என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தம்பித்துரை"
ஆலந்தூர்:
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.- காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி. ஸ்டாலின் மனவிரக்தியில் உள்ளார். அதனால்தான் அவர் எங்களை குறை கூறுகிறார். அவர் கிராம பஞ்சாயத்துக்கு கூட்டங்கள் நடத்தி வருகிறார். ஸ்டாலின் எதை செய்தாலும் அவர் வெற்றி பெற முடியாது.
பாராளுமன்றத்தில் தமிழகத்தின் நலனுக்காக குரல் எழுப்பி உள்ளோம். மத்திய அரசு அதற்கு செவி சாய்த்து உள்ளது. பரிசீலனையும் செய்கிறார்கள். எங்களது முக்கிய குறிக்கோளே தமிழகத்தின் நலன்தான்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் என்னை போட்டியிட சொன்னாலும் போட்டியிடுவேன். போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால் கட்சிக்காக பாடுபடுவேன்.
மக்களின் ஆதரவு இருப்பதால்தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறார்கள்.
ஜெயலலிதாவின் கனவுப் படி எங்களது கூட்டணி அமைந்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டுப்போடும் மனநிலையில் மக்கள் உள்ளனர்.
தி.மு.க.வின் சந்தர்ப்பவாத கூட்டணியை முறியடிக்கவே நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #ThambiDurai #ADMK
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன.
சமீபத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி குறித்து குறிப்பிடுகையில், “தமிழக மக்களுக்கு நன்மை செய்யும் கட்சிதான் மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும். அ.தி.மு.க. அந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கும்.
தமிழகத்தை வஞ்சிக்கும் கட்சியுடன் ஒரு போதும் கூட்டணி சேர மாட்டோம்” என்றார்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறும் போது, தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என்றார்.
இவர்கள் இருவரும் மறைமுகமாக கூட்டணி பற்றி கருத்து கூறிவரும் நிலையில் பாராளுமன்ற துணை சபாநாயகராக இருக்கும் தம்பிதுரை மட்டும் வெளிப்படையாக பா.ஜனதாவையும், மத்திய அரசையும் விமர்சித்து வருகிறார். பா.ஜனதாவை காலூன்ற வைக்க அ.தி.மு.க. வினர் தோளில் சுமந்து செல்ல மாட்டோம் என்றார்.
கூட்டணி விஷயத்தில் ஜெயலலிதா பாதையில் செல்வோம், அவர் அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த நிலை தொடர வேண்டும் என்றும் தம்பிதுரை கூறினார்.
பா.ஜனதா அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர முயற்சித்து வரும் நிலையில் தம்பிதுரை தனித்து போட்டியிட வேண்டும் என்பது போல் பேசி வருவது பா.ஜனதாவினருக்கு அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தம்பிதுரை கருத்துக்கு ஏற்கனவே மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். தற்போது தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் எஸ்.ஆர். சேகர் தம்பிதுரைக்கு பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் தம்பிதுரை மட்டுமே பா.ஜனதாவுக்கு எதிராக கருத்துக்களை கூறி விமர்சித்து வருகிறார். தம்பிதுரையை தவிர்த்து அ.தி.மு.க.வில் உள்ள எந்த தலைவரும் அவரைப் போன்று விமர்சிக்கவில்லை.
இந்த விஷயத்தில் தம்பிதுரை மட்டும் தனித்து விடப்பட்டு இருக்கிறார். அவர் வேறு ஏதோ காரணங்களுக்காக இதுபோன்று விமர்சிக்கிறார். எனவே அவர் தி.மு.க.வின் சிலீப்பர் செல்லாக இருப்பாரோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #ThambiDurai
வடமதுரை:
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை இன்று திண்டுக்கல் அருகே உள்ள காணப்பாடி பகுதியில் மக்களிடம் குறை கேட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். இதில் உண்மை வெளிவரட்டும். அதன்பிறகு குற்றம் இருந்தால் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை நடக்கும் போதே ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தேவை அற்றது. 5 அதிகாரிகளை கைதுசெய்து இருப்பது சிறைக்காவலில் விசாரணை நடத்துவதற்காகத்தான். அவர்கள் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு அழைத்து செல்லப்படவில்லை.
