என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குற்றாலம்"
- மழையினால் பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
- மெயின் அருவியில் தொடர்ந்து தண்ணீர் அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கு குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று மதியம் முதல் பரவலாக கனமழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழையினால் பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 2 அருவிகளிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டினாலும் சுற்றுலா பயணி கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் ஓரமாக நின்று குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இன்று காலையிலும் மெயின் அருவியில் தொடர்ந்து தண்ணீர் அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கு குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மற்ற அருவிகளான பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்த காரணத்தினால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது. தற்போது சபரிமலை சீசன் என்பதால் தினமும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் வந்து மெயினருவி உள்ளிட்ட அருவிகளில் குளித்து செல்கின்றனர்.
விடுமுறை தினம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள் வருகையும் இன்று அதிகளவில் இருந்தது. இந்நிலையில் மெயினருவியில் பெண்கள் குளிக்கும் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள படிக்கட்டில் சுமார் 12 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பு ஊர்ந்தபடி சென்றது.
இதனை பார்த்த பெண்கள் அங்கிருந்து அலறியடித்தப்படி ஓடினர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வனத்துறையினர் வருவதற்குள் அந்த மலைப்பாம்பு புதருக்குள் சென்றுவிட்டது. அந்த பாம்பு எங்கு சென்றது என்று தெரியாததால் பெண்கள் செல்லும் பகுதியில் அருவியில் குளிக்க யாரையும் அனுமதிக்கவில்லை.
அருவி அருகே உள்ள புதருக்குள் வனத்துறையினர் மலைப்பாம்பை தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்களால் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே செங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் ராஜ்குமார், மாதவன், சிவக்குமார் உள்ளிட்டோர் வந்து அரைமணி நேர தேடுதலுக்கு பிறகு அருவி தண்ணீர் பாய்ந்தோடும் புதருக்குள் பதுங்கி இருந்த மலைப்பாம்பை பிடித்தனர்.
பின்பு அந்த மலைப்பாம்பு வனத்துறையினர் உதவியுடன் குற்றாலம் மலைப்பகுதியில் விடப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக வனத்துறையினர் செண்பகாதேவி அம்மன் கோவிலுக்கு செல்பவர்கள் குற்றாலத்தில் உள்ள திருக்குற்றாலநாதர் கோவில் செயல் அலுவலரிடம் அனுமதி கடிதம் பெற்று வரவேண்டும் என்பன போன்ற சில கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால் இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
இது தொடர்பாக பா.ஜ.க சார்பில் மாவட்ட செயலாளர் குமரேச சீனிவாசன், தென்காசி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. பொறுப்பாளர் எஸ்.வி.அன்புராஜ், குற்றாலம் பா.ஜ.க. தலைவர் செந்தூர்பாண்டியன், தென்காசி பா.ஜ.க. நிர்வாகிகள் கடந்த வாரம் தென்காசி கோட்டாட்சி தலைவரிடம் ஒரு கோரிக்கை மனுவினை கொடுத்தனர்.
மனுவினை பரிசீலித்த கலெக்டர் மற்றும் சப்-கலெக்டர் ஆகியோர் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து குற்றாலம் மலைப்பகுதியில் உள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வனத்துறை அலுவலகத்தில் ஒரு படிவத்தை நிரப்பி கொடுத்துவிட்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
எனவே நேற்று காலை முதல் பா.ஜ.க நிர்வாகிகள் குற்றாலம் செந்தூர் பாண்டியன், திருமுருகன், பிலவேந்திரன், செங்கோட்டை நகர தலைவர் மாரியப்பன், மேலகரம் மகேஷ்வரன், குமார், கணேசன், முருகேசன் ஆகியோர் குற்றாலம் வனத்துறை அலுவலகத்தில் நின்று கொண்டு செண்பகாதேவி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வனத்துறையினரின் விண்ணப்ப படிவத்தை நிரப்பி கொடுத்து கோவிலுக்கு அனுப்பி வைத்தனர்.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாத தொடக்கத்தில் சீசன் ஆரம்பமாவது வழக்கம். தொடர்ந்து ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் வரை சீசன் நிலவும். சில ஆண்டுகளில் செப்டம்பர் மாதம் தொடக்கம் வரை சீசன் இருக்கும்.
