search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருமகள்"

    திண்டுக்கல் அருகே வரதட்சணைக்காக மருமகளை வீட்டை விட்டு சப்-இன்ஸ்பெக்டர் விரட்டியதால் மனமுடைந்து அவர் வி‌ஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டுக்கல்:

    வரதட்சணைக்காக மருமகளை வீட்டை விட்டு சப்-இன்ஸ்பெக்டர் விரட்டியதால் மனமுடைந்து வி‌ஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ரமேஷ் என்பவருக்கும் கன்னிவாடி அருகே உள்ள குரும்பபட்டியைச் சேர்ந்த சுகந்தி (வயது 21) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு 8 மாத கைக்குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு ரமேஷ் வேலை இல்லாமல் இருந்ததால் அவர் தொழில் தொடங்க ரூ.5 லட்சம் பணம் வாங்கி வருமாறு மாமனார் சுப்பிரமணி அவரை கொடுமைபடுத்தி வந்துள்ளார்.

    இதனால் குழந்தை பிறந்தவுடன் அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். மேலும் சுகந்தி வேறு ஒரு வாலிபருடன் பழகுவதாகவும் குற்றம் சாட்டினார். சம்பவத்தன்று சுகந்தி வீட்டுக்கு சென்ற சுப்பிரமணி மற்றும் ரமேஷ் வரதட்சணை ஏன் வாங்கி வரவில்லை? என சத்தம் போட்டுள்ளனர்.

    இதனால் மனமுடைந்த சுகந்தி வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வரதட்சணைக்காக போலீஸ் அதிகாரியே மருமகளை வீட்டை விட்டு விரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மகனுடன் ஏற்பட்ட தகராறில் மருமகள் பிரிந்து சென்றதால் மனமுடைந்த மாமியார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி அந்தோணி ஜெரால்டு கருணா (வயது50). இவர்களது மகன் ஜெயந்தன். அவரது மனைவி சுபாஷினி. இவர்கள் அனைவரும் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் ஜெயந்தனுக்கும் அவரது மனைவி சுபாஷினிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுபாஷினி தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இது மாமியார் அந்தோணி ஜெரால்டு கருணாவுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது. 

    கடந்த சில நாட்களாக யாருடனும் பேசாமால் அமைதியாக இருந்தார். நேற்று அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பொதுவாக மாமியாருக்கும், மருமகளுக்கும் சுமூகமான உறவு இருக்காது. இருவரும் கருத்து வேறுபாடுகளுடன்தான் இருப்பார்கள். இத்தகைய கால கட்டத்தில் மருமகளுக்கு மாமியார் சிறுநீரகம் கொடுத்து உயிர் அளித்த சம்பவம் நடந்துள்ளது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள காந்திநகரை சேர்ந்தவர் சோனிகா (32). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார்.

    டெல்லியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் அவரது 2 சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டன. எனவே, சிறுநீரக மாற்று ஆபரேசன் அல்லது டயாலிசிஸ் செய்தால்தான் அவர் உயிர் பிழைக்க முடியும் என டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.

    நீண்டநாள் டயாலிசிஸ் செய்ய முடியாது. சிறுநீரக மாற்று ஆபரேசன் தான் ஒரே வழி என டாக்டர்கள் கூறிவிட்டனர். எனவே சோனிகாவின் தாயாரை தொடர்புகொண்டு சிறுநீரகம் தானம் வழங்கும்படி கேட்டனர்.

    அதற்கு தாயார் மறுத்து விட்டார். பின்னர் அவரது தந்தை மற்றும் சகோதரர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களும் சிறுநீரகம் தர மறுத்துவிட்டனர்.

    ஆனால் சோனிகாவின் மாமியார் கனிதேவி (60) தனது மருமகளுக்கு சிறுநீரக தானம் வழங்கமுன்வந்தார். சோனிகாவை தனது மகளாக பார்க்கிறேன் என்றார். பல பரிசோதனைகளுக்கு பிறகு கடந்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

    தற்போது சோனிகா உடல் நலத்துடன் இருக்கிறார். தனக்கு சிறுநீரகம் கொடுத்து உயிர்காத்த மாமியாரை தாயாக பார்க்கிறேன்’’ என்றார்.
    ×