என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாம்புகள்"
கொடைக்கானல்:
கொடைக்கானலில் தற்போது கடுமையான வெயில் காலம் நிலவி வருகிறது. அவ்வப்போது குளிர்ந்த காற்றுடன் சாரல் மழைபெய்து செல்கிறது.
ஆனால் இந்த மழையின் அனுபவம் சில நொடிகள் மட்டுமே உள்ளது. அதன்பிறகு மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது. இதுபோன்ற பருவநிலை மாற்றத்தால் கொடைக்கானலில் பொதுமக்கள் மட்டுமின்றி வன விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று கொடைக்கானல் நகர் பகுதியான மக்கள் குடியிருப்புகள் அதிகம் உள்ள பில்லீஸ்வில்லா தெருவில் 2 பாம்புகள் ஜோடியாக புகுந்தது.
இதனை பார்த்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து அதனை விரட்ட முயன்றனர். மேலும் இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து நீளமான 2 மலைச்சாரை பாம்புகளை லாவகமாக பிடித்தனர்.
பின்னர் அந்த பாம்புகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த பாம்புகளை வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். கொடைக்கானல் பகுதியில் காட்டெருமை, மான், சிறுத்தை, யானை போன்ற வன விலங்குகள் அடிக்கடி இடம் பெயர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது 2 பாம்புகள் பிடிபட்டது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருகாலத்தில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். இதில் படித்தவர்கள் ஏராளமானவர்கள் டாக்டர்கள், பொறியாளர்கள் மற்றும் பல்வேறு அரசு உயர்ந்த பதவிகளில் உள்ளனர். தற்பொழுது இங்கு 296 மாணவர்கள் மட்டும் படித்து வருகின்றனர். 21 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பிடிஏ நிர்வாகம் வாயிலாகவும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சமீபகாலமாக இப்பள்ளியில் இயங்கி வந்த பெற்றோர் ஆசிரியர் கழகம் முறையாக இயங்காததால் பள்ளி நிர்வாகம் பெயரளவில் மட்டுமே இருந்து வருகிறது. இதனால் படிபடியாக கல்வி தரமும் குறைந்துவிட்டது. இதற்கிடையில் ஒரு சில ஆசிரியர்களின் முறையற்ற அணுகுமுறையால் பள்ளி மாணவர்கள் மத்தியில் அடிக்கடி கோஷ்டி மோதல் உள்பட மத மோதல்களும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினமும் மாணவர்களும் இங்கு பணியாற்றும் ஆசிரியர்களும் மிகவும் அச்சத்துடன் பள்ளிக்கு வரும் நிலை உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக இருந்த வி.என்.சண்முகம் மரணம் அடைந்தார்.
இதனையடுத்து அந்த பதவி காலியாகிவிட்டது. ஆனால் பள்ளி நிர்வாகம் இதுநாள்வரை தலைவரை தேர்ந்து எடுக்க முன்வரவில்லை. இதனால் பள்ளியில் சமீபகாலமாக தொடர்ச்சியாக பல விரும்பத்தகாத செயல்கள் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தற்போதைய பிடிஏவை கலைத்துவிட்டு புதிய கமிட்டியை தேர்வு செய்யவேண்டும் என்று பெற்றோர்களும் பொதுமக்களும், முக்கிய பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளி வளாகத்தில் நீண்ட காலமாகமாக ஏராளமான மரங்கள் நட்டு பாராமரிக்கப்பட்டு வந்தன. இதில் மரத்து நிழலில் கூட பாட வகுப்புகளும் நடத்தபட்ட வந்த நிலையில் அங்கிருந்த பழமையான மரங்கள் விலைஉயர்ந்த மரங்கள் பலவற்றை கடந்த மாதம் வந்த கஜா புயல் சாய்த்தது. பள்ளி வளாகத்தில் குளுமை தந்த மரங்கள் சாய்ந்தது கண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவலையடைந்தனர்.
கஜா சாய்த்த மரங்கள் இன்று வரை அகற்றப்படாமல் ஒரு மாதத்துக்கும் மேலாக அதே இடத்தில் கிடக்கின்றன. மாணவர்கள் படிப்போடு ஓடியாடி விளயாட வழியன்றி, மரங்கள் இடையூறாக உள்ளது. மேலும் அங்கு பாம்புகள் ஊர்ந்து வருகிறது. இதனால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் விஸ்வநாதன் கூறும்போது,
பள்ளி வளாகத்தில் கிடக்கும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தநிலையில் சில குறுக்கீடுகளால், பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. அதனால் வரும் வாரத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்தாலோசித்து மரம் அகற்றுவது தொடர்பாக முடிவெடுக்கப்பட உள்ளது. மேலும் சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றாமல் நிமிர்த்தி நடவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் முகம்மது மைதீன் கூறுகையில், கஜா புயலால் பள்ளியில் உள்ள பெரும்பாலான பெரிய மரங்கள் அடியோடு சாய்ந்தது விட்டது. இதுகுறித்தும் அதை அகற்றும் பணி குறித்தும் பிடிஏ உறுப்பினர்களிடம் இதுவரை கலந்தாலோசிக்க வில்லை. உறுப்பினர்கள் நாங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்று பார்த்தபோது மாணவர்களுக்கு சுகாதார பாதிப்பு மற்றும் விஷப்பூச்சிகள் தாக்கும் நிலையில் பள்ளி வளாகம் உள்ளது என்றார். #gajacyclone
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குப்பத்துப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவிகள் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து படித்து கொண்டிருந்தனர். அந்த மரத்தில் மூன்று பச்சை பாம்புகள் பின்னி விளையாடி கொண்டிருந்தன.
இந்நிலையில் மரத்தடியில் இருந்த 5-ம் வகுப்பு மாணவிகள் குப்பத்துபட்டியை சேர்ந்த மணிமேகலை (வயது10). கங்காதேவி (10), பாண்டிமீனாள் (10) மகேஸ்வரி (10) சிவஜோதி (10) ஆகிய மாணவிகள் மீது அந்த பாம்புகளில் இருந்து கசிந்த திரவம் விழுந்தது. திரவம் பட்ட இடத்தில் அரிப்பு ஏற்பட்டதால் மாணவிகள் பீதியடைந்து மயக்கம் வருவதாக ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.
உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மரத்தின் மீது பார்த்தபோது மூன்று பாம்புகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் பாம்புகளை கொன்று எடுத்துக்கொண்டு மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பாம்புகளை டாக்டர்களிடம் காண்பித்தனர்.
மாணவிகளுக்கு உடனடி சிகிச்சை அளித்ததுடன், ரத்த பரிசோதனைகளும் செய்யப்பட்டன. மேலும் மாணவிகளை பரிசோதித்த டாக்டர்கள் மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லையென தெரிவித்தனர். மாணவிகள் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்