இந்த காலங்களில் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் அதிகளவில் கொட்டும். அதில் குளிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
இந்த ஆண்டு மே மாத இறுதிலேயே சீசன் ஆரம்பமானது. தொடர்ந்து மலைப்பகுதிகளில் மழை பெய்ததால் சீசன் களைகட்டியது. குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழையினால் குளுகுளு காலநிலை நிலவியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் மழை இல்லாமல் வெயில் அடித்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது.
மெயினருவியில் பாறையை ஒட்டியவாறு தண்ணீர் மிகவும் குறைவாக விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் நீண்டவரிசையில் வெகுநேரம் காத்து நின்றே குளித்தனர்.
இந்தநிலையில் நேற்று காலையில் இருந்தே குற்றாலம் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயினருவியில் நேற்று மாலையிலும், ஐந்தருவியில் இரவிலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் தடைவிதித்தனர்.
இந்த நிலையில் குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் 2-வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. மெயினருவியில் ஆர்ச்சை தாண்டியும், ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனால் அந்த அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டது. இதனால் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எனினும் அருவிகளில் தண்ணீர் குறைந்ததும் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் போது குற்றாலத்தில் சீசன் களை கட்டுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் குற்றாலத்தில் சீசன் அருமையாக இருக்கும். அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணி கள் குற்றாலத்திற்கு படையெடுத்து வருவார்கள்.
இந்தாண்டு மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கியது. தொடர்ந்து ஒரு மாதம் சாரலுடன் சீசன் களை கட்டியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. ஆனால் இந்த மாத தொடக்கத்தில் சாரல் குறைந்த தால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் கடந்த 7-ந்தேதி முதல் சாரலுடன் குளு, குளு காலநிலை நிலவுகிறது.
இதனால் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதே போல் நேற்று காலை முதலே குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அதனால் மெயினரு வியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்தது. தொடர்ந்து தண்ணீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் இரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியில் 5 பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.
இந்நிலையில் வெள்ளப்பெருக்கு இன்று காலை சற்று குறைந்தது . இதையடுத்து இன்று காலை முதல் சுற்றுலாப்பயணிகள் அருவிகளின் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
மாஞ்சோலை, நாலுமுக்கு, குதிரைவெட்டி, காக்காச்சி போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் சாரலுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததையடுத்து மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று காலை முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், மணிமுத்தாறு மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இன்று காலை நிலவரப்படி பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் 71.15 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 109.91 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.30 அடியாகவும் உள்ளன. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 880 கன அடி தண்ணீரும், சேர்வலாறு அணைக்கு 587 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணைக்கு 205 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
தொடர் மழை காரணமாக குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ளது. குற்றாலத்தில் கடந்த ஒரு வாரமாகவே சீசன் களை கட்டியுள்ளது. ஜில்லென்ற காற்றும், சாரலும் குற்றாலத்தை குதூகலமாக்கி உள்ளன. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. நாளுக்கு நாள் குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இன்று காலை குற்றாலத்தில் நல்ல மழை பெய்தது.
தொடர்ந்து சாரல் மழை விட்டு விட்டு தூறிக்கொண்டே இருந்தது. சுற்றுலா பயணிகள் காலையில் இருந்தே அதிகளவில் வர தொடங்கினர். மெயின் அருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் அலைமோதினார்கள். ஏராளமானோர் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள வெண்ணமடை குளம் நிரம்பியது.
