search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 125869"

    • ரத்தினம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
    • செல்போனை பறித்த அந்தோணி சூர்யா,சக்திகுமாரை போலீசார் கைது செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 60). இவர் நேற்றிரவு வெளியூர் சென்று விட்டு புதிய பஸ்நிலையத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றவர்கள் திடீரென ஆட்டோவை வழிமறித்து ரத்தினத்திடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர். இதுதொடர்பாக அவர் தாளமுத்து போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற தாளமுத்துநகர் பகுதியை சேர்ந்த அந்தோணி சூர்யா (வயது 22) அவரது நண்பர் சக்திகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

    • புதிய பஸ் நிலைம் அருகில் வந்தபோது அருகில் இருந்த ஒரு வாலிபர், சந்தோஷ் பாக்கெட்டில் இருந்த ரூ.10000 -ம் மதிப்புள்ள செல்போனை லாவகமாக திருடினார்.
    • இதைக்கண்ட சந்தோஷ், சக பயணிக ளின் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அப்பு முதலி காலனி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 32). இவர் தனது ஊரில் ஹார்ட்வேர் கடை வைத்து நடத்தி வருகிறார். சந்தோஷ் நேற்று கடை வேலை விஷயமாக சேலத்திற்கு வந்தார். அவர், பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.

    பஸ், புதிய பஸ் நிலைம் அருகில் வந்தபோது அருகில் இருந்த ஒரு வாலிபர், சந்தோஷ் பாக்கெட்டில் இருந்த ரூ.10000 -ம் மதிப்புள்ள செல்போனை லாவகமாக திருடினார். இதைக்கண்ட சந்தோஷ், சக பயணிக ளின் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். விசாரணை

    யில், அந்த வாலிபர் ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ஜங்கல் காலனி பகுதியை சேர்ந்த அப்பாசாமி மகன் தருண் (20) என்பது தெரியவந்தது.

    மற்றோரு சம்பவம்

    இதேபோல் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி பகுதியைச் சேர்ந்த சேட்டு (33) என்பவர் சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்வதற்காக தனியார் பேருந்தில் ஏறினார். புதிய பஸ் நிலையத்தில் இருந்து நுழைவு வாயில் வழியாக பஸ் வெளியே வரும் சமயத்தில் இவரது அருகில் இருந்த 2 சிறுவர்கள், சேட்டு பாக்கெட்டில் இருந்து செல்போனை திருடினார்கள். இதைக் கண்ட சக பயணி ஒருவர் 2 சிறுவர்களையும் பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தார்.

    போலீசார் விசாரணை நடத்தியதில் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களும் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ஜங்கல் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அடிக்கடி பின் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் வாலிபரை கண்டித்ததாக தெரிகிறது.
    • மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார் .அங்கு வந்த வாலிபர் திடீரென மாணவியிடம் தகராறில் ஈடுபட்டார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வேதநகர் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் இறச்சகுளம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    தினமும் இவர் கல்லூரிக்கு பஸ்ஸில் செல்வது வழக்கம். அப்போது மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அடிக்கடி பின் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் வாலிபரை கண்டித்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார் .அங்கு வந்த வாலிபர் திடீரென மாணவியிடம் தகராறில் ஈடுபட்டார். மாணவியின் கையில் வைத்திருந்த செல்போனை பிடுங்கி உடைத்ததுடன் மிரட்டல் விடுத்தார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார்.

    இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுது உள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின்பேரில் வாலிபர் மீது கொலை மிரட்டல் உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கேப் ரோட்டை சேர்ந்தவர் நிஷார் (வயது 34).

    இவர் நாகர்கோவில் அலெக் சாண்டரா பிரஸ் ரோட்டில் செல்போன், கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் கடை வைத்து உள்ளார். தினமும் காலை யில் கடையை திறந்து விட்டு இரவு பூட்டுவது வழக்கம்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு நிஷார் வேலை விஷயமாக கோவைக்கு சென்றார்.இதனால் கடையை அவரது உறவினர் கவனித்து வந்தார். நேற்று இரவு அவர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    இன்று காலை கடைக்கு வந்த போது ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்த போது அங்கு இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் லேப்-டாப் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    மேலும் மேஜையில் இருந்த ரூ.30 ஆயிரமும் மாயமாகி இருந்தது. இது குறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் கடையில் பதிவாகி இருந்த கைரேகை களை பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. தொடர்ந்து தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதி யில் கொள்ளையர்கள் கை வரிசை காட்டி இருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    • மாயமான 159 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • கமிஷனர் செந்தில்குமார் கலந்து கொண்டு மீட்கப்பட்ட 159 செல்போன்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

    மதுரை

    மதுரை மாநகரில் கடந்த 3 மாதங்களில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் வகையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன், தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இதில் மீனாட்சி கோவில் சரகம்-12, தெற்கு வாசல்-2, திடீர் நகர்- 19, தல்லாகுளம்- 50, செல்லூர்- 26, அண்ணாநகர்-36 உள்பட 159 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.17 லட்சம் ஆகும்.

    மதுரை மாநகரில் தொலைந்து போன செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கலந்து கொண்டு மீட்கப்பட்ட 159 செல்போன்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். துணை கமிஷனர்கள் சாய் பிரனீத் (தெற்கு), வனிதா (தலைமையிடம்), ஆறுமுகசாமி (போக்கு வரத்து) மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபர் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
    • முகவரி கேட்பது போல வீடுகளுக்கு சென்று எத்தனை பேர் உள்ளார்கள்? என்று வேவு பார்த்து விட்டு, திருட்டில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

    மதுரை

    மதுரை மேல வடம்போக்கி தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 64). இவர் நேற்று மாலை வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அவரது மனைவி சமையல் அறையில் இருந்தார். அப்போது ஒரு மர்மநபர், அவருடைய வீட்டுக்குள் புகுந்து செல்போனை திருடிக்கொண்டு ஓடினார்.

    இதனைப்பார்த்த ஜெயபிரகாஷ், திருடன்... திருடன்... என்று கூச்ச லிட்டார். இதையடுத்து அந்த நபர் வீட்டிலிருந்து வெளியே தப்பி ஓடினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் திரண்டு அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அதன் பிறகு அவர் திடீர் நகர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    இன்ஸ்பெக்டர் லோகே சுவரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் அந்த வாலிபர் சிவகங்கை மாவட்டம் வேல்முடிக்கரையை சேர்ந்த பார்த்திபன் (34) என்பது தெரிய வந்தது.

    அவரிடம் ஜெய பிரகாசின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பார்்த்திபனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது அவர் மீது பல வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

    பார்த்திபன் முகவரி கேட்பது போல வீடுகளுக்கு சென்று எத்தனை பேர் உள்ளார்கள்? என்று வேவு பார்த்து விட்டு, திருட்டில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.நேற்று மாலை மதுரை மேல வடம்போக்கி தெருவுக்கு சென்றுள்ளார்.

    அப்போது வீட்டில் முதியவர் ஜெயப்பிரகாஷ் டிவி பார்த்துக் கொண்டி ருந்ததை பார்த்த பார்த்திபன், நைசாக வீட்டுக்குள் புகுந்து செல்போனை திருடிக் கொண்டு தப்ப முயன்றார். அப்போது பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து விட்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • பள்ளி மாணவர்களின் நேர்மையை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
    • குளச்சல் இலப்பவிளை பகுதியை சேர்ந்த முகமது பயஸ், ராபில், ஷாகித் ஆகிய சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் இலப்பவிளை பகுதியை சேர்ந்த முகமது பயஸ், ராபில், ஷாகித் ஆகிய சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளி முடிந்து குளச்சல் அருகே உடையார்விளை பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றனர்.

    பொருட்களை வாங்கி விட்டு இரவு வீடு திரும்பினர்.அப்போது சாலையில் செல்போன் ஒலிக்கும் சப்தம் கேட்டது.உடனே அவர்கள் அருகே சென்று பார்த்த போது விலை உயர்ந்த செல்போன் திரை உடைந்த நிலையில் ஒலித்து கொண்டிருப்பதை கண்டு அதை எடுத்தனர்.

    பின்னர் அதனை மாணவர்கள் நேராக குளச்சல் போலீஸ் நிலையம் கொண்டு சென்று இன்ஸ்பெக்டர் கிறிஸ்டியிடம் ஒப்படைத்தனர். சாலையில் கண்டெடுத்த செல்போனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவர்களின் நேர்மையை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறைகளில் உள்ள மொபைல் போன்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கண்டறிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
    • 5 சிறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

    டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் கடந்த 15 நாட்களாக போலீஸ் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், சிறை கைதிகளிடம் இருந்து 117 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக 5 சிறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதன்படி, துணை கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா, துணை கண்காணிப்பாளர் தர்மேந்தர் மவுரியா, உதவி கண்காணிப்பாளர் சன்னி சந்திரா, தலைமை வார்டர் லோகேஷ் தாமா மற்றும் வார்டர் ஹன்ஸ்ராஜ் மீனா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், இயக்குனர் ஜெனரல் (சிறைகள்) சஞ்சய் பானிவால், ஐ.பி.எஸ்., அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுக்கும் தங்கள் தேடுதல் குழுக்களை உருவாக்கவும், அவர்களின் சிறைகளில் உள்ள மொபைல் போன்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கண்டறியவும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

    சிறைகளில் அங்கீகரிக்கப்படாத பொருட்கள் மற்றும் தயாரிப்புகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் இதுபோன்ற பறிமுதல் நடவடிக்கைகள் தொடரும் என்றும் சிறை அதிகாரிகள் கூறினர்.

    • களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை
    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அடுத்த மீனச்சல் பகுதியில் உள்ள ஒருவரின் போலி முகவரியை கொடுத்து மர்ம நபர்கள் ஆன்லைனில் 3 விலை உயர்ந்த செல்போன் மற்றும் கேமராவை ஆர்டர் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஆர்டர் செய்த கேமரா மற்றும் செல்போன்கள் ஆகியவை மார்த்தாண்டத்தில் உள்ள கொரியர் நிறுவனத்திற்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து கொரியர் நிறுவன ஊழியர் அஜித் ஆன்லைனில் ஆர்டர் செய்த 2 வாலிபர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த பொருட்களுடன் அவர்களது முகவரிக்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்கு இருந்த வாலிபர்கள் அஜித்திடம் பேசி கொண்டு இருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் கொரியர் நிறுவன பார்சலை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பியுள்ளார்.

    இதையடுத்து இன்னொரு வாலிபரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அஜித் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட 2 வாலிபர்களும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருவிக்கரை பகுதியை சேர்ந்த அகில் கிருஷ்ணா மற்றும் அமித் குமார் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் கேரளாவிற்கு சென்று அகில் கிருஷ்ணா மற்றும் அமித் குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    அவர்கள் 2 பேரும் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 3 செல்போன்களை விற்பனை செய்துள்ளனர். பின்னர் அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பணம் மற்றும் கேமராவை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரையும் போலீசார் களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மேற்கு தெருவை சேர்ந்தவர் சம்பவத்தன்று இரவு சொந்த வேலையாக சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ஜங்ஷன் செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார்.
    • திடீரென கத்தி முனையில் ரமேஷ் இடமிருந்து ரூ.15,000 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.9,500-ஐ பறித்துக் கொண்டார்.

    சேலம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மேற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46). இவர் சம்பவத்தன்று இரவு சொந்த வேலையாக சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ஜங்ஷன் செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார்.

