என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 135158"
- ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
- 6 மாநிலங்களில் 33 இடங்களில் இந்த அதிரடி சோதனையை சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தினார்கள்.
ஜம்மு காஷ்மீரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வு கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி நடந்தது. ஜம்மு காஷ்மீர் சர்வீசஸ் தேர்வு வாரியம் (ஜே.கே.எஸ்.எஸ்.பி.) இந்த சப்- இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வை நடத்தியது. ஜூன் 4-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் விசாரணை குழுவை நியமித்தது. இந்த விசாரணையில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 33 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஆகஸ்டு 5-ந் தேதி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரில் சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. இன்று 33 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.
ஜம்மு காஷ்மீர் முழுவதும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அரியானாவில் கர்ணால், மகேந்தர்கர், ரேவாரி ஆகிய பகுதிகளிலும், குஜராத்தில் காந்தி நகரிலும், உத்தர பிரதேசத்தில் காசியா பாத்திலும், கர்நாடகாவில் பெங்களூரிலும், டெல்லி யிலும் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
6 மாநிலங்களில் 33 இடங்களில் இந்த அதிரடி சோதனையை சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தினார்கள்.
ஜம்மு காஷ்மீர் சர்வீசஸ் தேர்வு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஜஹாங்கீர், ஜே.கே.எஸ்.எஸ்.பி.யின் தேர்வு கட்டுப்பாட்டாளர் அசோக்குமார் ஆகியோர் வீடுகளிலும் சி.பி.ஐ. சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. நடத்தும் 2-வது கட்ட சோதனை இதுவாகும்.
இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஜம்மு, ரஜோரி, சம்பா மாவட்டங்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர்களின் சதவீதம் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக இருந்தது. வினாத்தாள்களை பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு அவுட் சோர்சிங் செய்வதில் விதிகள் மீறப்பட்டு உள்ளன. ஜே.கே.எஸ்.எஸ்.பி. அதிகாரிகள், பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரிகள், பயனாளிகள் மற்றும் சிலர் இந்த முறைகேடு சதியில் ஈடுபட்டு உள்ளனர்.
இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.
- சிசோடியா வீடு உள்பட 31 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 9-ந் தேதி சோதனை நடத்தினார்கள்.
- டெல்லி கலால் துறை அதிகாரிகள் 11 பேரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கெஜ்ரிவால் மந்திரி சபையில் மணீஷ் சிசோடியா துணை முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அவர் கல்வி, ஆயத் தீர்வை உள்ளிட்ட இலாக்காக்களை கவனித்து வருகிறார்.
கடந்த ஆண்டு டெல்லியில் கொண்டுவரப்பட்ட கலால்வரி கொள்கைப்படி மதுபானம் உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக மணீஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கமானவர்களுக்கு மதுபான நிறுவனங்கள் ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை வழங்கியதாகவும் சி.பி.ஐ. குற்றம்சாட்டியது.
இந்த முறைகேடு தொடர்பாக சிசோடியா வீடு உள்பட 31 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 9-ந் தேதி சோதனை நடத்தினார்கள்.
இந்தநிலையில் மதுபான உரிமம் முறைகேடு தொடர்பாக டெல்லி கலால் துறை அதிகாரிகள் 11 பேரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.
கலால் வரி கமிஷனர் அர்வா கோபி கிருஷ்ணா, துணை கமிஷனர் ஆனந்த் திவாரி உதவி கமிஷனர் பங்கஜ் பட்னார்கர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்படுகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த வாரம் துணை நிலை கவர்னர் சக்சேனா பரிந்துரை செய்து இருந் தார். இதன் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது.
இந்த குற்றச்சாட்டுக்கு ஆளான இன்டோ ஸ்பிரிட் நிறுவனத்தின் மேலாண் இ யக்குனர் சமீர் மகேந்து உள்பட பலரிடம் சி.பி.ஐ. ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தது.
புதுடெல்லி:
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடிக்கு 2ஜி, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு நடந்ததாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
இதை அப்போது பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துக் கொண்டு காங்கிரசுக்கு எதிராக ஊழல் புகார்களை தெரிவித்தன. இதையடுத்து மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இது 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலித்ததால் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
தற்போது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியிலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.69 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் புகார் கூறியுள்ளது.
இதுபற்றி அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி சமீபத்தில் பேசுகையில், தனது ஆட்சிக்கு எதிராக எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் கிடையாது என்றார். ஆனால் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பா.ஜனதா ஆட்சியில் தேசிய அளவில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. இதை மீறும் வகையில், மோடி அரசாங்கம் முதலில் வருபவருக்கு முதல் ஒதுக்கீடு என்ற வகையில் தனியார் நிறுவனத்துக்கு மைக் ரோவேவ் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரு.560 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் இதற்கு முன் நடைபெற்ற ஒதுக்கீட்டில் தனியார் செல்போன் நிறுவனங்கள் பயன் அடையும் வகையில் செயல்பட்டதால் பொதுமக்கள் பணம் ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலத் தொகை வசூலிப்பது 6 ஆண்டுகளாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்ததால் அரசுக்கு ரூ.23 ஆயிரத்து 821 கோடிக்கு வட்டி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கஜா புயலால் நிர்க்கதியாக்கப்பட்ட மக்களுக்கு எத்தனை எத்தனையோ உதவிடும் உள்ளங்கள் ஓடோடி வந்து உதவி புரிந்ததை, 11 நாட்கள் அப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாராண உதவிகளை வழங்கியபோது நேரில் கண்டேன்.
தொடக்கத்திலிருந்தே மேம்போக்காகவும், விளம்பரத்துக்காகவும் பழனிசாமி அரசு மறு சீரமைப்பு மற்றும் நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாக வெறும் வெற்றுப் பேட்டிகளை மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தது.
தற்போது, 27 வகையான நிவாரண பொருட்களை கொடுக்கிறோம் என்று சொன்ன அரசு, அதை வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக பத்திரிக்கை செய்தி வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
அரசு இயந்திரம் எந்த அளவிற்கு முறைகேடுகளுக்கு துணைபோயுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான், அந்நிவாரண பொருட்களை பேக்கிங் செய்யும் பணிக்கு அரசு ஊழியர்களை விடுத்து, சத்துணவு முட்டை ஊழலில் சிக்கிய, கிருஸ்டி குழுமத்திற்கு சொந்தமானது என்று சொல்லப்படும், பேக்கிங் அன்டு மூவர்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு, அப்பணி ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
இப்பணியின்போது நிவாரணப் பொருட்களை மக்களுக்கு கொடுக்காமல் பணியாளர்களே எடுத்துக்கொண்டதோடு, 42 டன் அளவு ரவை மற்றும் 20 டன் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை கள்ளத்தனமாக விற்பனை செய்துள்ளதாகவும், இன்னும் முழுமையாக நிவாரண உதவிகள் மக்களிடம் போய் சேரவில்லை எனவும் அப்பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கறையற்ற தனத்தோடும், மக்களை ஏளனமாக பார்க்கும் எண்ணம் கொண்ட ஒரு அரசு தமிழகத்தில் அமைந்திருப்பது மிகப்பெரிய துரதிர்ஷ்டவசமானது. இது விரைவில் அகற்றப்பட வேண்டும்.
மனசாட்சியும், மனித நேயமும் அற்றுப்போன ஒரு செயலை இந்த அரசாங்கம் செய்திருப்பதாக வரும் செய்திகள் யாராலும் தாங்கிக் கொள்ளமுடியாத ஒன்று, இந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்த விரிவான விசாரணையை பழனிசாமி அரசு மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவருக்கும் அரசின் நிவாரண உதவிகள் முறையாக சென்று சேருவதை பழனிசாமி அரசு உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு தினகரன் கூறி உள்ளார். #GajahStorm #EdappadiPalanisamy #TTVDinakaran
மத்திய அரசு ஏழை எளிய கிராமப்புற குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பாரதப் பிரதமர் உஷாலா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு புகையில்லா இலவச கியாஸ் இணைப்பு வழங்கி வருகிறது.
