search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128738"

    • வனச்சரகர் தினேஷ் தலைமையில் வன பகுதியில் சென்று வனத்துறையினர் ஆய்வு மேற்கொ ண்டனர்.
    • வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 2பேருக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனகோட்டத்திக்கு உட்பட்ட கேர்மாளம் வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன. வன விலங்குகள் அவ்வப்போது விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் கோட்டமாளம் கிராமத்தைச் சேர்ந்த திம்மையன் (55) என்பவரை மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது கரடி தாக்கியதாக கூறி அதே பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர் வனச்சரக அலுவகத்திக்கு நேரில் வந்து தகவல் தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து வனச்சரகர் தினேஷ் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று வனத்து றையினர் ஆய்வு மேற்கொ ண்டனர். ஆய்வில் மாடு மேய்த்த திம்மையன் என்பவரை கரடி தாக்கவில்லை என்பது உறுதியானது.

    இதையடுத்து திம்மையன், நாராயணன் ஆகிய 2 பேரும் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

    • இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
    • திருமணம் செய்வதாக கூறி சிறுமியுடன் பிரபு உல்லாசமாக இருந்ததன் விளைவாக அவர் கர்ப்பமடைந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள காமாட்சிபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவருடைய மகன் பிரபு(வயது 23).

    இவர், திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு 15 வயதான சிறுமி வேலையில் சேர்ந்தார்.

    இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் சிறுமி வேலையை விட்டு நின்று விட்டார். பிரபுவும் வேலையை விட்டு விட்டு ஊருக்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் திருமணம் செய்வதாக கூறி சிறுமியுடன் பிரபு உல்லாசமாக இருந்துள்ளார். இதன் விளைவாக அவர் கர்ப்பம் அடைந்தார். அதன் பின்னர் சிறுமியை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இது குறித்து திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் சிறுமிக்கு பெண் குழந்தையும் பிறந்தது. இந்த வழக்கு விசாரணை தஞ்சையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது. நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பு கூறினார்.

    அவர் தனது தீர்ப்பில், பிரபுவுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.

    • வாகனங்கள் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
    • மாடுகளின் உரிமையாளர்களிடம் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு மாடுகள் விடுவிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய, பழைய பேருந்து நிலையங்கள், ரயில்வே ரோடு, பிடாரி வடக்குவீதி, காமராஜர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆடு, மாடு உள்ளிட்டவை சுற்றித் திரிவதாகவும், இதனால் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும், தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதனை அடுத்து சாலைகளில் கால்நடைகளை விடக்கூடாது மீறினால் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கப்படும் என சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல்கட்டமாக சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரிராஜசேகர் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் ராஜகோபால், சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை ஆகியோர் மேற்பார்வையில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் அலெக்சாண்டர், டேவிட் உள்ளிட்ட பணியாளர்கள் சாலைகளில் சுற்றித்திரிந்த 15 மாடுகளை பிடித்து நகராட்சி அலுவலகத்தில் அடைத்தனர்.

    பின்னர் மாடுகளின் உரிமையாளர்களிடம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு மாடுகள் விடுவிக்கப்பட்டது. தொடர்ந்து மாடுகளை சாலைகளில் நடமாட விட்டால் அபராதம் விதிப்பதுடன், மாடுகளை பிடித்து உரிமையாளர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நகர மன்ற தலைவர் தெரிவித்தார்.

    • தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
    • சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்கவில்லை

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு விடுமுறை அளிக்கலாம் அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்கி பணியில் ஈடுபடுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை உதவி ஆணையர் (அமலாக்கம்) கா.மூர்த்தி தலைமையில் தொழிலாளர் துணை ஆணையர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், பெரம்பலூர் மாவட்டங்களில் திடீர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் 33 நிறுவனங்கள் தொழிலாளர் சட்ட விதிமுறையை கடைபிடிக்காதது கண்டறியப்பட்டு, அந்த நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    • பெற்றோர்களுக்குரூபாய் 25 ஆயிரம் அபராதமும், 1நாள் சிறை தண்டனையும் அளித்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு தனது வாகனத்தை வழங்க வேண்டாம்.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்ட போக்குவரத்து துறை இன்ஸ்பெக்டர் மறி கிருஷ்டியன் பால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 18 வயதிற்கு குறைவான சிறார்களுக்கு, தங்களது மோட்டார் சைக்கிளை ஓட்ட அனுமதியளித்த குற்றத்திற்காக 3 வ ழக்குகளில் சம்மந்தப்பட்ட வாகனத்தின் பெற்றோர்களுக்குரூபாய் 25 ஆயிரம் அபராதமும், 1நாள் சிறை தண்டனையும் அளித்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பினை கவனத்தில் கொள்வதுடன், சிறார் ஏற்படுத்தும் வாகன விபத்திற்கு எவ்வித விபத்து காப்பீடும் கிடைக்காமல் அதற்கும் சிறாரின் பெற்றோர்(அ) உரிமையாளரே பொறுப்பாவர் என்பதையும் தெரியபடுத்தி, 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு தனது வாகனத்தை வழங்க வேண்டாம் என்று போக்குவரத்து காவல் துறை மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • சுதந்திர தின விடுமுறை அளிக்காததால் நடவடிக்கை
    • உணவு நிறுவனங்களில் 63 முரண்பாடுகள் கண்டெடுப்பு

