search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை"

    • நீட் தேர்வு பற்றி சபையில் ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
    • பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    மருத்துவ படிப்புக்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 5-ந்தேதி நடந்தது. நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள்.

    கடந்த 4-ந்தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன் பிறகு சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதால் சர்ச்சை வெடித்தது.

    இந்த நிலையில் நீட் தேர்வில் பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம் உள்பட பல மாநிலங்களில் முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பல லட்சம் ரூபாய்க்கு வினாத்தாள்கள் விற்பனை ஆகி இருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் சி.பி.ஐ. 6 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வினாத்தாள்களை கசிய விட்டதாக நேற்று 2 பேரை பீகாரில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரத்தை பிரதான எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி கட்சிகள் பாராளுமன்றத்தில் எதிரொலிக்க செய்துள்ளன. நேற்று இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    அப்போது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 11 மணிக்கு பாராளுமன்ற இரு அவைகளும் கூடியதும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானங்கள் கொடுக்கப்பட்டன.

    பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர் தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மக்களவை கூடியதும் விவாதத்தை ஒத்திவைத்து விட்டு நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான விவாதத்தை தொடங்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்.

    எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எழுந்து, "நீட் தேர்வு குளறுபடியால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நீட் தேர்வு பற்றி சபையில் ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

    ஆனால் விவாதத்தை தொடங்குவதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி கொடுக்கவில்லை. இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட னர்.

    அவர்களை அமைதி காக்கும்படி சபாநாயகர் பல தடவை கேட்டுக்கொண் டார். ஆனால் அமளி குறையவில்லை. இதையடுத்து மக்களவையை மதியம் 12 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

    மாநிலங்களவையிலும் இந்த பிரச்சனை எதிரொலித்தது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பா.ஜ.க. எம்.பி. திரிவேதி விவாதத்தை தொடங்க இருந்தார்.

    ஆனால் மாநிலங்களவை தொடங்கியதும் நீட் பற்றி விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் அமளி எழுந்தது. இதனால் மேல்சபையை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பதாக துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் அறிவித்தார்.

    இதன் பின்னர் அவை தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை வருகிற திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

    • எதிர்க்கட்சி தலைவர் என்பது ஒரு பதவி மட்டுமல்ல. அது ஒரு பெரிய பொறுப்பு.
    • நாட்டு மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும், இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும் நன்றி.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அரசியலில் பெரும் பொறுப்பை முதல்முறையாக ராகுல்காந்தி ஏற்றுள்ளார்.

    இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரானது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார். அதில், "என் மீது நம்பிக்கை வைத்த நாட்டு மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும், இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும் நன்றி.

    எதிர்க்கட்சி தலைவர் என்பது ஒரு பதவி மட்டுமல்ல. அது உங்களின் உரிமைகளுக்கான குரலாக மாறி போராட வேண்டிய ஒரு பெரிய பொறுப்பு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏழைகளுக்கும். சிறுபான்மையினருக்கும், விவசாயிகளுக்கும். தொழிலாளர்களுக்கும் மிகப்பெரிய ஆயுதம். அதன் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கும் நாங்கள் பதிலடிக் கொடுப்போம்" என்று அவர் பேசியுள்ளார்.

    • மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • எம்.பி.யாக தேர்வானவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்து வருகிறார்.

    புதுடெல்லி:

    18-வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார். பிரதமர் மோடி உள்பட 279 பேர் நேற்று எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்.

    இன்று 2-வது நாளாக பதவிப்பிரமாணம் நடைபெற்று வருகிறது. தமிழக எம்.பி.க்கள் இன்று மதியம் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில், பீகார் மாநிலத்தின் பூர்னியா தொகுதியில் சுயேட்சை எம்.பி.யாக வெற்றி பெற்ற ராஜேஷ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ் இன்று பதவியேற்றுக் கொண்டார். அப்போது அவர், ரீ-நீட் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த டீ சர்ட்டை அணிந்திருந்தார்.

    சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததால் மாணவர்கள் நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • இன்று 2-வது நாளாக பதவிப்பிரமாணம் நடைபெற்று வருகிறது.
    • தமிழக எம்.பி.க்கள் இன்று மதியம் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    புதுடெல்லி:

    18-வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார். பிரதமர் மோடி உள்பட 279 பேர் நேற்று எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்.

    இன்று 2-வது நாளாக பதவிப்பிரமாணம் நடைபெற்று வருகிறது. தமிழக எம்.பி.க்கள் இன்று மதியம் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தொகுதியில் வென்ற ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி மக்களவை எம்பியாக பதவியேற்றுக் கொண்டார்.

    ஒவைசி பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டதும், 'ஜெய் பாலஸ்தீனம்' என முழக்கமிட்டார். இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே போர் நடந்து வரும் சூழலில் வாழ்க பாலஸ்தீனம் என முழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓவைசி, ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் கூறினர். அதுபோல நானும் ஜெய் பீம், ஜெய் மீம், ஜெய் தெலுங்கானா, ஜெய் பாலஸ்தீனம் என கூறினேன். இது எப்படி நாட்டிற்கு எதிரானதாக இருக்கும்? அரசியல் சட்டத்தில் உள்ள விதியைக் காட்டுங்கள் என கேள்வி எழுப்பினார்.

    அசாதுதீன் ஒவைசி பதவியேற்கச் செல்லும் முன் 'ஜெய் ஸ்ரீராம்' என பா.ஜ.க. எம்.பி.க்கள் கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பதவியேற்ற 22 திமுக எம்.பிக்களில் 13 எம்.பி.க்கள் வாழ்க உதயநிதி என்று கோஷமிட்டனர்.
    • வாழ்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வாழ்க” என 3 திமுக எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.

    18-வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

    நேற்று பிரதமர் மோடி மற்றும் 279 பேர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். இன்று 2-வது நாளாக பதவி பிரமாணம் நடைபெற்று வருகிறது.

    தமிழக எம்.பி.க்கள் வரிசையாக இன்று மதியம் பதவி ஏற்றுக் கொண்டனர். திமுக எம்.பிக்கள் பலரும் இன்று மக்களவையில் பதவியேற்றபோது, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டதோடு, வாழ்க உதயநிதி என்றும் கோஷமிட்டனர்.

    அதாவது இன்று பதவியேற்ற 22 திமுக எம்.பிக்களில் 13 எம்.பி.க்கள் வாழ்க உதயநிதி என்று கோஷமிட்டனர்.

    கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்க பாண்டியன், கலாநிதி வீராசாமி, தருமபுரி எம்.பி ஆ மணி, பெரம்பலூர் எம்.பி அருண் நேரு, தேனி எம்.பி. தங்க தமிழ்செல்வன் ஆகியோரைத் தவிர பிற திமுக எம்.பிக்கள் அமைச்சர் உதயநிதியின் பெயரைக் குறிப்பிட்டனர்.

    மேலும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி மலையரசன், ஆரணி எம்.பி தரணிவேந்தன், திருவண்ணாமலை எம்.பி சி.என்.அண்ணாதுரை ஆகியோர் இன்று மக்களவையில் பதவியேற்றபோது, "வாழ்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வாழ்க" என கோஷமிட்டனர்.

    கடைசியாக பதவியேற்ற தென்காசி திமுக எம்.பி ராணி, வாழ்க கனிமொழி, வாழ்க அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் என கோஷமிட்டார்.

    கடந்த காலங்களில் அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் 'அம்மா வாழ்க' என கோஷமிட்டதற்கு திமுக தலைவர்கள் விமர்சனம் செய்துள்ள நிலையில், இப்போது திமுக எம்.பிக்கள் பலரும் உதயநிதி வாழ்க என கோஷமிடுவது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

    திமுகவின் முக்கிய எம்.பி.யான தயாநிதி மாறன் கூட உதயநிதி வாழ்க என கோஷமிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    • வாழ்க ஜனநாயகம், வாழ்க அரசியல் சாசனம் எனக்கூறி உறுதிமொழி எடுத்த திருமாவளவன்.
    • வேண்டாம் நீட், Ban நீட் என முழக்கமிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டார் தாயநிதி மாறன்.

    18-வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்க பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறது.

    நேற்று பிரதமர் மோடி மற்றும் 279 பேர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். இன்று 2-வது நாளாக பதவி பிரமாணம் நடைபெற்று வருகிறது.

    தமிழக எம்.பி.க்கள் வரிசையாக இன்று மதியம் பதவி ஏற்றுக் கொண்டனர்.

    திருவள்ளூர் தொகுதி எம்.பி. சசிகாந்த் செந்தில் கையில் அரசியலமைப்பு புத்தகத்தின் தமிழில் பதவி ஏற்றார்.

    அதன்பின் முன்னாள் தமிழக அமைச்சர் வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி எம்.பி.யாக பதவி ஏற்றுக் கொண்டார்.

    தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கையில் அரசியலைப்பு புத்தகத்துடன் பதவி ஏற்றுக் கொண்டார்.

    மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் பதவி ஏற்ற்றார். பதவி ஏற்றபின் பின் தயாநிதி மாறன் வேண்டாம் நீட், Ban நீட் என முழக்கிமிட்டார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பதவி ஏற்கும்போது ஜனநாயகம் வாழ்க. அரசியலமைப்பு வாழ்க என்றார்.

     கனிமொழி எம்.பி. பதவி ஏற்கும்போது அரசியலமைப்பு வாழ்க முழக்கமிட்டு பதவி ஏற்றார்.

     

    • பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்ட தொடர் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.
    • மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறுகிறது.

    பாட்னா:

    பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்ட தொடர் வரும் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறும் என மக்களவை செயலகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய

    கூட்டணி கட்சிகள் சபாநாயகர் பதவியை எதிர்பார்ப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், மக்களவை சபாநாயகர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஐக்கிய ஜனதா தளம் தனது ஆதரவை அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் கே.சி.தியாகி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, கே.சி.தியாகி கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. எனவே, சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.

    • மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறுகிறது.
    • சபாநாயகர் பதவிக்கு ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் குறி வைத்துள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்ட தொடர் வரும் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறும் என மக்களவை செயலகம் இன்று அறிவிப்பு வெளியிட்டது. மிக முக்கியத்துவம் வாய்ந்த சபாநாயகர் பதவிக்கு ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் குறிவைத்துள்ளன.

    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய

    கூட்டணி கட்சிகள் சபாநாயகர் பதவியை எதிர்பார்க்கின்றன.

    சபாநாயகர் பதவிக்கான போட்டியில் வேட்பாளரை நிறுத்த பா.ஜ.க.வும் முடிவு செய்துள்ளது.

    பிரதான எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி பொது வேட்பாளரை நிறுத்த தீவிரம் காட்டி வருகிறது.

    • வாக்குப்பதிவிற்காக காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.
    • நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை செலுத்த சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே வருகை தந்து வாக்களித்தார்.

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவிற்காக காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.

    அந்த வகையில், நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை செலுத்த சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே வருகை தந்து வாக்களித்தார்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

    முன்னதாக, நடிகர் சிவகாத்திகேயன் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். நடிகர் கார்த்திக், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

    அதைத்தொடர்ந்து நடிகர் விஜய் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குசாவடியில் அலையென திரண்ட மக்களுக்கு மத்தியில் வாக்களித்தார். நடிகர் சூர்யா, கார்ஹ்த்டி, சிவகுமார் குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.

    நடிகர்களான விக்ரம், விஜய் சேதுபதி, செல்வ ராகவன், தனுஷ், வெற்றி மாறன் ரத்ன குமார், கமல்ஹாசன், திரிஷா, ஹரிஷ் கல்யாண் மற்றும் பலர் அவர்களின் ஜனநாயக கடமையை சிறப்பாக செய்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தொடர் முழுவதும் இந்திய பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் நடைபெற்றது
    • பிரதமர் மோடி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்

    வரும் ஏப்ரல்-மே மாத இடையில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.

    கடந்த ஜனவரி 31 அன்று பாராளுமன்றத்தின் 17-வது மக்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

    கடந்த பிப்ரவரி 1 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    இக்கூட்டத்தொடர் முழுவதும் இந்திய பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தொடரின் கடைசி அமர்வு இன்று நடைபெற்றது.


    இதில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

    சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கும், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, "இந்த அமர்வில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன" என தெரிவித்தார்.

    இதையடுத்து, பட்ஜெட் தொடர் நிறைவடைந்து, முதலில் மக்களவையும், பிறகு மாநிலங்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன.

    இத்துடன் 17-வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரும் நிறைவுக்கு வந்தது.

    மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில், 17-வது அவையில், கடந்த 5 வருட காலங்களில், 222 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • 17-வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடர் நடைபெற்றது.
    • கடினமான காலகட்டங்களில் சபாநாயகர் அவையை வழி நடத்தியுள்ளார்.

    17-வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரில் பிரமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் போன்றவை ஏற்பட்டுள்ளது. மிகவும் கடினமான காலகட்டங்களில் சபாநாயகர் அவையை வழி நடத்தியுள்ளார். ஒருபோதும் அதன் பணியை தடை படவிட்டதில்லை."

    "கொரோனா காலக்கட்டத்தில் எம்.பி.க்கள் தங்கள் ஊதியத்தில் 30 சதவீதத்தை குறைத்துக் கொண்டனர். ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்தது. உலகத்தின் முன்பு, நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களின் அடையாளம், திறன்களை பறைசாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது."

    "ஜனநாயகத்தின் தாயாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஜி20 மாநாட்டை போல, ஜி20 நாடுகளின் சபாநாயகர்களின் மாநாடும் நடைபெற்றது. ஜி20 மாநாட்டின் வெற்றிக்கு அனைத்து மாநிலங்களும் பங்களிப்பை வழங்கின."

    "17-வது மக்களவையில் செயல்திறன் 97 சதவீதமாக உள்ளது. 18-வது மக்களவையில், அவையின் செயல்திறன் 100 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும் என உறுதி ஏற்போம். 17-வது மக்களவையில் பல்வேறு முத்திரைகளை பதித்துள்ளோம். அனைத்து கட்சிகளின் மக்களவை குழு தலைவர்களுக்கும் நன்றி."

    "ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்கு நீண்ட காலமாக காத்திருக்கப்பட்டது. புதிய அவையில் தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. முத்தலாக் மூலம் இஸ்லாமிய பெண்கள் துயரங்களை அனுபவித்தனர். முத்தலாக் தடை சட்டமும் இந்த அவையில் நிறைவேற்றப்பட்டது. மகளிருக்கு மரியாதை அளிப்பதற்கான வரலாற்று சிறப்புமிக்க முடிவும் 17-வது மக்களவையில் தான் எடுக்கப்பட்டது."

    "வரும் 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த தேசத்தை உருவாக்குவோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இளைஞர்களுக்கான பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டது. வினாத்தாள் கசிவு குறித்து இளைஞர்கள் பெரும் கவலை கொண்டனர். அதற்கான சட்டத்தை கொண்டு வந்து கவலைகளை நாம் அகற்றியுள்ளோம்."

    "தேசிய ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான சட்டம் இந்த அவையில் தான் இயற்றப்பட்டது. தேசத்தின் இளைஞர் சக்தியின் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. இந்தியா விரைவில் ஆராய்ச்சிக்கான மையமாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது," என்று தெரிவித்தார்.

    • உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
    • கடந்த மாதம் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி சிறப்பு பூஜைகள் செய்தார்.

    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ரூ.3,000 கோடி செலவில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22-ம் தேதி அந்த ஆலயத்தில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி விழாவில் கலந்துகொண்டு ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.

    பாரதிய ஜனதா கட்சி தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராமர் கோவில் விவகாரம் வடமாநிலங்களில் மிகவும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, ராமர் கோவில் பற்றி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தக்கோரி மக்களவையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் சத்யபால்சிங், பிரதாப் சந்திரா சாரங்கி, சிந்தோர் பாண்டே, சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோரும் மேல்-சபையில் எம்.பி.க்கள் கே.லட்சுமணன், சுதன்ஷூ திவேதி, ராகேஷ் சின்கா ஆகியோரும் தீர்மானம் கொண்டு வந்தனர்.

    இதற்கிடையே இன்று பாராளுமன்றத்தில் மிக முக்கியமான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், இரு அவைகளிலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் ஆஜராகுமாறும் கொறடா உத்தரவு பிறப்பித்தார்.

    இந்நிலையில், இன்று பாராளுமன்ற மக்களவையில் அயோத்தி ராமர் கோவில் தொடர்பான தீர்மானம் மீது விவாதம் நடந்தது.

    அப்போது பேசிய பா.ஜ.க. எம்.பி. சத்யபால் சிங், இந்த விவாதத்தில் பங்கேற்று பேசுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பார்த்தது, கடவுள் ராமரை தரிசனம் செய்தது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். ராமர், இந்துக்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் சொந்தமானவர். ராமரை காங்கிரஸ் கேள்விக்கு உள்ளாக்கி வருகிறது என தெரிவித்தார்.

    ×