search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரச்சாரம்"

    தமிழகத்தில் மட்டும் 80 லட்சம் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு இல்லாமல் திண்டாடுகின்றனர் என தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். #Vaiko
    வேலூர்:

    ‘மோடி அரசை தூக்கி எறிய வேண்டும் என்று வேலூரில் வைகோ பேசினார்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக டி.எம்.கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேலூர் மண்டி தெருவில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. ம.தி.மு.க. தலைவர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

    சுதந்திர இந்தியாவின் முக்கிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். எதிர்கால இந்தியா என்ன ஆகும், ஜனநாயகமாக இருக்குமா? ரத்தக்கறைகள் கொண்ட பாசிச அதிகாரமாக மாறுமா? என்ற கேள்வி எழுகிறது. இந்த தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். இவர் ஆற்றல் மிகுந்தவர். ஆங்கில புலமை கொண்டவர்.

    சில மாதங்களுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் மகாத்மா காந்தி உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, கோட்சே வாழ்க என முழக்கமிட்டனர். இது மோடிக்கு கேட்கவில்லையா? அவருக்கு இதயம் இல்லையா? இரக்கம் இல்லையா?. இந்துத்துவா மதவெறி கொண்ட ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டங்களை நிறைவேற்றும் மோடி அரசு பாசிச அரசாகும். 5 ஆண்டுகாலத்தில் ஒருவருக்கு கூட வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை. இந்தியாவில் பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தமிழகத்தில் தான் 6.5 சதவீதம் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

    மோடி அரசை தூக்கி எறிய வேண்டும். தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு வஞ்சகம் செய்கிறது. அதை தட்டிக் கேட்காமல் கைகட்டி தமிழக அரசு உள்ளது.

    தமிழகத்தை தாரைவார்க்கும் அ.தி.மு.க. அரசையும் தூக்கி எறிய வேண்டும். தி.மு.க.வின் உதயசூரியன் சின்னம் வெற்றி சின்னமாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ராணிப்பேட்டையில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து வைகோ பேசியதாவது:-

    2கோடி பேருக்கு வேலை தருவதாக கூறிய மோடி 2 ஆயிரம் பேருக்கு கூட வேலை தரவில்லை. ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    காவேரி, முல்லை பெரியாறு பிரச்சினைகளை தீர்க்கவில்லை, ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



    முதுகெலும்பு இல்லாத தமிழக அரசு இதற்கெல்லாம் உறுதுணையாக உள்ளது. தமிழகத்தில் 80லட்சம் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு இல்லாமல் திண்டாடுகின்றனர். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Vaiko
    பிரசாரத்தின்போது பிறரின் சொந்த வாழ்க்கை குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சாதி, மத உணர்வுகளை தூண்டி வாக்கு சேகரிக்க கூடாது என வேலூர் டிஎஸ்பி கூறியுள்ளார்.

    வேலூர்:

    அரசியல் கூட்டங்களை இரவு 10 மணிக்கு மேல் நடத்தக்கூடாது என்று வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேசினார்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக அனைத்து கட்சியினருக்கான ஆலோசனை கூட்டம் வேலூர் காவலர் மன்றத்தில் நேற்று நடந்தது. சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். தெற்கு இன்ஸ்பெக்டர் அழகுராணி வரவேற்றார்.


    கூட்டத்தில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அரசியல் கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நகர் பகுதிகளில் டிஜிட்டல்பேனர் வைக்க அனுமதி கிடையாது. கிராமப்புறங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே சுவரொட்டி போன்றவை ஒட்ட வேண்டும். ஊர்வலம் செல்ல வேண்டுமானால் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும். அரசியல் கூட்டங்களுக்கும் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். கூட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட இடத்திலே கூட்டம் நடத்த வேண்டும்.