    ராணிபேட்டை:

    சென்னை முதன்மை செயலாளரும், தொழிலாளர் ஆணையருமான அதுல் ஆனந்த் உத்தரவின்பேரில் வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக் கம்) ஞானவேல் தலைமை யில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய் வாளர்களுடன் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய விடு முறை தினமான நேற்று சுதந்திர தினத்தன்று கடை கள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சட்டம் மற்றும் விதிகளின் கீழ் இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்படாதது என 182 நிறுவனங்கள் மீது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது, கடைகள் மற்றும் நிறுவனங்களில் 57 முரண் பாடுகளும், உணவு நிறுவனங்களில் 63 முரண்பாடுகளும் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 4 முரண் பாடுகளும் ஆக மொத்தம் 124 முரண்பாடுகள் கண்ட றியப்பட்டு அந்நிறுவனங்க ளின் மீது இணக்க கட்டண அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    • ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • 4 சக்கர வாகனம் உதிரிபாகம் விற்பனை கடையில் ஒரு வெளிமாநில குழந்தையை பணியமர்த்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

    கோவை:

    கோவை தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) காயத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்திய தொழில் நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 6 மாதத்தில் இருந்து அதிகபட்சமாக 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    1986-ம் ஆண்டு குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் கோவை மாவட்டத் தில் கடைகள், உணவு நிறுவனங்களில் கடந்த ஜூலை மாதம் 3.50 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    ஜூலை மாதத்தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்களை பணியமர்த்திய 9 நிறுவனம் மீது கோவை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணை முடிந்து ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    கடந்த 11-ந் தேதி கோவை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் ரெயில்வேசைல்டு லைன் மூலம் பெறப்பட்ட புகார் தொடர்பாக சுக்கிரவார்பேட்டையில் ஆய்வு செய்த போது 2 நகை பட்டறைகளில் வெளிமாநிலத்தை சேர்ந்த வளரிளம் பருவத்தினர் 7 பேர், 10 வயதுக்குட்பட்ட ஒருவர் என 8 பேர் மீட்கப்பட்டனர்.

    12-ந்தேதி சிவானந்தா காலனியில் 4 சக்கர வாகனம் உதிரிபாகம் விற்பனை கடையில் ஒரு வெளிமாநில குழந்தையை பணியமர்த்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தை மீட்கப்பட்டு நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குழந்தை தொழிலாளர் பணியாற்றுவது தெரியவந்தால் https://pencil.gov.in என்ற இணையதள முகவரியி லும், 0422 2241136 என்ற தொலை பேசி எண்ணிலும், கொத்தடிமை தொழிலாளர் குறித்த புகார்களை 18004252650 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

    • காதாரத்துறை, காவல்துறை, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட 3 குழுக்களாக அதிரடியாக திடீர் சோதனை நடத்தினர்.
    • கைப்பற்றபட்ட கடைகளுக்கு ரூ.5000 வீதம் 20 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய, பழைய பேருந்து நிலையங்கள், பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறை, காவல்துறை, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட 3 குழுக்களாக அதிரடியாக திடீர் சோதனை நடத்தினர்.

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ், பான்மசாலா, குட்கா மற்றும் காலாவதியான உணவுப பொருட்கள் உள்ளிட்ட 50 ஆயிரம் மதிப்பீலான பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றி பாதுகாப்பான முறையில் அழித்தனர். கைப்பற்றபட்ட கடைகளுக்கு ரூ.5000 வீதம் 20 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் எச்சரித்தனர்.

    • ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் அனைத்து ரேசன் கடைகளிலும் ஆய்வு செய்ய கூட்டுறவு இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
    • இதனை தொடர்ந்து, 26 அந்த கடை விற்பனையாளர்களுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    சேலம்:

    ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் அனைத்து ரேசன் கடைகளிலும் ஆய்வு செய்ய கூட்டுறவு இணைப்பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து 10 கூட்டுறவு சார்பதிவாளர்கள் கொண்ட குழுவினர் நேற்று ஆத்தூர் டவுன், மகுடஞ்சாவடி பகுதிகளில் செயல்படும் 28 ரேசன் கடைகளில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இதில் 26 கடைகளில் சிறு, சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த கடை விற்பனையாளர்களுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ரேசன் கடைகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும். தவறு செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • சுதந்திர தின விழா மற்றும் தொடர் விடுமுறையையொட்டி வெளியூர்களில் வசிப்பவர் சொந்த ஊருக்கு திரும்பும் நிலையில் அதை சாதகமாக பயன்படுத்தி, ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
    • அதில், 22 ஆம்னி பஸ்கள் மீது வழக்குப்பதிந்து, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.

    சேலம்:

    சுதந்திர தின விழா மற்றும் தொடர் விடுமுறையையொட்டி வெளியூர்களில் வசிப்பவர் சொந்த ஊருக்கு திரும்பும் நிலையில் அதை சாதகமாக பயன்படுத்தி, ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. அதன் எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் மேட்டுப்பட்டி, தொப்பூர் சுங்கச்சாவடிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் குழுவினர் ஆம்னி பஸ்களை நிறுத்தி ேசாதனையில் ஈடுபட்டனர்.

    அதில், 22 ஆம்னி பஸ்கள் மீது வழக்குப்பதிந்து, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.

    அத்துடன் 2 பஸ்களில் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் திரும்பவும் பயணிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
    • வாகன சோதனை நடத்தினர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர், ஆய்வாளர் சரவணபவன் ஆகியோர் அரியலூர் நகரில் ரெயில் நிலையம், ராஜாஜி நகர், செந்துறை சாலை ஆகிய பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றி வந்த ஆட்டோக்களை தடுத்து நிறுத்தினர். இதேபோல் ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் ஆகியவை இல்லாமல் ஓட்டிய 3 ஆட்டோ டிரைவர்களுக்கு மொத்தம் ரூ.18 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை ஆய்வு செய்தனர். அதில் பல ஆட்டோக்கள் இன்சூரன்ஸ் எடுக்கப்படாமலும், சிலர் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்காமல் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட டிரைவர்கள் மேற்கண்ட குறைகளை உடனடியாக சரி செய்து அதன் பிறகு பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என்று எச்சரித்தனர்.

    • சுகாதாரத்துறை ஆய்வு செய்த போது, கருத்தரிப்பு மையத்தில் வெளிப்புற சிகிச்சைக்கு மட்டுமே அனுமதி பெற்றுவிட்டு, உட்புற சிகிச்சை, பிரசவம் நடத்தியது தெரியவந்தது.
    • விசாரணை அறிக்கை கலெக்டர் வல்லவனிடம் ஒப்படைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை சாரம் கவிக்குயில் நகரை சேர்ந்த பெருமாள்-சுலோச்சனா தம்பதிக்கு நீண்டகாலமாக குழந்தையில்லை.

    இந்த நிலையில் புதுவை இந்திரகாந்தி சதுக்கத்தில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தை அணுகி சிகிச்சை பெற்றனர். 2021-ல் கருவுற்ற சுலோச்சனாவுக்கு கடந்த மார்ச் 18-ந்தேதி ஆண், பெண் என இரட்டை குழந்தை பிறந்தது. குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ் கேட்டு மருத்துவமனையை அணுகிய போது இழுத்தடித்துள்ளனர்.

    இதனால் சுகாதாரத்துறையில் தம்பதி புகார் அளித்தனர். சுகாதாரத்துறை ஆய்வு செய்த போது, இந்த கருத்தரிப்பு மையத்தில் வெளிப்புற சிகிச்சைக்கு மட்டுமே அனுமதி பெற்றுவிட்டு, உட்புற சிகிச்சை, பிரசவம் நடத்தியது தெரியவந்தது. விசாரணை அறிக்கை கலெக்டர் வல்லவனிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கலெக்டர் சுகாதாரத்துறைக்கு அனுப்பிய உத்தரவின்பேரில், இயக்குனர் ஸ்ரீராமுலு தனியார் கருத்தரிப்பு மையத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் உடனடியாக உட்புற சிகிச்சைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளார்.

    ×