search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிகரெட்"

    கர்ப்பிணி பெண்கள் சிகரெட் பிடித்தாலும், மது அருந்தினாலும், போதை மருந்து உட்கொண்டாலும் அது பிறக்கும் குழந்தையை கடுமையாக பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுடெல்லி:

    ஆசிய மக்கள் தொகையில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 1.7 சதவீதம் குழந்தைகள் பிளவுபட்ட உதட்டுடன் பிறக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை இதுகுறித்து குறிப்பிட்ட புள்ளிவிவரம் கிடைக்கவில்லை. ஆனால் ஆண்டுதோறும் 35 ஆயிரம் குழந்தைகள் பிளவுபட்ட உதடு மற்றும் உள்வாயின் மேற்புறம் அண்ணம் பாதிக்கப்பட்ட நிலையில் பிறப்பதாக உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது.

    இதற்கான ஆய்வு குறித்து ‘எய்ம்ஸ்’ மருத்துவ நிறுவனத்தின் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 2010-ம் ஆண்டு முதல் 3 கட்டமாக இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

    அதில் பெண்களுக்கு கர்ப்ப கால தொடக்கத்தில் சிகரெட் பிடித்தல், மது அருந்துதல், போதை மருந்து உட்கொள்ளுதல், மற்றவர் பிடிக்கும் சிகரெட் புகையை சுவாசித்தல் உள்ளிட்ட காரணங்களால் வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சி பாதிக்கிறது. அதன்மூலம் உதடு பிளவுபட்ட மற்றும் வாயின் உள்புறத்தில் அண்ணம் சரிவர வளர்ச்சி இல்லாமை போன்ற குறைகள் ஏற்படுகின்றன.

    இதனால் குழந்தைகள் சரிவர உணவு சாப்பிட முடியாது, சுவாசிக்கவும் மிகவும் சிரமப்படுவர். அதன் காரணமாக பல நோய்கள் ஏற்படும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    எனவே கர்ப்பிணி பெண்கள் சிகரெட் பிடித்தாலும், மது அருந்தினாலும், போதை மருந்து உட்கொண்டாலும் அது பிறக்கும் குழந்தையை கடுமையாக பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    திருச்சி அருகே மது போதையில் சிகரெட் தீயினால் முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் முரு கேசன் (வயது 68). இவர் அதே பகுதியில் இரவு டிபன் கடை நடத்தி வந்தார். இவரது மகன் சேகர். அனைவரும் ஒரே வீட் டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அனைவரும் தீபாவளி பண் டிகையை கொண்டாடினர். பின்னர் இரவில் அவர்கள் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினர். அப்போது முரு கேசன் மது குடித்திருந்தார்.

    அளவுக்கு அதிகமான போதையில் வீட்டின் வெளியே கிடந்த கட்டிலில் படுத்தார். முன்னதாக புகைப்பிடித்த அவர் போதையில் சிகரெட்டை அணைக்காமல் தூங்கினார்.

    இதனால் சிகரெட்டின் தீ கட்டிலில் இருந்த நைலான் வயர் மீது பட்டு தீப்பிடித்தது. பின்னர் அந்த தீ முருகேசன் உடலிலும் பிடித்து எரிந்தது. மது போதையில் முருகேசன் இருந்ததால் தீயின் வெப்பம் அவருக்கு தெரிய வில்லை. இதனால் தீ தொடர்ந்து எரிந் தது.

    நள்ளிரவில் கட்டிலுடன் முருகேசன் தீப்பிடித்து எரிந் ததை பார்த்த அக்கம் பக்கத் தினர் விரைந்து வந்து பாதி உடல் எரிந்த நிலையில் முரு கேசனை மீட்டு சிகிச்சைக் காக ஸ்ரீரங்கம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென் றனர். அங்கு அவரை பரி சோதித்த டாக்டர்கள் முரு கேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து மண்ணச்ச நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    மது போதையில் சிகரெட் தீயினால் முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

    எட்டயபுரத்தில் பொது இடங்களில் புகை பிடித்த 12 பேருக்கு தலா ரூ. 100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
    எட்டயபுரம்:

    கோவில்பட்டி பகுதி சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா ஆலோசனையின் பேரில் எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் புகையிலை மற்றும் பீடி, சிகரெட் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எட்டயபுரம் நடுவிற்பட்டி பகுதியில் பட்டத்து விநாயகர் கோவில் அருகே கீழஈரால் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பொது இடங்களில் பீடி, சிகரெட் புகை பிடித்த பொதுமக்கள் மற்றும் விற்பனை செய்த வியாபாரிகள் உள்ளிட்ட 12 பேருக்கு தலா ரூ. 100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து சோதனை செய்யப்பட்டது. 

    சோதனையில் பள்ளி வளாகம் அருகே பீடி, சிகரெட் விற்பனை செய்த கடைகளை கண்டறிந்து கடை உரிமையாளர்களுக்கு ரூ.100  அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இனி வரும் காலங்களில் பள்ளி அருகில் விற்கக்கூடாது என எச்சரிக்கப்பட்டது. 

    நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி, சுகாதார ஆய் வாளர்கள் சீனி வாசன், சுப்பிரமணி, மாரிக் கண்ணன், சீத்தாராம் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    ×