search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 116343"

    • சிவனை ஐமுகச் சிவன் என்றே கொண்டாடுகின்றன.
    • ஐந்தெழுத்து-நமசிவாய நாமம் சொல்லி வழிபட வேண்டும்.

    சிவனை ஐமுகச் சிவன் என்றே கொண்டாடுகின்றன. புராணங்கள், ஈசானம், தத்புருஷம், அகோரம், வாம தேவம், சத்யோஜாதம் என்பன அவ் ஐந்து முகங்கள். நிறங்கள் ஓர் ஐந்துடையாய்! - என்று மணிவாசகர் குறிப்பிடுகிறார். நடுவில் இருக்கும் ஈசானம் - பளிங்கு நிறம். கிழக்கு முகமான தத்புருஷம்- பொன்நிறம், தெற்கு முகமாகிய அகோரம்- கருமை, வடக்கு முகமாகிய வாமதேவம்-சிகப்பு, மேற்கு முகமான சத்யோஜாதம்-வெண்மை என ஆதி சிவனுக்கு நிறங்களும் ஐந்தே.

    அவர் நடனம் ஆடுவது ஐந்து சபைகளில் சிதம்பரம்: தங்கசபை, மதுரை-வெள்ளி அம்பலம், திருஆலங்காடு-ரத்தினசபை, திருநெல்வேலி-தாமிரசபை, குற்றாலம்-சித்திர சபை.

    ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என சிவபிரானுக்கு ஐந்தொழில்கள்.

    தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்தும் பஞ்ச புராணம் எனும் சிறப்புடன் சிவ சந்நிதிகிளல் ஓதப் பெறுவது. சிவனை அர்ச்சிக்க விசேஷமாக பஞ்ச வில்வம் என வில்வம், நொச்சி, விளா, மாவிலங்கை, கிளுவை என ஐந்து பத்திரங்கள் சிறப்புப் பெறுகின்றன.

    ஐந்தெழுத்து-நமசிவாய நாமம் சொல்லி வழிபட வேண்டும். அவ் ஐந்தெழுத்து மந்திரத்தையும் சிவயநம, மசிவயந, நமசிவய, யநமசிவ, வயநமசி என ஐந்து வகையாக உச்சரித்து உருவேற்ற, உள்ளொளி பெருகும் என உரைக்கிறது திருப்புகழ்.

    சிவராத்திரி பொழுதில், விபூதி பூசிக் கொள்ளுததல், ருத்திராட்சம் அணிதல், பஞ்சாட்சரம் ஜபித்தல், வில்வ அர்ச்சனை புரிதல், திருமுறைப் பாடல்கள் பயிலுதல், ஆகிய ஐந்து காரியங்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.

    • சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும்
    • சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வருவன...

    சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை" (பூரணத்துவம்), "மங்களமானது" என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம்.

    சிவன்முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார். அருவத் திருமேனியுடைய சிவம் "சத்தர்' என்றும், அருவுருவத் திரு மேனியுடைய சிவம் "பரம்பொருள்' என்றும், உருவத் திருமேனியுடைய சிவம் "பிரவிருத்தர்' என்றும் சைவர்களால் அழைக்கப்படுகிறது. சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவை;

    காலையில் தரிசிக்க - நோய்கள் நீங்கும்.

    நண்பகலில் தரிசிக்க - தனம் பெருகும்.

    மாலையில் தரிசிக்க - பாவம் அகலும்

    அர்த்த சாமத்தில் தரிசிக்க - வீடுபேறு கிடைக்கும்.

    படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தும் சிவனின் தொழில் எனப்படுகிறது. சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வருவன கொள்ளப்படுகின்றன.

    நெற்றிக்கண் காணப்படல்.

    கழுத்து நீலநிறமாக காணப்படல்.

    சடைமுடியில் பிறைநிலாவைக் கொண்டிருத்தல்.

    நீண்ட சுருண்ட சடாமுடி

    தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.

    உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.

    புலித் தோலினை ஆடையாக அணிந்திருத்தல்.

    கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.

    கையினில் உடுக்கை,திரிசூலம் தாங்கியிருத்தல்.

