என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 134499
நீங்கள் தேடியது "ஜாமின்"
கொடநாடு வீடியோ விவகாரத்தில் சயான், மனோஜ் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. #KodanadEstate #KodanadVideo
சென்னை:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சயான், மனோஜ், வாழையார் ரவி உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கோத்தகிரி போலீசார் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு, கொடநாடு விவகாரத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது. கொடநாடு வழக்கின் குற்றவாளியான சயான், மனோஜ், வாழையார் ரவி ஆகியோர் கூட்டாக டெல்லியில் பேட்டி அளித்தனர். அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர்.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக மேத்யூஸ் சாமுவேல், சயான், மனோஜ், வாழையார் ரவி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. துணை கமிஷனர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி சென்று சயான், மனோஜ் இருவரையும் கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர்.
விசாரணைக்குப் பின்னர், இருவரும் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி சரிதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவரையும் விடுவிக்க நீதிபதி சரிதா உத்தரவிட்டார். 18-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டார்.
அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சயான், மனோஜ் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டபடி, பிணைத் தொகை செலுத்தவில்லை. எனவே, இன்று மாலைக்குள் பிணைத் தொகையை செலுத்தும்படி உத்தரவிடப்பட்டது. #KodanadEstate #KodanadVideo
இலங்கையில் துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் மந்திரி அர்ஜூனா ரணதுங்கா ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். #SrilankaShooting #ArjunaRanatunga
கொழும்பு:
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் தீவிர ஆதரவாளரும், இலங்கை பெட்ரோலிய வனத்துறை முன்னாள் மந்திரியுமான அர்ஜூனா ரணதுங்க நேற்று மாலை தனது அலுவலகத்துக்கு பாதுகாவலர்களுடன் சென்றார். அங்கு சில கோப்புகளை எடுத்துச் செல்ல முயன்றார். ஆனால் அங்கிருந்த சில ஊழியர்கள் அர்ஜூனா ரணதுங்கவை சிறைப்பிடிக்க முயற்சித்தாக கூறப்படுகிறது.
அப்போது இரு தரப்பினருக்கு இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசம் அடைந்த மந்திரியின் பாதுகாவலர்கள் ஊழியர்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயமடைந்த ஊழியர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஊழியர் ஒருவர் பலியானது தொடர்பாக பெட்ரோலிய துறை முன்னாள் மந்திரி அர்ஜூனா ரணதுங்கவை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் மந்திரி அர்ஜூனா ரணதுங்கா ரூ.5 லட்சம் ஜாமினில் கொழும்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. #SrilankaShooting #ArjunaRanatunga

வேலூரில் கொலை வழக்கில் ஜாமினில் வந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்:
வேலூர் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டீஸ்வரன் என்பவர் கொலை செய்யபட்டார். இந்த வழக்கில் ஓல்டுடவுனை சேர்ந்த சாய்சரத் (24) என்பவர் உள்பட 4 பேர் கைது செய்யபட்டனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட சாய்சரத் ஜாமினில் வெளியே வந்தார். அவர் சரியாக வேலைக்கு போகாமல் வீட்டில் பணம் கேட்டுள்ளார்.
இதனால் வீட்டில் தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த சாய்சரத் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் தெற்கு போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
போலி வங்கி கணக்குகள் தொடங்கிய ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை கைது செய்யும் உத்தரவுக்கு எதிராக இஸ்லாமாபாத் ஐகோர்ட் பாதுகாப்பு ஜாமின் அளித்துள்ளது. #Zardariarrestwarrant
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவரும் அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி ஃபர்யால் தல்புர், பாகிஸ்தான் பங்குச்சந்தை முன்னாள் தலைவர் ஹுசைன் லவாய் உள்பட மொத்தம் 19 பேர் வங்கிகளில் பினாமி பெயரில் 29 கணக்குகளை தொடங்கி, அவற்றின் மூலமாக சுமார் 3500 கோடி ரூபாய் பணத்தை கள்ளத்தனமாக இடம்மாற்றியதாக கடந்த 2015-ம் ஆண்டு அந்நாட்டின் மத்திய புலனாய்வுதுறை கண்டுபிடித்தது.
இதன் அடிப்படையில், இவர்கள் மீது வங்கியியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் தலைமறைவாக இருந்து வருவதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிபர் ஆசிப் அலி சர்தாரியை கைது செய்து வரும் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி ஆஜர்படுத்துமாறு கோர்ட் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராகவும் முன் ஜாமின் கோரியும் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஆசிப் அலி சர்தாரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவரை கைது செய்ய முடியாதவாறு பாதுகாப்பு ஜாமின் வழங்கி நீதிபதி மியான்குல் ஹசன் அவுரங்கசிப் நேற்று உத்தரவிட்டார். #IslamabadHighCourt #Zardariarrestwarrant #Fakeaccountscase
17 வயது மாணவனை தனது பாலியல் தேவைக்கு பயன்படுத்திய 26 வயது பெண்ணை ஜாமினில் விடுதலை செய்ய சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் தன்னிடம் படித்துவந்த 17 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்துவந்ததாக ஷ்ருஸ்ட்டி அசோக் காம்பிளே(26) என்ற பெண்ணை கைது செய்த போலீசார் சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு (POCSO) சிறையில் அடைத்துள்ளனர்.
சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஒருவரை ஊடுருவி பாலியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்துபவர் என்று ஆண்பாலில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெண்ணுக்கு பொருந்தாது. எனவே என்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் ஷ்ருஸ்ட்டி அசோக் காம்பிளே மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு சிறப்பு நீதிபதி பராலியா முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. அவருக்கு ஜாமின் அளிக்க மறுத்த நீதிபதி சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
‘போக்ஸோ’ சிறப்பு சட்டத்தில் அவன் என்றோ அவள் என்றோ குறிப்பிடப்படவில்லை. பாலியல் ரீதியாக அத்துமீறும் ‘நபர்’ என்று மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
நபர் என்னும் சொல் ஆண்களை மட்டுமே குறிக்கும் சொல் அல்ல. இந்த சட்டம் பாலியல் ரீதியாக அத்துமீறும் அனைத்து பாலினத்தவர்களுக்கும் பொதுவானது. இந்த சட்டமானது குற்றம்செய்யும் ஆண், பெண் இருபாலர்களுக்குமே பொருந்தும்.
இந்த வழக்கை பொருத்தவரை பாதிக்கப்பட்ட மாணவனின் ஆசிரியையாக - அதிகாரம் செலுத்தக்கூடிய இடத்தில் இருந்த குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர், தனது தகுதியை பயன்படுத்தி, துஷ்பிரயோகமாக அந்த சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். எனவே அவரை ஜாமினில் விடுதலை செய்ய முடியாது.
இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டுள்ளார். #Courtrejectsbailplea #womanarrestedunderPOCSO

வங்காளதேசம் நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு கொலை வழக்கில் அளிக்கப்பட்ட ஜாமினுக்கு எதிரான தடையை மீண்டும் சுப்ரீம் கோர்ட் உறுதிப்படுத்தியுள்ளது.
டாக்கா:
வங்காளதேசம் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த போராட்டத்தின்போது பேருந்து மீது வெடிகுண்டுகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவும் குற்றவாளியாக இணைக்கப்பட்டார்.
ஏற்கனவே ஊழல் வழக்கில் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கலிதா ஜியாவுக்கு இந்த கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஜாமின் அளித்தது. இந்த ஜாமினுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், முன்னர் ஜாமினுக்கு விதித்திருந்த தடையை உறுதிப்படுத்தி இன்று உத்தரவிட்டுள்ளது.
தேவைப்பட்டால், ஐகோர்ட்டை அணுகி கலிதா ஜியா நிவாரணம் காணலாம். கலிதாவுக்கு ஜாமின் வழங்குவது தொடர்பாக ஐகோர்ட் இன்னும் நான்கு வாரங்களுக்குள் தீர்மானிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியுள்ளது. #KhaledaZia #BanglaSC

மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனுவை 3-வது முறையாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #Nirmaladevi
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் அந்த கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை தவறான முறையில் வழிநடத்த முயன்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்மலாதேவியை கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள்.
நிர்மலாதேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் சாத்தூர், விருதுநகர் நீதி மன்றங்களில் நிர்மலாதேவி ஆஜர்படுத்தப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு விருதுநகர் கோர்ட்டில் நிர்மலா தேவி ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த 18-ந் தேதி அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஜாமின் கேட்டு மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். அப்போதும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி 3-வது முறையாக ஜாமின் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி சிங்கராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நிர்மலா தேவிக்கு ஜாமீன் கொடுப்பதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நிர்மலாதேவியின் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரது ஜாமின் மனுவும் இதே கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
அவர்களது ஜாமின் மனுக்கள் குறித்தான விசாரணையை வருகிற 1-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #Nirmaladevi

×

X