search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உள்ள விசாலை யன்கோட்டை, கீழக்கோட்டை, சொக்கநாதபுரம், பாகனேரி, நகரம்பட்டி, பனங்காடி, மல்லல் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் 13 பள்ளிகளுக்கு ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறையும், பல்வேறு பள்ளிகளுக்கு ரூ.90ஆயிரம் மதிப்பில் உபகரணங்களை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.

    இதை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் வருகிற அரையாண்டு தேர்வில் 1 முதல் 12 வகுப்பு வரை முதலிடம் பிடிக்கும் மாணவர்களை தனது சொந்த செலவில் ஆசிரியர்களுடன் கல்வி சுற்றுலாவாக சட்டமன்றத்திற்கு அழைத்து செல்வதாக தெரிவித்தார்.

    இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஸ்டீபன்அருள்ராஜ், பழனிசாமி, சிவாஜி, கோபி, காளையார் கோவில் ஒன்றிய தலைவர் ராஜேசுவரி கோவிந்தராஜன், கல்லல் தெற்கு ஒன்றிய செயலாளர் சேவியர் தாஸ், தேவதாஸ், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சதீஸ்பாலு, மாவட்ட பேரவை துணை செயலாளர் மாரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு அவர்களுடைய தனித்திறன், குழு திறன் ஊக்குவிப்பதற்காக போட்டிகள்.
    • முதல் 2 இடங்களை பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்று வரும் கலை திருவிழாவின் திருத்துறைப்பூண்டி வட்டார அளவிலான 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், உதவி தலைமை ஆசிரியர் பாலமுருகன் ஆசிரியர்கள் பாஸ்கரன், தெய்வ சகாயம், நடராஜன், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சிவராமன் அனைவரையும் வரவேற்றார்.

    மாரிமுத்து எம்.எல்.ஏ. நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசுகையில், தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அவர்களுடைய தனித்திறன், குழு திறன் ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் கலை திருவிழா நடத்தப்பட்டு தற்போது வட்டார அளவிலும் நடைபெற்று வருகிறது.

    இதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்தி தங்களுடைய தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நாட்டுப்புறப்பாட்டு, செவ்வியல் இசை, சங்கு முழங்குதல், கீபோர்டு வாசித்தல், பிற மாநில நாட்டியம், ஒயிலாட்டம், கரகாட்டம், நாட்டுப்புற நடனம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

    இதில், முதல் 2 இடங்களை பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர் பாஸ்கர், கங்கா, மரகதம், ஆசிரியர்கள் அலோசியஸ், ரமேஷ், தமிழரசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியின் நடுவர்களாக அம்மனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை விமலா, சாத்தங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வெற்றி அழகன், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தியாகராஜன், லாவண்யா இசைக்கலைஞர் ஷ்யாமளா தேவி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆடின் மெடோனா, நெடும்பலம் மேல்நிலைப்பள்ளி சுமதி உள்ளிட்டோர் செயல்பட்டனர்.

    முடிவில் சிறப்பாசிரியர் தேசிகாமணி நன்றி கூறினர்.

    • 5 ஆண்டுகளுக்கு முன்பே உடைந்து சேதமாகி தார் சாலை முழுவதும் தரமற்ற மண் சாலையாக மாறிவிட்டது.
    • அரசு பேருந்துகள் மலையூர் காடு பகுதிக்கு வராமல் சோழியானூர் பகுதியோடு திரும்பி சென்று விடுகிறது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் கம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மலையூர் காடு, மூலக்காடு, மணியக்காரனுர், குறுக்கு பள்ளம் உள்ளிட்ட ஐந்து கிராமப் பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கிருந்து தினமும் பணிக்கு செல்வோர் மற்றும் கூலி வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் தருமபுரி மாவட்டத்தில் இருந்து நேரடி போக்குவரத்து வசதியும், சாலை வசதியும் இல்லாததால் சேலம் மாவட்டத்தில் இருந்து வரும் பேருந்து வசதிகளை மட்டுமே நம்பி இருக்கின்றனர்.

    இந்த கிராமங்களுக்கு செல்லும் சுமார் எட்டு கிலோமீட்டர் நீளம் கொண்ட முக்கிய சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்பே உடைந்து சேதமாகி தார் சாலை முழுவதும் தரமற்ற மண் சாலையாக மாறிவிட்டது. தொடர்ந்து அதே சாலையில் அரசு பேருந்துகளும் பயணித்து வந்தன.

    இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலை மிகவும் மோசமாக இருப்பதால் பேருந்துகள் செல்ல முடியாத தகுதியற்ற சாலையாக மாறிவிட்டதாக கூறி சேலம் மாவட்டம் மேச்சேரியில் இருந்து வந்த வழித்தட எண் 24, 8, 10 அரசு பேருந்துகள் மலையூர் காடு பகுதிக்கு வராமல் சோழியானூர் பகுதியோடு திரும்பி சென்று விடுகிறது.

    இப்பகுதியில் இருந்து மலையூர் காட்டிற்கு செல்லும் சுமார் 8 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் போக்குவரத்து வசதிக்காக இரண்டு மாதங்களாக தவித்து வருகின்றனர்.

    இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரிடமும் முறையிட்டும் இது நாள் வரை எந்த ஒரு தீர்வும் ஏற்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பழுதடைந்து அதிக அளவு பள்ளங்களாக மாறி தகுதியற்றதாக உள்ள சாலையில் ஊராட்சி மன்ற தலைவர் பள்ளங்களுக்கு மண்ணை கொட்டி சீரமைத்துள்ளார். அதில் இரு சக்கர வாகனங்கள், சைக்கிள்கள், சரக்கு வாகனங்கள் மட்டும் சென்று வருகின்றன.

    அப்பகுதியில் உள்ள அனைவரும் வேறு வழியின்றி நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இல்லையெனில் இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்களில் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.

    அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த தங்களுக்கு தற்பொழுது பேருந்து வசதிகளும் கிடைக்காததால் மிகவும் சிரமப்படுவதாக அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால் அரசு நடவடிக்கை எடுத்து தங்கள் பகுதியில் மண்சாலையாக மாறி உள்ள சாலையை சீரமைத்து கொடுத்து மீண்டும் பேருந்து போக்குவரத்தை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

    • 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
    • வெற்றி பெற்ற 60 மாணவர்கள் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்பர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டியில் 36 பள்ளிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    14, 17, 19 ஆகிய வயதுக்கு உட்பட்டோர் என 3 பிரிவுகளின் கீழ் டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜ்கமல் தலைமையில் நடைபெறும் போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி தொடங்கி வைத்தார்.

    மேலும் மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படுவதுடன். போட்டியில் வெற்றி பெற்று 60 மாணவ-மாணவிகள், மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றனர்.

    • புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, சின்ன வெண்மணி கிராமத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள குன்னம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) எஸ்.சி.வி.டி. பாடத்திட்டத்தில் கீழ்கண்ட தொழிற் பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. 2 வருட தொழிற்பிரிவுகளுக்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மின்சார பணியாளர் 20 இடங்களும், பொருத்துனர் 20 இடங்களும், கட்டிடபட வரைவாளர் 24 இடங்களும், மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவான தையல் தொழில்நுட்ப பிரிவில் 40 இடங்கள் உள்ளன. இதற்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சேர வரும் பயிற்சியாளர்கள் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகலையும், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4 கொண்டு வர வேண்டும்.சேர்க்கை கட்டணமாக ஓராண்டு தொழிற் பிரிவுக்கு ரூ.185-ம், 2 ஆண்டு தொழிற் பிரிவுக்கு ரூ.195-ம் செலுத்த வேண்டும். தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கைக்காக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வரை 9499055881 என்ற செல்போன் எண்ணிலும், குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வரை (கூடுதல் பொறுப்பு) 9047949366 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்."

    • வேன் குளத்தில் கவிழ்ந்து ஆசிரியர் சுகந்தி மற்றும் 9 மாணவர்கள் உயிரிழந்தனர்.
    • பெற்றோர்கள், ஆசிரியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து மலர் தூவி அஞ்சலி .

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நாகக்குடையான் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு வேன் குளத்தில் கவிழ்ந்து ஆசிரியர் சுகந்தி மற்றும் 9 மாணவ - மாணவிகள் உயிரிழந்தனர்.

    உயிரிழந்தவர்கள் நினைவாக நாகக்குடையான் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண் அருகே 13 ஆம் ஆண்டு நினைவு நாளில் உயிரிழந்த குழந்தைகளுக்கு ஆசிரியைக்கும் ஊர் மக்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • வெற்றி பெற்ற மாணவ- மாணவிளுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
    • மாணவர்களுக்கான அடிப்படை சட்ட உரிமைகள் மற்றும் பொதுமக்களுக்கான சட்ட பாதுகாப்புகளை எடுத்து கூறினர்.

    திருவையாறு:

    திருவையாறு சீனிவாசராவ் பள்ளியில் அரசியல் அமைப்பு தினவிழா பள்ளி தலைமையாசிரியர் அனந்தராமன் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் உதவி தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்றார்.

    விழாவிற்கு தஞ்சாவூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சுதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.தொடர்ந்து, மாணவர்களுக்கான அடிப்படை சட்ட உரிமைகள் மற்றும் பொதுமக்களுக்கான சட்ட பாதுகாப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

    மேலும், அரசியலமைப்பு சட்ட விழிப்புணர்வு சம்மந்தமாக பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் வினாடி- வினா போட்டிகள் நடைபெற்றது.

    வெற்றி பெற்ற மாணவ- மாணவிளுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    போட்டிகளில் திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளி, காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆச்சனூர் அரசு உயர்நிலைப்பள்ளி, வானராங்குடி மற்றும் முகமது பந்தர் ஆகிய அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    திருவையாறு மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியும், வட்ட சட்ட பணிகள் குழு தலைவருமான சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அரசியலமைப்பு சட்டப்படி பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் உள்ள உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்தும், வட்ட சட்ட பணிகள் குழு மூலம் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் சட்ட உதவிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.விழாவில் பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் அருணா, சாந்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், சுற்று வட்டார பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

    • நெட்பால் அணிக்கு கரூர் அரசு கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
    • முதல்வர், பேராசிரியர்கள் பாராட்டினர்

    கரூர்:

    தமிழ்நாடு நெட்பால் அணிக்கு கரூர் அரசு கல்லுாரி மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு நெட்பால் சங்கம் சார்பில், தமிழ்நாடு அணிக்கான சீனியர் வீரர், வீராங்கனையை தேர்வு செய்வதற்கான போட்டி திருச்சியில் நடந்தது. இதில் கரூர் அரசு கலை கல்லுாரி மாணவி சினேகா, மாணவர் விக்னேஸ்வரன் ஆகியோர் தமிழ் நாடு நெட்பால் அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து தேர்வு பெற்ற மாணவ, மாணவியரை கல்லுாரி முதல்வர் கவுசல்யா தேவி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன், அனைத்துத் துறை பேராசிரியர்கள் பாராட்டினர்.

     

    • கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.
    • இதில் பல மாநில மாணவர்கள் 250 பேர்கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரி, ஐ.பி.ஏ. தென்தமிழக கிளையுடன் இணைந்து 61-வது தேசிய மருந்தியல் வார விழா, சர்வதேச கருத்தரங்கு ''அறிவு காப்புரிமை, மருந்து கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, சவால்கள்'' என்ற தலைப்பில் நடத்தியது. கல்லூரி செயலாளர் சசி ஆனந்த் தலைமை தாங்கினார்.

    முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். அமெரிக்காவின் வெஸ்பீல்ட், பனகர் காப்புரிமை மைய தலைவர், உமேஷ் வி.பனகர் கருத்தரங்கை தொடங்கி வைத்து மலரை வெளியிட்டார். எஸ்.ஆர்.எம். மருந்தியல் துறை தலைவர் இளங்கோ, மலேசியாவின் கே.பி.ஜே ஹெல்த்கேர் யுனிவர்சிட்டி பேராசிரியர் அனந்த ராஜகோபால், கலசலிங்கம் பல்கலைக்கழக பதிவாளர் வாசுதேவன், கலசலிங்கம் மருத்துவ மருத்துவமனை டீன் சேவியர் செல்வ சுரேஷ் ஆகியோர் பேசினர்.

    விவாத நிகழ்வில், எஸ்.லட்சுமண பிரபு, கே.இளங்கோ, கே.அனந்த ராஜகோபால் ஆகியோர் உரையாற்றினர். கலசலிங்கம்,மருந்தாக்கியல் கல்லூரிக்கும், அமெரிக்காவின் அறிவு காப்புரிமை பனகர் மையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பல மாநில மாணவர்கள் 250 பேர்கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    • தருமதானபுரம் ஊராட்சி பகுதிகளில் 1033 மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகேகதிராம ங்கலம் கண்ணன் உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    பள்ளியின் முன்னாள் ஆசிரியர் திருவேங்கடம் 33-ம் ஆண்டு நினைவாக பள்ளி வளாகம் மற்றும் கதிராமங்கலம், தருமதானபுரம் ஊராட்சி பகுதிகளில் 1033 மரக்கன்று கள் நடப்பட்டது.

    விழாவை கதிராமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    சீர்காழி வட்டா ரக்கல்வி அலுவலர்கள் பொன்.பூங்குழலி, நாகராஜன் முன்னிலை வகித்தனர். விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

    • குறு வினாக்கள் அடங்கிய மாதிரி தேர்வு நடத்தும்படி பள்ளிக்கல்வி கமிஷனரகம் அறிவுறுத்தி உள்ளது.
    • மாதிரி தேர்வு வழியே மாணவர்களின் கற்றல் திறனை எளிதில் அறிய முடியும்.

    திருப்பூர் :

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகள் முறையாக நடக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள மாதம்தோறும் மண்டல ஆய்வு கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. இந்த கூட்டங்களில், இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் பங்கேற்று பள்ளிகளின் மேம்பாட்டுக்கு திட்டமிடுகின்றனர்.

    இந்நிலையில் மண்டல அளவிலான ஆய்வுக்கு செல்லும் ஆசிரியர்கள், அதிகாரிகள் குழுவினர், மாணவர்களுக்கு அவர்களின் வகுப்புக்கு ஏற்ற பாடத் திட்டத்தில் இருந்து, குறு வினாக்கள் அடங்கிய மாதிரி தேர்வு நடத்தும்படி பள்ளிக்கல்வி கமிஷனரகம் அறிவுறுத்தி உள்ளது.

    இந்த மாதிரி தேர்வு வழியே மாணவர்களின் கற்றல் திறனை எளிதில் அறிய முடியும். மாணவர்களுக்கு தேவையான கற்பித்தல் முறைகளை வரையறுக்க முடியும் என திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிறப்பு பள்ளிகள் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அன்னைசத்யா விளையாட்டு அரங்கில் இன்று அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி களுக்கான விளை யாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    இதனை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    இப்போட்டியில் 15-க்கும் மேற்பட்ட செவிதிறன், பார்வையாற்றோர், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் சிறப்பு பள்ளிகள் உள்ளிட்ட 600-க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து போட்டிகள் நடந்து வருகிறது.

    இதில் உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், மற்றும் மாற்று திறனாளிகள் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுவாமிநாதன் செய்திருந்தார்.

    ×