search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 121996"

    கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை போலீசார் நேற்று கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அப்போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் அதிராம்பட்டினம் செட்டித்தெருவை சேர்ந்த ராமநாதன் (வயது 39) என்பவரை கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். 
    கரூரில் லாரியில் மணல் கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.
    கரூர்:

    கரூர் மின்னாம்பள்ளி வன்னியம்மன் கோவில் தெரு அருகே நேற்று முன்தினம் வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த லாரி டிரைவர், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ஞானவேலை (வயது 24) கைது செய்தனர். மேலும் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர். 
    குவாரியில் மணல் அள்ளியதற்கு ஏ.டி.எம். கார்டு மூலம்தான் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியதால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூரில் மணிமுக்தாறு செல்கிறது. இங்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அரசு சார்பில் மாட்டு வண்டி மணல் குவாரி திறக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கடலூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் இந்த மணல் குவாரிகளில் பணம் கட்டி மாட்டு வண்டிகளில் மணலை ஏற்றி சென்று வந்தனர்.

    இன்று அதிகாலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளி செல்ல மணல் குவாரிக்கு சென்றனர். பின்னர் குவாரியில் மணல் அள்ளி முடித்ததும் குவாரி ஊழியர்களிடம் பணம் கட்ட சென்றனர்.

    அப்போது அங்கிருந்த ஊழியர்களிடம் ஒரு மாட்டு வண்டிக்கு ரூ.100 வீதம் கொடுத்தனர். அதை அங்கிருந்த ஊழியர்கள் ஏற்க மறுத்து ஏ.டி.எம். கார்டு மூலம்தான் பணம் கட்ட வேண்டும் என்றனர்.

    இதைகேட்டதும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளிய மாட்டு வண்டிகளை மணல் குவாரி அருகே வரிசையாக நிறுத்தினர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மாட்டு வண்டிகள் அணிவகுத்து நின்றன.

    பின்னர் மாட்டு வண்டி தொழிலாளர்கள் அனைவரும் விருத்தாசலம்- சேலம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை நேரத்தில் போராட்டம் நடத்தியதால் அங்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    காரையூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 டிராக்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    காரையூர்:

    காரையூர் அருகே உள்ள கீழத்தானியம் ஆற்றுப்பகுதியில் அனுதியின்றி மணல் அள்ளப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன், காரையூர் வருவாய் ஆய்வாளர் சாதிக் பாட்சா மற்றும் அதிகாரிகள் கீழத்தானியம் ஆற்றுப்பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

    அப்போது சூரப்பட்டியில் அந்த வழியாக வந்த 2 டிராக்டர்களை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து காரையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
    ஓடையில் இருந்து அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
    உடையார்பாளையம்:

    உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் தத்தனூர் மாந்தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், அதே பகுதியில் உள்ள ஓடையில் இருந்து அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த டிரைவர் அன்பழகனை (வயது 40) கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்தனர். 
    விளாத்திகுளம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்ற 2 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் தாசில்தார் லெனின் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று அதிகாலை தூத்துக்குடி- மதுரை நான்கு வழிச்சாலையில் மெட்டில்பட்டி கிராமம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் அள்ளி வந்த 2 லாரிகளை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில், உரிய ஆவணங்கள் இல்லாததும், திருச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, மாசார்பட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    மணல் அள்ள அனுமதி வழங்க கோரி மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் பகுதியை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஏராளமானோர்  அங்குள்ள வெள்ளாற்றில்  மணல் அள்ளி வருகின்றனர். மணல் அள்ளக்கூடாது என்று அதிகாரிகள் தடை விதித்தும்,  தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருகிறது. மேலும் தங்களுக்கு ஆற்றில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று அப்பகுதி மாட்டு வண்டி தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

    இந்தநிலையில் நேற்று வெள்ளாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த  இளம்பரிதி, வீரமுத்து ஆகியோரின் வண்டிகளை செந்துறை தாசில்தார் உமாசங்கரி மற்றும் அதிகாரிகள் பிடித்ததோடு, 2பேர் மீதும் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து தளவாய்  போலீசார் 2பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதையறிந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் இன்று காலை தளவாய் தனியார் சிமெண்ட் ஆலை அருகே கடலூர் பெண்ணாடம் சாலையில் திடீரென மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். சுமார் 200க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளுடன் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதன் காரணமாக  அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    இது குறித்த தகவல் அறிந்ததும்  தளவாய் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)  மோகன் மற்றும் வருவாய் அதிகாரி செந்தில் ஆகியோர் சென்று தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், தங்களுக்கு முறையாக மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும். இளம்பரிதி, வீரமுத்து ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அதிகாரிகள்- போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து  தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    அருப்புக்கோட்டையில் 4 வழிச்சாலையில் போலி அனுமதி சீட்டுடன் மணல் அள்ளி வந்த 3 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
    அருப்புக்கோட்டை:

    திருட்டு மணல் தடுப்பு சிறப்பு குழுவில் இடம் பெற்றுள்ள முத்திரைத்தாள் துறை அலுவலர் காசிசெல்வி, காரியாபட்டி தாசில்தார் முத்துகிருஷ்ணன் ஆகியோர் அருப்புக்கோட்டையில் ராமசாமிபுரம் 4 வழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சுழி பகுதியில் இருந்து போலி அனுமதி சீட்டுடன் மணல் அள்ளி வந்த 3 லாரிகள் சிக்கின. அதனை பறிமுதல் செய்து டவுன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    இதுதொடர்பாக லாரி டிரைவர்களான ராஜபாளையம் சத்திரப்பட்டியை சேர்ந்த மோகன், சாமிநாதன், வேல்முருகன் ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது. 
    கும்பகோணம் அருகே மணல் அள்ளிய 5 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே அரசலாற்றங்கரையில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக கும்பகோணம் தாலுகா போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன்பேரில் இன்று அதிகாலை 4 மணியளவில் போலீசார் அரசலாற்றங்கரைக்கு ரோந்து பணிக்கு சென்றனர்.

    அப்போது சிலர் மாட்டு வண்டிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவது தெரியவந்தது. அவர்கள் போலீசாரை பார்த்ததும் வண்டிகளை விட்டுவிட்டு தப்பி சென்றனர். இதையடுத்து போலீசார் 5 மாட்டுவண்டிகளை கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து அதன் உரிமையாளர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ×