search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 136067"

    • வெற்றி பெற்று பதக்கங்களுடன் சொந்த ஊருக்கு இன்று வந்த அவரை, உறவினர்கள், பெற்றோர், நண்பர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
    • மாணவி நிஷோஜா ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று மிஸ் கன்னியாகுமரி பட்டத்தை வென்றுள்ளார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கார்மல் நகர் பகுதியை சேர்ந்தவர் நிஷோஜா. மருத்துவக் கல்லூரி மாணவியான இவர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான அழகுப் போட்டியில் கலந்து கொண்டார்.

    இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாநிலத்துக்கு ஒருவர் பங்கேற்ற இந்த போட்டியில் தென்னிந்திய அழகியாக நிஷோஜா தேர்வு செய்யப்பட்டார்.

    வெற்றி பெற்று பதக்கங்களுடன் சொந்த ஊருக்கு இன்று வந்த அவரை, உறவினர்கள், பெற்றோர், நண்பர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    மாணவி நிஷோஜா ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று மிஸ் கன்னியாகுமரி பட்டத்தை வென்றுள்ளார்.

    மேலும் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று மிஸ் தமிழ்நாடு ரன்னர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

    • போலீசார் இரு தரப்பினரையும் வரவழைத்து பேசினர்.
    • திருமணம் செய்துகொண்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறியை அடுத்த சரல்விளையைச் சேர்ந்தவர் அய்யப்பன்.இவரது மகள் அஸ்வினி (வயது 18).

    இவர் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15-ந் தேதி அஸ்வினி வழக்கம் போல் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றார். ஆனால் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை

    இதனைத் தொடர்ந்து அய்யப்பன் தனது மகளை பல இடங்களிலும் தேடி னார். இருப்பினும் எந்த தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி வழக்கு பதிவு செய்து மாயமான அஸ்வினியை தேடி வந்தார்.

    இந்த நிலையில் அஸ்வினி நேற்று ஒரு வாலிபருடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் வினு (21) என்றும் தாங்கள் கடந்த ஒரு வருடமாக காதலித்து வருவதாகவும் அஸ்வினி தெரிவித்தார்.

    மேலும் தனக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பா டுகள் செய்யப்பட்டதாக வும் அது பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி காதலன் வினுவை திருமணம் செய்து கொண்டதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

    இதனை தொடர்ந்து போலீசார், இரு தரப்பி னரையும் வரவழைத்து பேசி னர்.

    • கருங்கல் பகுதியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
    • ஆசைப்பட்ட மருத்துவ படிப்பு கிடைக்காததால் மனம் உடைந்து காணப்பட்டார்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே தேங்காய்பட்டினம் அம்சி நெசவாளர் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகள் ஷெர்லின் (வயது 17).

    இவர், கருங்கல் பகுதியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பிளஸ்-2 படிக்கும்போது மருத்துவ படிப்புக்கு ஷெர்லின் ஆசைப்பட்டதாக தெரிகிறது. ஆனால் மதிப் பெண் குறைவாக இருந்ததால் மருத்துவ படிப்பு கிடைக்க வில்லை. இதனால் மனம் உடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்ப தால் ஷெர்லின் வீட்டில் இருந்தார். மாலையில் அவரது தாயார் அந்த பகுதியில் நடந்த மகளிர் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்த போது மகளை காண வில்லை. இந்த நிலையில் படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது ஷெர்லின் தூக்கில் பிணமாக தொங்கு வது தெரிய வந்தது. இதை பார்த்து அதி்ச்சி அடைந்த தாயார் கூச்சலிட்டார்.

    பின்னர் இதுகுறித்து புதுக்கடை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங் கிய ஷெர்லின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளவரான மார்கண்டேயன் மாணவியை அழைத்துக்கொண்டு கடந்த 2021-ம் ஆண்டு தலைமறைவானார்.
    • கடந்த 7-ந்தேதி மார்க்கண்டேயன் மீண்டும் அந்த சிறுமியை கடத்திச் சென்று இருக்கிறார்.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் மார்க்கண்டே யன் (வயது 36). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தை கள் உள்ளனர்.

    இந்த நிலையில் மார்க்கண்டேயனுக்கும் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி

    10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவியை அழைத்துக்கொண்டு மார்கண்டேயன் கடந்த 2021-ம் ஆண்டு தலைமறை வானார்.

    இதுகுறித்து கன்னியா குமரி மகளிர் போலீசார் மார்க்கண்டேயன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மாணவி யையும் மீட்டனர். இதை யடுத்து மார்க்கண்டே யன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயன் ஜெயிலில் அடைக்கப்பட்டு ஜாமீனில் விடுதலையானார்.

    இது தொடர்பான வழக்கு தற்பொழுது கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் வீட்டிலிருந்த மாணவி கடந்த 7-ந்தேதி மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் கன்னியாகுமரி மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது மார்க்கண்டேயன் மீண்டும் அந்த சிறுமியை கடத்திச் சென்று இருப்பது தெரிய வந்தது.

    செல்போன் டவர் உதவி யுடன் மாணவியை மீட்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. மார்க்கண்டேயன் ஓசூர் பகுதியில் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து கன்னியா குமரி மகளிர் போலீசார் ஓசூருக்கு விரைந்து சென்ற னர். அங்கு வாடகை வீட்டில் குடும்பம் நடத்திய மார்க்கண்டேயனையும் மாணவியையும் போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட இருவ ரையும் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மீட்கப் பட்ட மாணவியிடம் விசா ரணை நடத்தப்பட்டது.

    இதை தொடர்ந்து அவரை மருத்துவ பரிசோ தனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தினர். பிடிபட்ட மார்க்கண்டேயன் மீது மீண்டும் போஸ்கோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • விமானியும், ராகுல் காந்தியும் இணைந்து ஹெலிகாப்டரின் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் கொடுத்தனர்.
    • எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது என மாணவிகள் கூறினர்.

    புதுடெல்லி:

    மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் ராகுல் காந்தி கடந்த நவ.29-ம் தேதி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது 11-ம் வகுப்பு மாணவிகள் ஷீத்தல், லகானியா, 10-ம் வகுப்பு மாணவி கிரிஜா ஆகியோர் அவரை சந்தித்தனர். மாணவிகளின் கல்வி, எதிர்கால லட்சியம் குறித்து ராகுல்காந்தி கேட்டறிந்தார். அப்போது 3 மாணவிகளும் ஹெலிகாப்டரில் பறக்க ஆசையாக இருப்பதாக ராகுல் காந்தியிடன் வெள்ளந்திதனமாக கூறினர். மாணவிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக அவர் வாக்குறுதி அளித்தார்.

    கடந்த 8-ம் தேதி ராஜஸ்தானின் கோடா பகுதியில் ராகுல்காந்தி நடைபயணத்தை தொடர்ந்தார். அப்போது ராஜஸ்தானின் பண்டி பகுதியில் இருந்து சவாய் மாதோபூருக்கு ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் பயணத்தின்போது மத்திய பிரதேசம் உஜ்ஜைனியை சேர்ந்த ஷீத்தல், லகானியா, கிரிஜா ஆகிய 3 மாணவிகளையும் ராகுல்காந்தி தன்னுடன் அழைத்துச்சென்றார்.

    விமானியும், ராகுல் காந்தியும் இணைந்து ஹெலிகாப்டரின் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் கொடுத்தனர். 3 மாணவிகளும் ராகுல்காந்தியுடன் இணைந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். சுமார் 20 நிமிட பயணத்துக்குப் பிறகு மாணவிகள் விடைபெற்றனர்.

    இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், முதல்முறையாக ஹெலிகாப்டரில் சென்றது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் ராகுல் காந்தியுடன் பயணம் செய்ததை நாங்கள் கவுரவமாக கருதுகிறோம். எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. குடும்பம், சமுதாயத்தை பார்க்காமல் எங்களுக்கு எது விருப்பமோ அந்த துறையை தேர்வு செய்து படிக்க ராகுல் காந்தி அறிவுறுத்தினார் என்று தெரிவித்தனர்.

    • கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் ராகசுவேதா பி.எஸ்.சி பயோடெக்னாலஜி படித்து வருகிறார்.
    • ராகசுவேதாவின் முழு கல்வி கட்டணத்தை வரைவோலையாக அய்யாதுரைப் பாண்டியன் வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரைக் கண்டார்குளம் தெற்கு தெருவை சேர்ந்த பண்டாரக் கண்ணு என்பவரது மகள் ராகசுவேதா. இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி பயோடெக்னாலஜி படித்து வருகிறார். குடும்ப வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    இதுகுறித்து மாணவியின் குடும்பத்தினர் ஏ.வி.கே கல்வி குழும தலைவரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான அய்யாதுரைப் பாண்டியனை சந்தித்து மாணவி ராகசுவேதாவின் கல்வியை தொடர நிதி உதவி அளித்திட கோரி இருந்தனர். அதனை ஏற்று அய்யாதுரைப் பாண்டியன் ஏ.வெங்கடேஷ்குமார் நினைவு அறக்கட்டளை சார்பில் ராகசுவேதாவின் முழு கல்வி கட்டணத்தை வரைவோலையாக அவரது தந்தை பண்டாரக் கண்ணுவிடம் வழங்கினார். அப்பொழுது அ.தி.மு.க. பிரமுகர் ஊத்துமலை இளைய ஜமீன்தார் குமரேச ராஜா, அய்யாத்துரைபாண்டியன் பேரவை தலைவர் பழனிச்சாமி, பேரவை செயற்குழு உறுப்பினர்கள் பேச்சி முத்து , பசும்பொன், சுபிக்‌ஷா கருப்பசாமி , ஏ.ஏ.ஆர் ரிசார்ட்ஸ் நிர்வாகி சிவசாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • காதலனை கொலை செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன
    • விசாரணை அதிகாரி உறுதி

    கன்னியாகுமரி:

    கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள மூறியன் கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் ஷரோன்ராஜ் (வயது 23).

    கடந்த அக்டோபர் மாதம் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக திருவனந்த புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஷரோன்ராஜ் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அக்டோபர் 25-ந் தேதி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில் தனது மகன் மெல்லக் கொல்லும் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக ஷரோன்ராஜின் தந்தை ஜெயராமன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். மகனின் காதலியான குமரி மாவட்ட இளம்பெண் வீட்டுக்குச் சென்று வந்தபிறகு தான் மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக பாற சாலை போலீசில் அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் ஈடு பட்டனர்.

    அப்போது குமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் ஷரோன்ராஜ் படித்த போது, களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளதும், அவரது வீட்டுக்கு சென்று வந்தபிறகு தான் ஷரோன்ராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. இது பற்றி விசாரித்தபோது, ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் நிச்சயமானதால், அக்டோபர் 14-ந் தேதி ஷரோன்ராஜை தனது வீட்டிற்கு வரவழைத்து கசாயத்தில் பூச்சிமருந்து கலந்து கிரீஷ்மா கொடுத்த தும் இதனால் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஷரோன்ராஜ் இறந்ததும் தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் கிரீஷ்மாவிடம் விசாரித்த போது அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    கோர்ட்டில் ஆஜர்படுத்த ப்பட்ட அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது, ஷரோன்ராஜூடன் அவர் சென்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடைபெற்ற விசார ணையில், கிரீஷ்மா, குளிர்பானத்தில் விஷம் கலந்து அடிக்கடி ஷரோன் ராஜிக்கு கொடுத்திருப்பது தெரிய வந்தது.

    இதற்கிடையில் கொலைக்கான தடயங்களை மறைத்ததாக, கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய்மாமன் நிர்மல் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் போலீசார் சீல் வைத்திருந்த கிரீஷ்மாவின் வீட்டு கதவு பூட்டை யாரோ உடைத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் வழக்கில் திடீர் திருப்பமாக, தான் ஷரோன்ராஜை கொலை செய்யவில்லை என்றும், போலீசாரின் துன்புறுத்தல் காரணமாக கசாயத்தில் விஷம் கலந்ததாக ஒப்புக் கொண்டேன் என மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கிரீஷ்மா வாக்குமூலம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    அவரது வாக்குமூலத்தால் வழக்கு விசாரணை பாதிக்க கூடும் என கூறப்படுகிறது. ஆனால் இதனை வழக்கின் விசாரணை அதிகாரி மறுத்துள்ளார். ஷரோன்ராஜை, கிரீஷ்மா ெகாலை செய்ததற்கான ஆதாரங்களை விஞ்ஞானப் பூர்வமாக சேகரித்துள்ளோம். அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே தற்போதைய வாக்குமூலம், வழக்கின் விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காது. இந்த வழக்கில் 70 நாட்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வோம். கிரீஷ்மாவை காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்ய உள்ளோம். மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அனுமதி வழங்கவில்லை என்றால், உயர்நீதிமன்றத்தை நாடுவோம் என்று அவர் கூறினார்.

    • வடசேரி காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் காமராஜர்புரத்தை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர், நாகர்கோவிலில் உள்ள மகளிர் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி, அந்த பகுதியில் டியூசன் படிக்க சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பி வர வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், டியூசனுக்கு சென்று கேட்ட போது மாணவி டியூசனுக்கு வர வில்லை என்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்து மாணவியின் தோழிகள், உறவினர்கள் வீடுகளில் விசாரித்தனர். ஆனால் மாணவி பற்றி எந்த தகவலும் இல்லை. இதையடுத்து வடசேரி காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி, கடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • களியக்காவிளை அருகே வேகமாகச் சென்ற போது சம்பவம்
    • சமூகவலைதளத்தில் வீடியோ வெளியானதால் பரபரப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் பினு. இவரது மகள் மான்யா (வயது 18).

    பாறசாலை பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரி யில் இவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் அரசு பஸ்சில் மான்யா கல்லூரிக்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று காலை யும் அவர் நெய்யாற்றின் கரையில் இருந்து கல்லூ ரிக்கு செல்வதற்காக பஸ் ஏறினார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மான்யா, பஸ்சின் கதவு பக்கமாக நின்றார்.

    பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் டிரைவர் வேகத்தை அதிகரித்து உள்ளார். ஒரு இடத்தில் எதிரே வந்த வாகனத்துக்கு வழி கொடுப்பதற்காக டிரைவர் பஸ்சை திருப்பி உள்ளார்.

    அப்போது பஸ்சின் கத வோரம் நின்ற மான்யா, நிலை தடுமாறி பஸ்சில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டார். ஆனால் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், பஸ் அதி வேகமாக சென்றதாலும் மான்யா தவறி விழுந்தது யாருக்கும் தெரியவில்லை.

    பஸ் டிரைவருக்கும் இதுபற்றி தெரியாததால் அவரும் பஸ்சை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். இதற்கிடையில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாய மடைந்த மாணவி மான்யா வை அக்கம் பக்கத்தினரும் வாகன ஓட்டிகளும் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்த னர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் மாணவி மான்யா, பஸ்சில் இருந்து தவறி விழுந்ததை சிலர் வீடியோவாக எடுத்து உள்ளனர். அந்த வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அதன் பிறகு தான் மாணவி மான்யா பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட விவகாரம் பலருக்கும் தெரியவந்தது.டிரைவரின் அஜாக்கிருதையும் அதி வேகமும் தான் சம்பவத்திற்கு காரணம் என்று பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    சம்பவம் தொடர்பாக நெய்யாற்றின்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நள்ளிரவில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த பள்ளி மாணவியை தந்தை கண்டித்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் வன்னியர்பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது பள்ளி மாணவி நேற்று இரவு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது தந்தை பள்ளி மாணவியை கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமடைந்த மாணவி வீட்டில் உள்ள அறையில் தூக்கில் ெதாங்கினார். இதனை பார்த்த அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்து பள்ளி மாணவியை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த பள்ளி மாணவியை தந்தை கண்டித்ததால் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • மாநில சிலம்ப போட்டிக்கு எஸ்.பி.கே. பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டார்.
    • தலைமை ஆசிரியை தங்கரதி மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடந்தன. இதில் அருப்புக்கோட்டையில் உள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவிகள் அக்‌ஷயபுஷ்பா, பவித்ரா சகி முதலிடமும், மாணவிகள் பிரியதர்ஷினி, துர்கா நந்தினி 2-ம் இடமும் பெற்றனர். முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெற இருக்கும் சிலம்ப போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    அவர்களையும் உடற்கல்வி ஆசிரியைகளையும் அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை தலைவர் காமராஜன், உறவின்முறை செயலாளர் முத்துசாமி, பள்ளி தலைவர் ஜெயவேல் பாண்டியன், உதவி தலைவர் அஜய், தலைமை ஆசிரியை தங்கரதி மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர். 

    • வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • கடத்தல் பிரிவில் (இந்திய தண்டனை சட்டம் 366 ஏ) வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி நாகர்கோவில் அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாமாண்டு படித்து வருகிறார்.

    கடந்த 7-ந்தேதி இவர் வழக்கம்போல் கல்லூ ரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. வீட்டினர் உறவினர் மற்றும் நண்பர் கள் வீடுகளில் தேடியும் மாணவி குறித்து தகவல் கிடைக்கவில்லை. தொடர்ந்து மாணவி குடும் பத்தினர் துப்பு துலக்கியதில், அவர் தூத்துக்குடி மேற்கு கதிர்வேல் நகரை சேர்ந்த உறவினர் அருண் (24) என்பவர் கடத்தி சென்றதாக தெரிய வந்தது.

    உடனே மாணவி குடும்பத்தினர் தூத்துக்குடி சென்று அருண் வீட்டில் கேட்டபோது, அவர்கள் மாணவி அங்கு இல்லை என கூறி மாணவியை மறைத்து வைத்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து மாணவியின் தந்தை குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் தூத்துக்குடியை சேர்ந்த அருண், அவரது தாய், தந்தை மற்றும் சகோதரர் ஆகிய 4 பேர் மீது கடத்தல் பிரிவில் (இந்திய தண்டனை சட்டம் 366 ஏ) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×