அ.தி.மு.க. அரசை களங்கப்படுத்தவற்காகத்தான் டி.ஜி.பி. ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட சில இடங்களில் நடந்த சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டு உள்ளது. மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதற்காக அ.தி.மு.க அரசு மீது தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.மாநில அரசின் நலனுக்காக மத்திய பாரதிய ஜனதா அரசுடன் அ.தி.மு.க. நட்புடன் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.#ADMK #ThambiDurai #GutkhaScam
ஆலந்தூர்:
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்கில் தமிழ் நாட்டில் நல்ல திட்டங்கள் அமைய நீதி துறை தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
மு.க.அழகிரி பேரணி நடத்த அவருக்கு உரிமை இருக்கிறது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
தமிழிசை - மாணவி சோபியா வாக்குவாதம் சம்பவம் பற்றி முழுமையாக எனக்கு தெரியாது. எனவே அதுபற்றி கருத்து கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #GreenWayRoad #ThambiDurai
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே வேடசந்தூர், கல்வார் பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்,
இங்குள்ள சுகாதார நிலையத்தை பரமசிவம் எம்.எல்.ஏ.வே திறந்து வைத்திருக்கலாம். எங்களை அழைத்திருக்க தேவையில்லை. ஆனால் அவரது அன்பின் வற்புறுத்தல் காரணமாக நான், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வந்துள்ளோம்.
தற்போது பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை பரமத்தி வேலூரில் பொதுமக்களிடம் குறை கேட்டுக் கொண்டு இருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வந்து விடுவார். மாலை உணவுக்கு புதுக்கோட்டை சென்று விடுவார்.
அதன் பின்னர் டெல்லியில் போய் உட்கார்ந்து பிரமதர் நரசிம்மராவுடன் பேசுவார் என்றார். இவ்வாறு பேசியதும் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஏற்கனவே பிரதமர் மோடிக்கு பதிலாக மன்மோகன்சிங் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். பாரத ரத்னா எம்.ஜி.ஆர். என்பதற்கு பதிலாக பாரத பிரதமர் எம்.ஜி.ஆர் என்றார்.
மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா இட்லி சட்னி சாப்பிட்டார் என்று கூறியது பொய். எங்களை மன்னித்து விடுங்கள் என்று சர்ச்சை பேச்சுகளை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ADMK #ThambiDurai #MinisterDindigulSrinivasan
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கரூர் மாவட்டம் நெரூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர். #ADMK #ThambiDurai #ParliamentElection
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் 23 நாட்கள் காவிரி பிரச்சினைக்காக குரல் கொடுத்தோம். தற்போது காவிரி நீர் தமிழகம் வந்துள்ளது. இதே போல் பாராளுமன்றத்தில் தமிழக உரிமைக்காக போராடுவோம்.
தேர்தல் கூட்டணி பற்றி தலைமை கழகம்தான் முடிவு செய்யும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கி விட்டோம்.
8 வழிச்சாலை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரியாக கையாளுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அமித்ஷா தமிழகத்தில் ஊழல் என்று கூறுகிறார். ராகுல்காந்தி பா.ஜனதாவில் ஊழல் என்றும், ஸ்டாலின், அ.தி.மு.க.வில் ஊழல் என்றும் கூறுகிறார்கள். அவர்கள் ஆட்சியை பிடிக்க தங்கள் இஷ்டம்போல் பேசி வருகிறார்கள்.
ஆளும் கட்சி மீது ஆதாரங்கள் இல்லாமல் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
தமிழகத்தில் சமுதாயம், மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றை திராவிட கட்சிகளால்தான் காப்பாற்ற முடியும். தேசிய கட்சிகளால் காப்பாற்ற முடியாது.
இவ்வாறு தம்பித்துரை கூறினார். #ThambiDurai #BJP
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்