search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128009"

    • ஆண்டு சந்தா உட்பட அனைத்து செலவையும் கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொண்டுள்ளது.
    • காப்பீட்டு திட்டத்தின் பயன்பாடுகள் பற்றி பணியாளர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமத்தில் பணிபுரியும் அனைவருக்கும் நிர்வாகம் சார்பாக மருத்துவ காப்பீட்டு திட்டம்.நாகை இ ஜி எஸ் பிள்ளை கல்லூரியில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் பயன்பெறும் வகையில் ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு நிறுவனத்தில் மருத்துவ காப்பீட்டு பதிவு செய்து, ஆண்டு சந்தா உட்பட அனைத்து செலவையும் கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொண்டுள்ளது.

    அதற்கான காப்பீட்டு பதிவு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்நிகழ்வினை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள் பணியாளர்களுக்கு காப்பீடு அட்டை வழங்கி துவக்கி வைத்தார்.

    கல்லூரியின் செயலர் திரு செந்தில்குமார், இணைச் செயலர் சங்கர் கணேஷ் மற்றும் ஆலோசகர் பரமேஸ்வரன் ஆகியோரும் பணியாளர்களுக்கு காப்பீட்டு பதிவு அட்டையை வழங்கினர்.

    மாணவர் சேர்க்கை பிரிவின் தலைவர் முனைவர் மணிகண்ட குமரன் அவர்கள் காப்பீட்டு திட்டத்தின் பயன்பாடுகள் பற்றி பணியாளர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

    தேர்வு நெறியாளர் முனைவர் சின்னதுரை அவர்கள் பணியாளர்கள் சார்பாக நிர்வாகத்திற்கு நன்றி கூறினார்.

    முதன்மை செயல் அதிகாரி, கல்விசார் இயக்குனர், அனைத்து கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    வெளிநாடு வாழ் இந்திய நபர்கள் திருமணத்தை 30 நாட்களுக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டமசோதா நேற்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. #RegisterMarriage #NRI
    புதுடெல்லி:

    இந்திய பெண்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களின் மோசடி திருமணத்தில் சிக்குவதை தவிர்ப்பதற்காக, வெளிநாடு வாழ் இந்திய நபர்கள் திருமணத்தை 30 நாட்களுக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டமசோதா நேற்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்படி 30 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் அவரது பாஸ்போர்ட் அல்லது விசாவை பறிமுதல் செய்யவோ, திரும்பப்பெறவோ அதிகாரம் வழங்கப்படுகிறது. வாரண்டு பிறப்பிக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜராகாவிட்டால் அவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்ய முடியும்.

    திருமணம் இந்தியாவில் நடந்தாலும், அல்லது வெளிநாட்டில் நடந்தாலும் இது பொருந்தும். இந்த நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் இது என்பதாலும், நாளை (புதன் கிழமை) கூட்டத்தொடர் முடிவடைய இருப்பதாலும் இந்த சட்டமசோதா நிறைவேற்றுவதற்கு சாத்தியம் இல்லை. ஆனாலும் இது நிலுவையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #RegisterMarriage #NRI
    சென்னையில் உள்ள தனியார் பெண்கள் விடுதிகள் அனைத்தையும் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். #ChennaiCollector #ShanmugaSundaram
    சென்னை:

    பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காக தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் பணி காரணமாக விடுதிகளில் தங்கியிருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒருபகுதியாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் விடுதிகளும் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான கால அவகாசம் ஒரு மாதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பெற்று கொள்ளலாம் எனவும், பதிவு செய்யப்படாத தனியார் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். #ChennaiCollector #ShanmugaSundaram
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், வன்முறை தொடர்பாக சிப்காட் போலீஸ் நிலையத்தில் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதை யொட்டி நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நின்ற அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன.

    போலீஸ் வாகனமும் தீவைத்து எரிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பில் நின்ற வாகனங்களும் சேதப்ப‌டுத்தப்பட்டன. இந்த சம்பவங்கள் தொடர்பாக ஏற்கனவே தூத்துக்குடி மேற்கு, தென்பாகம், சிப்காட் போலீஸ் நிலையங்களில் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து இந்த 5 வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    தொடர்ந்து ஒவ்வொரு வழக்குகளையும் தனித்தனி டி.எஸ்.பி.க்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம், வன்முறை தொடர்பாக சிப்காட் போலீஸ் நிலையத்தில் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. வன்முறையின்போது ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த அஜய்(38), பிரதீப் ஆகியோரது கார்களும் தீவைத்து எரிக்கப்பட்டிருந்தன.

    இது தொடர்பாக அஜய், பிரதீப் ஆகிய இருவரும் சிப்காட் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் தனித்தனியாக இரு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

    தூத்துக்குடி கலவரம் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

    போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம், திரேஸ்புரம், அண்ணாநகர் ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வடபாகம், தென்பாகம், சிப்காட் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதுதவிர அரசு ஆஸ்பத்திரி முன்பு பெட்ரோல் குண்டு வீசியது, மில்லர்புரத்தில் வாகனங்களுக்கு தீவைத்தது தொடர்பாகவும் வழக்கு பதியப்பட்டது.

    தூத்துக்குடி கலவரம் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் முன்பு கலவரத்தில் ஈடுபட்டதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் 4 ஆயிரம் பேர், வாகனங்களுக்கு தீவைத்தது தொடர்பாக சிவில் சப்ளை அதிகாரி கோபால் கொடுத்த புகாரின் பேரில் 1000 பேர் என மொத்தம் 5 ஆயிரம் பேர் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

    ×