என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 117052
நீங்கள் தேடியது "நியமனம்"
கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் 814 டாக்டர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #UdumalaiRadhakrishnan
சென்னிமலை:
சென்னிமலையில் தியாகி கொடிகாத்த குமரன் 115-வது பிறந்த தின விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொடிகாத்த குமரன் தனது 28-வது வயதில் திருப்பூரில் நடைபெற்ற ஒரு சுதந்திர போராட்டத்தில் வெள்ளையர்களால் தாக்கப்பட்டதால் தான் ஏந்திய சுதந்திர கொடியினை கீழே விழாமல் தாங்கி பிடித்து தேசத்திற்காக தன்னுயிரை நீத்தார்.
அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருப்பூரில் கொடிகாத்த குமரனுக்கு மணிமண்டபம் அமைத்து ஆண்டுதோறும் அரசின் சார்பில் விழா நடத்தப்பட்டு வருகிறது. கொடி காத்த குமரன் பிறந்த நாளான அக்டோபர் 4-ந்தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாட முதல்-அமைச்சர் ஆணையிட்டார்.
அதன்படி, 2-வது ஆண்டாக இந்த ஆண்டு சிறப்பான முறையில் கொடிகாத்த குமரன் பிறந்தநாள்விழா நடைபெற்றுள்ளது. மேலும் தியாகிகளை கவுரவிக்கும் வகையில் பல்வேறு நினைவகங்களை திறந்து வைத்துள்ளார்.
கால்நடைப்பராமரிப்பு துறையின் மூலம் கிராமப்புறங்களில் சுமார் 2.50 லட்சம் ஏழை, எளிய, ஆதரவற்ற மகளிருக்கு விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது.
50 நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 77 ஆயிரம் பேர் பயனடையவுள்ளனர். கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் 814 டாக்டர்கள் நியமனம் செய்ய 1300 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. விரைவில் பரிசீலனை செய்து நியமிக்கப்படுவார்கள்.
காங்கேயம் இன மாடுகளை பராமரிக்கின்ற வகையில், பவானிசாகர் பகுதியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையமானது பூமி பூஜையிட்டு தொடங்கி வைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஆராய்ச்சி நிலையத்தில் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டு, நிலங்கள் சமன் செய்து, தீவன பயிர்கள் உற்பத்தி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
பர்கூர் மற்றும் தாளவாடி பகுதிகளில் உள்ள விவசாயிகள் வளர்க்கப்படும் நாட்டு மாடுகளின் பாலை நல்ல விலையில் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
முதல் அமைச்சர் அறிவித்ததுபோல் நொய்யல் ஆறு சீரமைக்கப்பட்டு ஒரத்து பாளையம் அணை பகுதியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
இவ்வாறு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார். #UdumalaiRadhakrishnan

இந்திய விமானப்படை துணை தளபதி எஸ்.பி.டியோ-வின் பதவிக்காலம் முடிவதையொட்டி புதிய துணை தளபதியாக ஏர் மார்ஷல் அனில் கோஷ்லா வரும் முதல் தேதி பதவி ஏற்றுகொள்கிறார். #AirMarshal #AnilKhosla
புதுடெல்லி:
இந்திய விமானப்படை துணை தளபதி எஸ்.பி.டியோ என்றழைக்கப்படும் ஷிரிஷ் பாபன் டியோ-வின் பதவிக்காலம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. நாளை ஓய்வுபெறவுள்ள எஸ்.பி.டியோ, கடந்த 26-ம் தேதி தவறுதலாக தனது துப்பாக்கியால் தொடைப்பகுதியில் சுட்டுக்கொண்டார்.
இதனால், காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், எஸ்.பி.டியோ-வின் பதவிக்காலம் முடிவதையொட்டி இந்திய விமானப்படையின் புதிய துணை தளபதியாக ஏர் மார்ஷல் அனில் கோஷ்லா நேற்று நியமிக்கப்பட்டார்.
அக்டோபர் முதல் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த பதவியை அனில் கோஷ்லா ஏற்றுகொள்கிறார். #AirMarshal #AnilKhosla

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்ததற்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. #SupremeCourt #Justice #RanjanGogai
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ரா பணியில் இருந்து ஓய்வு பெற இருப்பதால், அவருக்கு பதிலாக தற்போது சுப்ரீம் கோர்ட்டில் மூத்த நீதிபதியாக இருக்கும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் கோகாய் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். தீபக் மிஸ்ராவின் பரிந்துரையின் பேரில் ரஞ்சன் கோகாயை புதிய தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 3-ந் தேதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, ரஞ்சன் கோகாய் வருகிற அக்டோபர் 3-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்க இருக்கிறார்.
இந்த நிலையில், ரஞ்சன் கோகாய் நியமனத்தை எதிர்த்து வக்கீல்கள் ஆர்.பி.லுத்ரா, சத்யவீர் சர்மா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர் (தற்போது ஓய்வுபெற்றுவிட்டார்), ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் தலைமை நீதிபதிக்கு (தீபக் மிஸ்ரா) எழுதிய கடிதம் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அதில் உள்ள விவரங்களை வெளியிட்டு அவர்கள் தெரிவித்த கருத்துகள் நீதித்துறையின் மாண்பை சீர்குலைப்பதாக அமைந்து இருந்தது. நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், கோர்ட்டில் தங்களுக்குள் இருக்கும் சில கருத்துவேறுபாடுகளை அவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.நீதித்துறையின் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் இப்படி பகிரங்கமாக கருத்து தெரிவிப்பது அரசியல்சாசனத்துக்கு விரோதமானது மட்டுமின்றி நீதித்துறைக்கு பொருத்தமற்றதும், தவறானதும் ஆகும். எனவே புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், தற்போதுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் (புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டது) தாங்கள் தலையிட விரும்பவில்லை என்றும், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் கூறி தள்ளுபடி செய்தனர். #SupremeCourt #Justice #RanjanGogai

மேற்கு வங்காளத்தின் காங்கிரஸ் தலைவராக சோமேந்திரநாத் மித்ராவை நியமித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். #SomendraNathMitra #Congress #WestBengal
கொல்கத்தா:
2019 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தலில் எப்படியேனும் மீண்டும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவும், இந்த முறை தோல்வியை சந்திக்கக்கூடாது என காங்கிரஸ் கட்சியும் போராடி வருகின்றனர்.
இதற்காக நாடு முழுவதும், பிரச்சாரங்களும், மக்கள் நலப்பணிகளும் என இரு கட்சியினரும் செயல்படுகின்றனர். அதே சமயம் கட்சியின் அஸ்திவாரத்தை பலப்படுத்தவும், மக்கள் இழந்த நம்பிக்கையை மீண்டும் அடையவும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே மாற்றங்களை செய்து வருகிறது.
அதன்படி, மேற்கு வங்காள மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராக சோமேந்திரநாத் மித்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. அதேபோல், பிரச்சாரக்குழுவின் தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்ரியும், ஒருங்கிணைப்புக்குழு தலைவராக பிரதீப் பட்டாச்சாரியாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். #SomendraNathMitra #Congress #WestBengal

குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்காதது ஏன்? என வாட்ஸ்-அப் நிறுவனத்துக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர். #SupremeCourt #WhatsApp
புதுடெல்லி:
சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ்-அப் நிறுவனம், குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்கவில்லை எனவும், இந்திய சட்டங்களுக்கு இணங்கவில்லை எனவும் குற்றம் சாட்டி பொறுப்புடைமை மையம் என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு இணங்கும் வரை, வாட்ஸ்-அப் நிறுவனம் கட்டணம் வசூலிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமண், இந்து மல்கோத்ரா ஆகியோரை கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்காதது ஏன்? என வாட்ஸ்-அப் நிறுவனத்துக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு அந்த நிறுவனத்துக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். #SupremeCourt #WhatsApp

ட்ராய் அமைப்பின் தலைவராக இருந்துவந்த ராம் சேவாக் ஷர்மா அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், தற்போது மீண்டும் ட்ராய் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். #TRAI #RamSewakSharma
புதுடெல்லி:
ட்ராய் எனப்படும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ராம் சேவாக் ஷர்மா. இவர் இதற்கு முன்னர் ஆதார் ஆணையத்தின் இயக்குனராக பணிபுரிந்தார். இவர் சமீபத்தில் தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிவிட்டு, முடிந்தால் இந்த ஆதார் எண்ணை பயன்படுத்தி எனக்கு பாதகம் விளைவிக்க முயற்சியுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.
இவரது இந்த ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர், இந்த சவாலை ஏற்று, ஷர்மாவின் முழு விவரங்களையும் ட்விட்டரில் பதிவிட்டார். அதுமட்டுமின்றி, அவருடைய வங்கி கணக்கில் 1 ரூபாய் பணத்தை டெபாசிட்டும் செய்தார்.
இந்த சம்பவம் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆதார் மீது இருந்த குறைந்தபட்ச நம்பகத்தன்மையும் இதனால் பறிபோனதாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இவ்வாறு தனது ஆதார் எண்ணை பதிவிட்டதன்மூலம் ஒரே இரவில் உலக அளவில் பிரசித்தி பெற்ற ஷர்மா தற்போது மீண்டும் ட்ராய் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2020-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை இவரது பதவிக்காலம் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TRAI #RamSewakSharma

அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவிகளில் ஒன்றான அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகள் மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினராக ஜனாதிபதி டிரம்ப் நியமித்து உள்ளார். #DonaldTrump #AdityaBamzai
நியூயார்க்:
அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர், ஆதித்ய பம்ஜாய். இந்தியர். இவர் சட்ட நிபுணரும் ஆவார்.
இவர் வர்ஜீனியா பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் உரிமையியல் நடைமுறை சட்டம், நிர்வாக சட்டம், மத்திய கோர்ட்டுகள், தேசிய பாதுகாப்பு சட்டம், கணினி குற்றவியல் ஆகியவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருகிறார்.
இவர் ஏல் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டமும், சிகாகோ பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பில் பட்டமும் பெற்றவர்.
இவர் வர்ஜீனியா பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் பேராசிரியராக சேருவதற்கு முன்பாக அமெரிக்க நீதித்துறையில் சட்ட ஆலோசனை அலுவலகத்தில் ஆலோசகராக பணியாற்றி வந்தார்.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த ஆன்டனின் ஸ்காலியாவின் உதவியாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.
இப்போது இவரை அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகள் மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினராக ஜனாதிபதி டிரம்ப் நியமித்து உள்ளார்.
இந்தப் பதவியில் இவர் 2020-ம் ஆண்டு ஜனவரி 29-ந் தேதி வரை இருப்பார்.
பயங்கரவாதத்தில் இருந்து அமெரிக்காவை பாதுகாப்பதற்காக அரசு நிர்வாகம் எடுக்கிற முயற்சிகளை அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகள் மேற்பார்வை வாரியம் உறுதிப்படுத்தும். அத்துடன் இந்த அமைப்பானது, அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் கடமையையும் கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #DonaldTrump #AdityaBamzai #tamilnews

குடிமராமத்து திட்ட பணிகளை கண்காணிப்பதற்காக 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில், 2016-17-ம் ஆண்டுக்கான குடிமராமத்து திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக ரூ.100 கோடி மதிப்பீட்டில் 1,511 ஏரிகளில் புணரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் ஏரிகள் புணரமைப்பு பணிக்கான ரூ.328.95 கோடி ஒதுக்கப்பட்டு, அதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது.
இந்த திட்ட அறிக்கைக்கு அரசு ஒப்புதல் அளித்த நிலையில், கடந்த வாரம் குடிமராமத்து பணிகளை பாசன விவசாயிகள் சங்கம், விவசாய அமைப்புகள் சார்பில் தொடங்கப்பட்டன.
1,511 ஏரிகளில் ஆயிரம் ஏரிகளில் புணரமைப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 511 ஏரிகளில் விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் சூழ்நிலையில், புணரமைப்பு பணிகளை விரைவில் முடிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி குடிமராமத்து பணிகளை கண்காணிக்கும் வகையில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதன்படி, திருவண்ணாமலை பெண்ணையாறு மற்றும் கடலூர் வடிநில வட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பு, தமிழக அரசின் வேளாண்மைத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. வேலூர் நீர்வளத்துறை திட்டவட்டம் மற்றும் சென்னை பாலாறு வடிநில வட்டம் மற்றும் வேலூர் குளம் நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் அமுதா நியமிக்கப்பட்டு உள்ளார்.
பெரியார், வைகை வடிநில வட்டம் மற்றும் கீழ் வைகை வடிநில வட்டத்தை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சாலும், வைப்பார் வடிநில வட்டம் மற்றும் தாமிரபரணி வடிநில வட்ட பகுதியை பேரிடர் மேலாண்மை கமிஷனர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் கண்காணிக்க உள்ளனர்.
சேலம் மேல் காவிரி வடிநில வட்டம் மற்றும் பழனி சிறப்பு திட்ட வட்டம் ஆகியவற்றில் நடக்கும் குடிமராமத்து பணியை திட்ட வளர்ச்சித்துறை செயலாளர் ஆஷிஸ் வச்சானி கண்காணிப்பார். நடு காவிரி வடிநில வட்டம் மற்றும் கீழ் காவிரி வடிநில வட்டத்தை தேசிய சுகாதார மைய இயக்குனர் தாரேஸ் அகமதுவும், ஈரோடு பவானி வடிநில வட்டம் மற்றும் பரம்பிகுளம் ஆழியாறு வடிநில வட்டத்தை கால்நடைத்துறை செயலாளர் கே.கோபாலும் கண்காணிக்க உள்ளனர்.
இந்த உத்தரவை தமிழக அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்து உள்ளார்.

இடைக்கால டி.ஜி.பி.க்களை மாநில அரசுகள் நியமிக்கக் கூடாது. புதிய டி.ஜி.பி.யாக நியமிக்க தகுதியானவர்களின் பெயர்களை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #ActingDGP
புதுடெல்லி:
மாநில அரசுகள் தங்களுக்கு வேண்டியவர்களையும், தங்களது அரசியல் கண்ணோட்டத்துக்கு ஏற்ப செயல்படுபவர்களையுமே போலீஸ் டி.ஜி.பி.க்களாக நியமிப்பதாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஓய்வுபெறும் நிலையில் உள்ளவர்களை டி.ஜி.பி.யாக நியமித்து விட்டு, பிறகு பணிநீட்டிப்பு வழங்குவதாகவும் புகார் நிலவி வருகிறது. இதை எதிர்த்து, ஓய்வுபெற்ற டி.ஜி.பி.க்கள் பிரகாஷ் சிங், என்.கே.சிங் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். அம்மனுக்கள் மீது கடந்த 2006-ம் ஆண்டு, சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்புமிக்க உத்தரவுகளை பிறப்பித்தது.
அவற்றில், டி.ஜி.பி., போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகளின் நியமனம் தகுதி அடிப்படையிலும், வெளிப்படையாகவும், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பதவியில் இருக்கும்வகையிலும் அமைய வேண்டும் என்ற உத்தரவும் அடங்கும்.
போலீஸ் மீது மாநில அரசுகள் செல்வாக்கு செலுத்துவதை தடுக்க மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும், போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்க போலீஸ் புகார் ஆணையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளையும் பிறப்பித்தது.
ஆனால், இந்த உத்தரவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்று கூறி, பா.ஜனதா பிரமுகர் அஸ்வினி குமார் உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தனது மனுவை அவசர மனுவாக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதுபோல், 2006-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி, மத்திய அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-
மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், எந்த போலீஸ் அதிகாரியையும் இடைக்கால டி.ஜி.பி.யாக நியமிக்கக் கூடாது.
டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் ஆகிய பதவிகளில் நியமிக்க தகுதியான அதிகாரிகளின் பெயர்களை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு (யு.பி.எஸ்.சி.) அனுப்பி வைக்க வேண்டும். பணியில் உள்ள டி.ஜி.பி. ஓய்வுபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே இதை செய்ய வேண்டும்.
அப்பெயர்களில், மிகவும் தகுதிவாய்ந்த 3 பேர் கொண்ட பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் இறுதி செய்யும். அந்த 3 பேரில் ஒருவரை மாநில, யூனியன் பிரதேச அரசுகளே தேர்வு செய்து, டி.ஜி.பி.யாக நியமித்துக் கொள்ளலாம். அப்படி நியமிக்கப்படுபவருக்கு, குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது பதவிக்காலம் மிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஆகவே, போலீஸ் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக, மாநில அரசுகள் ஏதேனும் சட்டமோ, விதிமுறைகளோ வகுத்திருந்தால், அந்த சட்டமும், விதிமுறைகளும் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
இருப்பினும், இந்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி மாநில அரசுகள் எங்களை அணுகலாம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர். #SupremeCourt #ActingDGP #Tamilnews

