என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உயர்கல்வி"
- மாணவர்கள் வேலைவாய்ப்பிற்கு தேவையான வழிகாட்டுதல்கள் வல்லுநர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.
- பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் கல்லூரி படிப்பே அடிப்படையானது.
திருவாரூர்:
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரிக் கனவு-2023" மாவட்டக் கருத்தாளர்களுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமில் மாவட்ட கலெக்டர் தி.சாருஸ்ரீ கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
மாணவ, மாணவியர்கள் தங்கள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு தேவையான வழிகாட்டு தல்கள் துறைசார்ந்த வல்லுநர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.
இம்முயற்சியின் நோக்கம் 12ஆம் வகுப்பிற்கு பிறகு அவர்களது கல்லூரி படிப்பிற்கு உறுதுணையாக அமையும். அரசு தேர்வாணை யத்தால் நடத்தப்படும் சில தேர்வுகளுக்கும், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் கல்லூரி படிப்பே அடிப்படையானது.
கல்வி ஒன்றே மாணவர்களது வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்பதனை அவர்களுக்கு உணர்ந்த வேண்டும்.
கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து, அவர்களது பெற்றோர்களின் உழைப்பை மனதிற்கொண்டு சிறப்பாக பயின்று அவர்களின் கல்வி திறனை மேன்மேலும் உயர்த்தி கொள்ள நம் முயற்சிக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் பொறியியல், மருத்துவம், மருத்துவம் சார்ந்த துணை அறிவியல் படிப்புகள், கலை மற்றும் அறிவியல், வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல், சட்டம், கால்நடை, வேளாண்மை, மீன்வளம் ஆகிய துறைகளில் உள்ள உயர்கல்விப் படிப்புகள் சார்ந்தும் அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் இப்படிப்புகள் படிப்பதற்கான வங்கிக டன்கள் பெறுவது குறித்தும் மற்றும் கல்வி உதவித்தொகை பெறுவது குறித்தும் சிறந்த வல்லுநர்களால் வழிகாட்டல் வழங்கப்படவுள்ளது.
இதனை மாணவ, மாணவியர்களிடம் நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும். மாணவ, மாணவியர்கள் எந்த துறையில் சிறப்பாக விளங்கிடலாம் என்பதனை அவர்களின் விருப்பத்திற்கேற்ப அறிந்து அவர்களுக்கு அத்துறையில் கல்விபயிலவும், தங்களின் திறமையை மேம்படுத்திக்கொள்ளவும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
பொதுத்தேர்வில் ஏதேனும் சில பாடங்களில் தவறவிட்டாலும் கலங்காது துணைத்தேர்வில் நல்ல முயற்சி மேற்கொண்டு வெற்றி பெற நாம் உறுதுணையாக இருந்து அவர்கள் உயர்கல்வி பெற்றிட நாம் உதவி வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், வேலுடையார் கல்வி நிறுவனங்கள் நிர்வாகி திரு.தியாகபாரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியும், சென்னை வர்த்தக மற்றும் தொழில் சபையும் இணைந்து ‘நிர்வாக மேன்மையில் புதிய உருமாற்றங்கள்’ என்ற தலைப்பில் சர்வதேச மாநாட்டை நடத்துகின்றன. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தொடங்கியது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-
சாத்தியக்கூறுகளை பயன்படுத்தி வர்த்தகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் முயற்சியாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. நம்மிடம் இருக்கும் பலத்தை புரிந்துகொண்டு, செயல் திட்டத்தை வகுத்து வெற்றி மற்றும் சிறப்பான இடத்தை பெறவேண்டியது இந்த தருணத்தில் அவசியமானது ஆகும். கல்வி மற்றும் தொழில்முனைவோர் திறன் ஆகியவை தான் நம்முடைய பலம். உலக கல்வி வரைபடத்தில் நாம் முக்கிய இடத்தை வகிக்கிறோம்.
850 பல்கலைக்கழகங்கள், 42 ஆயிரத்து 26 கல்லூரிகள் என உயர் கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது. நமது நாட்டை பொறுத்தமட்டில் உயர் கல்வியில் தமிழகம் பெரும் மதிப்புமிக்க இடத்தை பெற்றிருக்கிறது. தமிழக பல்கலைக்கழகங்கள் பல்வேறு வகையான பாடப்பிரிவுகளை மாணவர்களுக்கு வழங்குகிறது. பள்ளிகளில் படிப்பு முடித்து உயர்படிப்புக்கு செல்லும் நாட்டின் பிற பகுதிகளை சேர்ந்த மாணவர்களை விடவும் தமிழகம் 2 மடங்கு அதிகமானவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குகிறது.
நாடு சுதந்திரம் அடைந்த பின்பு பல்கலைக்கழக கல்வியில் அதிகப்படியான முதலீடுகள் செலுத்தப்பட்டதே இதற்கு காரணம். மாநில பல்கலைக்கழகங்களில் 8.86 லட்சம் மாணவர்கள் ஆண்டுதோறும் படித்து முடித்து வெளியே வருகின்றனர். அளப்பரிய கட்டுமானம் மற்றும் மனித வளம் ஆகியவை உயர் கல்வியை இந்தியா மற்றும் தமிழகத்தில் வலுவடையச் செய்துள்ளது.
நமக்கு தற்போது காலம் பிரகாசமாக கனிந்து இருக்கிறது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் மாணவர்கள் முன்னோக்கி நடைபோடவேண்டும். மொத்த உலகமும் நமது மேடை. செழிப்பு மற்றும் வளர்ச்சியடைந்த வேலைவாய்ப்பு என்ற பாதையை நோக்கி நம்முடைய செயல்பாடு இருக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல் நாள் மாநாட்டில் எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளை தலைவர் சந்திராதேவி தணிகாசலம், சென்னை வர்த்தக மற்றும் தொழில் சபை தலைவர் ராம்குமார் ராமமூர்த்தி, எத்திராஜ் மகளிர் கல்லூரியின் முதல்வர் எஸ்.கோதை, இணை பேராசிரியர் பஞ்சாபி மாலா தேவிதாஸ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
6 மாதங்களுக்குள் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வரும் என தினகரன் கூறி உள்ளார். ஜோதிடர் போல் தினகரன் நடந்து கொள்கிறார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சில சமயங்களில் ஏதேதோ கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஏற்கனவே திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து தமிழகம் முன்னேறவில்லை என சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
இன்று தமிழகம் சுகாதாரத்துறையில் முன்னிலையில் உள்ளது. அவர்களுடைய கட்சி ஆளும் மாநிலங்களில் சுகாதாரத்தில் 7-வது இடங்களுக்கு மேல் உள்ளது. இதனை அவர் மறந்து விட்டு பேசுகிறார். இதேபோல் உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. 12-ம் வகுப்பு முடித்த பிறகு 49 சதவீதம் மாணவர்கள், உயர்கல்வியில் தமிழகத்தில் தான் சேருகிறார்கள். பா.ஜனதா ஆட்சி செய்யும் பல மாநிலங்களில் கிராமங்களில் சாலை வசதி இல்லை.
எனவே பொன்.ராதாகிருஷ்ணன் தன் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களின் நிலையை புரிந்து கொண்டு பேச வேண்டும். ஆனால் அவர் தேவையில்லாத கருத்துக்களை சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கிருஷ்ணகிரியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் 500 பேருக்கு தலா ரூ.500 மதிப்புள்ள அரிசி, மளிகை பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்