    இவருடன் பயணித்த, மற்றொரு பயணி 5 ரோடு பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது திடீரென கத்தி முனையில் ரமேஷ் இடமிருந்து ரூ.15,000 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.9,500-ஐ பறித்துக் கொண்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ், இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்கு பதிவு செய்து ரமேஷிடம் பணம் பறித்த மர்ம நபரை தேடி வருகிறார். 

    • நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளியிடம் செல்போன் பறித்து சென்றனர்.
    • நள்ளிரவு அவர் பிரசவ பகுதிகளுக்கு சென்று பெண்க ளிடம் அடாவடியிலும் தகாத வார்த்தைகளும் பேசியதுடன் அங்கிருந்த ஒரு நபரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டமான திருச்சி மாவட்டத்தில் இருந்தும் ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    திருச்சி மாவட்டம் ஏளூர்பட்டியை அடுத்த கவரப்பட்டியைச் சேர்ந்த வீரம்மாள் கடந்த2-ந்தேதி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்ந்தார். அவரது உறவினர் திருமுருகன் நாமக்கல் பகுதிகளில் பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.

    வீரம்மாளை பார்ப்ப–தற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த திருமுருகன் மருத்துவமனை குள்ளேயே போதை தலைக்கு ஏறும் அளவிற்கு மது குடித்துளார். பின்பு பெண்கள் வார்டு பகுதிகளில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்துடன் கழிவறைகளையும் எட்டிப் பார்த்து உள்ளார்.

    இதை கண்ட மருத்துவமனை காவலா–ளிகள் கண்டித்த போது அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். நள்ளிரவு அவர் பிரசவ பகுதிகளுக்கு சென்று பெண்க ளிடம் அடாவடியிலும் தகாத வார்த்தைகளும் பேசியதுடன் அங்கிருந்த ஒரு நபரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.

    இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் திருமுருகனை மருத்துவமனை காவலாளி களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் திருமுருகனை எச்சரித்து வெளியே அனுப்பி வைத்தனர். இதனால் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடை உரிமையாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கல்லூரி மாணவர்கள், வாலிபர், இளம்பெண்கள் என ஒரு தனி கூட்டமே உள்ளது.

    கோவை,

    செல்போனில் பல ரகங்கள் வந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் செல்போன்கள், இயர்போன், ஸ்மார்ட் வாட்ச், போன் கவர் போன்றவற்றுக்கு எப்போதும் தனி மவுசு இருந்து வருகிறது.

    இதனை வாங்குதற்கு கல்லூரி மாணவர்கள், வாலிபர், இளம்பெண்கள் என ஒரு தனி கூட்டமே உள்ளது. இந்நிலையில் கோவை காந்திபுரத்தில் உள்ள செல்போன் கடைகளில் சிலர் போலியான ஆப்பிள் முத்திரையை பயன்படுத்தி செல்போன் உதிரிபாகங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

    இந்த தகவல் சென்னை சூளைமேட்டில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரி குமரவேல் என்பவருக்கு தெரியவந்தது. அவர் இது குறித்து கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்திபுரத்தில் உள்ள செல்போன் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலி முத்திரையை பயன்படுத்தி ஆப்பிள் நிறுவன செல்போன் உதிரிபாகங்களை சில கடைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த கடை உரிமையாளர்கள் மதுரை காமராஜ புரத்தை சேர்ந்த முகமத் அப்சர்கனி (வயது 24), ராஜஸ்தானை சேர்ந்த வர்தம் சவுத்ரி (23), மகேந்திரசிங் (28), கேரளா பாலக்காட்டை சேர்ந்த நவுசாத் (39), ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களது கடைகளில் இருந்து போலி முத்திரையுடன் கூடிய 1000 செல்போன் கவர்கள், 25 இயர்போன், 25 யூ.எஸ்.பி கேபில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    காந்திபுரம் பகுதியில் உள்ள செல்போன் கடைகளில் போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    ×