    நந்தியினை(காளை) வாகனமாகக் கொண்டிருத்தல்.

    இடுகாட்டினை வாழ்விடமாக கொண்டிருப்பவர்

    சக்தியைப் பாதியாக கொண்டிருத்தல்

    அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்றுவகையான சிவ வழிபாட்டு முறையில் உருவ வழிபாடும் சைவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. உருவ வழிபாட்டில் சிவனை, லிங்கம், மகேசுவர மூர்த்தங்கள், சிவ உருவத்திருமேனிகள் ஆகிய சிவ வடிவங்களாக சைவர்களால் வணங்குகிறார்கள்.

    இந்த வடிவங்களை சிவ ரூபங்கள் என்றும், சிவ சொருபங்கள் என்றும் குறிப்பிடலாம். மகேசுவ மூர்த்தங்கள் என்று இருபத்து ஐந்து வடிவங்களும், உருவத்திருமேனிகள் என்று அறுபத்து நான்கு வடிவங்களும் குறிப்பிடப்படுகின்றன.

    சிவனை மூலமூர்த்தியாகக் கொண்டு இந்தியா,இலங்கை,நேபாளம் உட்பட பல நாடுகளில் கோயில்கள் பல உண்டு. சோதி இலிங்கங்கள் உள்ள சிவத்தலங்கள்,பஞ்சபூத சிவத்தலங்கள்,ஐந்து தாண்டவங்களுக்கான சிவத்தலங்கள்,ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள்,சத்த விடங்க சிவத்தலங்கள்,முக்தி தரவல்ல சிவத்தலங்கள்,தமிழகத்தின் நவ கைலாயங்கள்(சிவதலங்கள்),தேவாரப் பாடல் பெற்ற சிவதலங்கள்,அட்டவீரட்டானக் கோயில் என பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

    மகாசிவராத்திரி, யோகசிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ஷிய சிவராத்திரி, மாத சிவராத்திரி என ஐந்து வகைகளாக கொண்டாடப்படும் சிவராத்திரி திருவிழா சைவர்களின் முக்கிய விழாவாகும். மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசி நாளை மகா சிவராத்திரி என்று அழைக்கின்றார்கள். இந்நாளில் பார்வதி தேவி, சிவபெருமானை எண்ணி வழிபட்டதாக சைவர்கள் நம்புகின்றார்கள்.

    • பரத நாட்டியம் விடிய, விடிய நடக்கிறது.
    • 19-ந்தேதி அதிஉன்னத அதிகாரநந்தி கோபுர தரிசனம் நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 11 மணிக்கு அறுபத்து மூவர் அபிஷேகம், மாலை 4.30 மணி அளவில் சனி மகா பிரதோஷம், இரவு 8.30 மணிக்கு முதல் காலம், இரவு 11.30 மணிக்கு 2-ம் காலம், லிங்கோத்பவர் அபிஷேகம், அதிகாலை 2 மணிக்கு 3-ம் கால பூஜை நடக்கிறது.

    முன்னதாக உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தேவாரம்- திருவாசகம் இசைப்பாடல்கள், வாய்ப்பாட்டு, மாணவ-மாணவிகளின் பரத நாட்டியம் விடிய, விடிய நடக்கிறது. 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 4 மணிக்கு 4-ம் காலம், 5.30 மணிக்கு அதிஉன்னத அதிகாரநந்தி கோபுர தரிசனம் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் சந்திரன், செயல் அலுவலா் சிவக்குமாா் மற்றும் பலா் செய்துள்ளனா்.

    • 18-ந்தேதி 1008 வலம்புரி சங்காபிஷேகம் நடக்கிறது.
    • 19-ந்தேதி திருக்கல்யாணம், சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

    வேலூர் கோட்டையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 18, 19 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.

    விழாவில் முதல் நாளான 18-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு ருத்ராபிஷேகம், கால சாந்தி பூஜை நடக்கிறது. 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் 1008 வலம்புரி சங்காபிஷேகம், உச்சிக்கால பூஜை, மாலை 3.30-க்கு விநாயகர், வெங்கடேச பெருமாள், முருகர், அம்பாள் ஆகியோருக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. இதையடுத்து 4.30 மணி அளவில் சனி மகா பிரதோஷ அபிஷேகம், தீபாராதனையும், 6 மணிக்கு ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், சிவராத்திரி முதல் ஜாம பூஜை, தீபாராதனை நடக்கிறது.

    இரவு 7.30-க்கு தங்கத்தேரில் சுவாமி, அம்பாள் பிரகாரவலமும்,8.30 மணிக்கு 108 வலம்புரி சங்கு பூஜை ஹோமமும் நடைபெறுகிறது. 9 மணிக்கு மகா சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகளும், 9.30 மணிக்கு ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், 108 வலம்புரி சங்காபிஷேகம் மற்றும் மகா சிவராத்திரி 2-ம் ஜாம பூஜை, தீபாராதனை நடக்கிறது. 11.30 மணியளவில் ருத்ராபிஷேக பூஜை தொடங்குகிறது. நள்ளிரவு 12 மணிக்கு லிங்கோத்பவர் 3-ம் ஜாம பூஜை மற்றும் மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், சிவராத்திரி 4-ம் ஜாம பூஜையும், 7 மணிக்கு சுவாமி திருக்கல்யாணமும், 9 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும், தீபாராதனையும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகள் ஜலகண்டேஸ்வரர் கோவில் தர்ம ஸ்தாபனம் சார்பில் நடைபெறுகிறது.

    • வழக்கமாக ராக்கால பூஜைக்குப்பின் கோவில் நடை சாத்தப்படும்.
    • சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    மகா சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் பக்தர்கள் விழித்திருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரியொட்டி, பழனி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பழனி மலைக்கோவிலில் இரவு 8 மணிக்கு முதற்கால பூஜையும், 11 மணிக்கு 2-ம் கால பூஜையும் நடைபெற்றது. நள்ளிரவு 1 மணிக்கு 3-ம் கால பூஜையும், அதிகாலை 3 மணிக்கு 4-ம் கால பூஜையுடன் அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகிறது. வழக்கமாக ராக்கால பூஜைக்குப்பின் கோவில் நடை சாத்தப்படும். ஆனால் சிவராத்திரி இரவு முழுவதும் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    இதேபோல் பெரியாவுடையார் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், பட்டத்து விநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில், வேளீஸ்வரர் கோவில், சன்னதி வீதி, மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் உள்ள சிவன் சன்னதிகளில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    • விழா நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
    • தீபாராதனை, அன்னதானம் போன்றவை நடைபெறும்.

    நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள களியங்காடு சிவபுரத்தில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மண்டலாபிஷேக விழா மற்றும் மகா சிவராத்திரி விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. மண்டலாபிஷேக விழாவில் தொடக்க நிகழ்ச்சியாக நாளை அதிகாலை 5.30 மணிக்கு விநாயகர் பூஜை, கலச பூஜை, காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு மூலமூர்த்திகள் அனைவருக்கும் அஷ்டாபிஷேகம், 11.30 மணிக்கு தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு பிரசாதம் வழங்குதல், 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7.40 மணிக்கு சிவபுராணம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    17-ந் தேதி சிவராத்திரி விழா நிகழ்ச்சியாக அதிகாலை 5.30 மணிக்கு கணபதிஹோமம், 6 மணிக்கு அபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7.10 மணிக்கு திருவாசக முற்றோதுதல், நண்பகல் 12 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் போன்றவை நடைபெறும்.

    மாலை 6 மணிக்கு திருவாசக சபை தலைவர் சின்னையன் தலைமையில் 1008 திருவிளக்கு பூஜை, 6.40 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு திருவிளக்கு பரிசு வழங்கல், 8.30 மணிக்கு தீபாராதனை, 8.40 மணிக்கு சிவபுராணம் பாராயணம் ஆகியவை நடக்கிறது.

