search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • போட்டியில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
    • கல்வியாளர் ஆனந்த சேகர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரைப்படி மதுக்கூர் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைத்திருவிழா நிறைவு விழா கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு பள்ளி அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வராசு தலைமையேற்று நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் ஜமீலா மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    இந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் மனோகரன், ஒன்றிய குழு உறுப்பினர் அன்புச்செல்வி விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், துணைத் தலைவர் கார்த்திகேயன், பி.டி.ஏ. துணைத் தலைவர் ரங்கசாமி, பொருளாளர் பிரசன்னா, பள்ளி மேலாண்மை குழு தலைவி நிர்மலா தேவி, கல்வியாளர் ஆனந்த சேகர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    முடிவில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசுகளும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது.

    மேலும் வானவில் மன்றம் தொடக்க விழாவும் நடைபெற்றது.

    • காலை 8 மணிக்கு நூலகம் திறக்கும் போது வரும் மாணவர்கள் இரவு 8 மணி வரை படித்து வருகின்றனர்.
    • குரூப் 2 தேர்வில் 11 பேர் வெற்றி பெற்று மெயின் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேரகிளை நூலகம் எண் இரண்டில் தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் போட்டி தேர்வு நூல்களும் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தியும் அவர்கள் கொண்டுவரும் நூல்களையும் மாணவர்கள் அனுதினமும் படித்து வருகின்றனர்.

    இதில் அனுதினமும் உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு படித்து வருகின்றனர். காலை 8 மணிக்கு நூலகம் திறக்கும் போது வரும் மாணவர்கள் இரவு 8 மணி வரை உணவு கொண்டு வந்து அங்கேயே உணவருந்தி படித்து வருகின்றனர். குரூப் 2 தேர்வில் 11 பேர் வெற்றி பெற்று மெயின் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் விடுமுறை நாட்களிலும் நூலகத்தை பயன்படுத்தும் வகையில் நூலகர்கள் நூலகத்தை திறந்து மாணவர்கள் நூலக போட்டித் தேர்வு அறைகளை பயன்படுத்த அனுமதிக்கின்றனர். அவர்களுக்கு போட்டித் தேர்வு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • ப்ளூபேர்டு பள்ளி மாணவர்கள் முதல் மற்றும் 2-வது இடம் மற்றும் 3-வது இடங்களை பிடித்தனர்.

     பல்லடம் :

    கோவை, சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பல்லடத்தில் உள்ள ப்ளூபேர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ப்ளூபேர்டு பள்ளி மாணவர்கள் முதல் மற்றும் 2-வது இடம் மற்றும் 3-வது இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்யின் முதல்வர் சு.ஹேமலதா வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

    • மாணவா்களுக்கு புத்தொளிப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
    • மாணவா்கள் முழுமையான அா்ப்பணிப்பு உணா்வுடன் சேவையாற்றும் போது சமுதாயத்தில் மதிக்கப்படுவாா்கள்.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 மாணவா்களுக்கு புத்தொளிப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருப்பூா் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பேரிடா் காலங்களில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களின் பங்கு சிறப்பாக இருக்க வேண்டும். மாணவா்கள் முழுமையான அா்ப்பணிப்பு உணா்வுடன் சேவையாற்றும்போது சமுதாயத்தில் மதிக்கப்படுவாா்கள். அதே வேளையில், மாணவா்கள் சேவை மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். 

    இன்றைய காலகட்டத்தில் தேவைப்படும்போது மட்டுமே கைப்பேசியைப் பயன்படுத்திவிட்டு மற்ற நேரங்களில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் வாழ்க்கையில் வெற்றியடையலாம் என்றாா்.இதில் நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • நீச்சல் போட்டியில் அரசு கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்
    • கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற

    கரூர்:

    பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 200மீ பேக் ஸ்ட்ரோக் பிரிவில் சையது அபுதக்கர் மூன்றாமிடத்தையும், 4 இன்ட் 100 மீ மெட்லி ரிலே போட்டியில் மாணவர்கள் கார்த்திக் ராஜா, சுதர்சன், சேதுபதி, சையத் அபுதக்கர் ஆகியோர் இரண்டாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, உடற்கல்வித்துறை இயக்குநர் ராஜேந்திரன் உட்பட அனைத்து பேராசிரியர்களும், மாணவர்களும் பாராட்டினர்.

    • மாணவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பல்வேறு வகையில் உதவி வருகின்றனர்.
    • மாணவர்கள் பயன்பெறும் வகையில் குளிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்ள ஸ்வெட்டர் வழங்கினார்.

    உடுமலை :

    உடுமலை அருகே லிங்கம்மாவூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி உள்ளது .இங்கு பயிலும் மாணவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பல்வேறு வகையில் உதவி வருகின்றனர்.

    இந்தநிலையில் மாணவர்களுக்கு கோவை இருகூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியர் முருகேசன் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் குளிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்ள ஸ்வெட்டர் வழங்கினார். இருகூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் ஹரிஸ் இனிப்புகள் வழங்கினார். கோவை தனியார் டெக்ஸ்டைல் உரிமையாளர் சிவா ,மாணவர்களுக்கு உடைமைகளை வைத்துக் கொள்வதற்காக லக்கேஜ் பேக்குகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் ( பொறுப்பு) ஐயப்பன் தலைமை வகித்தார்.  

    • பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு போலீஸ் அதிகாரி அறிவுரை வழங்கினார்.
    • தேவகோட்டை பஸ் நிலையத்தில் போலீஸ் டி.எஸ்.பி. இன்று திடீர் ஆய்வு செய்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் 10-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தேவகோட்டையை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிப்பதற்காக பஸ்கள் மூலம் வந்து செல்கின்றனர்.

    சமீப காலமாக கூட்டநெரிசல் காரணமாக பஸ் படிகட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இதையடுத்து போலீஸ் டி.எஸ்.பி. கணேஷ்குமார் தேவகோட்டை பஸ் நிலையத்தில் இன்று திடீர் ஆய்வு செய்தார்.

    தனியார் மற்றும் அரசு பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை இறக்கி விடப்பட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மீண்டும் இதே போல் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்களை எச்சரித்துடன் அவர்களை மாற்று பஸ்களில் அனுப்பி வைத்தார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தினமும் காலை, மாலை நேரங்களில் ஆய்வு செய்வேன் என்றும் டி.எஸ்.பி. தெரிவித்தார். அப்போது காவலர் சிலம்பரசன் உடன் இருந்தார்.

    • தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
    • இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

    மூன்றாண்டுபயிலும்அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship Portal) புதுப்பித்தலுக்கு 10.11.2022 முதல் செயல்பட துவங்கும். புதுப்பித்தலுக்கான (Renewal) விண்ணப்பங்கள் 06.12.2022-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதே போல் புதிய இனங்களுக்கு (Fresh) இணையதளம் 15.12.2022 முதல் செயல்படத் துவங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.10.2023-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை (மின்னஞ்சல் முகவரி dbcwotpr@gmail.com மற்றும் தொலைபேசி 616001.0421-2999130) அணுகலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship schemes என்ற அரசு இணையதளத்திலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அச்சம் தவிர் தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவர்கள் வாழ்க்கையில் உயர்வதற்குரிய வழிவகைகளை எடுத்து கூறி உரையாற்றினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அச்சம் தவிர் தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எதிர்கால திட்டம் தொடர்பான அச்சத்தையும் பொதுத்தேர்வு தொடர்பான அச்சத்தையும் போக்குவதற்காக பள்ளி நிர்வாகம் சார்பாக அச்சம் தவிர் நிகழ்வு -1 நடத்தப்பட்டதுபள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி தலைமை தாங்கி மாணவர்கள் வாழ்க்கையில் உயர்வதற்குரிய வழிவகைகளை எடுத்துக் கூறி உரையாற்றினார்.

    பிரபல பட்டிமன்ற பேச்சாளரும்எழுத்தாளரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞருமான சுமதி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், மாணவர்கள் துணிவும் உண்மையும் மிக்கவர்களாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் முதல் ஆசிரியர்கள் . ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர் .ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் மதித்து நடக்க வேண்டும். இலக்கணப் பிழையின்றி பேச வேண்டும். ஆங்கிலத்தை தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும். எத்தனை முறை விழுகிறாயோ அத்தனை முறையும் எழுந்து நில் .அதுவே உனக்கு வெற்றி. ஒவ்வொரு மாணவனும் ஒழுக்கத்துடனும் நாட்டுப்பற்றுடனும் இருக்க வேண்டும் .பெற்றோர்களே முதல் கதாநாயகர்கள், எனவே அவர்களை போற்றி நடக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ் , பொருளாளர் சுருதி , ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி முதல்வர் ஏ.எஸ். மணிமலர் நன்றி கூறினார். 

    • பள்ளிகளில் மாணவர்கள் வாந்தி எடுப்பதாகவும், வயிற்று வலி இருப்பதாகவும் பள்ளி அதிகாரிகளிடம் இருந்து சுகாதார குழுவினருக்கு தகவல் கிடைத்தது.
    • நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    அசாம் மாநிலம் சரைடியோ மாவட்டத்தில் உள்ள இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, சுகாதாரத் துறை ஊழியர்கள் வழங்கிய இரும்பு சத்து மாத்திரையை உட்கொண்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பாட்சாகு பிளாக் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் உள்ள படாவ் துணை மையத்தைச் சேர்ந்த சுகாதார பணியாளர்கள் குழு கெரானிபதர் கீழ்நிலைப் பள்ளியின் 75 மாணவர்களுக்கும், நிமாலியா கீழ்நிலைப் பள்ளியின் 26 மாணவர்களுக்கும் இரும்பு சத்து மாத்திரைகளை வழங்கியுள்ளது.

    ஆசிரியர்கள் முன்னிலையில் வழங்கப்பட்ட இந்த மாத்திரைகளை குழந்தைகள் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில் மாத்திரை எடுத்துக் கொண்ட சிறிது நேரத்தில், பள்ளிகளிலிருந்து மாணவர்கள் சிலர் வாந்தி எடுப்பதாகவும், வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாகவும் பள்ளி அதிகாரிகளிடம் இருந்து சுகாதார குழுவினருக்கு தகவல் கிடைத்தது.

    அவர்கள் உடனடியாக சோனாரி சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், மேலும் 48 குழந்தைகள் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    • விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
    • குழு விளையாட்டுகளில் கால்பந்து போட்டிகளில் மாணவிகள் பிரிவில் மாவட்ட அளவில் 2 வது இடமும், கோ-கோ மாணவிகள் பிரிவில் 2 வது இடமும் பெற்றுள்ளனர்.

    திருப்பூர் :

    பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவியர்களுக்கான தடகளப் போட்டிகள் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அதில் திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர். இதில் குண்டு எறிதல் போட்டியில் ஆர்யுஸ்‌ ரோகித் என்ற மாணவர் தங்க பதக்கம் பெற்றார்.

    யுவன் பாரத் என்ற மாணவர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்றார். அபிகிருஷ்ணன் உயரம் தாண்டுதலில் தங்கம் பதக்கம் பெற்றார். 14 வயதுக்குட்பட்ட பிரிவில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புவனேஸ் என்ற மாணவன் தங்க பதக்கமும், 200 மீட்டரில் வெள்ளி பதக்கமும் பெற்றார். சஞ்சய் மும்முறைத்தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் 400 மீட்டரில் காயத்ரி வெள்ளிப் பதக்கமும் வெண்கல பதக்கமும் வென்றார்.

    குழு விளையாட்டுகளில் கால்பந்து போட்டிகளில் மாணவிகள் பிரிவில் மாவட்ட அளவில் 2 வது இடமும், கோ-கோ மாணவிகள் பிரிவில் 2 வது இடமும் பெற்றுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவில் தேர்வாகியுள்ள மாணவர்களை பள்ளி நிர்வாகிகள், தாளாளர் சாமிநாதன் , மூத்த முதல்வர் மணிகண்டன், முதல்வர் சின்னையா, துணை முதல்வர் ரவி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.

    • மேட்டூர், கொளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் அதிக அள வில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகிறது.
    • இவை பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சத்யா நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வரும் அஞ்சலி, பிரவீன், தமிழ்ச்செல்வன், பிரவீனா ஆகிய 4 பேரையும், நேற்று மாலை அந்த பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய் கடித்தது. இதனை தொடர்ந்து, அவர்கள் சத்யா நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி உள்ளனர்.

    மேட்டூர், கொளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் அதிக அள வில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகிறது. இவை பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×