search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 123699"

    தக்கலையில் மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் தக்கலையில் நடந்தது.
    தக்கலை:

    தக்கலையில் மேம்பாலம் அமையுமானால் வணிகர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் வாழ்வாதரம் முடங்கி விடும். இது சம்மந்தமாக ஏற்கனவே வணிகர் சங்கம் சார்பில் கடை அடைப்பு, உண்ணாவிரதம், காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளிடம் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நேற்று மணலி சந்திப்பில் இருந்து தக்கலை பழைய பஸ் நிலையம் வரை மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

    மேலும் இந்த போராட்டத்திற்கு அப்பகுதியில் பணிபுரியும் கடை ஊழியர்கள், பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலையில் பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கம் சார்பில் அவசர கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு சங்க தலைவர் ரேவன்கில் தலைமை தாங்கினார். பொது செயலாளர் விஜய கோபால் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சண்முகம், மோசஸ் ஆனந்த் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் தக்கலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #tamilnews
    ஊத்துக்கோட்டையில் மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்காக தரைப்பாலத்தை ஒட்டி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க தூண்கள் நிறுவும் பணிகள் தொடங் கப்பட்டுள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டால் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடும். அப்போது ஊத்துக் கோட்டை தரைப்பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை பட்டு திருவள்ளூர், பூந்தமல்லி, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் இயக்க முடியாத நிலை ஏற்படும்.

    இதனை கருத்தில் கொண்டு ஆரணி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆரணி ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ. 28 கோடியை அரசு ஒதுக்கியது.

    இந்த மேம்பாலம் 450 மீட்டர் நீளத்தில் 11 மீட்டர் அகலத்தில் கட்டப்பட உள்ளது. மேம்பாலம் மீது பாதசாரிகள் நடந்து செல்ல இருபுறங்களிலும் நடை பாதையும் அமைக்கப் படுகிறது. தரை மட்டத்தில் இருந்து 20 அடி உயரத்தில் அமைய உள்ள இந்த மேம் பாலத்தை 21 தூண்கள் தாங்கி நிற்கும்.

    மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்காக தரைப்பாலத்தை ஒட்டி சாலை அமைக்கும் பணிகள்நடை பெற்று வருகின்றன. மேலும் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க தூண்கள் நிறுவும் பணிகள் தொடங் கப்பட்டுள்ளது.

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் பொதுப்பணித்துறை நடத்திய ஆய்வில் 7 மேம்பாலங்கள் மிக மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Kolkata
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 4-ம் தேதி மேஜெர்ஹட் என்ற மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பொதுப்பணித்துறை முறையாக பராமரிக்காததே இந்த விபத்துக்கு காரணம் என பரவலாக குற்றம்சாட்டப்பட்டது.

    இதையடுத்து, இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், இதர மேம்பாலங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், பொதுப்பணித்துறை நடத்திய ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, கொல்கத்தாவில் உள்ள 20 மேம்பாலங்களில் 7 மேம்பாலங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பாலங்களில் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்குமாறு காவல்துறைக்கு கேட்டுக்கொள்ளப்பட்டது.

    பொதுப்பணித்துறை குறிப்பிட்ட 7 மேம்பாலங்களில் 4 பாலங்களில் கனரக வாகன போக்குவரத்துக்கு காவல்துறை தடை விதித்தனர். இருப்பினும், இரவு நேரங்களில் அந்த மேம்பாலங்களில் சரக்கு வாகனங்கள் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மேலும், இந்த மேம்பாலங்களை சீர்செய்வதற்கு பல கோடி ரூபாய் செலவு ஆகும் என்றும், அதற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், ஏலம் விடப்பட்டு மிக விரைவில் அனைத்து மேம்பாலங்களும் சீர் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Kolkata
    ×