search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பலி"

    • கிறிஸ்தவர்கள் மறுமலர்ச்சி ஆண்டாக கொண்டாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
    • ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

    பூதலூர்:

    பூண்டி மாதா பேரா லயத்தில் கும்பகோணம் கிறிஸ்தவ மறை மாவட்டத்தின் 125 -வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு திருப்பலி நிறை வேற்றப்பட்டது.

    கும்பகோணம் மறை மாவட்ட கிராமங்களில் இருந்து அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றி அனைவருக்கும் ஆசி வழங்கினார்.

    திருப்பலியில் மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி, பேராலய அதிபர் சாம்சன், மறைவட்ட முதன்மை குரு இன்னசென்ட், பூண்டி மாதா பேராலய துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர் மற்றும் கும்பகோணம் மறை மாவட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

    கும்பகோண மறை மாவட்ட 125-வது ஆண்டு முழுவதும் கிறிஸ்தவர்கள் மறுமலர்ச்சி ஆண்டாக கொண்டாடப்பட உள்ளதாக தெரி விக்கப்பட்டது.

    பூண்டி மாதா பேராலயத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

    மயிலாடுதுறையில் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. நேற்று 9-வது நாளில் நவநாள் திருப்பலி, பங்குதந்தைமரிய ஜோசப் ஜெரால்டு முன்னிலையில் தஞ்சை ஆயர் இல்ல மறைமாவட்ட முதன்மை குரு ஞானபிரகாசம் கூட்டு திருப்பலி கூட்டு பாடல் திருப்பலியும், அறந்தாங்கி பங்குதந்தை பிரிட்டோ திவ்விய நற்கருணை ஆராதனையும் நடத்தினர். 

    மிக்கேல் சம்மனசு, ஆரோக்கிய நாதர், செபஸ்தியார், மாதா, புனிதவனத்து அந்தோணியார் மற்றும் புனித பதுவை அந்தோணியார் உள்ளிட்ட சொரூபங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளில் தேர்பவனி நடைபெற்று மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருத்தல பங்குதந்தை மரியஜோசப் ஜெரால்டு தலைமையில் பங்கு மன்றம், திருவிழா ஒருங்கிணைப்பு குழு, பங்கு மக்கள், இயேசுவின் கரங்கள் இயக்கத்தினர், திரு இருதய சகோதரர்கள், தூய இருதய மரிய அன்னை அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.
    ×