என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருவாரூர்"
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
திருவாரூர் தொகுதிக்கு பிரசாரத்திற்காக வர வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், தொகுதி மக்கள் நம்ம வீட்டுப்பிள்ளை நம்ம ஊருக்கு வரவில்லை என எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவே முதலில் வந்தேன். ஜூன் 3ம் தேதி நம் கழக தலைவர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த தினம் ஆகும். அன்று பிரதமர் மோடியின் ஆட்சி முடிவுக்கு வண்டு விடும்.
மோடி இரும்பு மனிதர் அல்ல. கல் மனிதர். மத்தியில் இருக்கும் பாசிச மோடி அரசை நிச்சயம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனும் முனைப்போடு செயல்பட்டு வருகின்றோம்.
இந்தியாவில் கருப்புப் பணம் முற்றிலும் அழிக்கப்படும், இந்தியர்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் போடப்படும் என கூறியது என்னவாயிற்று? இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என கூறிய வாக்குறுதி என்ன ஆனது? இவற்றில் ஏதேனும் ஒன்று நடந்ததா?
மேலும் தமிழகத்திலே ஆட்சி புரிகின்ற இந்த அதிமுகவை நாம் தான் குற்றம் சாட்டவேண்டும் என்பது அல்ல. அவர்களின் செயல்களே போதும். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து, அவரது கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். அவர்கள் இப்போது பதவியில் உள்ளனர். ஆனால், ஆதரவாக வாக்களித்த 18 பேரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் அதிமுகவில், கூட்டணியில் இணைந்துள்ள இதர கட்சியினரும் அவர்களை எப்படியெல்லாம் பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அக்கட்சி 2, 3 ஆக உடைந்து விட்டது.
கழக தலைவரை ஈன்ற ஊர் இந்த ஊர். நம்முடைய தாய் தமிழ் மொழியை காத்திட வேண்டும் என இதே திருவாரூரில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார். இந்த திருவாரூர் தொகுதியில் தான், கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் அவரை அமோக வெற்றி பெற வைத்தீர்கள். அந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே தலைவர் மு கருணாநிதி ஆவார்.
இதேபோல் தற்போது சகோதரர்கள் செல்வராசு மற்றும் பூண்டி கலைவாணன் ஆகியோரை மகத்தான வெற்றி பெற செய்வீர்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பின்னர் கஜா புயல் நிவாரண பணிகளை காரணம்காட்டி அத்தொகுதியில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது அப்பகுதியில் நிலைமை சீராக தொடங்கிவிட்டது.
அதேபோல திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற இருந்த இடைத்தேர்தலும் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை காரணம்காட்டி நிறுத்தப்பட்டது. எனவே, இந்த இரு தொகுதிகளிலும் உடனடியாக இடைத்தேர்தலை அறிவிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அமர்வில் நடைபெற்றது. மனுதாரர் கே.கே.ரமேஷ் தரப்பில் வக்கீல் ஜெயசுகின் ஆஜராகி வாதாடினார்.
விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், திருவாரூர் இடைத்தேர்தல் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தவரை சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் ஐகோர்ட்டு தேர்தல் நடத்துவது குறித்து தடை ஏதும் விதிக்கவில்லை என்றால் உடனடியாக தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். #SupremeCourt
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டில் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் 13 மத்திய பல்கலைக்கழகங்களின் தொடர் செலவினம் மற்றும் அந்த வளாகங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.3 ஆயிரத்து 639 கோடியே 32 லட்சம் செலவினத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆன்லைன் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் அடுத்த தலைமுறை திட்டத்தை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக இன்போசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான செலவுத்தொகை ரூ.4 ஆயிரத்து 242 கோடிக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து மத்திய மந்திரி பியுஷ் கோயல் கூறுகையில், “இந்த திட்டத்தால், வருமான வரி கணக்குகளை ஆய்வு செய்வதற்கான கால அளவு 63 நாட்களில் இருந்து ஒரு நாளாக குறையும். ஒரே நாளில் கணக்குகள் ஆய்வு செய்து முடிக்கப்படும். இதனால், திரும்ப பெறும் தொகையையும் விரைவில் பெற முடியும். 18 மாதத்துக்கு பிறகு திட்டம் அமலுக்கு வரும்” என்றார்.
பொதுத்துறையை சேர்ந்த எக்சிம் வங்கிக்கு ரூ.6 ஆயிரம் கோடி மூலதனமாக வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
தேனி:
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து காலியாக உள்ள திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இதற்கான மனுதாக்கல் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. வருகிற 10-ந்தேதி கடைசி நாளாகும்.
இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. தினகரன் கட்சி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. சர்பில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணனும், தினகரனின் அ.ம.மு.க. சார்பில் காமராஜூம் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்ய அக்கட்சியின் ஆட்சிமன்றக்குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. பின்னர் அது தள்ளி வைக்கப்பட்டு நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று நடந்த ஆட்சிமன்ற குழுவில் அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் வேட்பாளர் யார் என்று முடிவு செய்யப்பட வில்லை.
இந்த நிலையில் திருவாரூர் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
தேனியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த ஓ.பன்னீர் செல்வம் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க வேட்பாளர் நாளை (7-ந் தேதி) காலை அறிவிக்கப்படுவார். தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் என தெரிவித்து வருகின்றனர். எப்போது தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.கவே வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #Tiruvarurbyelection #OPanneerSelvam
கஜா புயல் தாக்கி ஒருவாரமாகியும் இதுவரை மின்சாரம், குடிநீர் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிகாரிகளும் வந்து சேதங்களை பார்வையிடவில்லை என்று பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் நிவாரண பணிகளும் பாதிப்பு அடைந்துள்ளது.
முத்துப்பேட்டை பகுதியில் விரைவில் மின்சாரம் வழங்க துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் நிவாரண பொருட்கள் செல்லாத பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்க வேண்டும். கட்டிடங்கள் பள்ளி சேதமாகி இருப்பதால் பள்ளிகளை திறக்கக்கூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஏராளமானோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டனர். இதனால் திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.
கனமழை காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனிடையே புதுச்சேரி மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.
பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல், மழையால் மாணவர்களின் புத்தகம் உள்ளிட்ட பொருட்களும் சேதம் அடைந்துள்ளது.
இந்நிலையில் திருவாரூரில் உள்ள 5 தாலுகாக்களில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய தாலுகாக்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாகை வருவாய் கோட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #Puducherry
தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்து வருகிறார். இன்று திருவாரூர் பகுதியில் ஆளுநர் ஆய்வு செய்தார்.
புயலால் தங்கள் வீடுகள் இடிந்துள்ள நிலையில், இங்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை, இன்னமும் மின்சாரம் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக கூறினர். #GajaCyclone #BanwarilalPurohit #Thiruvarur
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்