search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128233"

    • சூரசம்ஹாரத்தன்று, பல்வேறு வழித்தடங்களில் 350 அரசு பேருந்துகள் கூடுதலாக இயங்கப்படும்.
    • சென்னை மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை.

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழா இந்த மாதம் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கந்தசஷ்டி திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தினர். அப்போது அவர் பேசியதாவது:

    கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 லட்சம் லிட்டர் வீதம் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த மாதம் 30-ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண வரும் பக்தர்களுக்காக பல்வேறு வழித்தடங்களில் 350 அரசு பேருந்துகள் கூடுதலாக இயங்கப்படும். சூரசம்ஹாரம் அன்று தென்னக ரயில்வே மூலம் சென்னை மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    கந்த சஷ்டித் திருவிழா காலங்களில் நகர் முழுவதும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவதால் செல்போன், தொலைபேசி சீராக இயங்கத்தக்க வகையில் தற்காலிக செல்போன் கோபுரம் அமைக்க பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் மாலை அணிவித்து வரும் பக்தர்கள் கோவிலில் தங்க அனுமதி இல்லை. இவ்வாறு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

    இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, அறங்காவலர் குழுஉறுப்பினர்கள் கணேசன், செந்தில்முருகன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • கந்தசஷ்டி திருவிழா 25-ந்தேதி தொடங்குகிறது.
    • சூரசம்ஹாரம் 30-ந்தேதி நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது.

    இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 30-ந் தேதி நடக்கிறது. அன்று திருச்செந்தூருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் ஏராளமான வாகனங்களில் வருவார்கள்.

    இதையடுத்து, திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையிலும், பக்தர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

    இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஸ் குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள ஜெ.ஜெ. நகர் பகுதி, நெல்லை ரோட்டில் உள்ள செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் அருகில் உள்ள காலி இடம், கோவில் வளாகத்தில் உள்ள நாழிக்கிணறு கார் பார்க்கிங், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதி மற்றும் கலையரங்கம் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது, திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணசுந்தரம், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், ரகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த திருவிழா 25-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • 30-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
    • 31-ந்தேதி இரவு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    1.30 மணிக்கு விஸ்வரூபதரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளுவார். அங்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது.

    காலை 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. அன்றையதினம் மாலை 5 மணியில் இருந்து 6.15 மணி வரை சூரியகிரகணம் நடக்கிறது.

    அதனால் மாலை 4 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாத்தி நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 6.45 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மற்ற காலங்கள் மற்றும் யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.

    2-ம் திருவிழா முதல் 5-ம் திருவிழா வரை (26-ந்தேதி முதல் 29-ந் தேதி வரை) 4 நாட்கள் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிசேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 6-ம் திருவிழாவான 30-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    1.30 மணிக்கு விஸ்வருப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 31-ந்தேதி கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 5 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு மாலை மாற்று வைபவம் நடக்கிறது. தொடர்ந்து இரவு திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அன்புமணி (கூடுதல் பொறுப்பு), அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், ராம்தாஸ், கணேசன், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கடற்கரை பகுதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
    • பக்தர்கள் வாகனங்கள், பஸ், ரெயிலில் வந்து குவிந்தனர்.

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. மேலும் இந்த விடுமுறை தினத்தோடு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை உள்ளிட்ட அரசு விடுமுறைகளும் இருந்தது.

    இந்த விடுமுறை தினங்களில் தினமும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், புரட்டாசி பவுர்ணமி தினமான நேற்று திருச்செந்தூர் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்கள், பஸ், ரெயிலில் வந்து குவிந்தனர்.

    கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. பின்னர் மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றன.

    இதனால் கோவில் மற்றும் கடற்கரை பகுதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் அதிகாலை முதல் கடலில் புனித நீராடி, 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    • பக்தர்கள் கடலில் புனித நீராடினர்.
    • திருச்செந்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் சூரசம்ஹார நிகழ்ச்சி முடிந்த பின்னர், திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.

    அதேபோல் இந்தாண்டு தசரா திருவிழா சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இத்திருவிழாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்று, விடிய விடிய அம்மனை தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து நேற்று அதிகாலை முதல் திரளான பக்தர்கள் அங்கிருந்து கார், வேன்கள், பஸ்கள் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து குவிந்தனர். பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் பலமணிநேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    இதனால் பக்தர்கள் வந்த கார்கள், வேன்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களால் கார் பார்க்கிங் நிரம்பியதால், ரதவீதிகள், ரெயில் நிலையம், தெப்பக்குளம் பகுதிகளில் ஆங்காங்கே சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. இதை தொடர்ந்து காலை முதல் திருச்செந்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மேலும், திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி, மதுரை மார்க்கமாக சென்ற வாகனங்கள் நெல்லை சாலை வழியாக சென்று ராணிமகாராஜபுரம், அடைக்கலாபுரம் சென்று மதுரை சாலையில் திருப்பி விடப்பட்டன. நேற்று மாலை வரை திருச்செந்தூரில் வாகன நெரிசல் காணப்பட்டது.

    போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டனர். நெல்லை, தூத்துக்குடியிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • மூலவருக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது.
    • வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விஜயதசமியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.தொடர்ந்து மூலவருக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் மதியம் சுவாமி அலைவாயுகந்த பெருமான் கேடய சப்பரத்தில் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக சிவன் கோவில் சென்றடைந்தார். அங்கிருந்து மதியம் 3 மணியளவில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி உள்மாட வீதி வழியாக பாளையங்கோட்டை சாலையில் உள்ள வேட்டை வெளி மண்டபத்திற்கு சென்றடைந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    வேட்டைவெளிமண்டபத்தில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வெள்ளிக்குதிரை வாகனத்தில் அமர்ந்தவாறு அம்பெய்தும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. பின்னர் அங்கிருந்து சுவாமி ரதவீதி சுற்றி மீண்டும் சன்னதி தெருவழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் திரண்டிருந்து சுவாமியை வழிபட்டனர். பின்னர் சுவாமி கோவிலை சென்றடைந்தார்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ‘கிளவுட் கம்ப்யூட்டிங்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
    • தொழில்நுட்ப வல்லுனர் ஆர்.என்.ரவீஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் வழிகாட்டுதல்படி கணினி அறிவியல் (சுயநிதிப்பிரிவு) துறையில் 'கிளவுட் கம்ப்யூட்டிங்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பெங்களூரில் மென்பொருள் தொழில்நுட்ப வல்லுனர் ஆர்.என்.ரவீஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். துறைத்தலைவர் ஆ.கவிதா வரவேற்று பேசினார். பேராசிரியர் டி.பெனட் நன்றி கூறினார். விழாவில் பேராசிரியர்கள் ஜெயந்தி, சகாய ஜெயசுதா மற்றும் ஆய்வக உதவியாளர் ஜெயந்தி கலந்து கொண்டனர். மேலும் 2-ம் மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

    • குலசேகரன்பட்டினம் தசரா விழா மைசூருக்கு அடுத்தபடியாக பிரமாண்டமாக நடக்கக் கூடியது
    • குலசேகரன்பட்டினத்தில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து கூடுவார்கள்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ரெயில் நிலைய அபிவிருத்தி குழு ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, அ.தி.மு.க. முன்னாள் நகரச் செயலாளர் அமிர்தராஜ், கோவில்பட்டி நகர த.மா.கா. தலைவர் ராஜகோபால் ஆகியோர் மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் அனந்துவை நேரில் சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் தசரா விழா இந்திய அளவில் மைசூருக்கு அடுத்தபடியாக பிரமாண்டமாக நடக்கக் கூடியது. விழாவின் 10-வது நாளான 5- ந் தேதி குலசேகரன்பட்டினத்தில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து கூடுவார்கள்.

    எனவே இவர்களின் வசதியை கருத்தில் கொண்டு வரக்கூடிய 4-ந் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கும், 6-ந் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கும் கூடுதல் எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க வேண்டும்.

    இதே போல் 5-ந் தேதி மதியம் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கும், 6-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கும் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும்.

    மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி மற்றும் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி இரவில் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு, 30 மற்றும் 31- ந்தேதி மாலையில் திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 30-ந்தேதி மதியம் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயிலும் இயக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று பெரும்பாலானோர் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர்.
    • முன்னோர்கள் விரும்பி சாப்பிட்ட பொருட்களை படையலாக படைத்து வழிபட்டனர்.

    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வருகிற மகாளய அமாவாசை தினத்தில் இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    அதன்படி மகாளய அமாவாசை தினமான இன்று பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மாவட்டத்தை பொறுத்தவரை பாபநாசம் படித்துறையில் இருந்து தொடங்கி தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு குடும்பத்துடன் சென்று தர்ப்பணம் செய்து எள்ளும், நீரும் இறைத்தனர்.

    இதேபோல் கடற்கரை பகுதிகளிலும் இன்று பெரும்பாலானோர் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர். புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பொதுமக்கள் கடலில் எள்ளை கரைத்து புனித நீராடினர். சிவந்திபுரம் கஸ்பா கல்யாணிதுறை பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சிலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    நெல்லை மாநகர பகுதியில் டவுன் குறுக்குத்துறை முருகன் கோவில், இசக்கி அம்மன் கோவில் படித்துறைகள், வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை ஆகிய பகுதிகள் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் திரண்டு வந்து தர்ப்பணம் கொடுத்தனர்.

    இதனையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரை படித்துறை மற்றும் மாவட்டங்களில் கடற்கரை பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சிலர் தங்களது வீடுகளிலேயே முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தினர். முன்னோர்கள் விரும்பி சாப்பிட்ட பொருட்களை படையலாக படைத்து வழிபட்டனர்.

    நெல்லை அருகே உள்ள அருகன்குளம் கோசாலை ஜடாயுத்துறை படித்துறையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் அதிகாலையில் பொதுமக்கள் குளித்துவிட்டு தாங்களாகவே ஆற்றில் எள் தூவி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் அங்குள்ள விநாயகர் கோவிலிலும், ஜடாயு தீர்த்தம் லட்சுமிநாராயணர் கோவிலிலும் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றிலும் பொதுமக்கள் குளித்துவிட்டு தர்ப்பணம் செய்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடி, தை அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இந்த நாளில் தர்ப்பணம் கொடுத்தனர். திருச்செந்தூர் கடற்கரையில் புனித நீராடுவதற்கு இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் கடற்கரையில் அமர்ந்து புரோகிதர்களின் வேத மந்திரங்கள் முழங்க தர்ப்பணம் செய்தனர்.

    பின்னர் கடலில் எள்ளை கரைத்தனர். பெரும்பாலானோர் தர்ப்பணத்தை முடித்துவிட்டு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று வழிபட்டனர். இன்று விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் அருவிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் வந்திருந்தனர். மிதமாக கொட்டிய தண்ணீரில் புனித நீராடிய அவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு சென்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

    • ஆபத்துக்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்? என்று பயிற்சி அளிக்கப்பட்டது.
    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தன்னார்வலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை முகமை மூலம் 12 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்.231 (சுயநிதிப்பிரிவு) மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தை (சுயநிதிப்பிரிவு) சேர்ந்த 20 தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    இவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம், பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளில் வைத்து சிறப்பு பயிற்சியாளர்களை கொண்டு பேரிடர் காலங்களில் ஏற்படும் புயல், மழை, வெள்ளம் மற்றும் தீ ஆகிய ஆபத்துக்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்? என்று பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தன்னார்வலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்த மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், நாட்டுநலப் பணித்திட்ட அதிகாரி ஜெயராமன், இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அதிகாரி பார்வதிதேவி மற்றும் சுயநிதிப்பிரிவு வணிகவியல் துறை தலைவர்கள் சிரில் அருண், திருச்செல்வன், பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • கோவிலில் ரூ. 300 கோடி செலவில் பக்தர்களுக்கான மெகா திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
    • பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திடவும் கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் சுமார் ரூ. 300 கோடி செலவில் பக்தர்களுக்கான மெகா திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    அடிப்படை வசதிகள்

    இந்நிலையில் தற்போது பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், மேலும் கந்தசஷ்டி விழாவில் கோவிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திடவும் கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    இது குறித்து நேற்று கோவில் பணியாளர்களிடம் கருத்துக் கேட்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. கோவில் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு அறங்காவலர் குழு தலைவர் இரா. அருள்முருகன் தலைமை தாங்கினார். இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) அன்புமணி, அலுவலக கண்காணிப்பாளர் சீதாலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சுவாமி தரிசனம்

    கூட்டத்தில் பங்கேற்ற கோவில் பணியாளர்கள், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வசதியை மேம்படுத்துவது குறித்தும், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்வதை குறைப்பதற்காக வரிசைப்பாதையில் மாற்றம் செய்திட வேண்டும் எனவும் கூறினர்.

    பின்னர் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன் கூறுகையில், முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    • திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா நிறைவு பெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவி லில் ஆவணி திருவிழா கடந்த 17-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மாலை வேளையில் சுவாமியும், அம்பாளும் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தனர்.

    7-ம் திருவிழா அன்று சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்திருப்பு, மாலையில் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா, 8ம் திருவிழா காலையில் வெள்ளை சாத்திக்கோலத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி வீதி உலாவும், மதியம் சுவாமி சண்முகர் பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்த ருளி வீதி உலாவும் நடை பெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பத்தாம் திருவிழா தேரோட்டம் கடந்த 26-ந் தேதி நடைபெற்றது.

    ஆவணி 12-ந் திருவிழாவான நேற்று இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் மலர் கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் சிறிய மலர் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து விழா நிறைவு பெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ×