search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபோதை"

    கெலமங்கலம் அருகே ஓசூர் தனியார் நிறுவன தொழிலாளி கொலையில் கைதான நண்பரிடம் போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள தொட்டபேளூர் கிராமத்தை சேர்ந்தவர் பத்தப்பா. இவருடைய மகன் லோகேஷ் (வயது 28). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பூதட்டியப்பா என்பவரது மகன் குன்னய்யா (22). இவரும், லோகேசும் நண்பர்கள் ஆவார்கள். மேலும் இருவரும் சேர்ந்து ஒன்றாக மது குடிப்பது வழக்கம். குன்னய்யா தனது பாதுகாப்புக்காக எப்போதும் கத்தி வைத்திருப்பார்.

    நேற்று முன்தினம் இரவு லோகேசும், குன்னய்யாவும் மதுக்கடை ஒன்றில் மது வாங்கி விட்டு சின்னட்டி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் அமர்ந்து மது குடித்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது தகராறு முற்றியதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த குன்னய்யா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லோகேசின் கழுத்தில் குத்தினார். மேலும் கத்தியால் அவரது கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் லோகேஷ் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் லோகேஷ் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது தொடர்பாக கெலமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்ரி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வராகவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் லோகேசின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குன்னய்யாவை கைது செய்தனர். அவரிடம் விடிய, விடிய விசாரணை நடந்தது. இன்று மாலை அவர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

    கைதான குன்னய்யா மீது தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் ஆகிய போலீஸ் நிலையங்களில் இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் உள்ளன. கைதான குன்னய்யா போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொன்றதாக கூறி உள்ளார்.
    லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் போதையில் விமான ஊழியர்களிடம் தகராறு செய்து ரவுடித்தனம் செய்த பெண் கைது செய்யப்பட்டார். #AirIndia
    மும்பை:

    மும்பையில் இருந்து கடந்த 10ம் தேதி சென்ற ஏர் இந்தியா சர்வதேச விமானத்தில் மதுபோதையில் இருந்த பெண் ஒருவர், அதிக மது கொடுக்காததால் விமான ஊழியர்களிடம் தகராறில்  ஈடுபட்டு உள்ளார். நான் ஒரு சர்வதேச வக்கீல், நீங்கள் பணம் பறிப்பவர்கள் என கூறி  தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

    மேலும் விமான பைலட் மீது எச்சில் துப்பி உள்ளார். அங்கிருந்தவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார். மும்பையில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த விமானம் லண்டன் சென்றடைந்ததும் அந்த பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.


    ரவுடி போல் நடந்துகொண்ட அந்த பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

    மற்றொரு வீடியோவில், பாலஸ்தீன மக்களுக்கு உதவிய ஒரு சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞர் என்று அந்த பெண்  கத்துகிறார். #AirIndia
    சோளிங்கர் அருகே மதுபோதை தகராறில் கிணற்றில் தள்ளி வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

    சோளிங்கர்:

    சோளிங்கர் அருகே உள்ள வெளிதாங்கிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 33), தொழிலாளி. சோளிங்கர் கிழக்கு பஜார் வீதியில் உள்ள நாரைகுளம் பகுதியை சேர்ந்த தினகரன் (28). இவர்கள் இருவரும் பாண்டியநெல்லூர் சுடுகாடு அருகே உள்ள மதுபானகடையில் தனித்தனியே மதுகுடித்துள்ளனர்.

    பின்னர் அங்கிருந்து வெளியே வந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது சாலையோரத்தில் இருந்த கிணற்றில் இருவரும் விழுந்தனர்.

    உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் கிணற்றில் குதித்து அவர்களை மேலே தூக்கி வந்தனர். அப்போது சாந்தகுமார் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சாந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினகரனை கைது செய்தனர்.

    பெங்களூரில் மதுபோதையில் கல்லூரி மாடியிலிருந்து குதித்து மாணவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஓசூர்:

    பெங்களூரு யஷ்வந்த்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் சையத் சோயப் (18) மற்றும் அவரது நண்பர் ஹரீஷ்(18).

    இவர்கள் இருவரும், பெங்களூரு ஜலஹள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அவர்கள் இருவரும், மது அருந்திவிட்டு வகுப்புக்கு சென்றதாக தெரிகிறது. அவர்கள் மது அருந்தியிருப்பதை உறுதி செய்து, சக மாணவர்கள் இது குறித்து வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து இந்த தகவல், கல்லூரி முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக, மதுபோதையில் இருந்த 2 மாணவர்களையும் வரவழைத்து. அனைவரது முன்னிலையில், புத்திமதி கூறி கடும் எச்சரிக்கை விடுத்தார். பின்னர், முதல்வர் அறையை விட்டு வெளியே வந்த அவர்கள் இருவரையும், சக மாணவர்கள் திட்டி, புத்திமதி கூறினார்கள்.

    இச்சம்பவங்களால், அவமானமும், வேதனையும் அடைந்த சோயப் மற்றும் ஹரீஷ் அன்று மாலை திடீரென கல்லூரியின் 2-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி ஊழியர்கள் உடனடியாக அவர்களை மீட்டு அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பின்னர், அவர்கள் இருவரும் உயிர் பிழைத்தனர்.

    இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து ஜலஹள்ளி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    ராயப்பேட்டையில் மது போதையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
    சென்னை:

    ராயப்பேட்டை சைவ முத்தையா 4-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய நண்பர் தினேஷ். பெயிண்டர். நேற்று இரவு நண்பர்கள் இருவரும் வீட்டின் 2-வது மாடியில் இருந்து மது அருந்தினார்கள் 11.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டார்கள்.

    அப்போது மது போதையில் தள்ளாடிய தினேஷ் அங்கிருந்து தவறி விழுந்தார். இதில் அருகில் உள்ள வீட்டின் ஓட்டு கூரை உடைந்து வீட்டுக்குள் விழுந்துவிட்டார்.

    அந்த வீட்டுக்குள் நடேஷ் பாபு என்பவரின் மனைவி ஜெயந்தி (25), அவருடைய மகன் சாரதி (1) ஆகியோர் தூங்கிக்கொண்டு இருந்தனர். அவர்கள் மீது தினேஷ் விழுந்தார். இதில் தாய், மகன் இருவரும் காயம் அடைந்தனர்.

    சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த தினேஷ், காயம் அடைந்த ஜெயந்தி, சிறுவன் சாரதி ஆகியோர் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இதில், 2-வது மாடியில் இருந்து விழுந்த பெயிண்டர் தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இவர் விழுந்ததால் காயம் அடைந்த தாய், மகன் இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×