search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • மாபெரும் தமிழ் கனவு என்ற பெயரிலான பண்பாட்டு பரப்புரை நிகழ்வுகள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
    • சொற்பொழிவுகள் நடத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    தமிழ் இணைய கல்விக்கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்க ளிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமித த்தையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ் கனவு என்ற பெயரிலான பண்பாட்டு பரப்புரை நிகழ்வுகள் மாவட்டந்தோ றும் நடத்தப்பட்டு வருகிறது.

    நமது தமிழ் மரபின் வளமையையும், பண்பா ட்டின் செழுமையையும், சமூகசமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டு க்கான வாய்ப்புகளையும் இளம்தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விகழகத்தின் சார்பில் இந்த பரப்புரை திட்டம் முன்னெடுக்கப்ப ட்டுள்ளது.இத்திட்டத்தி ன்கீழ் தமிழ் மரபும் - நாகரிகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப்பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல்ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழி ல்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில்முனைவுக்கான வாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் கல்விப் புரட்சி ஆகிய தலைப்புகளின் கீழ் சொற்பொழிவுகள் நடத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் பண்பாட்டு பரப்புரை நிகழ்வு திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் யாமறிந்த புலவரிலே என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலா , மானுடம் வெல்லும் என்ற தலைப்பில் ஊடகவியலா ளர் குணசேகரன் சொற்பொழிவாற்றினர். திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் இத்திட்டம் குறித்த நோக்கவு ரையை வழங்கினார். திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மொத்தம் 9 கல்லூரிகளை சார்ந்த சுமார் 1150 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி யில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதலு க்கான கையேடும், தமிழ்ப் பெருமிதம் என்கின்ற கையேடும் வழங்கப்பட்டது.

    இதில் தமிழ் பெருமிதம் கையேட்டில் உள்ள ஏதேனும் ஒரு பக்கத்தில் உள்ள தகவல் குறித்து ஒருநிமிடத்தில் தங்களுடைய சிறப்பான கருத்துக்களை தெரிவித்த மாணவ, மாணவிகளை பாராட்டி பெருமித செல்வன் மற்றும் பெருமித செல்வி என்கின்ற பட்டத்தோடு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கா ன வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி வழிகாட்டுதல் குறித்த கண்காட்சி, நான் முதல்வன் திட்டம் குறித்த கண்காட்சி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சார்பிலும், இதர கடன் உதவிகள் தொடர்பான கண்காட்சி மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் தாட்கோ நிறுவனத்தின் சார்பிலும், புத்தக அரங்குகள் மாவட்ட நூலகத்தின் சார்பிலும் சுயஉதவி குழுக்களில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்ப ட்டிருந்தது.

    இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பல்லவி வர்மா , சமூக பாதுகாப்பு த்திட்ட தணித்துணை ஆட்சியர் அம்பாயிரநாதன், கல்லூரி முதல்வர் ராஜே ஸ்வரி, பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பாரம்பரிய வில்லுப்பாட்டில் விழிப்புணர்வு பாடல்கள் பாடினார்.
    • பள்ளி மாணவர்களுக்கு மரங்கள், காடுகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அடுத்த கொக்கலாடி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் சர்வதேச வனநாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கொக்கலாடி ஊராட்சி தலைவர் வசந்த் தலைமை தாங்கினார்.

    பள்ளி தலைமை ஆசிரியர் அருள் முன்னிலை வகித்தார். நீர்நிலை பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ஐயப்பன், ஹபிபுல்லா, அம்பிகாபதி, சிவகுமார் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு மரங்கள், காடுகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

    இதில் மாணவர்கள் வனங்களை காப்பது குறித்து பாரம்பரிய வில்லுப்பாட்டில் விழிப்புணர்வு பாடல்கள் பாடினார். பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. முடிவில் ஆசிரியர் வளர்மதி நன்றி கூறினார்.

    • சுமார் 200 மாணவ-மாணவிகளின் வீடுகளுக்கே சென்று மரக்கன்று நட்டு கொடுத்துள்ளனர்.
    • மரங்களை நன்றாக வளர்க்கும் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக வனநாளை முன்னிட்டு பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜுலு, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் நிஷாந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் வீரராசு, பொருளாளர் கனகராஜ், துணைத்தலைவர் வெற்றிவேல், செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், சக்திவேல், ஆசிரியர்கள் முருகானந்தம், மாணிக்கம் மற்றும் சுமார் 200 மாணவ-மாணவிகளின் வீடுகளுக்கே சென்று மரக்கன்று நட்டு கொடுத்துள்ளனர். பின்பு பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது:-

    மரங்களை வளர்த்து நன்றாக காய்க்கும் நிலைக்கு கொண்டு வரும் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்றார்.

    மேலும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், மாணவர்களிடையே மரம் வளர்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தவும் இப்பணியை செய்வதாகவும், இப்பணி தன் வாழ்நாளில் நிறைவான பணியாக கருதுவதாகவும் தெரிவித்தார்.

    • சிட்டுக்குருவியானது தன் இனப்பெருக்கத்துக்கான வாழ்வியல் சூழலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.
    • சிறந்த படம் வரைந்த மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் உதவிபெறும் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியர் வசந்தா தலைமை தாங்கி மாணவர்களுக்கு சிட்டுக்குருவியின் முக்கியத்துவம் குறித்து பேசுகையில்:-

    மனிதனோடு மனிதனாய் குடும்பத்தில் ஒருவராக வாழ்கிற பறவை இனம்தான் இந்த சிட்டுக்குருவி.சிட்டுக்குருவி வீடுகளில் கூடுகட்டினால், அக்குடும்பத்தில் தலைமுறைகள் வாழையடி வாழையாக தழைத்தோங்கும் என்கிற நம்பிக்கை இன்றும் கிராமமக்களின் மனதில் உள்ளன.

    அதனால் தான், வீடுகளில் சிட்டுக்குருவி கூடு கட்டினால் அதை கலைக்க மாட்டார்கள்.அதனால்,இன்றைய கால ங்களில் சிட்டுக்குருவியானது தன் இனப்பெருக்கத்துக்கான வாழ்வியல் சூழலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது என்றார்.

    மேலும், மாணவர்கள் சிட்டுக்குருவி வளர்க்க கூண்டுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். மாணவர்கள் சிட்டுக்குருவியின் படத்தை வரைந்து வண்ணம் தீட்டினார். சிறந்த படம் வரைந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    விழாவில் பள்ளி செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், ஆசிரியர்கள் வசந்தா, சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, திவ்யா, விஜயலக்ஷ்மி, ஆனந்தன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவர்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக சென்று இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே மருதக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மாதுரான் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது.

    மருதக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் அம்மா செல்லம் தலைமை வகிக்தார். செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

    தலைமை ஆசிரியர் வெங்கடே ஸ்வரி வரவேற்றார்.

    ஆசிரியர் அல்லிராணி நன்றி கூறினார்.

    மாதுரான் புதுக்கோட்டை யில் உள்ள அனைத்து தெருக்களிலும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக சென்று எண்ணும், எழுத்தும் இயக்கத்தின் முக்கியத்துவம்

    குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    கும்பகோணம்:

    குடந்தை வீரத்தமிழச்சி சிலம்பம் பள்ளி சார்பில் கும்பகோணம் பட்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நோபல் உலக சாதனை படைத்த மாணவர்களுக்கும் மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.

    கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

    நிகழ்ச்சியில், கும்பகோ ணம் மாநகராட்சி மேயர் க.சரவணன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவரும், கும்பகோணம் மத்திய ஒன்றிய திமுக செயலாளருமான கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ.சுதாகர், கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், ரோட்டரி அப்துல் கபூர், மருத்துவர் ஆனந்த், தொழிலதிபர் வின்வேலோகசந்திர பிரபு, பள்ளி தாளாளர் புனிததேவி, பயிற்சி ஆசிரியர் லெ.ராஜலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ- மாணவிகள் தன் சுத்தம் பேண வேண்டிய அவசியம் குறித்து பேசினார்.
    • புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் வரும் கேடுகள் குறித்து பேசினார்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த இடையூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் உலக வாய்வழி சுகாதார தினத்தை முன்னிட்டு மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பள்ளி தலைமையா சிரியர் கோதண்டராமன் தலைமையில் நடைபெற்றது.

    முன்னதாக ஆசிரியை சித்ரா அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் இடையூர் ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர் அருணா கலந்து கொண்டு மாணவ- மாணவிகள் தன் சுத்தம் பேண வேண்டிய அவசியம் குறித்தும், பல் பராமரிப்பு குறித்தும், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் வரும் கேடுகள் குறித்தும், வாய்வழி புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் குறித்தும் பேசினார்.

    இதனை மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். இதில் சுகாதார ஆய்வாளர் பழனியப்பன், பல் மருத்துவ உதவியாளர் பொன்னரசன், ஆசிரியை சசிகலா உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியர் பாலசுப்ரமணியம் நன்றி கூறினார்.

    • பல்வேறு நிலைகளை கற்றுத்தேர்ந்த மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
    • மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டி னம் மாவட்டம் வேளாங்கண்ணி யில் சாய் காய் டூ அட்வ ர்ஷர் அகாடமியில் பயிற்சி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சியை அகில இந்திய கராத்தே சங்கத்தின் டெக்னிக்கல் டைரக்டரும் தமிழ்நாடு கராத்தே சங்கத் தலைவருமான சாய் புருஸ் தொடக்கி வைத்தார்.

    போட்டியில் கராத்தேவில் கட்டா, ஸ்மித்தே, டீம் கட்டா, பயர் பிரிக்ஸ் பிரேக், குத்துச்சண்டை, நேரடி சண்டை போட்டிகள் நாட்டுப்புறக் கலையான சிலம்பம் சுற்றுதல், உள்ளிட்ட பல்வேறு நிலைகளை கற்று தேர்ந்த மாணவர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர்.

    அதை தொடர்ந்து பல்வேறு நிலைகளை முடித்த மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர் பிளாக் பெல்ட் பெற்ற பெற்றோர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

    இந்த நிகழ்ச்சியினை நாகை மாவட்ட கராத்தே சங்கத் தலைவரும் பயிற்சியாளருமான சென்சாய் ராஜேந்திரன் ஏற்பாடு செய்திருந்தார்.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக தாமஸ் ஆல்வா எடிசன் சென்சாய் சாய் புரூஸ் கலந்து கொண்டார்.

    இதில் ஆசியன் கராத்தே நடுவர் அறிவழகன், மரிய சார்லஸ், டாக்டர் உமா, மார்ட்டின் பாக்யராஜ், இளம்பரிதி, பூமாலை, சென்சை அன்பழகன் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்வினை தலைமை ஆசிரியர் ஆறு துரைக்கண்ணன் தொகுத்து வழங்கினார்.

    • 8 மாவட்டங்களை சார்ந்த 40-க்கும் அதிகமான இலக்கியவாதிகளும், கவிஞர்களும் கலந்து கொண்டனர்.
    • மாணவர்களுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசு வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலுள்ள சங்கீத மகால், சரசுவதி மகாலில் இரு நாள்களுக்கு நடைபெற்று வந்த காவிரி இலக்கியத் திருவிழா நேற்று மாலை நிறைவடைந்தது.

    விழாவில் சரசுவதி மகாலில் படைப்பு அரங்கமும், சங்கீத மஹாலில் பண்பாட்டு அரங்கமும் நடைபெற்றன.

    இவற்றில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 8 மாவட்டங்களை சார்ந்த 40-க்கும் அதிகமான இலக்கியவாதிகளும், கவிஞர்களும் கலந்து கொண்டு பேசினர்.

    பின்னர், இவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    இதன் நிறைவு விழா சங்கீத மகாலில் நேற்று மாலை நடைபெற்றது.

    இதில், பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசுகள் வழங்கி பேசினார்.

    இவ்விழாவில் பொது நூலக இயக்குநர் இளம்பகவத், எழுத்தாளர் முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, சரசுவதி மகால் நூலக நிர்வாக அலுவலர் முத்தையா வரவேற்றார்.

    நிறைவாக, பொது நூலகத் துணை இயக்குநர் இளங்கோ சந்திரகுமார் நன்றி கூறினார்.

    • காவலாளி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்
    • இந்தப் பிரச்சினை தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் சார்பிலும் மனு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 100-க்கும் அதிகமானோர் இன்று கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்தனர். அவர்கள் மக்கள் குறை தீர்க்கும் நாளில் ஒரு மனு கொடுத்தனர்.

    அதில் மாணவர் ஒருவரை, கல்லூரி இரவு காவலாளி தாக்கியதாகவும், இதுபற்றி கல்லூரி முதல்வரிடம் கூறிய நிலையில், சில மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அதனை ரத்து செய்ய வேண்டும், காவலாளி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக மாணவர்கள் ஏற்கனவே ஒரு முறை மனு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரச்சினை தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் சார்பிலும் மனு கொடுக்கப்பட்டது.

    ஈத்தாமொழி புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தங்கவேல் மனவைி கல்கி, குறைதீர்க்கும் முகாமில் கொடுத்த மனுவில், கணவர் இறந்துவிட்ட பிறகு, சொத்துக்களை தனது மகன் ஏமாற்றி வாங்கிக் கொண்டதாகவும், அதன்பிறகு மருமகளோடு சேர்ந்து தன்னை துன்புறுத்துவதாகவும் கூறி உள்ளார். அவர்களின் மிரட்டலுக்கு பயந்து நான் வீட்டை விட்டு வெளியேறி, யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறேன்.

    எனவே நான் வாழும் காலம் வரை எனது வீட்டில் இருந்து வாழவும் வாழ்வாதாரத்திற்கும் மருத்துவ செலவிற்குமான வருமானத்தையும் வாங்கித் தர வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    • முதியோர் பாதுகாப்பு, சாலை விதிகளை மதித்து நடத்தல் போன்ற பல்வேறு கருத்துக்கள் குறித்து பேசினார்.
    • முன்னதாக கல்லூரி முதல்வர் அனைவரையும் வரவேற்றார்.

    தரங்கம்பாடி:

    செம்பனார்கோயில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் புதுச்சேரி ஓய்வு பெற்ற காவல்துறை கண்கா ணிப்பாளர் கொண்டா வெங்கடேஸ்வரராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது வரதட்ச ணை ஒழிப்பு, பாலியல் வன்கொடுமை இளம்பெ ண்கள் பலாத்காரம்,முதி யோர் பாதுகாப்பு, சாலை விதிகளை மதித்து நடத்தல் போன்ற பல்வேறு கருத்து க்கள் குறித்து விரிவாக பேசினார். முன்னதாக கல்லூரி முதல்வர் அனைவரையும் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர், செயலர் மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • ரூ.5 லட்சம் செலவில் இந்நாள் மாணவர்களுக்கான உணவருந்தும் கூடத்தை அமைத்துக் கொடுத்தனர்.
    • கல்லூரி கால நிகழ்வுகளை பரிமாறிக்கொண்டு நண்பர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த புத்தூரில் சீனிவாசா சுப்பராய அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி அமைந்துள்ளது.

    பழைமை வாய்ந்த இக்கல்லூரியில் 1960 ஆம் ஆண்டு முதல் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் வைர விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    1960-ம் ஆண்டு முதல் இக்கல்லூரியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் பணியாற்றி மற்றும் ஓய்வு பெற்ற நிலையில் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    முன்னாள் மாணவர்கள் தங்களது கல்லூரி காலத்தில் தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து பொன்னாடை போற்றி நினைவு பரிசுகள் வழங்கி மரியாதை செய்து கவுரவித்தனர்.

    1993 ஆம் ஆண்டு கல்வி முடித்த முன்னாள் மாணவர்கள் ரூ.5 லட்சம் செலவில் இந்நாள் மாணவர்களுக்கான உணவருந்தும் கூடத்தை அமைத்துக் கொடுத்து அதனை திறந்துவைத்தனர்.

    பலர் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தற்பொழுது முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்த நிகழ்வில் அனைவரும் இளைஞர்கள் போல் ஒருவருக்கொருவர் தங்களது கல்லூரி கால நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொண்ட துடன் தங்களது சக நண்பர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

    இதில் முன்னாள் மாணவர்களாகிய விஸ்வநாதன், சேகர், கண்ணன், திருநாவுக்கரசு, சுப்ரமணியன், தில்லை நடராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

    ×