என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 141030
நீங்கள் தேடியது "நெஞ்சுவலி"
பரமக்குடியில் சென்னை போலீஸ்காரருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
ராயபுரம்:
சென்னை ஆர்.கே.நகர் போலீசில் குற்றப்பிரிவு எழுத்தாளராக பணிபுரிந்தவர் பாலகிருஷ்ணன் (35). இவர் பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.
அவரது அண்ணன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தங்கியுள்ளார். அவரைப் பார்க்க நேற்று புறப்பட்டு சென்றார். இரவு 9.30 மணி அளவில் பரமக்குடி சென்ற அவர் பஸ்சில் இருந்து இறங்கினார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் மயங்கிய அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
மரணம் அடைந்த போலீஸ்காரர் பாலகிருஷ்ணனுக்கு பிரியா என்ற மனைவியும், விபேஸ்நாத் என்ற மகனும், தன்விகா என்ற ஒரு வயது மகளும் உள்ளனர்.
சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து அந்த விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #MedicalEmergency #ChennaiAirport
சென்னை:
இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட விமானி, நிலைமையை எடுத்துக்கூறி விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டார்.
சென்னை விமான நிலையத்தின் அனுமதி கிடைத்ததும், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நெஞ்சு வலியால் துடித்த பயணிக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் மற்ற பயணிகளுடன் விமானம் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றது. #MedicalEmergency #ChennaiAirport
துபாயில் இருந்து சிங்கப்பூர் நோக்கி தனியார் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. அந்த விமானம் இன்று காலை தமிழக வான் எல்லையில் பறந்தபோது, அதில் பயணித்த 48 வயது நிரம்பிய பயணி திடீரென நெஞ்சுவலியால் துடித்தார்.
இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட விமானி, நிலைமையை எடுத்துக்கூறி விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டார்.
சென்னை விமான நிலையத்தின் அனுமதி கிடைத்ததும், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நெஞ்சு வலியால் துடித்த பயணிக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் மற்ற பயணிகளுடன் விமானம் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றது. #MedicalEmergency #ChennaiAirport
மோசடி வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர், நெஞ்சுவலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது திடீரென உயிரிழந்தார்.
கோவை:
கரூர் மாவட்டம் வண்ணையர்பள்ளி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 57). இவர் மீது ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் மோசடி, கொலை மிரட்டல் புகார் உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில்குமார் கடந்த 23-ந் தேதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறினார். உடனே அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கைதிகள் வார்டில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இன்று அதிகாலை 3.30 மணி அளவில் செந்தில் குமாருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே டாக்டர்கள் விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் இறந்துவிட்டது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெஞ்சுவலி காரணமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். #CVShanmugam #ApolloHospital
சென்னை:
தமிழக சட்டத்துறை அமைச்சராக பணியாற்றி வருபவர் சி.வி.சண்முகம் (வயது 45). இவருக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறும்போது, ‘சி.வி.சண்முகத்தின் உடல்நிலை சீராக இருக்கிறது. அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்’ என்றனர். #CVShanmugam #ApolloHospital

நெஞ்சுவலி காரணமாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். #CVeShanmugam
சென்னை:
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் (45) நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி. சண்முகம் தமிழக அமைச்சரையில் சட்டத்துறை அமைச்சராக உள்ளார். இன்று அதிகாலையில் சி.வி. சண்முகத்துக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். #CVeShanmugam #ApolloHospital
சேலத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சென்ற பஸ்சில் டிரைவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு இறக்கையிலேயே இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஏ.கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசுந்தரரானாந்த (வயது 38). இவர் விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை வழக்கம் போல் சேலத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பாண்டிச்சேரிக்கு பஸ் புறப்பட்டது. சேலம் பொன்னம்மாபேட்டை அருகில் சென்றபோது திடீரென்று டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் பஸ்சை ரோட்டு ஓரத்தில் நிறுத்திவிட்டு இருக்கையில் இருந்தவாறே இறந்துவிட்டார்.
இதுகுறித்து கண்டக்டர் அம்மாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனே அங்கு சென்று டிரைவர் கிருஷ்ணா உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இவருக்கு மதுகாம்பாள் என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

×

X