search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 136067"

    • சாதனை புரிந்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
    • அண்ணா பல்கலைக்கழக சிறந்த நாட்டு நலப்பணி திட்ட விருதை பெற்றார்.

    கும்பகோணம்:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் நாட்டு நலப்பணி திட்டத்தில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா பல்கலைக்கழக விவேகா னந்தா கலையரங்கத்தில் நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சாதனை புரிந்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

    இதில் கும்பகோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி மாணவி ராஜஸ்ரீ அண்ணா பல்கலைக்கழக சிறந்த நாட்டு நலப்பணி திட்ட விருதை பெற்றார்.

    அப்போது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், பதிவாளர் ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    அரசு என்ஜினீயரிங் கல்லூரி தலைவர் செந்தில்குமார், ஆலோசகர் பேராசிரியர் கோதண்டபாணி, முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் கலைமணி சண்முகம், கல்விப்புல தலைவர் ருக்மாங்கதன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஆனந்த குமார் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் மாணவியை பாராட்டினர்.

    • போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் தேடுகிறார்கள்
    • மாணவிகளிடம் நெருக்கமாக இருந்துவிட்டு பின்னர் அவர்களை கழற்றி விடுவதையும் வாடிக்கை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ,பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ் (வயது 24), கட்டிட தொழிலாளி.

    பள்ளி மாணவிகளிடம் நட்பாக பேசி பழகி காதல் வலை வீசுவதும், தன்னை காதலிக்கும் மாணவிகளிடம் நெருக்கமாக இருந்துவிட்டு பின்னர் அவர்களை கழற்றி விடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு மாணவியை காதலிப்பது போல் நடித்து நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு பலாத்காரம் செய்ததை சொல்லியே மிரட்டி தன் நண்பர்கள் 2 பேருக்கு அந்த மாணவியை விருந்தாக்கி இருக்கிறார். அப்போது அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விக்னேஷ் உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    மேலும் விக்னேஷ் மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் அடி, தடி வழக்கு, கஞ்சா வழக்கு, கருங்கல் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்பட 4 வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் விக்னேஷ் வழக்கம் போல ஆசாரிபள்ளத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    அதன்பிறகுதான் விக்னேஷ் பற்றி தெரிந்து கொண்ட மாணவி தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறி கதறினார். உடனே மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.அதன்பேரில் விக்னேஷ் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். தற்போது அவர் மீது 2-வது முறையாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. 2 முறை போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டும் போலீசாரிடம் சிக்காமல் விக்னேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். எனவே அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    • கல்லூரி மாணவி மாயமானார்.
    • போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளி க்குடி போலீஸ் சரக்கத்தி ற்குட்பட்ட டி.வலை யங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது 17 வயது மகள் விருது நகரில் உள்ள தனி யார் கல்லூ ரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்ப வி ல்லை. பல இட ங்களில் தே டிப் பார்த்தும், விசாரித்தும் கண்டு பிடிக்க முடிய வில்லை. இதை தொடர்ந்து மகளை கண்டு பிடித்து தரு மாறு தாய் கருப்பாயி கள்ளிக்குடி போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மா ணவியை தேடி வருகின்றனர்.

    • பிளஸ்-2 மாணவி-வாலிபர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
    • பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கருப்பாயி. இவர்களது இளைய மகள் அன்னலட்சுமி. பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்தார். தேர்வு சரியாக எழுதவில்லை என வீட்டில் இருந்தவர்களிடம் கூறி வருத்தப்பட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த டி.கல்லுப்பட்டி போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை பாலமேடு, வ.உ.சி தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 29). இவருக்கு நீண்ட காலமாக தீராத வயிற்று வலி தொல்லை இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் நோய் குணம் ஆகவில்லை. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த முத்துக்குமார், சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பைங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிகா என்ற மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • ஆசிரியர்களை பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அருகே பைங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிகா என்ற மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

    வெற்றிபெற்ற மாணவியையும், பயிற்றுவித்த தலைமை யாசிரியர் மற்றும் ஆசிரியர்களை பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.

    • இன்று காலை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளை கடத்தி சென்று விட்டதாக கண்ணீர் மல்க மனு கொடுத்தார்
    • எனது மகள் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். 1.4.2023 அன்று சிறப்பு வகுப்பிற்கு எனது மாமா பழனிசாமியுடன் சென்றார்.

    ேசலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கொத்தாம்பாடி பாரதியார் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி சித்ரா (வயது 38). இந்த தம்பதியின் 16 வயது மகள் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் சித்ரா, இன்று காலை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளை கடத்தி சென்று விட்டதாக கண்ணீர் மல்க மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறப்பட்டு இருப்பதாவது:-

    எனது மகள் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். 1.4.2023 அன்று சிறப்பு வகுப்பிற்கு எனது மாமா பழனிசாமியுடன் சென்றார். அதன் பிறகு பள்ளியின் வகுப்பாசிரியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு காலை 10.50 மணிக்கு உங்களுடைய மகளின் புத்தக பை மட்டும் வகுப்பறையில் உள்ளது. உங்களின் மகளை காணவில்லை என்று அதே பள்ளியில் படித்து வரும் என மூத்த மகளிடம் தெரிவித்தார்.

    இதை அறிந்ததும் நாங்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது உறவினர் வீட்டில் தேடி பாருங்கள் என கூறினர். இதையடுத்து உறவினர்கள் வீடுகளில் தேடினோம். ஆனால் மகள் அங்கு இல்லை.

    இந்த நிலையில் ெகாத்தாம்பாடியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் என்பவர் எனது மகளை கடத்திச் சென்றுள்ளதாக தகவல் அறிந்தோம்.

    இதையடுத்து நாங்கள் சம்பவத்தன்று இரவு ஆத்தூர் ரூரல் போலீசில் புகார் கொடுக்க சென்றோம். ஆனால் போலீசார் மறுநாள் காலையில் வருமாறு கூறினார்கள். மறுநாள் காலையில் சென்றோம். அன்று மாலை வரை காத்திருக்க வைத்து விட்டு, பின்னர் பள்ளி பெத்தநாயக்கன்பாளை யத்தில் உள்ளது, எனவே ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்துக்கு செல்லுங்கள் என போலீசார் கூறினர்.

    இதையடுத்து நான் அங்கு சென்று புகார் அளித்தேன். 3-ந்தேதி அன்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நகலை பெற்றுக்கொண்டேன். கடத்தப்பட்ட எனது மகள் பற்றி இதுவரையிலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆகவே எனது மகளை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சித்ரா அதில் கூறியிருந்தார்.

    • 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்க லம் அருகே உள்ள சாப்டூரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது40). இவரது மகள் பெத்தம் மாள்(14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று காலை வெளியே சென்றிருந்த ராஜேந்திரன் மதியம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் தனியறையில் பெத்தம்மாள் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மகளை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் பெத்தம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெத்தம்மாள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    திருமங்கலம் அருகே உள்ள வில்லூரை சேர்ந்த வர் மலைச்சாமி. இவரது மனைவி ஆறுமுகம்(47). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்திய டைந்த ஆறுமுகம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா வித்யாலயா மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
    • பயிற்சி பெற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    இளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டத்தில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி கவின் கிருஷிகா தேர்வானார். இதனால் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் ராக்கெட் தொழில்நுட்பங்கள் பார்வையிட இஸ்ரோ நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இதற்காக இளம் விஞ்ஞானி திட்டம் அமல்படுத்தியது. இது இஸ்ரோ நிதி உதவியுடன் பள்ளி மாணவர்களின் கல்விக்கான பயிற்சி திட்டம் ஆகும். இதற்கான தேர்வு ஆன்லைனில் ஸ்பேஸ் க்விஸ் என்ற தேர்வு நடத்தப்பட்டது.

    இதில் சத்யா வித்யாலயா பள்ளி மாணவி எஸ்.ஆர். கவின் கிருஷிகா தேர்வானார். இதனைத் தொடர்ந்து இஸ்ரோ நிர்வாகம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை மாணவி கவின் கிருஷிகாவுக்கு மே 14-ந் தேதி முதல் 26-ந் தேதி பார்வையிடவும், பயிற்சி பெறவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    • மாணவியின் தந்தைக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
    • மாணவியின் உறவினர்கள் பள்ளிக்கு வெளியில் சோகமாக நின்று கொண்டிருந்தனர்.

    கடலூர்:

    தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி இன்று முடிவடைந்தது.கடலூர் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இன்று கடைசி தேர்வு என்பதால் மாணவ-மாணவிகள் தீவிரமாக படித்து காலை முதல் மதியம் வரை தேர்வு எழுதி முடித்தனர். இதில் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிஜா என்ற பிளஸ் 2 மாணவி வேதியியல் பாடம் தேர்வு எழுதினார். அவரது உறவினர்கள் பள்ளிக்கு வெளியில் சோகமாக நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களிடம் விசாரித்த போது மாணவி கிரிஜாவின் தந்தை பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்த பொம்மை செய்யும் தொழிலாளி ஞானவேல் (வயது 45) திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஞானவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சிக்குரிய செய்தி தெரிந்தும், மாணவி கிரிஜா இன்று பிளஸ்-2 கடைசி தேர்வு என்பதால் நேரில் வந்து தேர்வு எழுதினார் என்ற விஷயம் தெரியவந்தது.

    தனது தந்தை இறந்தாலும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து மாணவி இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதியதை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் மாணவி கிரிஜாவுக்கு ஆறுதல் கூறி தேர்வு எழுத ஊக்கமளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • வீட்டின் மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    • எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் அக்சயா(21). இவர் கல்லூரியில் முதுகலை அறிவியல் படித்து வந்தார். அக்சயாவின் வீடு 3-வது மாடியில் உள்ளது.

    நேற்று காலை வீட்டில் இருந்தபோது 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அக்ச யாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. இது குறித்த புகாரின்பேரில் எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புற்றுநோய் பாதித்த பெண்

    நெல்பேட்டை சீனி ராவுத்தர் தோப்பை சேர்ந்தவர் பிச்சைக்கனி மனைவி மும்தாஜ் பேகம்(வயது 60). இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த மும்தாஜ் பேகம் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மூதாட்டி

    ஆத்திகுளம் பழனிச்சாமி நகர் பெருமாள் மனைவி சீனி புஷ்பம் (62). இவருக்கு நெஞ்சு வலி இருந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த சீனி புஷ்பம் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

    வாலிபர்

    விளாச்சேரி, தெற்கு முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் முகமது உசேன் (30). இவருக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே மனைவியை விவாகரத்து செய்தார். தனியாக வசித்து வந்த முகமது உசேனுக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. நேற்று மதியம் அவர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • சீரமைக்க வலியுறுத்தி பாதிரியார் தலைமையில் பொதுமக்கள் போராட்டம்
    • சாலையை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    கன்னியாகுமரி :

    ராஜாக்கமங்கலம் துறை வழியாக செல்லும் மேற்கு கடற்கரை சாலை, கடந்த சில மாதங்களாக குண்டும் குழியுமாக காணப்பட்டு வருகிறது.

    குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததால் தான் சாலை இந்த நிலையில் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் சாலையை சீரமைக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இருப்பினும் கடந்த 3 மாதங்களாக சாலை சீரமைக்கப்படாமலேயே இருந்து வருகிறது. குண்டும் குழியுமான சாலையால் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகின்றன. இது வரை இந்த சாலையில் 7 பேர் விபத்தில் சிக்கி உள்ளனர்.

    இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி மாணவிகள் சென்று வருகின்றனர். இன்று காலை நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், இந்த சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அவரது வாகனம் சாலையில் விபத்துக்குள்ளானது. இதில் மாணவி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து இன்று காலை பாதிரியார் சூசை ஆண்டனி தலைமையில் அந்தப் பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதை கருத்தில் கொண்டு, உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மறியல் குறித்த தகவல் கிடைத்ததும் ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தப் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • விக்கிரவாண்டி அருகே உள்ள இரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாண வனும், மாணவியும் காதலித்து வந்தனர்.
    • சம்பவத்தன்று மாணவனும், மாணவியும் பேசிக் கொண்டி ருந்த போது அங்கு 2 பேர் வந்துள்ளனர். அதில் ஒருவர் மாணவியின் செல்போனை பறித்து சேதப்படுத்தி உள்ளார்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள இரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாண வனும், மாணவியும் காதலித்து வந்தனர். கடந்த 25-ந் தேதி இரவு 7 மணியளவில் இருவரும் விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பிலியாம் புலியூர் ஏரிக்கரை யோரம் செங்கமேடு சாலையில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு வந்த அடையாளரம் தெரியாத வாலிபர்கள் மாணவனை கத்தியால் குத்தினார்கள். பின்னர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தததாக கூறப்பட்டது.

    இது தொடர்பாக முதலில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டது.

    ஆனாலும் குற்றவாளிகள் குறித்து இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மாணவனும, மாணவியும் நீதிபதியிடம் வாக்கு மூலம் அளிததனர். இருவரும் கூறியது உண்மையா என்பதை அறிய அவர்களிடம் உண்மை கண்ட றியும் சோதனை நடைபெற்றது.  இது குறித்து போலீசார் கூறியதாவது  சம்பவத்தன்று மாணவனும், மாணவியும் பேசிக் கொண்டி ருந்த போது அங்கு 2 பேர் வந்துள்ளனர். அதில் ஒருவர் மாணவியின் செல்போனை பறித்து சேதப்படுத்தி உள்ளார்.பின்னர் மாணவி அணிந்தி ருந்த வெள்ளி மோதிரம் மற்றும் ெகாலுசை பறித்துள்ளார். மற்றொருவர் மாணவரை கத்தியால் குத்தி உள்ளார். மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.      இதற்கிடையே மருத்துவ பரிசோதனை அறிக்கையிலும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

    இதற்கிடையே டி.என்.ஏ. மற்றும் மருத்துவ பரிசோதனை செய்து அதன் முடிவுக்காக போலீசார் காத்திருக்கிறார்கள்.

    ×