search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 118697"

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • இன்று அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்வார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயண புண்ணியக்கால பிரம்மோற்சவ விழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் காலை தாமரைக் குளக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

    அப்போது குளக்கரையில் சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதைத்தொடர்ந்து இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வரலாற்று கதை கூறப்படுகிறது. அதாவது பிருங்கி என்ற முனிவர் அருணாசலேஸ்வரரை மட்டுமே வணங்கி வந்துள்ளார். ஒரு சமயத்தில் அருணாசலேஸ்வரரும், அம்மனும் ஒன்றாக இருந்தபோது அவர் வண்டு உருவில் அருணாசலேஸ்வரரை மட்டும் சுற்றி வந்து வணங்கி இருக்கிறார். இதனால் சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பின்னர் கூடல் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த ஊடல் மற்றும் கூடலை விளக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

    தை மாதம் 2-ந் தேதி நடக்கும் இந்த திருவிழா நேற்று நடைபெற்றது. இதற்காக அதிகாலை நடை திறக்கப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது. மேலும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்திகளுக்கு வடை, அதிரசம், முருக்கு, காய், பழங்கள் மற்றும் பூ மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    சாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் திருவூடல் விழாவுக்கு புறப்பட்டனர். அதிகாலையில் நந்திக்கு தரிசனம் கொடுத்து விட்டு ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டி வாயிலில் சூரிய பகவானுக்கும் காட்சி கொடுத்து மாடவீதியை 3 முறை சுற்றி வந்தனர். அதைத்தொடர்ந்து இரவு சுமார் 7 மணியளவில் திருவூடல் தெருவில் திருவூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    திருவூடல் திருவிழாவின் போது சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு அம்மன் மீண்டும் கோவிலுக்கு சென்று விட்டார். அருணாசலேஸ்வரர் குமரக்கோவிலுக்கு சென்று விட்டார். அங்கிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) பக்தர்கள் கிரிவலம் செல்வது போன்று அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்வார். கிரிவலம் முடித்து விட்டு கோவிலுக்கு வரும் போது சாமி சன்னதியில் மறுவூடல் நடக்கும். இதனுடன் திருவூடல் திருவிழா நிறைவு பெறுகிறது.

    மேலும் நேற்று விடுமுறை தினம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    ஆரணி புதுகாமூர் பகுதியில் உள்ள புத்திர காமேட்டீஸ்வரர் சிவன் கோவிலில் திருவூடல் விழாவை முன்னிட்டு நந்திக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து உற்சவர் சாமியை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நந்திக்கு காய்கறி, பழ வகைகள், இனிப்பு, கரும்பு உள்ளிட்ட வைகளால் அலங்கரித்து இருந்தனர். சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கோட்டை கைலாயநாதர் கோவில், பூமிநாதர் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில், அருணாசலேஸ்வரர் கோவில், அம்மையப்பர் கோவில், சேவூர்- பையூர் பகுதியில் உள்ள விருப்பாச்சீஸ்வரர் கோவில், எஸ்.வி.நகரம் பகுதியில் உள்ள திரைகேபேஸ்வரர் கோவில், அடையபலம் காலகண்டேஸ்வரர், நீலகண்டேஸ்வரர் கோவில், முள்ளிப்பட்டில் உள்ள ஆபத்த சகாயேஸ்வரர் கோவில், அக்ராபாளையம் பகுதியில் உள்ள மார்க்க சகாயேஸ்வரர் கோவில், காமக்கூரில் உள்ள சந்திரசேகரன் கோவிலிலும் திருவூடல் விழா நடந்தது.

    • இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
    • 16-ந்தேதி திருவூடல் உற்சவம் நடக்கிறது.

    சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சூரியன் பயணம் செய்யும் காலம் உத்திராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு சூரியன் தனது பயணத்தை தொடங்கும் காலத்தை சிவாலயங்களில் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம், தட்சிணாயண புண்ணியகால பிரம்மோற்சவம் ஆகியவற்றின் தொடக்கமாக சாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று கொடியேற்றத்துடன் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து விநாயகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் ஆகியோருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாமி சன்னதியில் இருந்து மேளதாளம் முழங்க தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

    பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 6.15 மணி அளவில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு 'அரோகரா' என்று பக்தி கோஷம் எழுப்பினர்.

    விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். நேற்று முதல் தொடர்ந்து 10 நாட்களும் காலை மற்றும் இரவில் விநாயகர், சந்திரசேகரர் மாட வீதி உலா நடைபெறுகிறது. 10-ம் நாளான வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. 16-ந்தேதி (திங்கட்கிழமை) அருணாசலேஸ்வரர் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவூடல் உற்சவமும், 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மறுவூடல் உற்சவமும் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 2.26 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    நேற்று பகலில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மாலை 6 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    அம்மணி அம்மன் கோபுர வாசலில் சிறப்பு தரிசனம் மேற்கொள்ள பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர். அதுமட்டுமின்றி போலீசாரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் பக்தர்கள் செல்லும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். பவுர்ணமி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4.20 மணி வரை இருந்ததால் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    • அதிகாலை 3 மணி அளவில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளினார்.
    • உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனம் நடந்தது.

    இதனை முன்னிட்டு அதிகாலை 3 மணி அளவில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளினார்.

    அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதை தொடர்ந்து கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மலை மீது ஏற்றப்பட்ட மகாதீப மை நடராஜருக்கு வைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தெற்கு திருமஞ்சனம் கோபுரம் வழியாக நடராஜர் வெளியே வந்து எழுந்தருளி மாடவீதியில் உலா வந்தார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது.

    இதனை முன்னிட்டு இன்று காலை சாமி சன்னதி முன்பு தங்க கொடி மரத்தில் கொடி யேற்றப்பட்டது.

    இதனை தொடர்ந்து காலை, மாலை இருவேளையும் மாட வீதியில் சாமி ஊர்வலம் நடைபெறும்.

    தொடர்ந்து 10ஆம் நாள் மாட்டுப்பொங்கல் அன்று காலை 6.15 மணிக்கு அண்ணாமலையார் ராஜகோபுரம் அருகே உள்ள திட்டிவாசல் வழியாக சூரிய பகவானுக்கு காட்சி கொடுப்பார். தொடர்ந்து இரவு திருவூடல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    • பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.26 மணிக்கு தொடங்கி மறுநாள் 7-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 4.20 மணிக்கு நிறைவடைகின்றது.

    இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • சாமிக்கும், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • கடந்த 6-ந்தேதி மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.

    இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 6-ந்தேதி காலையில் கோவிலில் பரணிதீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்பட்டும் மலையின் உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் மலை உச்சியில் காட்சி அளித்தது. மலையில் காட்சி அளித்த மகா தீபத்தை காண பக்தர்கள் பலர் மலை உச்சிக்கு சென்று வந்தனர்.

    திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுவதால் அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையின் உச்சிக்கு பக்தர்கள் ஏறி சென்று வருவதால் வழக்கமாக தீபத் திருவிழா நிறைவுற்ற பிறகு பிராயசித்த பூஜை நடத்தப்படும்.

    அதன்படி தீபத் திருவிழா நிறைவடைந்த பிறகு இந்த ஆண்டிற்கான பிராயசித்த பூஜை நேற்று நடந்தது. இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தி சாமிக்கும், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து புனிதநீர் கலசத்தை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிராயசித்த பூஜை நடந்தது.

    பின்னர் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    இதில் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அக்னிக்குரிய காரகன் அங்காரகன்.
    • இந்த கோவில் அக்னி கோவில்.

    சிவன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கட்கிழமையாக இருக்கும். ஆனால் திருவண்ணாமலை அக்னி மலை. இதனால் தான் அருணாசலம் என்ற பெயரும் உண்டு. அருணம் என்றால் சிவப்பு என்று பொருள். இந்த கோவில் அக்னி கோவில். அக்னி கோவிலுக்குரிய நாள் செவ்வாய்க்கிழமை.

