search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 130486"

    • வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் திறம்பட எதிர்கொண்டு அடக்கினர்.
    • 9 சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் மொத்தம் 860 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

    போட்டி தொடங்குவதற்குமுன் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள், விழாக்குழுவினர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன்பின்னர் போட்டி தொடங்கியது. முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து 7 கோவில் காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன்பின்னர் போட்டிக்கான காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.

    வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் திறம்பட எதிர்கொண்டு அடக்கினர். இதேபோல் வீரர்களின் பிடியில் சிக்காமல் களத்தில் நின்று கெத்து காட்டிய காளைகளையும் பார்க்க முடிந்தது. சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு அனுப்பப்பட்டனர். காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.

    காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 9 சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் மொத்தம் 860 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. களத்தில் சோர்வடையாமல் நின்று 23 காளைகளை அடக்கிய சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் முதலிடம் பெற்றார். அவருக்கு முதலமைச்சர் வழங்கும் கார் பரிசாக அளிக்கப்பட்டது. 19 காளைகளை அடக்கிய பாலமேட்டைச் சேர்ந்த மணி 2ம் இடம் பிடித்தார். 15 காளைகளை அடக்கி பாலமேடு ராஜா மூன்றாம் பரிசை தட்டிச் சென்றார்.

    இதேபோல் சிறந்த காளையாக கருப்பண்ணசாமி கோயில் காளை தேர்வு செய்யப்பட்டது. திண்டுக்கல்லைச் சர்ந்த ரமேஷ் என்பவரின் காளை 2வது பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.

    • திருச்சி மாவட்டம் சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
    • போட்டியை காண வந்த புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்த் என்பவர் காளை முட்டியதில் படுகாயமடைந்தார்.

    திருச்சி:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை தினத்தன்று மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாள் பாலமேட்டிலும், 3-வது நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

    இன்று மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.

    இதேபோல் திருச்சி மாவட்டம் சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

    அப்போது போட்டியை காண வந்த புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்த் (25) என்பவர் காளை முட்டியதில் படுகாயமடைந்தார்.

    படுகாயமடைந்த அரவிந்த் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இன்று பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் காளை முட்டியதில் அரவிந்த் ராஜன் என்பவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சதீஷ்குமாருக்கு மாடு முட்டியதில் வயிற்றின் உள்பாகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி தாளக்குடி கீரமங்கலம் கிழக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 27). இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டார். அப்போது அவரை மாடு முட்டியது. இதில் அவரது வயிற்றின் உள்பாகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதிலும் பூரண நலம் பெற முடியவில்லை. மேலும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியாத நிலையும் ஏற்பட்டது.

    இதனால் வாழ்க்கையில் மிகவும் விரக்தி அடைந்த சதீஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாயின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி முருகேசன் துறையூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜல்லிக்கட்டு வீரர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விறுவிறுப்பாக நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 28 காளைகளை அடக்கிய வாலிபருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது.
    • சிறந்த காளையின் உரிமையாளருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.

    மதுரை

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றபின் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங், போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர், மண்டல தலைவர்கள் சுவிதா விமல், முகேஷ் சர்மா, புவனேஸ்வரி சரவணன் ஆகியோர் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, புதூர் பூமிநாதன் மற்றும் ராஜ் சத்யன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், எஸ்ஸார்கோபி, மேற்கு யூனியன் சேர்மன் வீரராகவன், ஈஸ்வரன், கவுன்சிலர் கருப்புசாமி டி.ஆர்.ஓ. பிர்தவுஸ் பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதனையடுத்து இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆன்லைன் மூலமாக தேர்வு செய்ய ப்பட்ட 280 மாடுபிடி வீரர்களும் 11 சுற்றுகளாக அனுமதிக்கப்பட்டதோடு 737 காளைகளும் அவிழ்க்கப்பட்டது.

    10சுற்றுகளிலும் இருந்து குறைந்தது 3 காளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி சுற்றில் கலந்துகொண்டனர்.

    விதவிதமான பெயர்க ளில் அவிழ்க்க ப்பட்ட காளைகள் வீரர்க ளுக்கு சவால் விடுக்கும் வகையில் களத்தில் நின்று விளையாடி வீரர்களை மிரட்டி வெற்றிபெற்று பரிசுகளை அள்ளி சென்றது.

    இதேபோன்று மிரட்டிய காளைகளையும் மாடுபிடி வீரர்கள் அடக்கி பல்வேறு பரிசுகளை பெற்று சென்றனர். போட்டியின் போது காளைகளையும், மாடுபிடி வீரர்களையும் கைதட்டியும் ஆரவாரம் செய்தும் உற்சாகபடுத்தினர்.

    போட்டியின் போது திறம்பட விளையாடி 28 காளைகளை அடக்கிய மதுரை சோலைஅழகுபுரம் பகுதியை சேர்ந்த விஜய்க்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ரூ.7லட்சம் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்பட்டது.

