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொண்டது. அதன்படி இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் போலியாக செயல்பட்டு வந்த 2 கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது என தெரிவித்தனர். #IndianElectionCommision #Twitter
    திருச்சி தில்லை நகர் பகுதியின் வட்டச் செயலாளர் செக்கடி சலீமை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். #ADMK #EPS #OPS
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருச்சி மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தில்லைநகர் பகுதி 49-ஏ வட்ட செயலாளர் முகமதுசலீம் (எ) செக்கடி சலீம், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன் பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #ADMK #EPS #OPS

    பழங்களை இருமுடியாக கட்டிகொண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற மாடல் அழகி ரெஹானா மற்றும் அவரது குடும்பத்தினரை கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் தள்ளிவைத்துள்ளது. #SabarimalaTemple #Rehana
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர் ரெஹானா பாத்திமா. மாடல் அழகியான இவர் ‘கிஸ் ஆப் லவ்’ என்ற முத்தப் போராட்டத்தை ஆதரித்ததன் மூலம் ஊடகங்களில் பிரபலம் ஆனார்.

    மேலும், பெண்கள் தர்பூசணிப் பழம் விற்பவர்களைப்போல் தங்களது உடல் அழகை பகிரங்கமாக வெளிகாட்ட விரும்புகின்றனர் என்று ஒருவர் விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிர்வாணக் கோலத்தில் தர்பூசணி பழத்தின் வெட்டிய பாகத்தால் தனது மார்பழகை மறைத்தபடி படம்பிடித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார்.



    இந்நிலையில், அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து அங்கு சென்ற சில பெண்களில் ரெஹானா பாத்திமாவும் ஒருவர்.

    இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கான எந்த விரதமும் மேற்கொள்ளாமல் நெய் தேங்காய், அரிசிக்கு பதிலாக ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் பழங்களை இருமுடியாக கட்டிக்கொண்டு கடந்த 19-ம் தேதி ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்றார்.

    கேரள மந்திரியின் உத்தரவையடுத்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இந்த சம்பவத்தின் மூலம் தொடர்ந்து செய்திகளில் விவாதப்பொருளாக ஆகிப்போன ரெஹானா மற்றும் அவரது குடும்பத்தினரை கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் தள்ளிவைத்துள்ளது.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜி ஏ.பூக்குன்ஜு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ரெஹானா பாத்திமா என்ற முஸ்லிம் பெயரை வைத்துகொண்டு ஐயப்பன் கோவிலுக்குள் தரிசனம் செய்ய முயன்றதன் மூலம் இந்துக்களின் உணர்வுகளையும், சடங்கு, சம்பிரதாயங்களையும் அவர் காயப்படுத்தி விட்டார்.

    எனவே, இஸ்லாம் மதத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். ரெஹானாவையும் அவரது மஹால்லாவில் (ஒரு பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய சமூகம்) குடும்பத்தாரையும் தள்ளிவைக்குமாறு எர்ணாகுளம் மத்திய முஸ்லிம் ஜமாஅத்-ஐ அறிவுறுத்தி இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

    இந்த அறிவிப்பின் மூலம் இஸ்லாமிய சமுதாயத்தின் பெயரை பயன்படுத்தும் உரிமையும், முஸ்லிம் ஜமாஅத்துடன் இனி எந்தவொரு தொடர்பும் அவருக்கு கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
     
    முஸ்லிம் பெயரை வைத்துகொண்டு பிறமதத்தினரின் உணர்வுகளை காயப்படுத்தியதற்காக சட்டப்பிரிவு 153-ஏ-வின்கீழ் அவர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். #SabarimalaTemple #Rehana
    ரஜினி மக்கள் மன்றத்தில் செயல்படாத நிர்வாகிகள் குறித்து புலனாய்வு குழு விசாரணை நடத்தி புதிய நிர்வாகிகளை நியமிக்க பரிந்துரை செய்கின்றனர். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    ரஜினி புதிய கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் ஓசையின்றி நடந்து வருவதையொட்டி புகார் வரும் நிர்வாகிகள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக ரஜினி மக்கள் மன்றத்தில் புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ரஜினி மக்கள் மன்ற தலைமை நிர்வாகிகள் சுதாகர், இளவரசன், ஸ்டாலின் மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகியோரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறார்கள்.

    இந்த புலனாய்வு குழுவினர் தமிழகம் முழுவதும் மாவட்டங்கள் தோறும் ரகசியமாக சென்று மக்கள் மன்ற நிர்வாகிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கிறார்கள்.

    இவர்கள் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்பதில்லை, மாறாக உறுப்பினர்களுக்கு தெரியாமல் நிர்வாகிகளின் செயல்பாடு பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்கிறார்கள். நிர்வாகிகள் மீது பொதுமக்கள் புகார் கூறும் பட்சத்தில் உடனடியாக நிர்வாகிகள் நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

    சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த புலனாய்வு குழுவினர் மக்களிடம் கருத்துக்களை கேட்டு பழைய நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமிக்க பரிந்துரை செய்துள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற செயலாளராக இருந்த அமலன், கவுரவ செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இணைச் செயலாளராக இருந்த தங்கம் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல ஒவ்வொரு மாவட்டங்களிலும் நிர்வாகிகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு மாற்றப்படுகிறார்கள்.

