search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128738"

    • திடக்கழிவு விதிகளை மீறி அதிகளவு கொட்டிய வாகனத்தை பறிமுதல் செய்து போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் திடக் கழிவுகளை முறையாக தாங்களே கையாள வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் மக்கும், மக்காத குப்பைகள் என பிரித்து சேகரிக்கப்படுகின்றன. தினமும் 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பணியாளர்கள் மூலம் பெறப்படுகின்றன.

    திடக்கழிவுகளை அதிகளவு உருவாக்கும் கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தாங்களே கையாள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனாலும் அதிகளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் திடக் கழிவுகளை முறையாக தாங்களே கையளாமல் பொது இடங்களில் கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் ராயபுரம் மண்டலம் வார்டு 63-க்கு உட்பட்ட இ.பி. லிங்க சாலை, தெற்கு கூவம் சாலை ஆகிய பகுதிகளில் அதிகளவு திடக்கழிவுகள் கொட்டியவர்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதமும், கட்டிட கழிவுகள் கொட்டிய நபர்களுக்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் போலீசில் 15 புகார்கள் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ். ரெயில் நிலையம் அருகில் திடக்கழிவு விதிகளை மீறி அதிகளவு கொட்டிய வாகனத்தை பறிமுதல் செய்து போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் திடக் கழிவுகளை முறையாக தாங்களே கையாள வேண்டும்.

    பொது இடங்களில் கொட்டக்கூடாது. மீறும் நபர்கள் மீது அபராதம் விதித்து காவல் துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    • அபராதத்தொகை யாக ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 518 வசூலிக்கப்பட்டது.
    • உதவி செயற்பொறியாளர்கள் . உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டு 4,349 மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை அருளானந்தநகர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) விமலா தலைமையில் கூட்டாய்வு நடைபெற்றது. 89 உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டு 4,349 மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. இவற்றில் 9 மின் இணைப்புகள் தவறாக பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு அபராதத்தொகை யாக ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 518 வசூலிக்கப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆத்தூர் கல்லோடை பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் கடந்த 18-ம் தேதி சேலம் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
    • அப்போது கோழிப்பண்ணை தீவன கிடங்கில் ரேசன் அரிசி 40 டன் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கோழிப்பண்ணை உரிமையாளரை தேடி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்லோடை பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் கடந்த 18-ம் தேதி சேலம் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கோழிப்பண்ணை தீவன கிடங்கில் ரேசன் அரிசி 40 டன் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கோழிப்பண்ணை உரிமையாளரை தேடி வருகின்றனர். இதனிடையே ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் கூட்டுறவு சார்பதிவாளர்கள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் ஆத்தூர் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் 30 கடைகளில் சிறு, சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த கடைகளின் விற்பனையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • தாசில்தார் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றியவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
    • 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதிப்பு.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா உடையார்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேலு (வயது45).

    விவசாயி. இவர் கடந்த 2013-ம் ஆண்டு தனது விவசாய நிலத்தில் பைப்புதைக்க, தனியார் வங்கியில் ரூ.4 லட்சம் கடன் கேட்டார். அப்போது, வங்கி தரப்பில், நில மதிப்பு சான்று கேட்டனர்.

    இதையடுத்து ராஜவேலு பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

    இந்தநிலையில் நில மதிப்பு சான்றிதழை பெற்றுத்தருவதாக கூறி, தாசில்தார் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய பாபநாசம் காப்பான் தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம் (58) என்பவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

    அரசு பணி செய்வதற்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத ராஜவேலு, கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி வழக்குப்பதிவு செய்து கல்யாணசுந்தரத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தார்.

    இந்த வழக்கு கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கை நீதிபதி சண்முகபிரியா விசாரணை செய்து கல்யாணசுந்தரத்துக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

    அரசு தரப்பில் வக்கீல் முகமதுஇஸ்மாயில் ஆஜராகி வாதாடினார்.

    • 108 ஆம்புலன்ஸ் வில்லுக்குறி பகுதியை தாண்டி நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • ஆம்புலன்ஸ் டிரைவர் லோடு ஆட்டோவை முந்தி செல்ல பலமுறை முயன்ற போதும் லோடு ஆட்டோவின் டிரைவர் வழிவிடாமல் சென்றார்.

    நாகர்கோவில்:

    புலியூர்குறிச்சி-வில்லுக் குறி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இரவு 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 வாலிபர்கள் கால் எலும்பு முறிந்து படுகாயமடைந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.படுகாயம் அடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    108 ஆம்புலன்ஸ் வில்லுக்குறி பகுதியை தாண்டி நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லோடு ஆட்டோவை ஓட்டி சென்ற டிரைவர் ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் சென்றார். ஆம்புலன்ஸ் டிரைவர் லோடு ஆட்டோவை முந்தி செல்ல பலமுறை முயன்ற போதும் லோடு ஆட்டோவின் டிரைவர் வழிவிடாமல் சென்றார். சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்கு காட்டிய படி சென்றுள்ளார்.

    இதை ஆம்புலன்சில் இருந்த ஊழியர் வீடியோவாக பதிவு செய்து குளச்சல் போக்குவரத்து இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி வைத்தனர். வீடியோவை பார்த்த போக்குவரத்து ஆய்வாளர் உடனடியாக லோடு ஆட்டோ டிரைவர் மீது நடவடிக்கை எடுத்தார். லோடு ஆட்டோவிற்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. லோடு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் அய்யப்பன் மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி விடாமல் போக்கு காட்டும் வாகன ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

    விபத்தில் சிக்கியவர்களை ஏற்றி சென்ற 108 ஆம்புலன்ஸ்க்கு லோடு ஆட்டோ டிரைவர் வழி விடாமல் போக்கு காட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • பக்தர்களுக்கு பாதுகாப்பான உணவு வழங்க விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.
    • 5 கடைகளுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி பெரு விழாவை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவு வருவார்கள். இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு பாதுகாப்பான உணவு வழங்க விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பத்மநாபன், இளங்கோவன், கொளஞ்சி, அன்பு பழனி, ஸ்டாலின் ராஜரத்தினம், மோகன் ஆகியோர் கொண்ட குழுவினர் மேல்மலையனூர் பகுதியில் உள்ள 55 கடை களில் ஆய்வு செய்தனர்.

    ஆய்வில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு, லேபிள் விதிமீறல் காரணங்களுக்காக 5 கடைகளுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஆய்வில் 90 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், 50 கிலோ அயோடின் சேர்க்கப்படாத உப்பு, 21 கிலோ சாப்பிடக் கூடாத பேரிச்சம்பழம், 1 கிலோ கலப்பட டீ தூள், 3 கிலோ அதிக செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள், ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் தற்காலிக விழாக்காலக் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான தேவையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்த ப்பட்டது. அப்போது வட்டார வளர்ச்சி அலுவலக மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • சீர்காழி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராத தொகை விதித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகரப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடைபெறுவது தொடர்கதையாக உள்ளது.

    இதனை தடுக்கும் விதமாக சீர்காழி போக்குவரத்து காவல்துறையினர் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வருபவர்களை வழி மறித்து சோதனையில் ஈடுபட்டனர் இதில் தலைக்கவசம் மற்றும் வாகன காப்பீடு இல்லாதவர்களுக்கு அபராத தொகை விதித்தனர்.

    மேலும் இருசக்கர வாகனங்களில் அதிக சத்தத்தை எழுப்பும் வகையில் வாகனத்தில் ஒலிப்பான்கள் மற்றும் சைலன்சர்கள் பொருத்தப்பட்டிருந்தால் அந்த வாகனங்களுக்கும் அபராதம் விதித்தனர்.

    சீர்காழி நகர்பகுதியில் மட்டும் 150 இருசக்கர வாகனங்களில் உரிய ஆவணம் மற்றும் காப்பீடு, தலைக்கவசம் அனியாதவர்களுக்கு அப ராதம் விதிக்கப்பட்டது.

    • வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எண்.3 கொமாரபாளையம் பஞ்சாயத்து கோம்பைக்காடு அண்ணாமலைப்பட்டி பகுதியில் அனுமதி இன்றி மலைகளை வெடி வைத்து தகர்த்து கற்கள் உற்பத்தி செய்தும் கிராவல் மண்ணை அள்ளிச் செல்லும் சம்பவம் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • அப்போது அளவுக்கு அதிகமாக கிராவல் மண் வெட்டி எடுத்ததை உறுதிப்படுத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நாமக்கல் ஆர்.டி.ஓ.வுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து கிராவல் மண் வெட்டி எடுத்த தங்கம் என்பவரது மனைவி சித்தேஸ்வரிக்கு ரூ.19.84 லட்சம் அபராதம் விதித்து நாமக்கல் ஆர்.டி.ஓ மஞ்சுளா உத்தரவிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எண்.3 கொமாரபாளையம் பஞ்சாயத்து கோம்பைக்காடு அண்ணாமலைப்பட்டி பகுதியில் அனுமதி இன்றி மலைகளை வெடி வைத்து தகர்த்து கற்கள் உற்பத்தி செய்தும் கிராவல் மண்ணை அள்ளிச் செல்லும் சம்பவம் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

    அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து நாமக்கல் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அளவுக்கு அதிகமாக கிராவல் மண் வெட்டி எடுத்ததை உறுதிப்படுத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நாமக்கல் ஆர்.டி.ஓ.வுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து கிராவல் மண் வெட்டி எடுத்த தங்கம் என்பவரது மனைவி சித்தேஸ்வரிக்கு ரூ.19.84 லட்சம் அபராதம் விதித்து நாமக்கல் ஆர்.டி.ஓ மஞ்சுளா உத்தரவிட்டார்.

    • 12 வாகனங்களுக்கு, பல்வேறு விதி மீறல்களுக்காக அபாரதமாக ரூ.93 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
    • தண்ணீர் கேன் ஏற்றி சென்ற ஒரு வாகனம் சிறைபிடிக்கப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் நகரில் காஞ்சிபுரம், விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையம் அருகே காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த 12 வாகனங்களுக்கு, பல்வேறு விதி மீறல்களுக்காக அபாரதமாக ரூ.93 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் தகுதி சான்று இல்லாத தண்ணீர் கேன் ஏற்றி சென்ற ஒரு வாகனம் சிறைபிடிக்கப்பட்டு விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    • ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.
    • 13 வயது சிறுவன் பணியமர்த்தப்பட்டது தெரியவந்தது.

    ஊட்டி

    குன்னூர் மார்க்கெட் பகுதியில் தொழிலாளர் நலத்துறை ஆணையர் (அமலாக்கம்) சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மலர் அங்காடியில் 13 வயது சிறுவன் பணியமர்த்தப்பட்டது தெரியவந்தது. உடனே அந்த சிறுவன் மீட்கப்பட்டான். இதுகுறித்து குன்னூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சிறுவனை பணிக்கு அமர்த்திய மலர் அங்காடி உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதேபோன்று ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் 16 வயது சிறுவன் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்தது. அந்த சிறுவனை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மீட்டனர். மேலும் கலெக்டருக்கு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அந்த ஓட்டலுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.

    • தகுதியற்ற நுகர்வோர் அறக்கட்டளை நிர்வாகிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்-அரியலூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
    • இருசக்கர வாகனம் காணாமல் போனதற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் பணம் கொடுக்கவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூரைச் சேர்ந்தவர் எம்.ஜி.பாலசுப்ரமணியன் (வயது 52). தமிழ்நாடு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவராக இருந்துவரும் இவர், கீழகாவட்டங்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் வீமன் என்பவரின் ஏஜென்ட் எனக்கூறி வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இருசக்கர வாகனம் காணாமல் போனதற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் பணம் கொடுக்கவில்லை என்று தெரிவித்து இருந்தார். ஆனால் இன்சூரன்ஸ் நிறு–வனத்தினர் கேட்ட ஆவ–ணங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை.

