search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் ஆய்வு.
    • புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட் கட்டிடங்களின் கட்டுமான பணிகள் ஆய்வு.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது-

    தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் இந்தலூர்ஊராட்சி கடையக்குடி கிராமத்தில் பிளவர் பிளாக் சாலை பணி நடைபெற்றுவருவதை குறித்தும் கடையக்குடி கிராமத்தில் உள்ள ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    பின்னர் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியர்களின் கல்வி தரம் குறித்தும், நெடுங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ- மாணவி யர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி பேரூ ராட்சி பஸ் நிலையத்தில் பேரூராட்சிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் , புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட் கட்டிடங்களின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்து மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) கனகராஜ், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன், பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் 9 மாவட்டங்களை சேர்ந்த 26 அணிகள் பங்கேற்றது.
    • குத்தாலம் அரசு கல்லூரி 2-ம் இடம், அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி 3-ம் இடம் பிடித்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மனோரா கடற்கரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தஞ்சாவூர் மாவட்ட பிரிவு சார்பில் திருச்சி மண்டல அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான கடற்கரை கையுந்து பந்து போட்டி நடைபெற்று வருகிறது.

    இதன் இறுதி போட்டியை நேற்று சனிக்கிழமை மாலை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். முன்னதாக இரண்டு அணிகளின் வீரர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), பயிற்சி ஆட்சியர் விஷ்ணுபிரியா, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர்

    மு.கி.முத்துமாணிக்கம், தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், சேது பாவசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன், மீனவர் பேரவை மாநில துணைச் செயலாளர் தாஜூதீன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த 26 அணிகள் பங்கேற்றது.

    இதில் திருச்சி ஜமால் கல்லூரி அணியினர் முதலிடம் பெற்றனர். குத்தாலம் அரசு கலைக் கல்லூரி அணியினர் இரண்டாம் இடமும், அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி அணியினர் மூன்றாவது இடமும் பெற்றனர்.

    வெற்றி பெற்ற அணியினர் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை கையுந்து போட்டியில் கலந்து கொள்வார்கள் என கூறினர்.

    • ஒற்றை கம்பு சுற்றுதல், இரட்டை கம்பு சுற்றுதல், சிலம்ப சண்டை என்று 3 விதமாக நடைபெற்றது.
    • வயதின் அடிப்படையிலும், விளையாட்டின் அடிப்படையிலும் 2 பிரிவுகளாக நடைபெற்றது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. போட்டியில் கும்பகோணம் பகுதியை சுற்றியுள்ள பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    போட்டியானது மாணவ- மாணவிகளுக்கு தனித்தனி பிடிவுகளாக ஒற்றை கம்பு சுற்றுதல், இரட்டை கம்பு சுற்றுதல், சிலம்ப சண்டை என்று 3 விதமாக நடைபெற்றது. மேலும், வயதின் அடிப்படையிலும், விளையாட்டின் அடிப்படையிலும் 2 பிரிவுகளாக நடைபெற்றது.

    போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழையும் பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் வழங்கினார். விளையாட்டுக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் கார்த்திகேயன் செய்திருந்தார்.

    • கல்லூரி சுற்றிலும் வனப்பகுதிகள் சூழ்ந்துள்ளது.
    • கல்லூரி மாணவர்கள் தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சக்தி மலை உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோவிலும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியும் அமைந்துள்ளது. இதை சுற்றிலும் வனப்பகுதிகள் சூழ்ந்துள்ளது. இங்கு திடீரென நேற்று காட்டுத் தீ பரவியது. இதனையடுத்து கல்லூரியில் அமர்ந்திருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் புகை வருவதை கண்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது காட்டுக்குள் தீ பரவிக் கொண்டிருந்தது. உடனடியாக கல்லூரி மாணவர்கள் அனைவரும் தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கோத்தகிரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து மாணவர்களுடன் சேர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து காட்டுத் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    • களப்பயணத்தை முதன்மை கல்வி அலுவலர் கபீர் தொடங்கி வைத்தார்.
    • 530 மாணவ, மாணவிகள் களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

    செங்கோட்டை:

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-2 பயிலும் மாணவ, மாணவிகளை உயர்கல்வி படிப்பதற்கு ஆர்வமூட்டும் வகையில் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு களப்பயணம் அழைத்து செல்லப்பட்டனர். களப்பயணத்தை முதன்மை கல்வி அலுவலர் கபீர் தொடங்கி வைத்தார்.

    ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் மாவட்டத்தில் உள்ள 53 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 530 மாணவ, மாணவிகள் சுரண்டை அரசு கலைக்கல்லூரி, சங்கரன்கோவில் அரசு கலைக்கல்லூரி, கடையநல்லூர் அரசு கலைக்கல்லூரி, ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரி, குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி ஆகிய 6 கல்லூரிகளுக்கு களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் கல்லூரிகளில் செயல்படும் பல்வேறு துறைகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், கலையரங்கம், நூலகம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை மாணவ, மாணவிகள் நேரடியாக பார்வையிடுவதால் உயர் கல்வி குறித்து ஆர்வம் அதிகரித்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

    • மாணவர்கள் கல்வி உதவித்தொகை மூலம் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும்.
    • மாணவர்கள் நற்பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் விளிம்புநிலை குடும்பத்தை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு ரூ. 1.25 லட்சம் கல்வி உதவித்தொ கை வழங்கம் நிகழ்ச்சி நாஞ்சிக்கோட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கி னார். பின்னர் அவர் பேசுகயைில்:-

    மாணவர்கள் வாழ்வில் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதுவாக தான் மாறுவீர்கள்.

    எனவே, நேர்மையான எண்ணத்துடன் கடுமையாக உழைக்க வேண்டும்.

    மாணவர்கள் கல்வி உதவித்தொகை மூலம் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும்.

    மேலும், நற்பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார்.

    கல்வி உதவித்தொகை பெற்றுக்கொண்ட மாணவ- மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜோதி அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    முடிவில் ஜோதி அறக்கட்டளை கள ஒருங்கிணைப்பாளர் நாராயணவடிவு நன்றி கூறினார்.

    • மல்யுத்த மாணவர்கள்சென்ற போது, சாலையில் ஒரு மணி பர்ஸ் கிடந்தது. அவர்கள் அந்த பர்சை எடுத்து பார்த்தபோது அரசு ஆவணங்கள் மற்றும் பணம் இருந்தது.
    • போலீஸ் துணை சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கரிடம் சம்பவத்தை கூறி பணத்துடன் கூடிய பர்சை ஒப்படைத்தார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த கன்னியக் கோயில் பகுதியில் மல்யுத்த மாணவர்கள் ஹரிகரன், அரிய புத்திரன் ,அரவிந்தன் சூர்யா ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர் .

    அப்போது சாலையில் ஒரு மணி பர்ஸ் கிடந்தது. அவர்கள் அந்த பர்சை எடுத்து பார்த்தபோது அரசு ஆவணங்கள் மற்றும் பணம் இருந்தது. இதனை தொடர்ந்து மல்யுத்த பயிற்சியாளர் ராஜேஷ் கடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கரிடம் சம்பவத்தை கூறி பணத்துடன் கூடிய பர்சை ஒப்படைத்தார். பின்னர் போலீசார் பர்ஸ் யாருடையது என விசாரணை நடத்தியதில் சென்னையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பதும், என்பவருக்கு சொந்தமானது என்பதும், திருநள்ளாறுக்கு செல்லும் போது தனது பர்ஸ் தொலைந்து விட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் சார்பாக ராஜ ஜெயசீலனிடம் துணைப் போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் முன்னிலையில் பணத்துடன் கூடிய பர்சை ஒப்படைத்தனர். மணி பர்சை கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்த மாணவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார். அப்போது இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி உடன் இருந்தார்.

    • சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட இயற்கை வான் நிகழ்வுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
    • கிராமங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளை முன்னெடுப்பது மாணவர்களுக்கு சிறப்பானதாக அமையும்.

    நீடாமங்கலம்:

    தேசிய அறிவியல் தினத்தை யொட்டி, தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி, பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆஸ்ட்ரோபிசிக்ஸ், அஸ்ட்ரோனாமிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா, பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து "நிலா திருவிழா " என்ற நிகழ்வு வலங்கைமான் விருப்பாட்சிபுரம் இல்லம் தேடி கல்வி மையத்தில் நடைபெற்றது.

    இதில் வானவியல் அறிஞர் பரமேஸ்வரன் பள்ளி மாணவர்களுக்கு தொலைநோக்கி மூலம் நிலா, வியாழன், செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களை யும், வானில் தெரியக்கூடிய நட்சத்திரங்களையும் காட்டினார்.

    மேலும், சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட இயற்கை வான் நிகழ்வுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து வலங்கை மான் வட்டார இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் நிர்மல் கூறியதாவது:-

    மாணவர்களிடையே வானியல் மற்றும் அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தவும், அதிகரிக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளை முன்னெடுப்பது கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பானதாக அமையும் என்றார்.

    நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி மாவட்ட குழு உறுப்பினர் புவனேஸ்வரி, தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புத்தக கண்காட்சியை தினமும் ஏராளமானவர்கள் பார்வையிட்டு செல்கின்றனர்
    • வருகிற 2-ந்தேதி பாட்டிலில் ஓவியம் வரைதல்,பல்வேறு கைவினை பொருட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    நெல்லை:

    பாளை வ.உ.சி. மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    பயிற்சி பட்டறை

    தினமும் ஏராளமானவர்கள் புத்தக கண்காட்சியை பார்வை யிட்டு செல்கின்றனர். கடந்த 3 நாட்களாக மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்தும் கொடுத்து நிகழச்சிகள் நடத்தப்பட்டது. அவர்களுக்கு சிறப்பு அரங்குகளும் அமைக்கப் பட்டிருந்தது.

    4-ம் நாளான இன்று பல்வேறு துறைகள் சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகளுக்கு மண்பானையில் ஓவியம் வரையும் பயிற்சி வழங்கப்பட்டது.

    கண்ணாடியில் ஓவியம்

    இதில் ஏராளமான பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். வருகிற 2-ந்தேதி பாட்டிலில் ஓவியம் வரைதல், அதனை தொடர்ந்து கண்ணாடியில் ஓவியம் வரைதல், சணல் பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு கைவினை பொருட்கள் பயிற்சி தினமும் அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே தொடர் வாசிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் இன்று கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு புத்தகங்களை வாசித்தனர்.

    • பாடங்கள் குறித்தும் விவரங்கள் செயல் விளக்கமாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
    • வேலை வாய்ப்பு உள்ள துறையை தேர்வு செய்து பல்வேறு சந்தேகங்களுக்கு பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூர் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் கல்லூரி களப் பயணம் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் முனைவர் சசிக்குமார் தலைமை வகித்தார்.

    மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஞானசேகரன், தலைமை ஆசிரியை ராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி, ஆசிரியர் பயிற்றுனர் ஐசக்ஞானராஜ் முன்னிலை வகித்தனர்.

    இதில் சீர்காழி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளியில் 12- வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    தொடர்ந்து கல்லூரியில் உள்ள நூலகம், வணிகவியல் துறை, அறிவியல் துறை, கணிதத்துறை வகுப்புகளுக்கு சென்று பாடம் கற்பிக்கும் முறைகள் குறித்தும், பாடங்கள் குறித்தும் விவரங்கள் செயல் விளக்கமாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    பள்ளிக்கல்வி நிறைவடைந்து கல்லூரி படிப்பில் எந்த துறையை தேர்வு செய்து படிப்பது.

    வேலை வாய்ப்பு உள்ள துறையை தேர்வு செய்து கல்லூரி படிப்பில் சேர்வது உட்பட மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பேராசிரியர்கள் விளக்க ங்கள் அளித்தனர்.

    இதில் கல்லூரி பேராசிரியர்கள் நாராயணசாமி, சாந்தி, கார்த்திகா, பிரபாகரன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பி.காம் மாணவர்களுக்கு ஆதரவாக 50 பேர் கொண்ட கும்பல் கல்லூரியின் உள்ளே திடீரென நுழைந்தனர்.
    • தாக்குதலில் மாணவர்கள் 5 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தை அடுத்த செல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 800 -க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் மாணவி ஒருவரை கேலி செய்ததாக எம்.காம் மற்றும் பி.காம் மாணவர்களுக்கு இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இதுதொடர்பாக இரண்டு வகுப்பு மாணவர்களையும் கல்லூரி முதல்வர் அவரது அறையில்வைத்து கண்டித்துள்ளார்.

    அப்போது பி.காம் மாணவர்களுக்கு ஆதரவாக கல்லூரியில் பயிலாத நாகை செல்லூர் பகுதியை சேர்ந்த50 பேர் கொண்ட கும்பல் கல்லூரியின் உள்ளே திடீரென நுழைந்தனர்.

    ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தியதை பொருட்படுத்தாத அந்த கும்பல் திடீரென கல்லூரி மாணவர்களை தாக்க தொடங்கினர்.

    கல்லூரி மாணவர்களை வெளி பகுதியை சேர்ந்த கும்பல் உள்ளே புகுந்து தாக்குதலில் ஈடுபடும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

    இந்த தாக்குதலில் மாணவர்கள் 5 பேர் படுகாயம் அடைந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அட்சதை தூவி கண்ணீர் மல்க ஆசீர்வதித்தனர்.
    • மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீகுருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

    இப்பள்ளியில் நிகழாண்டு 200 மாணவர்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ளனர்.

    மாணவர்கள் மாதா, பிதா, குரு மற்றும் தெய்வத்திடம் ஆசிபெறும் ஆசிர்வாத திருநாள் நிகழ்ச்சி பள்ளியின் சார்பில் நடத்தப்பட்டது.

    பள்ளி செயலர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவர்கள் தங்கள் தாய்தந்தையருக்கு பாத பூஜை செய்து வழிபட்டனர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அட்சதை தூவி கண்ணீர் மல்க ஆசீர்வதித்தனர்.

    தொடர்ந்து ஆசிரியர்கள் வரிசையாக நின்று மாணவர்களுக்கு மலர் தூவி வாழ்த்து தெரிவித்தனர்.

    பின்னர் பள்ளியின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தருமபுரம் ஆதீனம் 27-வது ஒரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் சரஸ்வதி தேவி படங்களின் முன்பு வணங்கி ஆசீர்வாதம் பெற்றனர்.

    பின்னர் சுவாமிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பள்ளியில் முதல்மு றையாக நடைபெற்ற நிகழ்வு மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது.

    ×