search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குத்திக்கொலை"

    மும்பையில் 7 வயது சிறுவன் பீர்பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவனது சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர். #Mumbai #ManHeld #Murder
    மும்பை:

    மும்பை பைகன்வாடி ரபீக் நகரை சேர்ந்த சிறுவன் முகமது இர்பான் அஸ்காரலி(வயது7). கடந்த சனிக்கிழமை காலை வீட்டில் இருந்து விளையாட வெளியே சென்ற சிறுவன் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கலக்கம் அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். ஆனால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் சிவாஜி நகர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடிவந்தனர். இந்தநிலையில் தேவ்னார் தியோனர் சொசைட்டி பகுதியில் உள்ள வாகன நிறுத்தத்தில் சிறுவன் முகமது இர்பான் அஸ்காரலி பலத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டான்.

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுவனை அவனது சித்தப்பா முகமது நவ்சத் அலாவூதின் அப்பாசி(22) என்பவருடன் பார்த்ததாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். எனவே போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், சிறுவனை அவர் தான் கடத்தி கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

    முகமது நவ்செத் அலாவூதின் அப்பாசி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது அண்ணன் மற்றும் மனைவி திட்டி வந்துள்ளனர். இதனால் அவர்களை பழிவாங்குவதற்காக முகமது இர்பான் அஸ்காரலியை கடத்தி பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முகமது நவ்செத் அலாவூதின் அப்பாசியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Mumbai #ManHeld #Murder

    இஸ்ரேலில் அமெரிக்கர் குத்திக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீன வாலிபரை போலீசார் கைது செய்தனர். #IsraeliAmerican #StabbingAttack
    ஜெருசலேம்:

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான எல்லை பிரச்சினை நீண்டகாலமாக நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்கு கரை பகுதியில் இஸ்ரேலியர்களை கத்தியால் குத்தியும், கார்களை கொண்டு மோதியும் தாக்குதல் நடத்துவதை பாலஸ்தீனர்கள் வழக்கமாக கொண்டு உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் பிறந்து இஸ்ரேலில் குடியேறி அந்நாட்டு குடியுரிமை பெற்ற அரி புல்ட் (வயது 45) என்பவர் நேற்று முன்தினம் ஜெருசலேம் நகரின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு வணிக வாளகத்தில் நின்றுகொண்டிருந்தார்.



    அப்போது அங்கு பாலஸ்தீன வாலிபர் ஒருவர் அரி புல்ட்டை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அந்த பாலஸ்தீன வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். எனினும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையிலும் அரி புல்ட் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து பாலஸ்தீன வாலிபரை சுட்டார்.

    இதில் பாலஸ்தீன வாலிபரின் உடலில் குண்டுபாய்ந்து சுருண்டு விழுந்தார். பின்னர் அங்கு நின்றிருந்த பொதுமக்கள் சிலர் ஓடி சென்று அவரை மடக்கி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையே கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்த அரி புல்ட்டை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். கல்வி சம்பந்தமாக வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள அரி புல்ட் திட்டமிட்டிருந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  #IsraeliAmerican #StabbingAttack
    அமெரிக்காவில் சீக்கியர் டெர்லோக் சிங் படுகொலையில் நெவார்க் நகரத்தைச் சேர்ந்த ராபர்ட்டோ உபெய்ரா என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். #SikhMan #Murder
    நியூயார்க்:

    அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் எசெக்ஸ் நகரில் பெரிய அளவில் கடை வைத்து நடத்தி வந்தவர் சீக்கியரான டெர்லோக் சிங் (வயது 55). இவர் கடந்த 16-ந் தேதி தனது கடையில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம், அங்கு வாழ்ந்து வருகிற சீக்கிய மக்கள் இடையே மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது. இந்த படுகொலை தொடர்பாக எசெக்ஸ் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையாளியை தேடி வந்தனர்.



    இந்த நிலையில் டெர்லோக் சிங் படுகொலையில் நெவார்க் நகரத்தைச் சேர்ந்த ராபர்ட்டோ உபெய்ரா (55) என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர் அந்தக் கடையில் சின்னச்சின்ன வேலைகள் செய்து வந்தவர் என தகவல்கள் கூறுகின்றன. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. அதன் முடிவில் அவர் டெர்லோக் சிங்கை கொலை செய்ததின் பின்னணி என்ன என்பது தெரிய வரும். 
    உத்தரபிரதேசத்தில் பிதுனாவில் உள்ள கோவில் வளாகத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அங்கிருந்த சாமியார்களை சரமாரியாக கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #UttarPradesh #PriestMurder
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் பிதுனா என்னும் நகரம் உள்ளது. இங்குள்ள ஒரு கோவில் வளாகத்திற்குள் நேற்று புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அங்கிருந்த 3 சாமியார்களை சரமாரியாக கத்தியால் குத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இதில் படுகாயம் அடைந்த சாமியார்கள் லஜ்ஜா ராம் (வயது 65), ஹல்கே ராம் (53) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். ராம்ஷரண் (56) என்ற மற்றொரு சாமியார் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் காட்டுத்தீ போல் மாநிலம் முழுவதும் பரவியது. இந்த நிலையில் பிதுனா நகரில் ஒரு கும்பல் பயங்கர வன்முறையில் ஈடுபட்டது. குறிப்பிட்ட சில கடைகளை அந்த கும்பல் தீவைத்து கொளுத்தியது. மேலும் கற்களை வீசி தாக்குதலும் நடத்தியது. இதனால், அவர்களை விரட்டியடிக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அங்கு கூடுதல் போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

    கொல்லப்பட்ட சாமியார்கள் இருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவருக்கு ரூ.1 லட்சமும் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். #UttarPradesh #PriestMurder  #tamilnews

    பாணாவரம் அருகே விவசாயி மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
    பனப்பாக்கம்:

    பாணாவரம் அருகே உள்ள மேலேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜிரெட்டி (வயது 49), விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் காட்டுப்பாக்கம் கிராம பகுதியில் உள்ளது. இவர் தனது நிலம் அருகே இருந்த கடையை டாஸ்மாக் கடைக்கு வாடகை விட்டுள்ளார். ராஜிரெட்டி தினமும் இரவு நேரத்தில் நிலத்திற்கு காவல் செல்வது வழக்கம்.

    இதேபோல், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு காவலுக்கு சென்றார். அப்போது அவர் டாஸ்மாக் கடை அருகே உள்ள திண்ணையில் படுத்திருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் ராஜிரெட்டியின் அண்ணன் மனோகரன் (58) நிலத்திற்கு வந்துள்ளார். அப்போது மதுபாட்டிலால் குத்திய நிலையில் ராஜிரெட்டி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர், பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது ராஜிரெட்டியை கொலை செய்த மர்மநபர்கள் மதுபாட்டிலை உடைத்து அவரது மார்பு பகுதியில் குத்தி இருப்பது தெரியவந்தது. அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எனவும், இந்த சம்பவம் முன்விரோதத்தில் நடந்ததா? எனவும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனையடுத்து போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வேலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் ‘கவ்வி’ பிடிக்கவில்லை.

    மேலும் தடயவியல் நிபுணர் விஜயன் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து கொலை நடந்த இடத்தில் தடயங்கள், கைரேகைகளை சேகரித்தனர்.

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில், கொலையாளிகளை விரைந்து பிடிக்க அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் மேற்பார்வையில், பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சக்தியலிங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்தின் அருகே இருந்த சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலத்தில் காவலுக்கு படுத்திருந்த விவசாயி கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    ×