இங்குள்ள படகு குழாமில் ஆண்டுதோறும் குற்றாலம் சீசன் காலத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் படகு சவாரி நடத்தப்படுவது வழக்கம். வெண்ணமடை குளத்தில் தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து அங்கு படகு சவாரி இன்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி படகு சவாரியை தொடங்கி வைத்தார்.
இங்கு 29 படகுகள் உள்ளன. 4 இருக்கைகள் கொண்ட 16 பெடல் படகுகளும், 2 இருக்கைகள் கொண்ட 4 பெடல் படகுகளும், 5 துடுப்பு படகுகளும், ஒருவர் மட்டும் செல்லக்கூடிய கயாக் வகையை சேர்ந்த 4 துடுப்பு படகுகளும் சுற்றுலா பயணிகள் சவாரிக்காக உள்ளது. படகு சவாரிக்கு அரை மணி நேரத்துக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே இந்த ஆண்டும் வசூலிக்கப்படுகிறது. 4 இருக்கைகள் கொண்ட படகுக்கு ரூ.150ம், 2 இருக்கைகள் கொண்ட படகுக்கு ரூ.120ம், துடுப்பு படகுக்கு ரூ.185ம், கயாக் வகை படகுக்கு ரூ.95ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. படகில் செல்பவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து உற்சாகமாக படகில் சென்றனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யும் போது நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் குளுகுளு சீசன் நிலவும். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் குற்றாலத்தில் சீசன் ஜோராக இருக்கும்.
சீசன் காலங்களில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அதில் குளித்து மகிழ தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வருவார்கள்.
இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே மாத இறுதியில் தொடங்கியது. இதையடுத்து அப்போதே குற்றாலத்திலும் சீசன் ஆரம்பித்தது. சீசன் தொடங்கிய போது முதல் 3 நாட்கள் சாரல் மழை, குளிர்ந்த காற்று என ரம்மியமான சூழல் நிலவியது.
அப்போது கோடை விடுமுறை என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இந்த மாத தொடக்கத்தில் குற்றாலத்தில் சாரல் மழை பெய்யவில்லை. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. மெயினருவி, ஐந்தருவியில் பாறையை ஒட்டியவாறு தண்ணீர் விழுந்து வந்தது. அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்தது.
இந்நிலையில் நேற்று குற்றாலம் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மீண்டும் சாரல்மழை பெய்யத் தொடங்கியது. மேலும் குளிர்ந்த காற்றும் வீசுகிறது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
மெயினருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது. சாரல் மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர். வேலை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை இன்று குறைவாகவே காணப்பட்டது.
இந்நிலையில் காலை 8 மணி அளவில் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. 9 மணி வரை நீடித்தது. மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் பிற்பகலுக்கு பிறகு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என கருதப்படுகிறது.
இதனால் அருவியில் வரும் தண்ணீர் வரத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர். அவ்வப்போது சாரல்மழை, குளிர்ந்த காற்று என ரம்மியமான சூழலுடன் குற்றாலத்தில் சீசன் ஜோராக இருக்கிறது.
நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள கொடிகுறிச்சியைச் சேர்ந்தவர் வள்ளிநாயகம் (வயது 42). இவர் குற்றாலம் மெயின்அருவி நுழைவுவாயிலில் வாகன கட்டண வசூலிப்பவராக வேலைபார்த்து வருகிறார். நேற்று மாலை இவர் வாகனங்களுக்கு கட்டண வசூல் பிரித்துக்கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக நடந்து வந்த 2 பேர் வள்ளிநாயகம் வைத்து இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். வள்ளிநாயகம் கூச்சல்போட்டதால், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் 2 வாலிபர்களையும் விரட்டிச் சென்று பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அவர்களை குற்றாலம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பெயர் விபரம் வருமாறு:-
1.குமார் (38), சுந்தர பாண்டியபுரம், 2. இஸ்மாயில் (30) சமத்துவபுரம், ராஜபாளையம், இவர்கள் மேலும் வேறு ஏதேனும் குற்றசெயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்