அதன்படி எஸ்.சி., எஸ்.டி.,எம்.பி.சி. பிரிவினர், மற்றும் எஸ்டேட் தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு விதிகளுக்குட்பட்டு, இலவசமாக கியாஸ் இணைப்பு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது ஆண்டிப்பட்டி அருகே பாப்பம்மாள்புரத்தில் இயங்கி வரும் தனியார் கியாஸ் ஏஜென்சி விதிமுறைகளைப் பின்பற்றாமல் அனைத்து பிரிவினருக்கும், பணத்தை பெற்றுக் கொண்டு கேஸ் இணைப்புகள் வழங்கி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் பிச்சம்பட்டி, கோத்தலூத்து, கன்னியப்ப பிள்ளைபட்டி, பொட்டவாத்து, ராஜதானி, தெப்பம்பட்டி, பாலக்கோம்பை ஆகிய பகுதிகளில் அரசு அறிவித்த விதிகளை பின்பற்றாமல் 500-க்கும் மேற்பட்ட இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது.
பிச்சம்பட்டி ஊராட்சியில் மட்டுமே 200 இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உண்மையான பயனாளிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். மேலும் அரசுக்கு 20 லட்சத்திற்கும் மேல் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் உண்மையான பயனாளிகளை கண்டறிந்து வழங்கவும், விதி மீறி வழங்கப்பட்ட இணைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். #tamilnews
சென்னை:
அண்ணாபல்கலை கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ததில் முறைகேடு நடந்த விவகாரம் பரபரப்பாகி அடங்குவதற்குள் மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த ஆண்டு நடந்த செமஸ்டர் தேர்வு வினாத்தாள் 2017-ம் ஆண்டு வினாதாளில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளும் அப்படியே கேட்கப்பட்டு இருந்ததாக புகார் எழுந்துள்ளது.
இ.சி.இ. பாடப்பிரிவில் 6-ம் பருவ தேர்வில் 100-க்கு 90 மதிப்பெண்கள் கடந்த ஆண்டு கேட்கப்பட்ட அதே கேள்விகள் அப்படியே இடம் பெற்று உள்ளன. புதிய வினாத்தாளில் 2 மார்க் கேள்விகள் மற்றும் எது சரியான விடை என்பது போன்ற கேள்விகள் வரிசை எண் கூட மாறாமல் கடந்த வருட வினாத்தாள் போன்றே கேட்கப்பட்டுள்ளது.
தனியார் கல்லூரிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு வினாத்தாள் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். வினாத்தாள் தயாரிக்கும் போது 4 மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்படும், அதில் ஒன்றை தான் தேர்வு குழுவினர் தேர்வு செய்வது வழக்கம். கடந்த வருடம் தேர்வு செய்யப்பட்ட அதே கேள்வித்தாளை எப்படி இந்த வருடம் தேர்வுக்கு பயன்படுத்தினார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தற்செயலாக நடந்ததாக கருத முடியாது. திட்டமிட்டு தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றனர்.
வினாத்தாளில் முறைகேடு நடந்திருப்பதால் மறுதேர்வு நடத்த வேண்டும் எனவும், இதனை விசாரிக்க சிறப்பு குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
அண்ணாபல்கலைக் கழகத்தில் மீண்டும் வினாத்தாள் முறைகேடு விஸ்வரூபம் எடுக்கிறது. #AnnaUniversity
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை மாநகராட்சியில் புயல் வெள்ள நீர் வடிகால் கட்டுமான பணிகளுக்காகவும் மற்றும் சாலைகள் அமைப்பதற்காகவும் கோரப்பட்ட ரூபாய் 740 கோடி மதிப்பிலான டெண்டரில், மிகப்பெரிய முறைகேட்டில் மாநகராட்சியின் முக்கிய அதிகாரிகள் கூட்டாக ஈடுபட்டிருப்பதாக அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
மழைக்காலங்களில் புயல் வெள்ள பாதிப்புகளால் மக்கள் தங்களது உடைமைகளை இழப்பதும், பல நேரங்களில் உயிர் சேதங்கள் ஏற்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
இதனை தடுக்கும் பொருட்டு, மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்வதும், நீர் நிலைகளை முறையாக பராமரிப்பதும், விரிவுபடுத்துவதும் அவசியமான ஒன்று. அவ்வாறு மக்களின் வாழ்வாதாரத்தோடு ஒன்றிய பணிகளில் முறைகேடுகள் நடைபெற அனுமதிக்கும் அரசானது, மக்களின் நலனை சிறிதும் சிந்திக்காத மக்கள் விரோத அரசு என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்.
திரும்பும் திசையெல்லாம் ஊழல் குற்றச்சாட்டு, காணும் காட்சியெல்லாம் நிர்வாக அவலம், இதுதான் பழனிசாமி ஆட்சியின் சாதனை. ஊழல் புகார் மயமான ஆட்சியில் மக்கள் நலன் புதைகுழிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது என் பதைத்தான் இச்செய்தி காட்டுகிறது.
மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் உள்ளாட்சித்துறையில் பூதாகரமாக எழுந்து வரும் தொடர் ஊழல் குற்றச்சாட்டுக்கள், அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் நடைபெறுவதைத்தான் எடுத்துரைக்கிறது. ஊழல் குற்றசாட்டுக்கு தொடர்ந்து உள்ளாகிவரும் உள்ளாட்சித்துறைக்கும், அதனை தடுக்கத் தவறும் பழனிசாமி அரசுக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அரசின் வளர்ச்சி திட்டங்களில் பங்கேற்கும் வகையில் சமூக பங்களிப்பு நிதி கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக முதல்-அமைச்சரும், செயலராக மாவட்ட கலெக்டரும் உள்ளனர்.
புதுவை முதல்-அமைச்சர் அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் இதற்காக நிதி தருவார்கள். காசோலை வழியாக பெறப் படும் இந்த நிதிக்கு உடனடியாக அத்தாட்சி ரசீது வழங்கப்படும்.
இந்த நிதியின் மூலம் கல்வித்துறையில் ஸ்மார்ட் வகுப்பறைகள், அரசு பள்ளிகளில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெங்கு பரிசோதனை கருவி வாங்குவதற்காக ரூ.13½ லட்சம் நிதியை இந்தியன் வங்கி நிர்வாகத்தினர் அளித்துள்ளனர்.
கவர்னர் மாளிகையில் இருக்கும் ஊழியர்கள் போன் மூலம் சமூக பங்களிப்பு நிதி தரும்படி கட்டாயப்படுத்துவதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளது. பல தொழிற்சாலைகளிடம் இருந்து ரூ.85 லட்சம் நிதி கட்டாயமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த பங்களிப்பு நிதியை பெற்றதற்காக எந்த அத்தாட்சி ரசீதும் தரப்படவில்லை. இந்த நிதியை எதற்காக செலவு செய்யப்போகிறார்கள்? என்ற கணக்கு விபரமும் தெரியவில்லை. இந்த நிதியை வசூலிக்க கவர்னருக்கும், கவர்னர் மாளிகைக்கும் அதிகாரம் கிடையாது.
அப்படியிருக்க எந்த அடிப்படையில் எந்த விதியின் கீழ் இந்த நிதியை வசூலித்தனர்? இதற்கு கவர்னர் மாளிகையில் விளக்கம் தருவார்கள் என நம்புகிறோம். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் செய்யவுள்ளேன்.
புதுவை கவர்னரின் செயலாளராக தேவநீதிதாஸ் பணியாற்றி வந்தார். இவர் பணி ஓய்வு பெற்றுவிட்டார். இவரை கவர்னர் சிறப்பு அதிகாரியாக நியமித்தார். இதற்காக உள்துறைக்கு கோப்பு அனுப்பினார்.
இந்த கோப்பிற்கு உள்துறை அனுமதி தரவில்லை. அனுமதி பெறாமலேயே தேவநீதி தாசை தொடர்ந்து சிறப்பு அதிகாரியாக நியமித்து கொண்டார்.
இதுதொடர்பாக கவர்னருக்கு கடிதம் எழுதினேன். ஆனால், இதுவரை எந்த பதிலையும் கவர்னர் அளிக்கவில்லை. சிறப்பு அதிகாரியாக நியமக்கப்பட்டுள்ள தேவநீதிதாஸ் செயலாளர் அறையையே பயன்படுத்திக்கொண்டு அதிகாரிகளுக்கு உத்தர விட்டு வருகிறார்.
சிறப்பு அதிகாரிக்கு கவர்னருக்கு ஆலோசனை கூறும் பொறுப்பு மட்டும் தான் உள்ளது. கவர்னர், அதிகாரிகளுடன் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கவோ, அதிகாரிகளை நேரடியாக அழைத்து பேசவோ எந்த அதிகாரமும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், தீப்பாய்ந்தான், ஜெயமூர்த்தி, டெல்லி பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் உடனிருந்தனர். #cmnarayanasamy #puducherrygovernor
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியபோது, துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் பல கோடி ரூபாய் அளவிற்கு பணம் புரண்டதாகவும் தெரிவித்தார். தான் பதவியேற்றபிறகு தகுதியின் அடிப்படையில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டதாகவும் கூறினார். ஆளுநரின் இந்த கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், கடும் விவாதப் பொருளாகவும் மாறி உள்ளது.
2018-க்கு முன் ஒரு துணைவேந்தர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்றத்தால் ஒரு துணைவேந்தர் பதவி நீக்கப்பட்டார். 2 துணைவேந்தர்களுக்கு எதிராக லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சோதனைகள் நடைபெற்றுள்ளன.
2018ல் இதுவரை 9 துணைவேந்தர்கள் முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. #VCAppointments #BanwarilalPurohit #RajBhavan
தமிழகத்தில் துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி அளவிற்கு பணம் புரண்டதாகவும் இதனால் தான் மிகுந்த மனவருத்தம் அடைந்ததாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார். ஏற்கனவே இது தொடர்பாக பல்வேறு தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில், ஆளுநரின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம், ஆளுநரின் இந்த குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்து அமைச்சர் அன்பழகன் கூறியதாவது:-
துணைவேந்தர்களை நியமிப்பது முழுக்க முழுக்க ஆளுநர் மட்டுமே. தேடுதல் குழுவை அமைப்பதுடன் அரசின் பணி முடிந்துவிடுகிறது. தேடுதல் குழு அமைக்கப்பட்டு அதன்மூலம் துணைவேந்தர் பதவிக்கு 3 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆளுநருக்கு ஒப்படைக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட 3 பேரில் ஒருவரை துணைவேந்தராக நியமிக்கிறார் ஆளுநர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பணம் கொடுத்து துணைவேந்தர்கள் பதவி பெற்றவர்கள் யார் என பெயர்களை தெரிவித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #BanwarilalPurohit #ViceChancellors #MinisterKPAnbalagan
அ.தி.மு.க. அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மத்திய, தெற்கு மாவட்டங்கள் சார்பில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அங்கையற்கண்ணி முன்னிலை வகித்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், ராதாமணி, மத்திய மாவட்ட பொருளாளர் புகழேந்தி, விழுப்புரம் மாவட்ட தளபதி நற்பணி மன்ற தலைவர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அ.தி.மு.க. அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சரவணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, மாவட்ட பொருளாளர் தனசேகரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இதில் சபாராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குழந்தை தமிழரசன், முத்துகுமார், அவைத்தலைவர் நந்த கோபாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பாவாடை குழந்தைசாமி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர்கள் வக்கீல் அருள்குமார், சிங்காரவேல் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
சென்னை ஐகோர்ட்டில், வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவில், எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தில் முறைகேடுகள் பல நடக்கின்றன. இதை என்னால் நிரூபிக்க முடியும்.
எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தை தொடர்ச்சியாக 7 நாட்கள் என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த துறையில் நிபுணர்களாக உள்ளவர்களை கொண்டு, சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுப் பெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் சோதனை செய்து, ஓட்டு எந்திரம் மூலம் தேர்தல் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிப்பேன் என்று இந்திய தலைமை தேர்தல் கமிஷனர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு கடந்த ஜூலை 10-ந்தேதி மனு அனுப்பினேன். இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, என் மனுவை பரிசீலித்து, ஓட்டு எந்திரத்தில் முறைகேடு நடப்பதை நான் நிரூபிக்கும் விதமாக 7 நாட்கள், அந்த எந்திரத்தை என்னிடம் ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வக்கீல் இல்லாமல், மன்சூர் அலிகான் நேரில் ஆஜராகி வாதிட்டார். இவரது கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர். #MansoorAlikhan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்