search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாட்டுவண்டி"

    திருநாவலூர் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி மாட்டுவண்டிகளில் மணல் கடத்திய 2 பேரை கைது செய்தனர்.

    திருநாவலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மணலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாக்கியநாதன் (வயது 40), திருமேனி (32). இவர்கள் 2 பேரும் நேற்று மாலை திருநாவலூர் அருகே உள்ள உடயாநந்தல் கெடிலம் ஆற்றில் மாட்டு வண்டிகளில் அனுமதிபெறாமல் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக திருநாவலூர் சப்-இன்ஸ் பெக்டர் பழனிநாதன் மற்றும் போலீசார் ரோந்து வந்தனர். போலீசாரை கண்டதும் மணல் அள்ளிக்கொண்டிருந்த பாக்கியநாதன், திருமேனி ஆகியோர் ஓட்டம் பிடித்தனர். போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரையில் இன்று திருமணம் நடந்த மணமக்கள் மாட்டு வண்டியில் வருவதை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
    மதுரை:

    இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது எளிமையாகவும், வித்யாசமாகவும் நடத்தப்பட்டு வருகிறது. நவீன காலத்திற்கு ஏற்ப திருமணங்கள் நடந்து வருவதால் தமிழ் கலாச்சாரப்படி திருமணம் நடப்பது மறைந்து வருகிறது.

    அனைவரும் வியக்கும் வகையில் திருமணம் இருக்க வேண்டும் என்பதற்காக ஹெலிகாப்டரில் திருமணம், பறக்கும் பலூனிலும், அந்தரத்தில் தொங்கியபடியும் என புதுமையாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழ் கலாச்சாரத்தை வலியுறுத்தும் படி மதுரையில் இன்று ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது.

    மதுரையை சேர்ந்த விஜய குமார்-காயத்ரி திருமணம் இன்று நடந்தது. பின்னர் மணமக்கள் ஊர்வலம் நடந்தது. இதில் புதுமையாக மணமகன் மாட்டுவண்டியை ஓட்டிவர, அருகில் மணமகள் அமர்ந்து ஊர்வலம் வந்தனர்.

    ஊர்வலத்தில் உறவினர்களும், நண்பர்களும் திரளாக கலந்து கொண்டனர். மணமக்கள் மாட்டு வண்டியில் வருவதை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
    ×