    அக்னிக்குரிய காரகன் அங்காரகன். ஆகவே இந்த கோவிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று விசேஷ வழிபாடு நடக்கும். அதுபோலவே செவ்வாய்க்கிழமை அன்று வழிபடுவோர் பிறவி பிணியில் இருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகிறது.

    • அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது.
    • பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.

    கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது.

    அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது. கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.

    பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம். திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம்.

    அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.

    • திருவண்ணாமலைக்கு பவுர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் செல்வது வாடிக்கை.
    • கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும்.

    திருவண்ணாமலைக்கு மாதம் தோறும் பவுர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதற்கு காரணம் சந்திரனின் 16 கலைகளும் பக்தர்களின் உடல் மீது படுவதால், மனோபலம் அதிகரிக்கிறது. மனோபலம் தரும் நம்பிக்கை காரணமாக அவர்கள் எடுத்த செயல்களில் வெற்றி அடைகிறார்கள்.

    தாங்கள் தொடங்கும் செயல்களுக்கு அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் பூரண ஆசி தருவதாகக் கருதுகிறார்கள். பொதுவாக கிரிவலத்தை முதன் முதலாகத் தொடங்குவோர்கள் கார்த்திகை அல்லது மார்கழி மாதம் தொடங்குவது நல்லது. இந்த மாதங்களில் ஏதாவது ஒரு நாளில் திருவண்ணாமலையை ஒரே ஒரு முறை வலம் வந்தாலும், அந்த ஆண்டு முழுவதும் கிரிவலம் செய்த பலனை அடைவர்.

    • 3-ம் பிரகாரத்தில் தல விருட்சமான மகிழ மரம் உள்ளது.
    • இறந்தவர்களுக்கு மோட்சதீபம் போடப்பட்டு வருகிறது.

    கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை திருக்கோவிலுக்குள் சிவகங்கை தீர்த்தத்தில் புற அழுக்குப்போக புனித நீராடி பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி அசுத்தம் அகற்றினால் பிரம்மஞானம் பெறலாம்.

    பக்தர்களின் உச்சகட்டமாக அமைவது கார்த்திகை தீபத்திற்கு நெய்குடம் கட்டுதலாகும். இதற்கு திருக்கோவில் மூலம் தரமான நெய் ஆவின் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த விலையில் பக்தர்களுக்கு நெய் குடம் செலுத்த சப்ளை செய்யப்பட்டு மலை உச்சிக்கு கார்த்திகை தீபத்திற்கு அனுப்பப்படுகிறது.

    கார்த்திகை தீபத்திற்கு பிறகும் மலைமேல் உள்ள தீபமானது 10 நாட்களுக்கு குறையாமல் ஏற்றி வைக்கப்படும். அதற்கு பின் தீபம் ஏற்றி வைக்க பயன்படுத்தப்பட்ட பாத்திரம் திருக்கோவிலுக்கு எடுத்து வரப்படும். அந்த பாத்திரத்தில் எஞ்சி உள்ள கருமை நிறமுள்ள சாம்பல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. பக்தர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த மை அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    திருக்கோவிலில் கிழக்கு ராஜகோபுரத்தின் உச்சியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள அகல் விளக்குகளில் இறந்தவர்கள் மோட்சம் சென்றடைய வேண்டுதல் செய்து இறந்தவர்கள் பெயரில் உடல் அடக்கம் செய்யப்படும் நாள் அல்லது திதி அன்று அவரவர்களின் பிரார்த்தனைக்கு ஏற்றவாறு நல்லெண்ணை (அல்லது) இலுப்பை எண்ணையில் மோட்சதீபம் போடப்பட்டு வருகிறது. இது எந்த திருக்கோவிலிலும் இல்லாத பிரார்த்தனை சிறப்பாகும்.

    குழந்தை பேறில்லாதவர்கள் அண்ணாமலையாரை வேண்டி குழந்தை பிறந்ததும் திருக்கோவிலுக்கு வந்து அர்ச்சனை ஆராதனை செய்து கரும்பு கட்டுகள் கொண்டு வந்து புடவையினால் தொட்டில் கட்டி அதில் குழந்தையை படுக்க வைத்து மாடவீதி வலம் வந்து பிரார்த்தனை செலுத்துவது எந்த திருக்கோவிலிலும் இல்லாத சிறப்பாகும்.

    3-ம் பிரகாரத்தில் தல விருட்சமான மகிழ மரம் உள்ளது. குழந்தை பாக்கியமற்ற பக்தர்கள் இறைவனை வேண்டிக் கொண்டு துணியால் செய்யப்பட்ட சிறிய தொட்டில்களை இந்த மரத்தின் கிளைகளில் கட்டுவார்கள். அவர்களுடைய வேண்டுதலை நிறைவேற்றியவுடன் தங்கள் குழந்தைகளுடன் இத்திருக்கோவிலுக்கு வந்து தாங்கள் கட்டியிருந்த துணித் தொட்டில்களை நீக்கிவிட்டு காணிக்கை செலுத்துவது வழக்கமாக உள்ளது.

    • கிரிவலம் வரும் போது அஷ்ட லிங்கங்களைத் தரிசிக்கலாம்.
    • அவரவர் நட்சத்திரம், ராசிக்கு உரிய லிங்கத்தை வழிபட்டால் நலம் உண்டாகும்.

    திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் போது அஷ்ட லிங்கங்களைத் தரிசிக்கலாம். இவை ஒவ்வொன்றும், எட்டுத் திசைகளின் காவல் தெய்வங்கள், வெவ்வேறு ராசியின் அதிபதிகள், அவரவர் நட்சத்திரம், ராசிக்கு உரிய லிங்கத்தை வழிபட்டால் நலம் உண்டாகும்.

    * ரிஷபம், துலாம் - இந்திர லிங்கம்

    * சிம்மம் - அக்னி லிங்கம்

    * விருச்சிகம் - எம லிங்கம்

    * மேஷம் - நிருதி லிங்கம்

    * மகரம், கும்பம் - வருண லிங்கம்

    * கடகம் - வாயு லிங்கம்

    * தனுசு, மீனம் - குபேர லிங்கம்

    * மிதுனம், கன்னி - ஈசான்ய லிங்கம்

    • ஜனவரி 6-ந்தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.
    • ஆருத்ரா தரிசனத்தன்று தீப மை நடராஜருக்கு வைக்கப்படும்.

    பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் கடந்த 6-ந்தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

    இந்த மலையின் உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் அன்றில் இருந்து தொடர்ந்து நேற்று அதிகாலை வரை 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தது.

    மகாதீபத்திற்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நெய், காடாதுணி (திரி) ஆகியவை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தீபத்திருவிழாவின் போது மகாதீபத்தை நேரில் வந்து தரிசிக்க இயலாத பக்தர்கள் மகாதீபத்தை காண நேற்று முன்தினம் இரவு வரை திருவண்ணாமலைக்கு வருகை தந்து தீப தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப் பாதைகளில் நின்றும் உள்ளூர் மக்கள் அவர்களது வீட்டின் மொட்டை மாடிகளில் இருந்தும் தரிசனம் செய்தனர்.

    நேற்று காலை மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை 2,668 அடி உயர மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. 30-க்கும் மேற்பட்டவர்கள் தீப கொப்பரையின் பக்கவாட்டில் கம்பு மற்றும் கயிறு கட்டி தோளில் சுமந்தபடி கீழே இறக்கி கொண்டு வந்தனர். மலையில் இருந்து கோவிலுக்கு தீப கொப்பரை கொண்டு வரும் வழிநெடுகில் பக்தர்கள் அதனை தொட்டு வணங்கினர். தொடர்ந்து மாலை கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    வருகிற ஜனவரி மாதம் 6-ந்தேதி ஆருத்ரா தரிசனத்தன்று தீபச்சுடர் 'மை' (தீப மை) அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு வைக்கப்படும். பின்னர் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு தீப 'மை' பிரசாதம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ×