search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் நடந்தது.
    • அப்துல் கலாமின் பொன்வரிகளான கனவு காணுங்கள் என்பதை மேற்கோள் காட்டி எம்.கே.ஜானகிராமன் பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவரும், உளவியலாளரும், ஊக்கமளிக்கும் பேச்சாளரும், ஓமன் சலாலாவில் இந்திய கவுன்சில் கிளப்பிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவருமான டாக்டர் எம்.கே.ஜானகிராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பொன்வரிகளான கனவு காணுங்கள், தூக்கத்தில் வருவது அல்ல கனவு, நம்மை தூங்க விடாமல் செய்வதே கனவு என்று மேற்கோள் காட்டி பேசினார். மேலும் மாணவர்கள் வாழ்க்கையில் சாதிப்பதற்கு தொடர்புத்திறன், தன்னம்பிக்கை, சுய உந்துதல், நேர மேலாண்மை, ஒழுக்கம் போன்ற நற்பண்புகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, கணித துறை தலைவி வாசுகி, வேதியியல் துறை பேராசிரியர் ஜோதி ஸ்டெல்லா ஆகியோர் செய்து இருந்தனர்.

    • புத்தாக்க மேம்பாடு நிகழ்ச்சி பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.
    • தொழில் தொடங்கும் முயற்சியுடன் வங்கியை எவ்வாறு அணுக வேண்டும் என்பது பற்றி எடுத்துரைத்தனர்.

    பேராவூரணி:

    தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மண்டல மையமான அரசினர் பாலி–டெக்னிக் கல்லூரி திருச்சி சார்பாக இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான புத்தாக்க மேம்பாடு நிகழ்ச்சியை தஞ்சை மாவட்டம், பேராவூரணி தாலுகா டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரியில் திருச்சி அரசினர் பாலி–டெக்னிக் கல்லூரி முதல்வர் எம்.தமிழ்ச்செல்வன், மைய ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தொழில் முனைவு வளர்ச்சித் துறையின் ஒருங்கிணைப்–பாளரும் துணை முதல்வருமான கணேசன் வரவேற்பு உரையாற்றி, இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். கல்லூரி முதல்வர் எம்.மதிவாணன் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தங்களது படிப்பை முடித்து தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர்கள் எஸ்.சத்யா மற்றும் அரவிந்தன் ஆகியோர் பங்கு பெற்று மாணவர்களிடம் தொழில் தொடங்கும் முயற்சியுடன் வங்கியை எவ்வாறு அணுக வேண்டும், வங்கியில் அரசின் சலுகைகள் பற்றி எடுத்துரைத்தனர்.

    மேலும், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஜிபிஎம் ப்ராடக்ட்ஸ் நிறுவ–னத்தை நடத்தி வரும் தொழில் முனை–வோர் லோகேஷ், மாணவர்களிடம் தொழில் முனைவர்களாக எவ்வாறு உருவாக வேண்டும் என்று ஊக்குவித்து கருத்துக்களை எடுத்துரைத்தார்.

    முடிவில் கல்லூரி முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் கனிமொழி நன்றி கூறினார்.

    • 98 பேரின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது
    • சளி மற்றும் காய்ச்சல் பரிசோதனை பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலானோர் மாணவ-மாணவிகளாகவே உள்ளனர்

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் இன்புளூ யன்சா எனப்படும் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத் திலும் சுகாதாரத்துறை சார்பில் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலமாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது

    பள்ளிகளிலும் சிறப்பு குழுக்கள் மூலம் மாண வர்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரு கிறார்கள். முதல் நாள் 2982 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 10 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதில் 3 பேர் பள்ளி மாண வர்கள் ஆவார்கள்.

    இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக சோதனை நடந்தது. மாவட்டம் முழுவ தும் 2501 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் 7 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்துள்ளது. 98 பேரின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 பேரில் 3 பேர் பள்ளி மாண வர்கள் ஆவார்கள்.சளி பரிசோதனைக்கு அனுப் பப்பட்டுள்ள 98 பேரில் 53 பேர் மாணவர்கள் ஆவார்கள்.

    சளி மற்றும் காய்ச்சல் பரிசோதனை பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலானோர் மாணவ-மாணவிகளாகவே உள்ளனர். எனவே மாணவ-மாணவி கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகா ரிகள் வேண்டுகோள் விடுத் துள்ளனர். இன்று 3-வது நாளாக அங்கன்வாடி மையங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் மீனாட்சி கூறுகையில், இன் புளூயன்சா பாதிப்பு வராமல் தடுக்க கொரோனா காலத்தில் கடைபிடிக் கப்பட்டது போன்று முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இளநீர் பழங்கள் சாப்பிடலாம். காய்ச்சல் சளி பிரச்சனையில் இளநீர் சாப்பிட முடியவில்லை என்றால் அரிசி கஞ்சி வைத்து குடிக்க வேண்டும்.

    கஞ்சியை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பருக வேண்டும். ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீட்டில் இருப்பவர்கள் கண்டிப்பாக நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண் டும். போதிய ஓய்வு அவசியம் தேவை. மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றார்.

    • 3 பேரும் ஒரே மோட்டர் சைக்கிளில் குமரகிரி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கல்லூரி பஸ்சை முந்தி செல்லும்போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற சரக்கு ஆட்டோவின் பின் பகுதியில் மோதினர்.
    • இதில் கீழே விழுந்த 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி பொன்னுசாமி தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவர் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது 20). இவர் உடையாப்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். ரஞ்சித்குமாருக்கு நேற்று பிறந்த நாள் ஆகும். அவர் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டார்.

    ரஞ்சித்குமாரின் நண்பர்கள் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சுந்தர் (22), ஓமலூர் பாகல்பட்டியை சேர்ந்த கவுதம் (19). இவர்கள் இருவரும் ரஞ்சித்குமாரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று அவரை அழைத்து வந்தனர்.

    3 பேரும் ஒரே மோட்டர் சைக்கிளில் குமரகிரி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கல்லூரி பஸ்சை முந்தி செல்லும்போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற சரக்கு ஆட்டோவின் பின் பகுதியில் மோதினர்.

    இதில் கீழே விழுந்த 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தார். கவுதம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார். சுந்தர் அரியனூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட சென்றபோது விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவர்கள் தீய பழக்கங்களில் இருந்து மீட்டு எடுக்கும் வகையில் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    சீர்காழி:

    சீர்காழி காவல்துறை சார்பாக சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா திறந்துவைத்தார்.

    மாணவர்களை தவறான பழக்கங்களிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் ஊராட்சியில் சீர்காழி காவல்த்துறை சார்பாக சிறுவர் மற்றும் சிறுமியர்கள் மன்றம் தொடக்கவிழா நடைபெற்றது.

    சீர்காழி டிஎஸ்பி.லாமெக் தலைமை வகித்தார்.

    காவல்ஆய்வாளர் சிவக்குமார், எழுத்தர் குலோத்துங்கன் முன்னிலை வகித்தனர்.

    மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். எஸ். நிஷா மன்றத்தை திறந்து வைத்து மாணவர்களுக்கு விளையாட்டு உபகரண பொருட்களை வழங்கினார்.

    மாணவர்கள் தீய பழக்கங்களில் இருந்து மீட்டு எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மன்றத்தில் பொது நூலகம், விளையாட்டு பொருட்களை பயன்படுத்தும் வகையில் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் திறக்கப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட திருக்குறள் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி பொதுமக்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    • குழுக்கள் அமைத்து அதன் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
    • 200-க்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளியில் 2 கழிவறைகள் மட்டுமே உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் அஸ்கர் நிஷா தலைமை தாங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் வேம்பு முன்னிலை வகித்தார்.பள்ளி ஆசிரியர் கீதா வரவேற்றார்.

    கூட்டத்தில் பள்ளியில் ஆண்டு விழா நடத்துவது, அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் குழுக்கள் அமைத்து அதன் மூலம் ஏற்பாடு செய்வது, விளையாட்டு மன்றம் இலக்கிய மன்ற போட்டிகள் நடத்துவது, 200 -க்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளியில் இரண்டு கழிவறைகள் மட்டுமே உள்ளது.

    எனவே பள்ளி குழந்தைகளின் தேவையை கொண்டு கழிவறைகள் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜவகர் நிஷா முகமது ரபிக், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளி ஆசிரியர் அகல்யா நன்றி கூறினார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆசிரியர்களை கண்டித்து மாணவர்கள் தர்ணா பேராட்டம் நடத்தினர்.
    • சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லட்சுமியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை 86 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். அவர் சரிவர பள்ளிக்கு வருவதில்லை, ஆசிரியர்கள் தாங்கள் சாப்பிட்ட தட்டு, டீ கிளாஸ், கழிவறைகளை சுத்தம் செய்ய மாணவர்களை கட்டாயப்படுத்தியதாகவும், அவ்வாறு செய்யாத மாணவர்களுக்கு தண்டனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு செய்ய மறுத்த 8-ம் வகுப்பு மாணவியை முட்டி போடச்சொல்லி தண்டனை அளித்ததாக கூறி அதனை கண்டித்து நேற்று காலை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் ரங்கசாமி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.

    • சீர்காழியில் திருக்குறள் பண்பாட்டு பேரவை 31-ம்ஆண்டு நிறைவு விழா நடை பெற்றது.
    • மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி ஆகிய பள்ளிகளில் இருந்து திருக்குறள் போட்டிகள் நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி தாலுக்காவில் உள்ள மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி ஆகிய பள்ளிகளில் இருந்து திருக்குறள் பண்பாட்டு பேரவை 31ஆம்ஆண்டு நிறைவு விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் ஆண்டு முழுவதும் நடத்தி அதிலிருந்து வெற்றி பெறும் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், பெற்றோர்கள், சீர்காழி - எல்.எம்.சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    புலவர் பனசை. மூர்த்தி, விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி ராதாகிருஷ்ணன், பேராசிரியர் வீழிநாதன், சாயிராம் கல்விக்குழுமம் தாளாளர் ராஜா ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

    திருக்குறள் பண்பாட்டுப் பேரவை செயலர் சிவ.அன்பழகன், தலைவர் வே. சக்கரபாணி, பொருளர். முரு.முத்துக்கருப்பன் ஆகியோர்கள் தலைமை வகித்தனர். அகோரமூர்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

    நிகழ்ச்சியில் ராமநாதன், எல். எம். சி பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் மோகன் தாஸ் அறிவாநந்தம், வைத்தியநாத சாமி, ச.மு.இ மேனிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் எஸ். முரளிதரன், பேரவை கொள்கை பரப்புச் செயலர் க.இளங்கோ, பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராமலிங்கம், சுபம் வித்யா மந்திர் சிபிஎஸ்சி பள்ளி முதல்வர் வித்யா ஆகியோர் கலந்து கொண்டனர். துணை செயலர் நந்த.இராசேந்திரன் நன்றிக் கூறினார்.

    • தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
    • விளையாட்டு போட்டிகள் நடந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர், தென்னம்பா ளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், மகளிர் தின விழா, அறிவியல் கண்காட்சி, சிறுதானிய உணவுத்திருவிழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

    பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி வரவேற்றார். தெற்கு வட்டார கல்வி அலுவலர் ஐஸ்டின்ராஜ் தலைமை வகித்தார். தானியங்களால் தயாரி க்கப்பட்ட உணவுகளை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் வீடுகளில் தயார் செய்து உணவுத்திருவிழாவுக்கு எடுத்து வந்திருந்தனர். அறிவியல் கண்காட்சியில் பெட்ரோல் பங்க் செயல்பாடு, வேக்குவம் கிளீனர், கடற்கரை லைட்ஹவுஸ், எரிமலை, நீர்சுத்திகரிப்பான், சிறுநீரகம், இதயம் செயல்பாடு, வீடுகளின் வகைகள், காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தங்கள் படைப்புகளை ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

    பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியைகள் பங்கேற்று மகளிர் தின விழா, விளையாட்டு போட்டிகள் நடந்தது. மாவட்ட அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    • மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டெஸ்க், ஸ்விட்ச், மின்விசிறி போன்ற தளவாட பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.
    • எங்களது பிள்ளைகள் இனி இது போன்ற தவறுகள் நடக்காத வகையில் பார்த்து கொள்கிறோம்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வு முடிந்தது. பின்னர் அந்த மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டெஸ்க், ஸ்விட்ச், மின்விசிறி போன்ற தளவாட பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.

    உடனே சத்தம் கேட்டு தலைமை ஆசிரியர் முத்துசாமி வந்து பார்வையிட்டார். அங்கு மாணவர்கள் மேசை, நாற்காலிகளை உடைத்து கொண்டிருந்தனர். உடனே தலைமை ஆசிரியர் மாணவர்களை சத்தம் போட்டு கண்டித்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர்.

    அங்கு பள்ளியில் நடந்த சம்பவத்தை கூறி வகுப்பறையையும் தலைமை ஆசிரியர் காட்டினார். இதனை பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். பின்னர் எங்களது பிள்ளைகள் இனி இது போன்ற தவறுகள் நடக்காத வகையில் பார்த்து கொள்கிறோம்.

    இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கூறினார். நடந்த இந்த சம்பத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம் என்று கூறி பெற்றோர்கள் எழுதி கொடுத்தனர். இதனால் மாணவர்களிடம் எழுதி வாங்கி விட்டு எச்சரித்து அனுப்பினர்.

    இதையடுத்து பள்ளி வகுப்பறையில் மேசை, நாற்காலி போன்ற பொருட்களை உடைக்கும் சம்பவத்தை ஒரு மாணவன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வரைலாக பரவி வருகிறது.

    இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி கூறுகையில் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் வகுப்பறையில் மேசை, நாற்காலிகளை அடித்து உடைத்து நொறுக்கி யுள்ளனர்.

    இதனால் அவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து மாணவர்களை எச்சரித்து எழுதி வாங்கியுள்ளோம். மேலும் இது சம்மந்தமாக முதன்மை கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். அவர் இந்த சம்பவத்தை விசாரித்து மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்று கூறினார். 

    • போட்டியில் 510 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி வேதாரண்யம் தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    போட்டியை வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார்.

    இதில் 510 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    விழாவிற்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமை தாங்கி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    இதில் பள்ளி தாளாளர் நித்திய சகாயராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சதாசிவம், உதயம் முருகையன், வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு, வக்கீல் அன்பரசு, புயல் ஆசிரியர் தட்சிணாமூர்த்தி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற வேண்டும் என உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாக குற்றச்சாட்டு
    • இந்த ஆண்டும் அப்படித்தான் நடக்கப் போகிறது என்று ஆசிரியர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில், ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வுகளின்போது அரசு பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற வேண்டும் என உயர் அதிகாரிகள் கொடுக்கும் நெருக்கடி காரணமாக முதன்மை கல்வி அலுவலர்களும், பள்ளி ஆசிரியர்களும் மாணவர்கள் காப்பியடிக்க அனுமதிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

    பெரம்பலூர் மாவட்டம், ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் முதலிடங்களை பெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கல்வித் துறையின் தற்போதைய ஆணையர் நந்தகுமார், பெரம்பலூர் ஆட்சியராக இருந்தபோதும், இதே போன்று நெருக்கடி கொடுத்து மாணவர்களை பார்த்து எழுத அனுமதித்ததாகவும், இந்த ஆண்டும் அப்படித்தான் நடக்கப் போகிறது என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த அறிக்கை, பள்ளிக்கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×