    இதேபோல், திருமழ–பாடி கிராமத்தில் வசிக்கும் சீராளனின் ஏஜென்ட் என கூறி பாலசுப்ரமணி–யன் தாக்கல் செய்த வழக்கில், இறந்த–வருக்கு அவரது மருமகன் சீரா–ளன் இறந்தவரின் வாரிசுகளை விட்டுவிட்டு காப்பீட்டுத்தொகை தர–வில்லை என வேளாண்மை இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீதும், அரியலூர் வேளாண்மை இணை இயக்குநர் மீதும் வழக்கு தொடுத்திருந்தார். செந்துறை அடுத்த சன்னாசிநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் ஏஜென்ட் என்று கூறி நிலத்தை அளந்து தரவில்லை என தெரிவித்து செந்துறை வட்டாட்சியர் மற்றும் கலெக்டர் மீதும், ஆசவீரன்குடிக்காடு கிரா–மத்தில் வசிக்கும் கலியபெ–ருமாள் என்பவருக்கு ஏஜென்டாக தாக்கல் செய்த வழக்கில், எம்.ஜி.பாலசுப்ர–மணியன் அவரது மனை–வியின் ஏஜென்ட் என்று கூறி கீழப்ப–ழுவூர் சார்பதிவாளர், அரியலூர் மாவட்ட பதிவாளர் மற்றும் திருச்சி முத்திரை கட்டண துணை கலெக்டர் ஆகியோர் மீதும் வழக்கு தொடுத்து இருந்தார்.

    இந்த 5 வழக்குகளையும் விசாரித்து வந்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறை–தீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் மற்றும் உறுப்பினர்கள் என்.பாலு, வீ.லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு, பாலசுப்பிரமணியன் தாக்கல் செய்திருந்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ததது. மேலும், தகுதியில்லாமல் வழக்கு தொடுத்தற்காக பாலசுப்பிரமணியனுக்கு ஒவ்வொரு வழக்குகளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், நுகர்வோர் குறைதீர் ஆணையங்களிலும், அரசு அலுவலகங்களிலும் நுகர்வோரின் பிரதிநிதி என கூறி ஆஜராக எம்.ஜி.பாலசுப்பிரமணியனுக்கு தகுதி இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    • அதிக ஒலி மாசு ஏற்படுத்தும் ஏர்ஹாரன் பொருத்தி வாகனங்களை இயக்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
    • வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சேக்முகமது கூறியதாவது:-

    மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றி இரு சக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும். அதன்படியே வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கு மாறாக இருசக்கர வாகனங்களில் சைலன்சர் மற்றும் கைப்பிடிகளில் தாங்களாகவே மாற்றம் செய்து ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும்.

    மேலும் சைலன்சர்களை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதிக ஒலியுடனோ, விசித்திரமான ஒலிகளுடனோ மாற்றம் செய்து அதிக ஒலி மாசு ஏற்படும் வகையில் இயக்கினால் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதேபோல மோட்டார் சைக்கிளில் ஹேண்டில் பார்களில் மாற்றம் செய்து இயக்கினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    வாகனங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சிலர் அதிக ஒலி கொண்ட ஏர்ஹாரன்களை இயக்கி வருகின்றனர். இத்தகைய ஏர்ஹாரன்களை பொருத்தி வாகனங்களை இயக்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    இதுதவிர காரில் முன் இருக்கைகள் மற்றும் பின் இருக்கைகளில் பயணம் செய்வோர் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். சீட்பெல்ட் அணிய தவறினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தில் காவல்துறையுடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தப்பட்டு மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×