என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 124986
நீங்கள் தேடியது "பூங்கா"
150 டன் அளவிலான திடக்கழிவுகளை கொண்டு டெல்லியில் 7 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட உலகின் 7 உலக அதிசயங்களின் மாதிரிகள் அமைந்துள்ள பூங்காவை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். #WondersoftheWorld #WondersoftheWorldPark #WondersoftheWorldinDelhi
புதுடெல்லி:
தெற்கு டெல்லி மாநகராட்சியின் சார்பில் தொழிற்சால திடக்கழிவுகள் மற்றும் இதர பொருட்களை கொண்டு உலகின் 7 உலக அதிசயங்களின் மாதிரிகள் இடம்பெறும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி நினைவகம் அருகே 7 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவில் உலகின் 7 அதிசயங்களின் மாதிரிகள் இடம்பெற்றுள்ளன.
20 அடி உயரத்தில் தாஜ்மஹால், 18 அடி உயரத்தில் எகிப்து நாட்டில் உள்ள கிஸா பிரமிடு, 60 அடி உயரத்தில் ஈபிள் கோபுரம், 25 அடி உயரத்தில் பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரம், 25 அடி உயரத்தில் ரியோ டி ஜெனெய்ரோ நகரில் உள்ள மீட்பர் இயேசுவின் சிலை, 15 அடி உயரத்தில் ரோம் நகரில் உள்ள கோலோசியம் அரங்கம், 30 அடி உயரத்தில் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஆகியவை இங்கு அமைந்துள்ளன.
சுமார் 7 கோடி ரூபாய் செலவில் ஆறே மாதங்களில் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
விரைவில் ஒலி,ஒளி காட்சியும் இங்கு தொடங்கப்படும் நிலையில் பெரியவர்களுக்கு 50 ரூபாயும் சிறார்களுக்கு 25 ரூபாயும் தற்போது பார்வையாளர் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காலை 11 முதல் இரவு 11 மணிவரை திறந்திருக்கும் இந்த பூங்காவை சுற்றிப்பார்க்க 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் நகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நுழைவு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெற்கு டெல்லி மாநகராட்சி உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #WondersoftheWorld #WondersoftheWorldPark #WondersoftheWorldinDelhi
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கடைகள், பூங்கா அமைக்க இடங்களை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப்பாதையில் பல்வேறு அரசுத்துறைகளின் மூலமாக விற்பனை கடைகள், பூங்கா, ஓய்வறை மற்றும் அடிப்படை வசதிகள் அமைப்பது குறித்த இடங்களை தேர்வு செய்வதற்காக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிரிவலப்பாதையில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக ஓய்வறை மற்றும் கழிவறைகள், தோட்டக்கலைத் துறை மூலமாக தோட்டக்கலை பூங்கா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலமாக நரிக்குறவர்களுக்கு தனி விற்பனை வளாகம், ஆவின் பாலகம், காதி பொருட்கள் விற்பனை கடை, சித்த மருத்துவம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
இதற்கான இடங்களை அண்ணா நுழைவு வாயில் அருகில், காஞ்சி சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை எதிரில், இடுக்கு பிள்ளையார் கோவில் அருகில், குபேரலிங்கம் எதிரில், இலங்கை அகதிகள் முகாம் அருகில், அபயமண்டபம் சந்திப்பில், கோசாலை, வாயு லிங்கம் எதிரில், அடி அண்ணாமலை கிராமத்தில், வேடியப்பனூர், வீர ஆஞ்சநேயர் கோவில் எதிரில், ஆணாய்பிறந்தான் கிராமத்தில், செங்கம் சாலை சந்திப்பில், நகராட்சி சந்தை மேடு எதிரில் மற்றும் அரசு கலைக்கல்லூரி எதிரில் ஆகிய பகுதிகளுக்கு கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுலவர் ரத்தினசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் உமாமகேஸ்வரி, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஆவின், தோட்டக்கலைத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

நாகை புதிய கடற்கரையில் உள்ள பூங்காவில் இருக்கைகளை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நம்பியார்நகர் மீனவ கிராமம் அருகே புதிய கடற்கரை உள்ளது. இதில் சிறுவர் பூங்கா, கலை நிகழ்ச்சிகள் நடை பெறும் கலையரங்க மேடை உள்ளிட்டவைகள் உள்ளன. இது நாகை மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக விளங்கி வருகிறது.
இந்த கடற்கரை நகராட்சி கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது இந்த கடற்கரை பெரும் சேதமடைந்தது. சிறுவர் பூங்காவில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கலையரங்க மேடை உள்ளிட்டவைகள் பேரலையில் இழுத்து செல்லப்பட்டன.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள் பங்களிப்புடன் மீண்டும் கடற்கரையை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.
இதையடுத்து நாகை புதிய கடற்கரைக்கு நாள்தோறும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். மேலும், காலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்டவைகளுக்காக வந்து செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் அமருவதற்காக கருங்கற்களாலான இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கடற்கரையில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடைவிழா நடத்தப்பட்டது. கோடைவிழாவை முன்னிட்டு புதிய கடற்கரையில் உள்ள பூங்கா உள்ளிட்டவைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொழிவுடன் காட்சியளித்தன.
இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். இந்த நிலையில் விழா முடிந்த மறுநாள் இரவில் மர்ம நபர்கள் சிலர் புதிய கடற்கரை பூங்காவில் உள்ள அனைத்து இருக்கைகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
நேற்று காலை பொதுமக்கள் வழக்கம் போல் நடைபயிற்சிக்காக கடற்கரைக்கு சென்றபோது இருக்கைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், புதிய கடற்கரையில் இருக்கைகளை உடைத்து சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும், நாகையில் உள்ள ஒரே பொழுதுபோக்கு அம்சமாக விளங்கும் நாகை புதிய கடற்கரையில் சுழற்சி முறையில் போலீசார் நியமித்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

×

X