search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 136067"

    • ராமநாதபுரம் அருகே கல்லூரியில் படிக்க வைக்காததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    • பிளஸ்-2 படித்து விட்டு பொருளாதார சூழ்நிலை காரணமாக கல்லூரி செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மூத்த மகள் சேதுபிரியா (வயது21). இவர் பிளஸ்-2 படித்து விட்டு பொருளாதார சூழ்நிலை காரணமாக கல்லூரி செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சரவணின் 2-வது மகன் பிளஸ்-2 படித்து முடித்ததும் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்று வீட்டில் பேசி வந்துள்ளனர். தன்னை மட்டும் கல்லூரியில் சேர்க்கவில்லை. தம்பியை கல்லூரியில் சேர்க்கிறார்கள் என்று வேதனையடைந்தார்.

    இதைத்தொடர்ந்து சேதுபிரியா தனியாக இருந்தபோது எலி மருந்தை சாப்பிட்டுவிட்டு இரவு தூங்கியுள்ளார். காலையில் மூக்கில் ரத்தம் வந்துள்ளது.

    இதுபற்றி அறிந்த அவரது பெற்றோர் சேதுபிரியாவை மீட்டு மண்டபம் முகாம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்றதும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்தவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மாணவியின் தாய் மலர்விழி அளித்த புகாரின் பேரில் மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கல்லூரி மாணவியிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ளே சிவரக்கோட்டை பாண்டியன் நகரை சேர்ந்தவர் லட்சுமி கருப்பாயி(வயது 18). இவர் விருதுநகர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை இவர திருமங்கலம் மாயோன் நகரில் உள்ள சகோதரியை பார்ப்பதற்காக தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.

    அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர், லட்சுமி கருப்பாயியை பின் தொடர்ந்து வந்தார். திடீரென அந்த வாலிபர், கல்லூரி மாணவி அணிந்திருந்த ஒரு பவுன் செயினை பறித்து கொண்டு தப்பினார். இதுகுறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் லட்சுமி கருப்பாயி புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஊர்சேரி மஞ்சமலை கோவி ல்தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மகள் யாசினி (வயது 16). இவர் அலங்காநல்லூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    10-ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த நிலையில் யாசினி தற்போது படிப்பில் கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த யாசினி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திட்டக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் மேலும் 2 பேருக்கு தொடர்பு போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறது.
    • சம்பவத்தில் தொடர்புடைய மாணவி மற்றும் மாணவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ப தால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலுார் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை, அவருடன் படிக்கும் 3 சக மாணவர்கள் கூட்டுபலாத்காரம் செய்தனர். அதை வீடியோ எடுத்து சிலருக்கு அனுப்பினர்.

    இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் 4 சிறுவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் ஆவினங்குடி போலீசார் கைது செய்தனர்.

    கடந்த 6-ந் தேதி பள்ளியில் இருந்த மாணவியிடம், 2 வாலிபர்கள் மாணவியின் ஆபாச வீடியோவை காட்டி மிரட்டினர். இதனால் அந்த மாணவிக்கும், அந்த வாலிபர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனை பார்த்த பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சிலர் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள்அந்த வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.இதையடுத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வீடியோ விவகாரம் தெரிந்ததால், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பவத்தில் தொடர்புடைய 4 சிறுவர்களை கைது செய்தனர்.

    எனினும் பள்ளி வளாகத்திற்குள் வந்து மாணவியை மிரட்டிய வாலிபர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என விசாரித்து அவர்களையும் கைது செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்தால் அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    சம்பவத்தில் தொடர்புடைய மாணவி மற்றும் மாணவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ப தால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் மாணவியை மிரட்டியவாலிபர்கள் யார்?அவருக்கு வீடியோவை அனுப்பியது யார்? என்பது குறித்துபோலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    • கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் திருவிதாங்கோடு கோழிப் போர்விளையை சேர்ந்தவர் விஜயலதா (வயது 48). இவரது 17-வயதான மகள் பிளஸ்-2 முடித்துவிட்டு தக்கலையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் கம்ப்யூட்டர் பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற அவரது மகள் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து மார்த் தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை யாரேனும் கடத்திச் சென்றனரா அல்லது வேறு ஏதாவது பிரச்சினை உள்ளதா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • தாரமங்கலம் அருகிலுள்ள பள்ளி மாணவியை கடத்தி சென்றுவிட்டதாக பெற்றோர் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தனர்.
    • வாலிபர் மீது போலீசில் புகார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடியை சேர்ந்த பள்ளி மாணவியை கடந்த 2 நாட்களாக காணவில்லை. அந்த மாணவியை அதே பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் விக்னேஷ் (வயது23) என்பவர் கடத்தி சென்றுவிட்டதாக பெற்றோர் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    • சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடியை சேர்ந்த பள்ளி மாணவியை கடந்த 2 நாட்களாக காணவில்லை என பெற்றோர்கள் போலீசில் புகார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடியை சேர்ந்த பள்ளி மாணவியை கடந்த 2 நாட்களாக காணவில்லை. இதனால் பதறிபோன மாணவியின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிபார்த்தனர்.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தாரமங்கலம் போலீசில் மாணவியை அதே பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் விக்னேஷ் (வயது23) என்பவர் கடத்தி சென்றுவிட்டதாக சந்தேகத்தின் பேரில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அரசு குழந்தைகள் காப்பகத்தில் 9-ம் வகுப்பு மாணவியை திடீரென்று காணவில்லை.
    • அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்: 

    கடலூர் பெண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவி படித்து வருகிறார். இந்த மாணவி கடலூர் அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு வடலூர் சத்திய ஞான சபை பகுதியில் தனியாக இருந்து வந்ததால் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் மாணவியை மீட்டு வந்து அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்து இருந்தனர். மேலும் இங்கிருந்து தினந்தோறும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்த மாணவி திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அரசு குழந்தைகள் காப்பக இடைநிலை ஆசிரியர் ரமா கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    • சேலம் பட்டர்பிளை மேம்பாலம் அருகே இரவில் தனியாக சுற்றி திரிந்த 10-ம் வகுப்பு மாணவியை மீட்ட போலீசார் அவரை சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    • தந்தை 2 -வது திருமணம் செய்து கொண்டதால் தனது சித்தி கொடுமை படுத்துவதாகவும், இதனால் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் கூறினார்.

    சேலம்:

    சேலம் பட்டர் பிளை மேம்பாலம் அருகே நேற்றிரவு 10 மணியளவில் 15 வயது மதிக்கதக்க சிறுமி ஒருவர் தனியாக சுற்றி திரிந்தார்.

    இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அங்கு நின்ற லாரி டிரைவர்கள் கொண்டலாம்பட்டி போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியை பிடித்து விசாரித்தனர். அப்போது தனது தாய் இறந்து விட்டதாகவும், தந்தை 2 -வது திருமணம் செய்து கொண்டதால் தனது சித்தி கொடுமை படுத்துவதாகவும், இதனால் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் கூறினார்.

    இதையடுத்து மாணவியை மீட்ட ேபாலிசார் அவரை சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

    • ஆத்தூர் அருகே பட்டா, மின் வசதி கேட்டு கோர்ட்டில் மாணவி மனு கொடுத்துள்ளேன்.
    • 40 ஆண்டுகளாக ஆத்தூர் வருவாய் துறையினரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை பட்டா வழங்கவில்லை.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பைத்தூர் 1-வது வார்டில் வசித்து வருபவர் சின்னப்பன். இவரது மகள் கோமதி. இவருக்கு பழனிசாமி என்பவருடன் திருமணமானது. மதிஸ்ரீ என்ற மகள் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழனிசாமி மனைவி மற்றும் மகளை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

    இதனால் மதிஸ்ரீ பைத்தூரில் தாத்தா சின்னப்பன் வீட்டில் தாயுடன் வசித்து அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார் . இவர் தனது தாத்தாவுடன் இருந்து வந்த நிலையில் இவர்களது வீட்டுக்கு இதுவரை பட்டா இல்லாததால் சுமார் 40 ஆண்டுகளாக ஆத்தூர் வருவாய் துறையினரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை பட்டா வழங்கவில்லை.

    வீட்டிற்கு மின் இணைப்பு இணைப்பதற்காக பட்டா இருந்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் மின்சார அலுவலகத்தில் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவி மதிஸ்ரீ ஆத்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்தனிடம் தனது வக்கீல் மூலம் மனு தாக்கல் செய்தார்.

    இதுபற்றி மாணவி மதுஸ்ரீ கூறுகையில், எனது தாத்தா கட்டிய வீட்டுக்கு 40 ஆண்டுகளாக பட்டா மற்றும் மின்இணைப்பு இல்லை. இதுபற்றி மாவட்ட கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அனைவரிடமும் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கோர்ட்டு எங்கள் மனு மீது விசாரணை செய்து பட்டா வழங்கவும் மின் இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன். நீதிபதி ஆனந்த் இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார் என்றார்.

    • நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே வயிற்று வலியால் மாணவி திடீர் பலியானார்.
    • இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததால் தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அக்கலாம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்.இவரது மகள் கவிப்பிரியா (வயது 25). இவர் எம்.எஸ்.சி படித்து‌ விட்டு கடந்த 3 வருடங்களாக வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததால் தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயிற்றுவலிக்காக மாத்திரை சாப்பிட்டுள்ளார். ஆனால் கவிப்பிரியாவிற்கு அதிகமாக வயிற்றுவலி வந்துள்ளது.இது குறித்து அவர் அவரது தந்தைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக‌ வீட்டிற்கு வந்த அவரது தந்தை கிருஷ்ணன் கவிப்பிரியாவை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கவிப்பிரியா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோட்டில் கல்லூரி மாணவி தனது தோழியை பார்த்து வருவதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடு பார்த்தும் கிடைக்கவில்லை.
    • இதனையடுத்து மாணவியின் தாய் லலிதா வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் அசோகபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ரஞ்சிதா (19).

    இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்த ரஞ்சிதா மதியம் தனது தோழியை பார்த்து வருவதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    பின்னர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடு பார்த்தும் கிடைக்கவில்லை. இதனையடுத்து மாணவியின் தாய் லலிதா வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

    ×