என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 133489"
- சபரிமலை கோவில் நடை மீண்டும் ஜூன் 15-ந்தேதி திறக்கப்படும்.
- 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் தவிர, விசேஷ நாட்கள் மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். 18-ம் படிக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள கற்பூர ஆழியில் நெருப்பு மூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
பிரதிஷ்டை தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைக்கு பிறகு பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (ஜூன்) 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
- சபரிமலை கோவிலுக்கு சென்ற நாராயணன் நம்பூதிரி தலைமையிலான குழுவினர் பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜை செய்தனர்.
- திருவிதாங்கூர் தேவசம்போர்டு, பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீசில் புகார் செய்தனர்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற சென்னையை சேர்ந்த நாராயணன் நம்பூதிரி தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் அங்குள்ள பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜை செய்தனர். இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய திருவிதாங்கூர் தேவசம்போர்டு, பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் இந்த சம்பவத்திற்கு துணை போனதாக வனத்துறை ஊழியர்கள் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் கேரள ஐகோர்ட்டு இந்த பிரச்சினையை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. நேற்று இந்த வழக்கின் விசாரணை நடந்தது. பின்னர் இதுதொடர்பாக அரசு மற்றும் தேவசம்போர்ட்டு நிர்வாகத்திடம் உரிய விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கோவிலுக்கு தேவையான பொருள்களை கேபிள் கார் மூலம் கொண்டு செல்ல தேவசம்போர்டு திட்டமிட்டது.
- சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்ததும் கேபிள் கார் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கும்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்களின் போது லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.
இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய கோவிலின் அடிவாரமான பம்பையில் இருந்து பொருள்கள் டிராக்டர் மூலம் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும்.
இந்த டிராக்டர்கள் மலைப்பாதையில் செல்லும்போது சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு, பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. எனவே பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கோவிலுக்கு தேவையான பொருள்களை கேபிள் கார் மூலம் கொண்டு செல்ல தேவசம்போர்டு திட்டமிட்டது. இது தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள ஒரு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கேபிள் கார் அமைக்க அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டது.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்ததும் கேபிள் கார் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கும்.
இதற்கான மண் ஆய்வு பணியும் தொடங்க உள்ளது. இந்த பணி முடிந்ததும் கேபிள் கார் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார்.
- பொன்னம்பலமேட்டிற்குள் செல்ல பூசாரிக்கு உதவிய வனத்துறை ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது.
சபரிமலையில் மகர விளக்கு திருவிழா நடைபெறும்போது, மலையில் உள்ள பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார்.
இந்த வனபகுதி வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட பகுதியாகும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒருவர் பொன்னம்பலமேடு காட்டுப்பகுதிக்குள் சென்று பூஜைகள் செய்தார்.
இந்த காட்சிகளை சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அது வைரலானதை தொடர்ந்து, பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜைகள் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபோல கேரள வனத்துறையினரும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
இதில் பொன்னம்பலமேட்டிற்குள் செல்ல பூசாரிக்கு உதவிய வனத்துறை ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கில் இடுக்கியை சேர்ந்த சந்திரசேகரன் என்ற கண்ணன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கேரள போலீசார் இன்று காலை அவரை கைது செய்தனர். அவரிடமும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- நாராயணனும், அவரது குழுவினரும் பொன்னம்பல மேடு காட்டுக்குள் சென்று அங்கு பூஜை செய்துள்ளனர்.
- வன ஊழியர்கள் ராஜேந்திரன் மற்றும் ஷாபு ஆகியோர் உதவி செய்தது தெரியவந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள பொன்னம்பலமேட்டில் மகர விளக்கு திருவிழாவின் போது ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
பொன்னம்பலமேட்டில் தெரியும் மகரஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த பகுதி தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் இருக்கிறது.
இந்த பொன்னம்பலமேட்டில் ஒருவர் நுழைந்து பூஜை நடத்தும் காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியானது. இது சபரிமலை கோவில் நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் பொன்னம்பலமேட்டில் பூஜைகள் நடத்தியது சென்னையை சேர்ந்த நாராயணன் என தெரியவந்தது.
