search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நக்சலைட்"

    • 5 பேர் கொண்ட நக்சலைட் குழு உணவு பொருட்கள் வாங்க வந்தபோது போலீசார் சுற்றி வளைத்தனர்.
    • துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 4 பேர் தப்பி ஓட்டம்.

    கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் ஹெப்ரி போலீஸ் எல்லைக்குட்பட்ட கபினாலே வனப்பகுதியில் நேற்று இரவு 5 நக்சலைட்டுகள் கொண்ட குழுவினர் உணவு பொருட்களை வாங்க வந்தனர்.

    இதுப்பற்றி நக்சல் எதிர்ப்புப்படை போலீசாருக்கு தகவல் தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

    இதில் நக்சலைட் தலைவர் விக்ரம் கவுடா என்பவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மற்ற 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    கேரளாவில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்ததையடுத்து நக்சலைட்டுகள் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை நோக்கி வந்துள்ளனர். இதில் விக்ரம் கவுடா என்கவுன்டர் செய்யப்பட்டார். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்றனர். இந்த துப்பாக்கி சண்டை கபினாலே பஸ் நிலையத்தில் இருந்து 7 கி.மீ, தூரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆறு மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 12 பேர் சுட்டுக்கொலை.
    • இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர்.

    சத்தீஷ்கர் மாநிலம் எல்லை அருகே உள்ள மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம் வண்டோலி கிராமத்தில் போலீசாருடன் இணைந்து கமோண்டோ படை வீரர்கள், நக்சலைட்டைடுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சண்டையில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர்.

    12 நக்சலைட்டுகளின் உடல்களை மீட்ட நிலையில் போலீசார் ஏகே 47 துப்பாக்கிகள், இரண்டு INSAS துப்பாக்கிகள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர்.

    நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்த சண்டையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் கமோண்டோ வீரர்களுக்கு 51 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநில உள்துறை மந்திரி துதேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.

    • மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விரைவு நடவடிக்கைக் குழுக்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
    • நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

    மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறையினருடன் இன்று நடந்த என்கவுன்டரில் 4 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளனர்.

    மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நாசகார செயல்களில் ஈடுபடும் நோக்கத்தில், தெலுங்கானாவில் இருந்து சில நக்சலைட்டுகள், பிரன்ஹிதா நதியைக் கடந்து கட்சிரோலிக்குள் நுழைந்ததாக, நேற்று மதியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, கட்சிரோலி காவல்துறையின் சிறப்புப் போர்ப் பிரிவான சி-60 மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விரைவு நடவடிக்கைக் குழுக்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

    ரெப்பன்பள்ளி அருகே உள்ள கோலமார்கா மலைப்பகுதியில் இன்று காலை சி-60 பிரிவு குழு ஒன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர்.

    துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்ட பிறகு, அப்பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டது. இதில், நான்கு ஆண் நக்சலைட்டுகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    மேலும், அவர்களிடம் இருந்து ஒரு ஏகே-47 துப்பாக்கி, ஒரு கார்பைன், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், நக்சல் புத்தகம் மற்றும் பிற பொருட்களும் மீட்கப்பட்டதாக அதிகாரி கூறினார்.

    உயிரிழந்த நக்சலைட்டுகள் வர்கீஸ், மக்து, இருவரும் வெவ்வேறு நக்சல் குழுக்களின் செயலாளர்கள் மற்றும் படைப்பிரிவு உறுப்பினர்களான குர்சங் ராஜு மற்றும் குடிமெட்டா வெங்கடேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றனர்.
    • அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கிச்சூடு சண்டை நடந்தது. இதில், 4 முதல் 6 நக்சலைட்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், இதில் இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனரா என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.

    காரணம், துப்பாக்கிச்சூடுக்கு பிறகு அந்த இடத்தில் நக்சலைட்களின் உடல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    சிந்தாகுஃபா மற்றும் கிஸ்டாரம் காவல் நிலைய எல்லையில் உள்ள மாவோயிஸ்டுகளின் கோட்டையான சோடேகெட்வால் கிராமத்தின் வனப்பகுதியில் நடந்த இந்த என்கவுண்டரில் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் எலைட் கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா) ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் நக்சலைட்டுகள் நான்கு பேருந்துகளை எரித்ததுடன், ஒருவரை சுட்டுக்கொன்று வெறியாட்டம் நடத்தினர் #BiharNaxals
    பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள தேவ் என்ற இடத்தில் நேற்றிரவு நக்சலைட்டுகள் வெறியாட்டம் நடத்தினர். நான்கு பேருந்துகளை எரித்ததோடு, ஒருவரை சுட்டுக்கொலை செய்துவிட்டு காட்டுக்கள் தப்பி ஓடிவிட்டனர்.



    இதுகுறித்து தகவல் அறிந்த சிஆர்பிஎஃப் மற்றும் மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
    ×