என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 134070
நீங்கள் தேடியது "எஸ்.பி."
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் போலீஸ் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா எஸ்.பி. தலைமையில் நடைபெற்றது.
கீழக்கரை::
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் 1982ம் ஆண்டு கட்டப்பட்டது. கட்டிடத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ஓராண்டாக அருகே உள்ள இன்ஸ்பெக்டர் குடியிருப்பு அறையில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வந்தது.
இதையடுத்து புதிய கட்டிடம் கட்டக்கோரி பொது நல அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதன் எதிரொலியாக 1 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
இதற்கான பூமி பூஜையை போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தொடங்கி வைத்தார். கீழக்கரை டி.எஸ்.பி., முருகேசன் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.
கீழக்கரையை சேர்ந்த மக்கள் நலபாதுகாப்புக்கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம், மக்கள் டீம் அமைப்பு நிறுவனர் காதர் ஆகியோர் கூறுகையில், சேதமடைந்த கட்டிடத்தின் நிலை குறித்து உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டது.
இதையடுத்து இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் தொடங்க உள்ளது. நடவடிக்கை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம் என்றார். #tamilnews

சீர்காழி நகரில் சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்கவும் குற்றங்களை தடுக்கவும் 38 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க உள்ளதாக எஸ்.பி. கூறியுள்ளார்.
சீர்காழி:
சீர்காழி காவல் நிலையத்தில் நாகப்பட்டிணம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சஞ்சய்சேகர் அலுவல் ஆய்வு பணி மேற்கொண்டார்.அப்போது காவல்நிலையத்தில் உள்ள பதிவேடுகள், குற்றபதிவேடுகள், ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வுசெய்தார். வழக்கு விவரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நிருபர்களிடம் எஸ்.பி. தேஷ்முக்சஞ்சய் கூறுகையில், சீர்காழியில் போக்குவரத்தை சீரமைக்கும் வகையிலும், குற்ற நடவடிக்கைகளை தடுத்திடும் வகையிலும், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்கவும் 38 இடங்களில் உயர் அதி நவீன கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படவுள்ளது. அதன் கன்ட்ரோல்யூனிட் மற்றும் கண்காணிப்பு மானிட்டர்கள் என அனைத்து கணினி சேவைகளும் மகளிர் காவல்நிலையத்தில் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படவுள்ளது.
தேர்வு பெற்ற காவலர்களுக்கு பயிற்சி காலம் முடிந்தவுடன் உயர் காவல் அதிகாரிகளின் உத்தரவின்படி போதிய காவலர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். போக்குவரத்து நெருக்கடியை சீரமைக்கும் வகையில் சைரன் வைத்த இருசக்கரவாகனத்தில் ரோந்து போலீசார் நகர் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுப்படுத்தப்படுகின்றனர் என்றார். ஆய்வின்போது டி.எஸ்.பி சேகர், இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு ஆகியோர் உடனிருந்தனர்.#tamilnews

×

X