நாராயணனும், அவரது குழுவினரும் பொன்னம்பல மேடு காட்டுக்குள் சென்று அங்கு பூஜை செய்துள்ளனர். அவர்கள் காட்டுக்குள் செல்ல வன ஊழியர்கள் சிலர் உதவி செய்துள்ளனர். அவர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடந்தது.
இதில் வன ஊழியர்கள் ராஜேந்திரன் மற்றும் ஷாபு ஆகியோர் உதவி செய்தது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கேரள போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வருகிற 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வைகாசி மாத பூஜை நடைபெற உள்ளது.
- 15-ந்தேதி முதல் 5 நாட்கள் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வைகாசி மாத பூஜை நடைபெற உள்ளது. இதற்காக கோவில் நடை நாளை மறுநாள் (14-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். மறுநாள் (15-ந்தேதி) முதல் 5 நாட்கள் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
சபரிமலையில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு கேரள அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், வைகாசி மாத பூஜைக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
- கோவில் நடை மீண்டும் மே 14-ந்தேதி திறக்கப்படும்.
- 18-படிகளில் வன தேவதைகளுக்கான சிறப்பு பூஜை நடைபெற்றது.
சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 11-ந்தேதி திறக்கப்பட்டது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து 12-ந்தேதி முதல் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கடந்த 15-ந்தேதி விஷூ பண்டிகை அன்று வழக்கம்போல் அதிகாலை நடை திறக்கப்பட்டு ஐயப்ப பக்தர்கள் விஷூக்கனி காணல் நிகழ்ச்சியில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.
இந்த நிலையில் 9 நாட்கள் நடைபெற்ற பூஜைகள் நிறைவு பெற்றதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று இரவு 10 மணிக்கு அடைக்கப்பட்டது. முன்னதாக நேற்று மதியம் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் 18-படிகளில் வன தேவதைகளுக்கான சிறப்பு பூஜை நடைபெற்றது.
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம்(மே) 14-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 19-ந்தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.
- பூஜையில் வைக்கப்பட்ட காய், கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
- கோவில் நடை 19-ந்தேதி அடைக்கப்படும்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நடந்தது.
சித்திரை முதல் நாளில் இறைவன் முன்பு காய்,கனிகளை படைத்து சாமி தரிசனம் செய்தால் அந்த ஆண்டு இனிமையாகவும், வளமையாகவும் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அந்த வகையில் கேரளாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நடந்தது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஷூ கனிகாணும் நிகழ்ச்சிக்காக இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. கோவிலில் சாமி முன்பு பல வகையான காய், கனிகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டி ருந்தன.
தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வழிபாடுகள் முடிந்த பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட காய், கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
அதனை வாங்கவும், ஐயப்பனை தரிசிக்கவும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலை சென்று விஷூ கனிகாணும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விஷூ கனிகாணும் நிகழ்ச்சிக்காக திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 19-ந் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.
- சித்திரை விஷூ நாளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
- கோவில் நடை 19-ந்தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை மாத பிறப்பையொட்டி நேற்று முன்தினம் மாலை கோவில் நடை திறக்கப்பட்டது.
சபரிமலையில் நடை பெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நாளை மறுநாள் நடக்கிறது. சித்திரை முதல் நாளில் இறைவன் முன்பு படைக்கப்படும் காய், கனி வகைகளை பார்த்து சாமி தரிசனம் செய்தால் அந்த ஆண்டு இனிமையாகவும், வளமையாகவும் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதற்காக சித்திரை விஷூ நாளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இதற்காக அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.
அப்போது காய்,கனிகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
பூஜைகள் முடிந்த பின்னர் சாமி முன்பு படைக்கப்பட்ட காய், கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதுபோல கைநீட்டமும் அளிக்கப்படும்.
இதனை கோவில் தந்திரி மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி ஆகியோர் வழங்குவார்கள். சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சிக்காக திறக்கப்படும் கோவில் நடை வருகிற 19-ந் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.
- 15-ந்தேதி ஐயப்ப சாமிக்கு விஷுக்கனி தரிசனத்திற்கு வைக்கப்படும்.
- சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 26-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 27-ந் தேதி கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடந்தது. கடந்த 5-ந் தேதி ஆராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெற்று கோவில் நடை அடைக்கப்பட்டது.