    18-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு அபிஷேகம், 7 மணிக்கு தீபாராதனை, 7.30 மணிக்கு அகண்ட நாம ஜெபம் தொடக்கம், 11 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு அகண்ட நாம ஜெபம் நிறைவு, தொடர்ந்து சமய வகுப்பு மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், 5.30 மணிக்கு சனி மகாபிரதோஷ அபிஷேகம், 6.40 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 8 மணிக்கு தீபாராதனை, 10 மணிக்கு சாமபூஜை தொடக்கம், அதிகாலை 4.30 மணிக்கு வாண வேடிக்கை போன்றவை நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை தலைவர் சின்னையன் தலைமையில் துணைத்தலைவர் முருகன், செயலாளர் ராஜகோபால், பொருளாளர் நாராயணன் நாயர், துணைச் செயலாளர்கள் சேகர், ரமேஷ், இசக்கிமுத்து, ராஜகோபால் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கவுரவ ஆலோசகர்கள் செய்து வருகிறார்கள்.

    • 18-ந்தேதி மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது
    • பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    நெல்லையப்பர் கோவில் சார்பில் வருகிற 18-ந்தேதி இரவு பாளையங்கோட்டையில் மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது என்று கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற பேரவை அறிவிப்பின்படி முக்கிய சிவாலயங்களான மயிலாப்பூர் கபாலீசுவரர், தஞ்சை பிரகதீசுவரர், கோவை பட்டீசுவரர், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் மற்றும் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் ஆகிய 5 கோவில்களிலும் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடத்தப்படுகிறது.

    இதையொட்டி நெல்லையப்பர் கோவில் சார்பில் பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவில் தசரா விழா நடைபெறும் (எருமை கடா) மைதானத்தில் வருகிற 18-ந்தேதி மாலை 4 மணி முதல் 19-ந்தேதி அதிகாலை 6 மணி வரை மகா சிவராத்திரி பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

    • காலை 7 மணி முதல் நண்பகல் 11 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
    • இரவில் கோவிலில் தங்க அனுமதி இல்லை.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக ஆடி, தை அமாவாசை மகாளய அமாவாசை நாட்களில் மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வருகை தருவார்கள்.

    சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படும் மகா சிவராத்திரி அன்றும் திரளான பக்தர்கள் வருகை தருவதுண்டு. அதன்படி இந்த ஆண்டு வருகிற 18ந் தேதி (சனிக்கிழமை) சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சதுரகிரி மலைக்கு செல்ல வருகிற 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை அனுமதி வழங்கி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. காலை 7 மணி முதல் நண்பகல் 11 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

    மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. இரவில் கோவிலில் தங்க அனுமதி இல்லை. 60 வயதுக்கு மேற்பட்டோர் செல்ல தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது.

    மகா சிவராத்திரி முன்னிட்டு வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னேற்பாடு வசதிகளை செய்து வருகிறது. மேலும் மழைக்குச் செல்லும் பாதைகள், கோவில், மலை அடிவாரத்தில் கூடுதல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மகா சிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு இரவு வழிபாடு நடத்துவது விசேஷமாக கருதப்படுகிறது. எனவே வருகிற 18-ந் தேதி பக்தர்கள் சதுரகிரிக்கு மலை ஏற இரவிலும் அனுமதிக்க வேண்டும். சிவராத்திரி என்பதால் கட்டுப்பாடின்றி பக்தர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இந்த முறை மட்டும் கட்டுப்பாடுகளை தளர்த்தி இரவிலும் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து மண்டபத்தில் எழுந்தருளினர்
    • கோவில் நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலை சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள். 2-ம் நாளான நேற்று இரவு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருளினர்.

    விழாவின் 3-ம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடை பெற்றது. தொடர்ந்து பிரியா விடையுடன், ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

    காலை 6 மணிக்கு சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பாடானார்கள். முக்கிய வீதிகள் வழியாக சென்ற சுவாமி-அம்பாள் காலை 9 மணியளவில் கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு 10 மணிக்கு சுவாமி-அம்பாள் புறப்பாடாகி கோவிலுக்கு வந்தடைகிறார்கள்.

    இன்று காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி-அம்பாள் புறப்பாடான பின் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நடை சாத்தப்பட்டது. இன்று முழுவதும் நடை சாத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வடமாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமலும் தீர்த்த கிணறுகளில் குளிக்க முடியாமலும் ஏமாற்றமடைந்தனர்.

    • மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    • 22-ந்தேதி சண்டிகேசுவரர் வீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகி்றது.

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 22-ந்தேதி வரை 11 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.

    விழாவின் முதல் நாளான நேற்று பகல் 11 மணி அளவில் சுவாமி சன்னதி எதிரே நந்தி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி கொடிமரத்திற்கு புனித நீரால் அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது, கொடிமண்டபம் எதிரே பிரியாவிடையுடன் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் எழுந்தருளினர். சுவாமி-அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    திருவிழாவின் முதல் நாளான நேற்று இரவு சுவாமி தங்க நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    2-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளி ரதவீதிகளை வலம் வருகிறார்கள். இரவில் சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருள்கிறார்கள்.

    முக்கிய நிகழ்ச்சியாக 8-ம் நாள் விழாவான மாசி மகா சிவராத்திரி அன்று (18-ந் தேதி) நடராஜர் கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். இரவு சுவாமி-அம்பாள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் எழுந்தருளி காட்சி தருகின்றனர். அன்று பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடையானது திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும்..

    9-ம் நாளான 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது. 10-ம் விழா நாளான மாசி அமாவாசை அன்று சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனங்களில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருள்கிறார்கள்.

    வருகிற 22-ந்தேதி சண்டிகேசுவரர் வீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகி்றது.

    • கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உயரமான மலையில் அமைந்துள்ளது.
    • மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது.

    திருப்பதி மாவட்டம் எர்ராவாரிபாளையம் மண்டலம் தலகோணா கிராமத்தில் பிரசித்தி பெற்ற சித்தேஸ்வரர் கோவில் உள்ளது. அந்தக் கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உயரமான மலையில் அமைந்துள்ளது.

    அங்கு உயரமான மலைகளில் இருந்து நீர்வீழ்ச்சி கொட்டுகிறது. அங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். சுற்றுலா பயணிகளும் வந்து நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்கின்றனர்.

    கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது. விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வதற்காக கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டிக்கு கோவில் நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் நேரில் அழைப்பிதழை வழங்கினார்.

    • அறிவியல் வளர்ச்சியால் வேலைவாய்ப்பு பறிபோகும் என்பது வீண் பயம் என முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியில் கூறினார்.
    • அரசு பள்ளி, தனியார் பள்ளி என நாம் தான் தேவையில்லாமல் வேறு படுத்தி பார்க்கிறோம் என்றும் பேசினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எஸ்.எஸ்.எல்.வி. டி2 ராக்கெட் வெற்றிகரமாக ஏவியதன் மூலம் இனி வணிக ரீதியான ராக்கெட்டுகளை ஏவ முடியும். நிலவுக்கு செயற்கை கோள்களை அனுப்ப சோத னைகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி நிறைவடைந்தவுடன் நிலவுக்கு ராக்கெட் மூலம் செயற்கைகோள் ஏவப்படும்.

    ஆன்மீகமும், அறிவி யலும் முக்கியமானது. ஆன்மீகத்தில் அறிவிய லையும், அறிவியலில் ஆன்மீகத்தையும் பார்க்க கூடாது. இவற்றின் மூலம் மக்கள் முன்னேற முயற்சிக்க வேண்டும் என்றார்.

    அரசு பள்ளியில் படிப்பது இழிவு கிடையாது. அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு சளைத்தது கிடையாது. நான் அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்து ரையாடிய போது அவர்கள் திறமையானவர்களாக உள்ளனர் என்பதை கண்டறிந்தேன்.

    அரசு பள்ளி, தனியார் பள்ளி என நாம் தான் தேவையில்லாமல் வேறு படுத்தி பார்க்கிறோம். குறிப்பிட்ட தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தால் அதற்கு காரணம் பள்ளி அல்ல, மாணவர்கள் போதிய பயிற்சி எடுக்காததே காரணமாகும். ஆண்டு தோறும் அறிவி யல் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் வேலை வாய்ப்பு குறையாது. அறிவியல் வளர்ச்சியால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது வீண் பயம் ஆகும். புது, புது முயற்சிகளை மேற்கொண்டால் நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×