    ரஜினி ரசிகர்களாக இருந்தவர்கள் பல்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள். அவர்களை சந்தித்து பேசி அனைவரையும் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #Rajinikanth #RajiniMakkalMandram

    அரசு முத்துரங்கம் கலைக்கல்லூரியில் ராகிங் புகாரை அடுத்து கல்லூரி விடுதியில் இருந்து 6 மாணவர்களை நீக்கி வேலூர் கலெக்டர் உத்தரவிட்டார்.
    வேலூர்:

    வேலூர் ஓட்டேரியில் அரசு முத்துரங்கம் கலைக்கல்லூரி உள்ளது. இங்கு 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் ஆதிதிராவிடர் சமுகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்லூரி அருகிலேயே தங்கும் விடுதி உள்ளது.

    விடுதியில் தங்கி 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அஜித், சுரேஷ், கிரண், விக்னேஷ், படையப்பா, மணிகண்டன், தங்கி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை கேலி கிண்டல் செய்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

    இது குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு முதலாம்ஆண்டு மாணவர்கள் புகார் தெரிவித்தனர். விசாரணையில் மாணவர்கள் ராகிங் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து 3-ம் ஆண்டு மாணவர்கள் 6 பேரையும் கல்லூரி நிர்வாகம் விடுதியில் இருந்து 12 நாட்கள் தற்காலிக நீக்கம் செய்தது. இடை நீக்கம் செய்யபட்ட 6 மாணவர்கள் மீண்டும் விடுதிக்கு திரும்பும் போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் அவர்களுக்கும் மோதல் சூழ்நிலை உருவாகியுள்ளதாக விடுதி அதிகாரிகள் செய்த விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து மற்ற மாணவர்களின் நலன் கருதி 6 மாணவர்களை விடுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.இதைத்தொடர்ந்து 6 மாணவர்களையும் விடுதியில் இருந்து நிரந்தமாக நீக்கம் செய்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். #tamilnews
    பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் குமார் தாகூரை முதல்வர் பொறுப்பில் இருந்து நீக்கி திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி அதிரடியாக உத்தரவிட்டார். #KendraVidyalaya
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த கனந்தம்பூண்டியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. இங்கு 950 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் முதல்வராக இருந்த சீனிவாசன் என்பவர் திருச்சிக்கு கடந்த மாதம் மாற்றப்பட்டார்.

    அவருக்கு பதிலாக பெங்களூர் பள்ளி முதல்வராக இருந்த பீகாரைச் சேர்ந்த குமார் தாகூர் என்பவர் திருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

    இவர் பெங்களூரில் பணியில் இருந்த போது மாணவிகளை மிகவும் ஆபாசமாக பேசியது மற்றும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக இவர் மீது போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளில் பெங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது மாநிலத்தில் முதல் 10 இடங்களுக்குள் பெங்களூர் பள்ளியை கொண்டு வர கடுமையாக உழைத்தாக நிர்வாகத்திடம் அவர் முறையிட்டுள்ளார்.

    இதையடுத்து குமார் தாகூரை திருவண்ணாமலை பள்ளி முதல்வராக பணியிட மாற்றம் செய்தனர். அவர் கடந்த மாதம் 13-ந்தேதி பள்ளி முதல்வராக பொறுப்பேற்றார்.

    இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான குமார் தாகூர் திருவண்ணாமலை பள்ளி முதல்வராக மாற்றப்பட்டார் என்று சமூக வலை தளங்களில் தகவல் பரவியது.

    இதனை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள், குற்றவழக்கில் தொடர்புடையவரை மாற்ற வேண்டும் என்று பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை தண்டராம்பட்டு போலீசார் சமாதானப்படுத்தினர். மேலும் அவர்கள் இதுகுறித்து கேந்திரிய வித்யாலயா பள்ளி தலைவராக உள்ள கலெக்டர் கந்தசாமிக்கு வாட்ஸ் அப்பில் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து முதல்வர் பொறுப்பில் இருந்து குமார் தாகூரை நீக்கி கலெக்டர் கந்தசாமி அதிரடியாக உத்தரவிட்டார். குமார் தாகூர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.  #KendraVidyalaya



    அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாமை கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் மூலம் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெறும் முகாமினை கலெக்டர் விஜயலட்சுமி நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து கலெக்டர் விஜயலட்சுமி கூறியதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் வரைவு பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்தம்-2019 பணிகள் கடந்த 1-ந்தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. அது சமயம் 1.1.2019 அன்று வரை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்த முகாம் இன்று (அதாவது நேற்று) அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்றது. மேலும் வருகிற 22-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 6, 13-ந்தேதி ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய பாகம், பிரிவை அந்தந்த கிராம சபைகளில் படித்து பெயர்களைச் சரிபார்க்கும் பணியும் மற்றும் வருகிற 23-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 7, 14-ந்தேதி ஆகிய நாட்களில் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் சிறப்பு முகாமும் நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4-ந்தேதி வெளியிடப்படும். எனவே, 18 வயது நிரம்பிய தகுதியான நபர்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும் மற்றும் வாக்காளர் பட்டியலில் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், தாசில்தார் முத்துலட்சுமி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
    ×