search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம்"

    • நாமக்கல் திருச்சி சாலை மாருதி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். மளிகை கடை நடத்தி வருகிறார்.
    • நேற்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வெற்றிவேல் தூங்க சென்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் திருச்சி சாலை மாருதி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது வீடு மளிகை கடையின் மேல்தளத்தில் உள்ளது. நேற்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வெற்றிவேல் தூங்க சென்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் மளிகை கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று காலை மளிகை கடையை திறக்க சென்ற வெற்றிவேல் கல்லாவில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

    இதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்தனர்.

    மளிகை கடை உள்ள பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மளிகை கடையில் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஏ.டி.எம். மையத்தின் முகப்பில் வாறுகால் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
    • வயதானவர்கள் செல்லும்போது கால் தவறி கீழே விழும் நிலை நீடித்து வருகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தின் கீழ் புறத்தில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை ஓரம் இயங்கி வரும் எஸ்.பி.ஐ. வங்கியின் சார்பில் அதன் அருகே ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஏ.டி.எம். மையத்தின் முகப்பு பகுதியில் வாறுகால் அமைப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று முடிவு பெறாமல் இருக்கும் நிலையில் ஏ.டி.எம். மையத்திற்கு வாடிக்கை யாளர்கள் செல்வதற்காக மரத்தால் ஆன நடைமேடை அமைக்கப்ப ட்டுள்ளது. நடைமேடையும் தற்போது உடைந்து ஆபத்தான நிலையில் வாடிக்கையாளர்களை அச்சுறுத்தும் காட்சியளிக்கிறது. வயதானவர்கள் அதன் வழியே ஏறி செல்லும் பொழுது கால் தவறி கீழே விழும் நிலை நீடித்து வருகிறது. எனவே வாடிக்கை யாளரின் நலன் கருதி தரமான நடை மேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம்.
    • பிரபஞ்சசக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பலமடங்கு வேகத்துடன் செயல்படுகிறது.

    திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம்.

    இங்கு கோரகர் சித்தா ஜீவசமாதி அடைந்ததால்தான் இக்கோயில் பிரபலம் அடைந்தது என சொல்வோரும் உண்டு.

    ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் சிலர்.

    கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினைதோஷம் வறுமை போக்கும், சந்ததி விருத்தி உண்டாகும் என்கிறது.

    பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமம்மாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது.

    இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

    வாஸ்துபடி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமாக மலைகள் உள்ளன.

    வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல் குவியும் என்று கௌரு திருப்பதி ரெட்டி தனது வாஸ்து நுலில் எழுதி உள்ளார்.

    உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான்.

    சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள்.

    அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

    சந்திரன் சக்தி மிகுந்த கோவில் என்பதால் மன நிம்மதி உண்டாகிறது.

    மூலிகைகள் அதிகம் இருப்பதால் அரோக்கியம் உண்டாகிறது.

    மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசி நிறைந்து காணப்படுகிறது.

    திருப்பதி சென்றால் திருப்பம் என்பது போல திருப்பதி சென்று வந்ததால் என் கடன் பிரச்சினை தீர்ந்து கல்யாணம் உடனே ஆனது என்ற கதைகள் உண்டு.

    இரண்டு தினங்களாவது அங்கு தங்கவேண்டும்.

    துக்கம் சந்தோசமாய் மாறும். சோதனைகளை, சாதனைகள் ஆகும்.

    திருப்பதி கோவில் மகாலட்சுமிக்கு உண்டான கோவில் என பார்க்கப்படுவதால் தான் இவ்வளவு கூட்டம்.

    பெருமாளின் சிரித்த ஆனந்தமான பார்வை அனைவரையும் ஆனந்தபடுத்தும்.

    அங்கு சென்று வந்தால் மனம், சிந்தனை, குடும்பம் அனைத்தும் அமைதி ஆவதை உணரலாம்.

    குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள்.

    நடந்து நாம் மலை ஏறினால், அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.

    நிமிர்ந்து மலை ஏறுவதால், நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழல்கின்றன.

    • தகாத வார்த்தைகளால் திட்டி அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினர். மேலும் வீட்டிற்கு பூட்டுபோடப்பட்டது.
    • இந்தநிலையில் பூட்டைஉடைத்து வீட்டில் இருந்த லேப்டாப் மற்றும் பணம் ரூ.50ஆயிரத்தை 4 பேரும் திருடிச்சென்றதாக சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி தவமணி. இவர் அதேபகுதியை சேர்ந்த நாகம்மாள் என்பவருக்கு கிரைய விற்பனை செய்து பத்திரப்பதிவு செய்துள்ளார். இதில் பாதி பணம் கொடுத்துவிட்டு மீதி பணம் தராததால் உத்தமபாளையம் கோர்ட்டில் வழக்குதொடரப்பட்டது.