    பஸ், லாரி, வேன் போன்ற வாகனங்களில் அதிகப்படியான மக்களை ஏற்றி வரக்கூடாது என கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. எனவே அதை கடைபிடிக்க வேண்டும். பிரசாரத்தின்போது பிறரின் சொந்த வாழ்க்கை குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும். சாதி, மத உணர்வுகளை தூண்டி வாக்கு சேகரிக்க கூடாது. தேர்தலில் வேட்பாளர்கள் மற்றும் அந்த கட்சியினர் செய்யும் செலவுகள் கணக்கிடப்படும். சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான பொருட்களை பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் கூட்டங்களை நடத்த கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பிரசாரத்தை தொடங்க உள்ள காங்கிரஸ் தலைவர்கள், சபர்மதி ஆசிரமத்தில் இன்று பிரார்த்தனை செய்தனர். #CongressWorkingCommittee #CWCMeeting #SabarmatiAshram
    அகமதாபாத்:

    பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கிறது. கட்சித்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா, மன்மோகன் சிங், பிரியங்கா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 58 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மாநிலத்தில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுவதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலத்திற்கு வந்திருந்த சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரியங்கா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் இன்று காலை அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றனர்.  மகாத்மா காந்தி தண்டி யாத்திரையை தொடங்கிய நாளான இன்று, சபர்மதி ஆசிரமத்தில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்றனர்.



    வல்லவாய் படேல் தேசிய நினைவிடத்தில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. காரிய கமிட்டி கூட்டம் முடிவடைந்ததும் கட்சி சார்பில், பல்வேறு விவகாரங்களை உள்ளடக்கிய அறிக்கை வெளியிடப்படும்.

    காரியக் கமிட்டிக் கூட்டத்திற்குப் பிறகு காந்திநகரின் அடலாஜ் பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.

    சமீபத்தில் அரசியலுக்குள் அடியெடுத்து வந்த பிரியங்கா காந்தி பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #CongressWorkingCommittee #CWCMeeting #SabarmatiAshram
    மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 6-ம் தேதி சென்னை வர உள்ளார். மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்று பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #LSPolls #Modi #ModiCampaign
    சென்னை:

    மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆளும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியும் நடைபெறுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையை அதிமுக தலைவர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளார். கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் 1-ம் தேதி மதியம் நடைபெறும் அரசு விழாவில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். பின்னர் அருகே அமைக்கப்பட்டுள்ள மற்றொரு மேடையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இவ்விழாவில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமரின் பிரச்சார திட்டம் குறித்து அவர் கூறியதாவது:-

    தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகிறார். அதன்பின் சென்னைக்கு மார்ச் 6-ம் தேதி அவர் வருகிறார். பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தொண்டர்கள் முன் பேசுகிறார்.



    கூட்டணியில் சேருவதற்கு தே.மு.தி.க.விற்கு உரிய மரியாதை தரப்பட்டது. கூட்டணிக்கு வந்தால் உரிய மரியாதை அளிக்கப்படும் என்று எங்கள் கட்சி தலைவர்களும் கூறியிருக்கிறார்கள். எங்களைப் பொருத்தவரை நல்ல கூட்டணி அமைய வேண்டும். எண்ணிக்கை முக்கியமில்லை. இதற்காக சில இடங்களை விட்டுக்கொடுத்தாலும் பரவாயில்லை என்று நினைக்கிறோம்.

    விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் நிதியுதவி அவர்களுக்கு பலன் தரும்.  தேவையான வேளாண் பொருட்களை அவர்கள் வாங்குவதற்கு ஏற்ற வகையில் ஊக்க தொகையாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மோடி சென்னை வரும்போது, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவார் என்றும், சங்கர மடத்திற்கு சென்று சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மோடி பங்கேற்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை காஞ்சிபுரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

    பிரதமர் மோடி சென்னை வருவதற்கு முன்னதாகவே கூட்டணி இறுதி செய்யப்படும் என்றும், பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்று பேசுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினமே கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது இறுதி செய்யப்படலாம். #LSPolls #Modi #ModiCampaign

    பிரதமர் மோடியின் பேட்டி முற்றிலும் வார்த்தை ஜாலம் நிறைந்த ஓரங்க நாடகமாக உள்ளது. அவர் பொய்களை விற்க முயற்சிக்கிறார் என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. #Congress #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடியின் சிறப்பு பேட்டி குறித்து காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடியின் பேட்டி, முற்றிலும் வார்த்தை ஜாலம் நிறைந்த ஓரங்க நாடகமாக உள்ளது. 2019-ம் ஆண்டிலாவது அவர் வருத்தம் தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தால், அவர் பொய்களை விற்க முயற்சிக்கிறார்.



    அவரது பேட்டியில் உண்மை நிலவரம் எதுவும் இல்லை. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. போன்றவற்றால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து அவர் பேசி இருக்க வேண்டும். ரபேல் விவகாரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு தயாரா?

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #PMModi

    தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்காக பாஜகவை ஆதரித்து பிரதமர் மோடியும், காங்கிரசை ஆதரித்து முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சாரம் செய்ய உள்ளனர். #Modi #SoniaGandhi #RahulGandhi
    ஐதராபாத்:

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

    ஆளும் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் கூட்டணி (தெலுங்குதேசம், இந்திய கம்யூனிஸ்டு, தெலுங்கானா ஜன சமிதி) பா.ஜனதா, அகில இந்திய மஜ்லிஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய 5 முனை போட்டி நிலவுகிறது.

    பாஜகவினரை ஆதரித்து பிரதமர் மோடி மற்றும் தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.



    பிரதமர் மோடி நிஜாமாபாத், வாரங்கல்லில் 27ம் தேதியும், ஐதராபாத்தில் டிசம்பர் 3ம் தேதியும் பிரசாரம் செய்கிறார். தெலுங்கானாவில் உள்ள 5 தொகுதிகளில் நவம்பர் 25 மற்றும் 28ம் தேதிகளில் பாஜக தலைவர் அமித் ஷா தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வருகிற 23-ம் தேதி பிரசாரம் செய்வார்கள். மேட்கல் தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் இருவரும் பங்கேற்று பேசுகிறார்கள்.

    தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு சோனியா காந்தி முதல் முறையாக அங்கு சென்று பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Modi #SoniaGandhi #RahulGandhi
    நாட்டின் கருவூல சாவிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பணக்காரர்களிடம் மோடி கொடுத்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #ChhattisgarhElections #Rahul #Modi
    சராமா:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனால் தலைவர்கள் உச்சகட்டபிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், சராமா பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-

    கடந்த நான்கைந்து ஆண்டுகளில் பிரதமர் மோடி, 15 பணக்காரர்களுக்கு ரூ.3.5 கோடி வழங்கி உள்ளார். தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆண்டிற்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்போது, அந்த தொகையைவிட 10 மடங்கு அதிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தொழிலதிபர்களுக்கு அவர் கடன்களை தள்ளுபடி செய்துள்ளார்.



    கருவூலத்தின் சாவிகளை 15 தேர்ந்தெடுக்கப்பட்ட பணக்காரர்களுக்கு மோடி வழங்கி உள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சியோ சாவிகளை விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள், பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்க விரும்புகிறது.

    இவ்வாறு அவர் பேசினார். #ChhattisgarhElections #Rahul #Modi
    பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்காதது ஏன்? என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.#KarnatakaElection
    பெங்களூரு:

    நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. நாளை(செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. தென்னிந்தியாவில் கால் பதிக்க கர்நாடகம்தான் நுழைவு வாயில் என்று கருதிய பா.ஜனதாவினர் எப்படியாவது கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று பம்பரமாக சுழன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா உள்பட பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள், மத்திய மந்திரிகள், பிற மாநில பா.ஜனதா முதல்-மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கர்நாடகத்தில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டனர். இருப்பினும் பா.ஜனதாவில் உள்ள பல முக்கிய தலைவர்களும், பிரபலங்களும் கர்நாடகத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக வரவில்லை. அது ஏன்? என்பது பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் உடல்நலக்குறைவு காரணமாக கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்று பா.ஜனதா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பா.ஜனதாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான ஹேமமாலினி, மத்திய மந்திரி மனோஜ் சின்ஹா ஆகியோரும் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.

    இதுகுறித்து பா.ஜனதா மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், “நாங்கள் ஹேமமாலினி மற்றும் மனோஜ் சின்ஹா ஆகியோரை அழைக்கவில்லை. அவர்களுடைய வருகை அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது. அதனால் அவர்களை நாங்கள் பிரசாரத்திற்காக அழைக்கவில்லை” என்று கூறினார்.

    இதேபோல் காங்கிரசிலும் கட்சியின் சமூக ஊடக பொறுப்பாளரும், நடிகையுமான ரம்யா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. இதுபற்றி காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “நாங்கள் பலமுறை அவரை பிரசாரத்தில் ஈடுபடக்கோரி அழைத்தோம். இருப்பினும் அவர் வரவில்லை. அவர் ஏன் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்பது பற்றி எங்களுக்கு தெரியாது” என்று கூறினார்.

    இதுமட்டுமல்லாமல் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா ஆகியோரும் பெங்களூருவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டாம் என்று கட்சி ஆலோசகர்கள் அறிவுறுத்தியதால், அவர்கள் பிரசாரம் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. #KarnatakaElection
    ×