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவில் 73 டாக்டர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்தார்.
சென்னை:
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி வளாகத்தில், சர்வதேச யோகா தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் டாக்டர் கி.செந்தில்ராஜ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் பி.உமாமகேஸ்வரி, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ ஆகியோர் முன்னிலையில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 300 பேர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-
தமிழகத்தில் 31 அரசு வட்ட மருத்துவமனையிலும் சென்னையில் 4 அரசு மருத்துவமனைகளிலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் தொடங்கப்பட்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 165 யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிலையங்கள் உள்ளன. இந்தியாவிலேயே அனைத்து இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதிக்கு அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளது என்ற சிறப்பு பெருமை தமிழ்நாட்டை மட்டுமே சாரும்.
சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் இயற்கை வழியில் உடற்பருமனை குறைக்க சிறப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. இச்சிகிச்சை முறையில் எவ்வித பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சைகளான நீராவி குளியல், வாழை இலை குளியல், மண் குளியல், இயற்கை உணவு, உண்ணா நோன்பு, இயற்கை மூலிகை சிகிச்சை மற்றும் யோகா சிகிச்சையும் எவ்வித கட்டணமும் இல்லாமல் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவில் 73 டாக்டர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமனம் செல்லாது என்றும் வேறு குழுவை அமைத்து துணைவேந்தரை தேர்வு செய்யுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு இன்று மதியம் விசாரித்தது. அப்போது துணைவேந்தர் செல்லத்துரை நியமனம் செல்லாது என்றும் வேறு குழுவை அமைத்து துணைவேந்தரை தேர்வு செய்யுமாறு உத்தரவிட்டனர். #HighCourt

புதிதாக நியமிக்கப்பட்ட ஐகோர்ட்டு நீதிபதி நியமனத்தை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 7 நீதிபதிகளை நியமித்து சமீபத்தில் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து நிர்மல்குமார், ஆஷா, சுப்பிரமணியம் பிரசாத் உள்பட 7 பேரும் கடந்த 4-ந் தேதி நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.
இவர்களில் சுப்பிரமணியம் பிரசாத்தை நீதிபதியாக நியமித்தது செல்லாது என்று அறிவிக்கக்கோரி வக்கீல் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், சென்னை ஐகோர்ட்டுக்கு நீதிபதியாக நியமிக்கப்படுபவர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சென்னை ஐகோர்ட்டிலும், அதன் அதிகார வரம்புக்கு உட்பட்ட கோர்ட்டிலும் வக்கீலாக பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால், சுப்பிரமணியம் பிரசாத் அதுபோன்று பணியாற்றவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சுப்பிரமணியம் பிரசாத் சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீலாக கடந்த 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட அவருக்கு அனைத்து தகுதியும் உள்ளது’ என்று வாதாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘இந்திய அரசியல் சாசனத்துக்கு முரணாக நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் நியமனம் நடைபெறவில்லை. ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட அவருக்கு தகுதி உள்ளது. இந்த பதவிக்கு அவர் பொருத்தமானவர் தான் என்று சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டின் மூத்த நீதிபதிகள் குழு(கொலிஜியம்) முடிவு செய்துள்ளது. எனவே, இந்த மனுவை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர். #tamilnews

×

X