இந்தநிலையில், சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் (நெய் தேங்காய் ஆழியில்) தீ மூட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
கோவிலில் இன்று (புதன்கிழமை) முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடைதிறப்பு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், 5.30 மணி முதல் 9 மணி வரை நெய்யபிஷேகம், அஷ்டாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, மதியம் 1 மணிக்கு நடை அடைப்பு ஆகியவை நடக்கிறது. மாலை 5 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், தொடர்ந்து படி பூஜை, இரவு 10 மணிக்கு நடை அடைப்பு போன்றவை நடக்கிறது.
15-ந் தேதி விஷு பண்டிகை அன்று வழக்கம் போல் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ஐயப்ப சாமிக்கு விஷுக்கனி தரிசனத்திற்கு வைக்கப்படும். தொடர்ந்து இரவு 7.30 மணி வரை ஐயப்ப பக்தர்கள் விஷுக்கனி தரிசனம் காண அனுமதிக்கப்படுவார்கள்.
விஷு பண்டிகையை முன்னிட்டு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டமாக வழங்குவார்கள். தொடர்ந்து 19-ந் தேதி வரை சித்திரை மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
9 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளையொட்டி சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- 15-ந்தேதி விஷு கனி தரிசனம் நடக்கிறது.
- 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தை முன்னிட்டும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
அதன்படி சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து தீபாராதனை நடைபெறும்.
பின்னர், 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
நாளை (புதன்கிழமை) முதல் தினசரி அதிகாலை 4.30 மணிக்கு பள்ளியுணர்த்தல், 5 மணிக்கு நடைதிறப்பு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், 5.30 மணி முதல் 9 மணி வரை நெய்யபிஷேகம், அஷ்டாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை ஆகியவற்றை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அதைத்தொடர்ந்து படி பூஜை ஆகியவை நடைபெறும். பின்னர் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
15-ந் தேதி சித்திரை விஷு பண்டிகையன்று வழக்கம்போல் அதிகாலை நடை திறக்கப்பட்டு ஐயப்ப சாமிக்கு முன் விஷுக்கனி தரிசனத்திற்கு வைக்கப்படும். அதைத்தொடர்ந்து காலை 7.30 மணி வரை ஐயப்ப பக்தர்கள் விஷு கனி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். விஷு பண்டிகையை முன்னிட்டு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டமாக வழங்குவார்கள்.
19-ந் தேதி வரை சித்திரை மாத பூஜைக்காக நடை திறக்கப்படும். வழக்கமான பூஜைகளுடன், உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை போன்ற பூஜைகள் நடைபெறும். 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
9 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளையொட்டி, சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- யானை மீது ஐயப்பனை அமர வைத்து சன்னிதானத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
- இந்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து வந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
விழாவின் 9-ம் நாளான நேற்று கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடத்தப்பட்டன. தொடர்ந்து உற்சவ பலி நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு சன்னிதானத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஐயப்பனை வைத்து மேள தாளம் முழங்க ஊர்வலம் கொண்டு சென்றனர். இரவு 9.30 மணிக்கு சரம் குத்தி வந்ததும் பள்ளி வேட்டை நடந்தது. அதன்பிறகு யானையில் ஊர்வலமாக புறப்பட்ட ஐயப்பன், இரவு 12 மணிக்கு சன்னிதானத்தை வந்தடைந்தார்.
பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக பம்பையில் இன்று (புதன்கிழமை) ஆராட்டு விழா நடந்தது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஐயப்பனை அமர வைத்து மேள தாளம் முழங்க சன்னிதானத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். இந்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் பம்பை ஆற்றுக்கு பகல் 11.30 மணிக்கு வந்ததும் அங்கு தந்திரி கண்டரரு மகேஷ் மேகனரு தலைமையில் ஐயப்ப சாமிக்கு ஆராட்டு விழா நடந்தது. தொடர்ந்து பகல் 1 மணிக்கு பம்பை கணபதி கோவிலுக்கு சாமி கொண்டு வரப்பட்டது. அங்கு பக்தர்கள் திரண்டு ஐயப்ப சாமியை தரிசனம் செய்தனர்.
மாலையில் அங்கிருந்து மீண்டும் ஊர்வலமாக ஐயப்ப சாமி சன்னிதானம் வந்தடைகிறார். தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் திருவிழா கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்