    இந்த நிலையில் தவமணியை நாகம்மாள், அழகுபிரியா, அழகுராணி, ராஜாராம் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினர். மேலும் வீட்டிற்கு பூட்டுபோடப்பட்டது. இந்தநிலையில் பூட்டைஉடைத்து வீட்டில் இருந்த லேப்டாப் மற்றும் பணம் ரூ.50ஆயிரத்தை 4 பேரும் திருடிச்சென்றதாக தவமணி சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பீரோவில் இருந்த 5 கிராம் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடு போனது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள களிமேடு கிராமத்தை சேர்ந்தவர் தன்மானன். இவரது மனைவி தெய்வ கன்னி (வயது 40).

    இந்த நிலையில் வெளியூர் செல்வதற்காக தெய்வகன்னி தனது மகன் விக்னேஸ்வரன், பாட்டி ஆகியோருடன் தஞ்சை ரயில் நிலையத்திற்கு சென்றார்.

    பின்னர் அவர்க ளை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு விக்னேஸ்வரன் மட்டும் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 முக்கால் கிராம் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகிய வற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது .

    உடனடியாக விக்னேஸ்வ ரன் தனது தாய் தெய்வ கன்னிக்கு தகவல் தெரி வித்தார்.

    அதன் பேரில் அவரும் உடனே வீடு திரும்பினார்.

    இது குறித்த அவர் கள்ளப் பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் அம்மாப்பேட்டையை அடுத்த மாசிநாயக்கன்பட்டி யில் ஒரு மளிகை கடை இயங்கி வருகிறது. வழக்கம் போல ஊழியர்கள் கடையை பூட்டி் விட்டு சென்றனர்.
    • இன்று காலை ஊழியர்கள் கடையை திறக்க வந்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கடையின் கல்லாவில் இருந்த ரூ. 10 ஆயிரம் பணமும் மாயமாகி இருந்தது.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டையை அடுத்த மாசிநாயக்கன்பட்டி யில் ஒரு மளிகை கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் வியாபாரம் முடிந்த பின்னர் நேற்றிரவு வழக்கம் போல ஊழியர்கள் கடையை பூட்டி் விட்டு சென்றனர்.

    இந்தநிலையில் இன்று காலை ஊழியர்கள் கடையை திறக்க வந்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கடையின் கல்லாவில் இருந்த ரூ. 10 ஆயிரம் பணமும் மாயமாகி இருந்தது.

    இதனால் நேற்றிரவு யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பணத்தை எடுத்து சென்றதை அறிந்த கடை உரிமையாளர் அம்மாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • இலங்கை வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் துபாயிலிருந்து தங்கம் கடத்தியது தெரியவந்தது.
    • கடத்தல்காரர்களை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு அடிக்கடி தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க ஆந்திர மாநில சங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம் விஜயவாடா சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையிலிருந்து விஜயவாடா நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 4.3 கிலோ எடையுள்ள தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

    கடத்தல் காரர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவர்கள் இலங்கை வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் துபாயிலிருந்து தங்கம் கடத்தியது தெரியவந்தது.

    மேலும் கடத்தலை மறைக்க தங்க கட்டிகள் மீது இருந்த அடையாளங்களை அழித்து உள்ளனர்.

    சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 6.8 கிலோ எடையுள்ள தங்க நகைகள், குவைத், கத்தார் ரியால், ஓமன் ரியாஸ் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் ரூ.1.5 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடத்தல்காரர்களை கைது செய்தனர்.அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முனீஸ்வரர் கோவிலில் இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்தது பூட்டி சென்றனர்.
    • காலை திறக்க வந்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    திருவாரூர்:

    முத்துப்பேட்டை வெள்ளகுளம் அருகே உள்ள முனீஸ்வரர் கோவிலில் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்தது.

    பின்னர் கோவிலை பூட்டி விட்டு நேற்று காலை திறக்க வந்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் கோவில் உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் அங்கிருந்த கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    அதேபோல் முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் துரைதோப்பு கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கோவில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்ைத திருட முயன்றனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    முத்துப்பேட்டையை அடுத்த பின்னத்தூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து நேற்று இரவு மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.3 ஆயிரத்தை திருடி சென்றனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், முத்துப்பேட்டை தாசில்தார் மகேஷ் குமார் ஆகியோர் சம்பவ நடந்த 3 கோவில்களையும் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்துள்ளார்.
    • வணிக வரித்துறை பெண் அலுவலரை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டிதேவி (வயது36). இவர் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகாசி வணிக வரித்துறையில் பணியாற்றும் குருராஜ் என்பவரின் மனைவி சித்ராதேவி அறிமுக மானார். அப்போது எங்கள் அலுவலகத்தில் காலிபணியிடம் இருப்பதாகவும், அதில் சேர நேர்முக கடிதம் அனுப்புவதாகவும் கூறினார்.

    இதற்கு செலவாகும் என தெரிவித்ததால் நான் பல்வேறு தவணைகளில் சித்ராதேவியிடம் ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை கொடுத்தேன். அதன்பின் அவர் அரசு வேலைக்கான ஆணையை கொடுத்தார். அதை சம்பந்தப்பட் அலுவலகத்தில் காண்பித்தபோது போலி யானது என தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த நான் பணத்தை திருப்பி தருமாறு கேட்டேன். ஆனால் பணத்தை தராமல் இழுத்தடித்தார். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மோசடி புகார் தொடர்பாக சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வணிகவரித்துறை பெண் அலுவலர் சித்ராதேவியை தேடி வருகின்றனர். அரசு அலுவலர் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பேச்சிமுத்து,செந்தில்குமார் ஆகியோர் பெருமாளை வழிமறித்து செலவுக்கு ரூ.200 தரும்படி கேட்டனர்.
    • ஆத்திரம் அடைந்த இருவரும், கத்தியை காட்டி மிரட்டி பெருமாளிடம் இருந்த ரூ. 100- ஐ பறித்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள படலையார்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது40). விவசாயி இவர் நேற்று நாகன்குளம் விலக்கில் வந்து கொண்டிருந்த போது கடம்போடுவாழ்வு பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து (25), சிங்கிகுளத்தை சேர்ந்த செந்தில்குமார் (44) ஆகியோர் அவரை வழிமறித்து செலவுக்கு ரூ. 200 தரும்படி கேட்டனர். அதற்கு பெருமாள் மறுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும், கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ. 100- ஐ பறித்தனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பேச்சிமுத்து, செந்தில் குமாரை கைது செய்தனர்.

    • சம்பவத்தன்று சதிஷ்குமார் திருக்குறுங்குடியில் இருந்து நாங்குநேரிக்கு சவாரி சென்றார்.
    • ஆனந்த் ஆட்டோவை வழிமறித்து நிறுத்தி, டிரைவர் சதிஷ்குமாரின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி, அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூ. 500-ஐ பறித்து கொண்டு சென்று விட்டார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் சதிஷ்குமார் (வயது24). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் திருக்குறுங்குடியில் இருந்து நாங்குநேரிக்கு சவாரி சென்றார். பின்னர் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

    அவர் ஏர்வாடியில் உள்ள டோனாவூர் விலக்கு அருகே வந்து கொண்டிருந்த போது, பெருமளஞ்சியை சேர்ந்த சுடலைமுத்துக்குமார் மகன் அன்பு ஆனந்த் (22) ஆட்டோவை வழிமறித்து நிறுத்தி, டிரைவர் சதிஷ்குமாரின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி, அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூ. 500-ஐ பறித்து கொண்டு சென்று விட்டார்.

    இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அன்பு ஆனந்தை தேடி வருகின்றனர்.

    • ஒரு நபருக்கு ரூ.30 வீதம் வசூல் செய்து 40 பேருக்கு பரிசோதனை செய்தனர்.
    • சிறைபிடிக்கப்பட்ட 4 பேரையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த சோழபுரம் மகாராஜபுரத்தில் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்ற 4 நபர்கள், நாங்கள் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம்.

    உங்களது கிராமத்திலும் முகாம் நடத்த உள்ளோம். குறைந்த அளவு பணம் செலுத்தினால் சிகிச்சை அளிக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் தெரிவித்தனர்.

    இதை நம்பிய 80 குடும்பத்தினருக்கு 2 நாட்களுக்கு முன்பு டோக்கன் கொடுத்து சென்றுள்ளனர்.

    அவர்கள் கூறியது போல் அந்த 4 பேரும் நேற்று ஊராட்சி தலைவரை சந்தித்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடத்தில் மருத்துவ முகாம் நடத்த அனுமதி கேட்டுள்ளனர்.

    அவர் அனுமதி அளித்ததை தொடர்ந்து, பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது.

    முகாமில் ஒரு நபருக்கு ரூ.30 வீதம் வசூல் செய்து 40 பேருக்கு பரிசோதனை செய்தனர்.

    இந்நிலையில், முகாமில் கலந்து கொண்டு மாத்திரை வாங்கி சாப்பிட்ட பெண் ஒருவர் தனது வீட்டுக்கு சென்றதும் மயக்கம் அடைந்துள்ளார்.

    அவரை உடனடியாக அக்கம், பக்கத்தினர் மீட்டு மருத்துவ முகாம் நடந்த இடத்துக்கு கொண்டு வந்து அங்கிருந்தவர்களிடம் என்ன மாத்திரை கொடுத்தீர்கள்? என கேட்டுள்ளனர்.

    அதற்கு அவர்கள் சரியாக பதில் கூறாததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், அந்த நபர்களிடம் நீங்கள் உண்மையிேலயே டாக்டர்கள் தானா? உங்களது சான்றிதழை காண்பியுங்கள் என்று கேட்டு அவர்களை பள்ளியிலேயே சிறைபிடித்தனர்.

    பின்னர், இதுகுறித்து சோழபுரம் போலீசாருக்கு தெரிவித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்ட 4 பேரையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று மக்களுக்கு என்ன மருந்து கொடுத்தீர்கள்? என்றும் அவர்கள் உண்மையான டாக்டர்கள் தானா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×