search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோழவந்தான்"

    சோழவந்தானில் 9-ம் வகுப்பு மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழவந்தான்:

    மதுரை சோழவந்தான் அருகிலுள்ள சின்ன இரும்பாடியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் மகாலட்சுமி (வயது 14). இவர் சின்னாளப்பட்டியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மகாலட்சுமி பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவர் மிகுந்த சோர்வுடன் இருந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் மகாலட்சுமி சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகாலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக மகாலட்சுமியின் சகோதரர் விஜயகுமார் சோழவந்தான் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அய்யாரு வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.

    மற்றொரு சம்பவம்...

    மதுரை திருப்பரங்குன்றம் அருகிலுள்ள தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (24) லாரி கிளீனராக வேலை பார்த்தார்.

    இந்த நிலையில் ஜெயகுமார் நேற்றிரவு குடிபோதையில் வீட்டு மாடிக்கு தூங்க சென்றார். நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்காக ஏணி மூலம் கீழே இறங்கினார்.

    அப்போது ஜெயகுமார் துரதிருஷ்டவசமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே ஜெயகுமார் பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக ஜெயகுமாரின் தாய் ஜெயசீலி ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கருத்தபாண்டி வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சோழவந்தான் கடைகளில் 3வது நாளாக சுகாதார மேற்பார்வையாளர்கள் நடத்திய சோதனையில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    சோழவந்தான்:

    தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன் பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சோழவந்தான் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் மாற்றுப்பொருள் வைக்கப்பட்டு இதில் மண்பானை, இலையால் தயாரிக்கப்பட்ட மற்றும் சாக்குப்பை, துணிப்பை அன்றாடும் பொதுமக்கள் பொருட்கள் பயன்படுத்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தடை செய்யப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் தவிர்க்கவும் இதற்கு மாறாக 12 வகை பொருட்களும் அதற்கான விளக்கங்களும், அடங்கிய ஸ்டிக்கர் மற்றும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மாற்றுப் பொருட்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    ஓட்டல், டீக்கடை, பூ கடை, கறிக்கடைகளில் இலைகளில் மடித்து கொடுத்து வருகின்றனர். பலசரக்கு கடையில் ஸ்வீட் கடை காகிதப் பைகளிலும் ஜவுளிக்கடையில் துணிப்பையிலும் வியாபாரிகள் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    சோழவந்தானில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று 5 பேர் கொண்ட குழு மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான் பானு, சுகாதார ஆய்வாளர் கணேசன், பணியாளர்கள் முத்துக்குமார், சிவகுமார், சுகாதார மேற்பார்வையாளர்கள் வாசிமலை, பசுபதி, உதவியாளர்கள் சதீஷ், புவலிங்கம் மற்றும் தூய்மை பாரத இயக்கத்தை சேர்ந்தவர்களும் இங்கு உள்ள கடைகளில் மூன்றாவது நாளாக சோதனை செய்தனர். இதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்களிடம் துணிப்பையை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கோவிலுக்கு சென்ற புதுப்பெண்ணை கடத்தியதாக 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள சித்தாலங்குடி ஆனைக்குளத்தை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி அழகுகனகவள்ளி (வயது 20). இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி அழகு கனகவள்ளி சாமி கும்பிட கோவிலுக்கு சென்றார். அப்போது திருப்பூரைச் சேர்ந்த மணி, அவரது நண்பர் குமார் ஆகியோர் அழகு கனகவள்ளியை திருமணம் செய்யும் நோக்கத்தில் கடத்தி சென்று விட்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து சோழவந்தான் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி, குமார் ஆகியேரை தேடி வருகிறார்கள்.

    சோழவந்தான் அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழவந்தான்:

    சோழவந்தானை அடுத்த கரட்டுப்பட்டி அருகேயுள்ள பொம்மன்பட்டியைச் சேர்ந்தவர் பாக்கியம். இவரது மகன் சின்னு என்ற சின்னத்தம்பி (வயது 27). பொம்மன்பட்டி அருகே மட்டப்பாறையில் உள்ள கோவில் திருவிழாவுக்கு சின்னத்தம்பி நேற்று இரவு சென்றார். இன்று காலை அவர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் அவர் கரட்டுப்பட்டி பெரியார் பாசன கால்வாய் பாலத்தின் கீழ் முகத்தில் காயத்துடன் இறந்து கிடப்பது தெரியவந்தது.

    அவரது இடுப்பில் 2 செருப்புகள் செருகப்பட்டிருந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சோழவந்தான் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சின்னத்தம்பியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சின்னத்தம்பியின் முகத்தில் காயம் உள்ளதால் அவரை யாராவது அடித்துக் கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    பிரேத பரிசோதனையின் முடிவில் தான் சின்னத்தம்பி எப்படி இறந்தார்? என்று தெரியவரும். #tamilnews
    ×