    17 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்த மாடுபிடி வீரரான மதுரை அவனியாபுரம் கார்த்திக்கு 2-வது பரிசாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார் மோட்டார் சைக்கிளும், 13 காளைகளை அடக்கிய 3-வது மாடுபிடி வீரரான விளாங்குடி பாலாஜிக்கு பசுமாடும் பரிசாக வழங்கப்பட்டது.

    இதேபோன்று போட்டியில் சிறப்பாக விளையாடிய சிறந்த காளை களான காத்தனேந்தல் பகுதியை சேர்ந்த காமேஷ் என்பவரது காளை முதலிடம் பிடித்தது. அதன் உரிமையாளருக்கு முதல் பரிசாக மோட்டார் சைக்கிளும், 2-வது சிறந்த காளையான வில்லாபுரம் கார்த்தி என்பவரது காளைக்கு வாஷிங்மெஷின் பரிசும், 3-வது பரிசாக மதுரை அவனியாபுரம் லோடுமேன் முருகன் என்பவரது காளைக்கு பசுமாடும் பரிசாக வழங்கப்பட்டது.

    மேலும் போட்டியின் போது ஆயிரக்கணக்கான போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்ப ட்டிருந்தனர். போட்டியில் காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையா ளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், குக்கர், கட்டில், சைக்கிள், சில்வர் அண்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன. காலை 7.45 மணிக்கு தொடங்கிய போட்டியானது மாலை 5மணி வரை நடைபெற்றது.

    போட்டியின் முடிவில் சிறந்த 3 மாடுபிடி வீரர்களுக்கும், காளை களின் உரிமையாளர் களுக்கும் பரிசுகோப்பை களும், பரிசுகளும் பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டன.

    போட்டியில் மாடு குத்தியதில் மாடுபிடி வீரர்கள், பார்வை யாளர்கள், 3சிறுவர்கள் காளை உரிமையாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட 61 பேர் காயம டைந்தனர். அவர்களில் சிறுவர், போலீசார் உள்ளிட்ட 11பேர் சிகிச்சைக் காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • பல்வேறு உயர்ந்த பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
    • சிறந்த மாடுபிடி வீரருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    மதுரை :

    உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா இன்று (திங்கட்கிழமை) மஞ்சள் மலை ஆற்று மைதான திடலில் தொடங்கியது.

    மதுரை -பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்ததும் வாடிவாசல் வழியாக முதல் காளைகள் பாய்ந்து வந்தது.

    சிறந்த மாடுபிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் பரிசாக காரும், சிறந்த காளைக்கு இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்படுகிறது.

    மேலும் தங்கம், வெள்ளி, நாணயங்கள், அண்டா முதல் சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்களும், பல்வேறு உயர்ந்த பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

    ஜல்லிக்கட்டில் 335 மாடுபிடி வீரர்கள் மற்றும் 750 முதல் ஆயிரம் காளைகள் வரை வாடிவாசலில் அவிழ்த்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மொத்தம் 9 சுற்றுகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 25 வீரர்கள் பங்கேற்பார்கள்.

    போட்டி தொடங்கும் முன் காளைகளுக்கான ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனையும், வீரர்களுக்கு மருத்துவ சோதனையும் நடந்தது.

    16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 11 சுற்றுகளாக நடத்தப்பட்டது
    • அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த மாடுபிடி விஜய் தொடர்ந்து முன்னிலை வகித்தார். அவனியாபுரம் கார்த்தி இரண்டாவது இடத்தில் பின்தொடர்ந்தார்.

    காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு, மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. 11 சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 28 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார் விஜய். அவருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது. முதலமைச்சர் சார்பில் இந்த கார் பரிசாக வழங்கப்பட்டது.

    அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தைப்பிடித்தார். அவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் இரு சக்கரவாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 13 காளைகளை அடக்கிய விளாங்குடி பாலாஜிக்கு மூன்றாம் பரிசாக பசுமாடு வழங்கப்பட்டது.

    விஜய் மூன்றாம் முறையாக முதல் பரிசு பெற்றுள்ளார். இதற்கு முன்பு, 2020, 2021ம் ஆண்டுகளிலும் முதல் பரிசை பெற்றுள்ளார்.

    காமேஷ் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. அவருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

    • அவனியாபுரம் கார்த்தி 15 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
    • பிற்பகல் நிலவரப்படி இந்த ஜல்லிக்கட்டில் 45 பேர் காயமடைந்துள்ளனர்.

    மதுரை:

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 9ம் சுற்று நிறைவில் மொத்தம் 578 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த விஜய் என்ற வீரர் 23 காளைகளை அடக்கி முன்னிலையில் இருக்கிறார். அவனியாபுரம் கார்த்தி 15 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த அழகுபேச்சி என்ற பள்ளி மாணவி அவிழ்த்த காளையை மாடுபிடி வீரர் விஜய் அடக்கிய நிலையில், தான் பெற்ற பரிசை மாணவியிடமே வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    பிற்பகல் நிலவரப்படி மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உட்பட 45 பேர் காயமடைந்துள்ளனர். 14 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    • அவனியாபுரத்தில் 320 மாடுபிடி வீரர்கள் களம் காண்கிறார்கள்.
    • காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், தங்க நாணயம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

    ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். அதன்படி முதல் களமாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

    அவனியாபுரத்தில் 320 மாடுபிடி வீரர்கள் களம் காண்கிறார்கள். ஆயிரம் காளைகள் வாடிவாசலில் சீறி வர இருக்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், தங்க நாணயம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

    வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் மது அருந்திவிட்டு போட்டியில் பங்கேற்ற 4 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் உடற்தகுதி பெறாத 3 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதேபோல் 26 காளைகளும் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    • ஜல்லிக்கட்டு போட்டியை பொதுமக்கள் கண்டு களிக்கும் விதமாக மைதானத்திற்கு வெளியே எல்.இ.டி திரை வைக்கப்பட்டுள்ளது.
    • காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    அவனியாபுரம்:

    ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். அதன்படி பொங்கல் பண்டிகை என்பதால், முதல் களமாக அவனியாபுரம் தயாராகி இருக்கிறது.

    அவனியாபுரத்தில் 320 மாடுபிடி வீரர்கள் களம் காண்கிறார்கள். ஆயிரம் காளைகள் வாடிவாசலில் சீறி வர இருக்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், தங்க நாணயம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

    இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பொதுமக்கள் கண்டு களிக்கும் விதமாக மைதானத்திற்கு வெளியே எல்.இ.டி திரை வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜல்லிக்கட்டு போட்டியை மக்கள் கண்டு களித்து வருகின்றனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சேலத்தை சேர்ந்த 3 வயது சிறுமி டோரா அவிழ்த்த காளை வெற்றிபெற்றது.

    • ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும்.
    • அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழியுடன் தொடங்கியது.

    அவனியாபுரம்:

    ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். அதன்படி பொங்கல் பண்டிகை என்பதால், முதல் களமாக அவனியாபுரம் தயாராகி இருக்கிறது. அவனியாபுரத்தில் 320 மாடுபிடி வீரர்கள் களம் காண்கிறார்கள்.

    ஆயிரம் காளைகள் வாடிவாசலில் சீறி வர இருக்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், தங்க நாணயம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

    இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழியுடன் தொடங்கியது. வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • திருச்செங்கோட்டில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
    • தேர்வு செய்யப்பட்ட சூரியம்பாளையம் பகுதியில் உள்ள 30 ஏக்கர் நிலத்தை திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா ஆய்வு செய்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட சூரியம்பாளையம் பகுதியில் உள்ள 30 ஏக்கர் நிலத்தை திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் காளைகளுக்கு டோக்கன் கொடுக்கும் இடம், மருத்துவ பரிசோதனை செய்யும் இடம் சுற்றி உள்ள பகுதிகளில் 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு திறந்த வெளி கிணறுகள் நீர்நிலைகள் எதுவும் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விழா நடத்தும் திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவை யினரிடம் கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் மற்றும் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள் சுரேஷ்பாபு , முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நகர மன்ற உறுப்பினர்கள் ரவிக்குமார், ரமேஷ் மற்றும் மைக்கா ரமேஷ், வெங்கடேசன், கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் அருண் பாலாஜி, திருச்செங்கோடு வட்டாட்சியர் அப்பன் ராஜ், நகர வருவாய் அலுவலர் மல்லிகா, கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள் பீரோ கட்டில் தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
    • காயம் அடையும் வீரர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க அங்கேயே முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அவனியாபுரம்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளையும் (15-ந் தேதி), 16-ந்தேதி பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. உலக பிரசித்தி பெற்ற இந்த போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம், அவனியாபுரம் கிராம கமிட்டி ஆகிய இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை நிலவியது. இது தொடர்பான வழக்கில் கோர்ட்டு உத்தரவுப்படி சமாதான கூட்டம் நடந்தது. இதில் முடிவு எதுவும் எட்டப்படாதால் இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து நடத்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்காக மாநகராட்சி சார்பில் ரூ.17 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நேற்று வாடிவாசல் அமைப்பது, தடுப்பு வேலிகள், பார்வையாளர் மேடை, கால்நடை பராமரிப்பு சோதனை மையம், மாடுகள் சேகரிக்கும் இடம் உள்ளிட்டவை அமைக்கும் பணி நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

    மதுரை மாவட்டத்தில் நடக்கும் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு இணையதளம் மூலம் கடந்த 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடந்தது. இதில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 9, 699 காளைகளும் 5,399 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.

    நாளை நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை சிவகங்கை திண்டுக்கல் தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400 மாடுபிடி வீரர்களும், 800 காளைகளும் களம் காண்கின்றன. இதில் மாடுபிடி வீரர்கள் சுழற்சி அடிப்படை அடிப்படையில் ஜல்லிக்கட்டு மைதானத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள் பீரோ கட்டில் தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. காயம் அடையும் வீரர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க அங்கேயே முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 5-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கண்டிப்பாக உரிய விதிகளை பின்பற்ற வேண்டும். விதிகளை மீறி செயல்படுபவர்கள் களத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான வருவார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு அவனியாபுரத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் தலைமையில் துணை ஆணையர் சாய் பிரணீத் மேற்பார்வையில் 15 உதவி கமிஷனர்கள் 45 இன்ஸ்பெக்டர்கள் 150 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    ×