search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • பிளஸ் 2ல் ஒரு ஒன்றியத்துக்கு 50 மாணவர்களும், பிளஸ் 1ல் ஒரு ஒன்றியத்துக்கு, 20 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.
    • தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தனித்தனியே பயிற்சி அளிக்கப்படும்.

    திருப்பூர் :                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நவம்பர் மூன்றாம் வாரத்தில் இருந்து, ஒவ்வொரு சனிக்கிழமையும், மருத்துவ நுழைவு தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒரு ஒன்றியத்துக்கு தலா ஒரு மையம் என, 414 பயிற்சி மையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.

    தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தனித்தனியே பயிற்சி அளிக்கப்படும். தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பிளஸ் 1ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், பிளஸ் 1 மாணவர்கள், 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும்.

    ஒரு பயிற்சி மையத்திற்கு 70 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதில் பிளஸ் 2ல் ஒரு ஒன்றியத்துக்கு 50 மாணவர்களும், பிளஸ் 1ல் ஒரு ஒன்றியத்துக்கு, 20 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.இந்த வகுப்புகள் நேரடி வகுப்புகளாக நடக்கும். திருப்பூரில் குறைந்தது 13 ஒன்றியங்கள் தவிர கூடுதல் மையங்கள் அமைக்கப்படும் என மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவித்தார்.

    • கலைத்திருவிழா போட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்
    • தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

    திருச்சி:

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் குணசேகரன், பொதுச் செயலாளர் வி. எஸ்.முத்துசாமி, மாநில பொருளாளர் சே. நீலகண்டன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது;-

    தமிழகத்தில் படிக்கின்ற மாணவர்களின் திறமையை வெறும் கல்வி சார்ந்து மட்டும் அளவிடாமல் கலை மற்றும் பண்பாடு சார்ந்து அவர்களுக்குள் உள்ள திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் கலைத் திருவிழாவை நடத்த மீண்டும் உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    அதே வேளையில் தமிழக அரசின் உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 11 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

    இவர்கள் தமிழ் வழி பாடப் புத்தகத்தையும் ,தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ் வழி ஆசிரியர் பயிற்சி முறைகளையும் பின்பற்றி படித்து வருகின்றனர். ஆகவே இவர்களும் கலை விழாவில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்த தமிழக அரசு வாய்ப்பு வழங்க வேண்டும்.

    தமிழ் வழியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவை தமிழக அரசின் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பயனடைகின்ற வகையில் வழங்கிட வேண்டும்.மேலும் 6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மாதம் ரூ. 1000 வழங்கப்படுகிறது.

    இந்தத் திட்டத்திலும் உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் வாய்ப்பினை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • லைசன்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராத தொகை வசூலிப்பது மற்றும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.
    • ரூ. 6 லட்சத்து 44 ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனர் மாடசாமி, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விபத்தில்லா மாநகரமாக சேலத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். குறிப் பாக கடந்த 5 ஆண்டுகளில் சேலம் மாநகரத்தில், அதிகளவில் விபத்துக்கள் நடந்த 75 இடங்களை தேர்ந்தெடுத்து உள்ளோம். அந்த இடங்களில் இன்னும் 2 நாட்களில் கூடுதல் போலீ சார் நியமிக்கப்பட்டு, வாகன தணிக்கை செய்யப்பட உள்ளது. லைசன்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராத தொகை வசூலிப்பது மற்றும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடந்த ஆண்டு சேலம் மாநகரத்தில் நடந்த விபத்துகளில் 123 பேர் மரணம் அடைந்தனர். நடப்பு ஆண்டில், நவம்பர் வரை 183 பேர் விபத்தில் இறந்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு இதுவரை போக்குவரத்து போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ. 6 லட்சத்து 44 ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டு உள்ளது. விபத்துக்களை தடுக்க போலீசாரின் அறிவுரைகளை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேட்டியின்போது தெரிவித்தார்.

    • கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி சுகாதார ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாட குறிப்பேடு மற்றும் எழுதுபொருட்கள் வழங்கல்.

    வேதாரண்யம்:

    தூய்மை பாரத இயக்கம் சார்பில் வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உலக கழிவறை தின சுகாதார ஓட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை வகித்து சுகாதார ஒட்டத்தை துவக்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரவணன், ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், அஞ்சலக அலுவலர், மகளிர் குழுக்கள், தூய்மை பணியாளர்கள், சுந்தரம் அரசு உதவி தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் நீலமேகம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழியும், எடுத்துக்கொண்டனர்.

    உலக கழிவறை தினம் நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி பாட குறிப்பேடு மற்றும் எழுதுபொருட்களை வழங்கினர்.

    • என்.எஸ்.எஸ். மாணவர்களின் உழவாரப்பணிகள் நடைபெற்றது
    • குளித்தலை அரசு மருத்துவமனை வளாகத்தில்

    கரூர்:

    குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நல பணி திட்ட மாணவர்கள் குளித்தலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏழு நாள் சமூக பணிகள் செய்வதற்காக சிறப்பு முகாம் துவக்க விழா எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று குளித்தலை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள முட்புதர்களையும் தூய்மை செய்வதற்காக உழவாரப்பணிகளை நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் செய்தனர். உழவாரப் பணியை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பூமிநாதன் தொடங்கி வைத்தார், தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள பணியாளர்கள் சிலரும் உழவாரப் பணியில் கலந்து கொண்டனர். இதில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம், உதவி தலைமை ஆசிரியர் ரவி, என்.எஸ் .எஸ் அலுவலர் லட்சுமணன், முகாம் பொறுப்பாளர்கள் ரமேஷ்குமார், மாரியப்பன், ஆனந்த், நம்பிக்கை மைய ஆலோசகர் சுஜாதா, மனநல ஆலோசகர் மகேஷ்வரி, மற்றும் பள்ளி ஆசிரியர்கள், செவிலியர்கள், மாணவர்கள், கலந்து கொண்டனர்.

    • சேலம் அரசு கலை கல்லூரியில் பி. ஏ 2-ம் ஆண்டு படித்த மாணவன் விக்னேசை அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்களான அஜித் உள்பட பலர் சேர்ந்து சரமாரியாக தாக்கினர் .
    • இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரண நடத்தி விக்னேசை தாக்கிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் திருமலை கிரியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் சேலம் அரசு கலை கல்லூரியில் பி. ஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவன் விக்னேசை அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்களான அஜித் உள்பட பலர் சேர்ந்து சரமாரியாக தாக்கினர் .

    இதில் காயமடைந்த விக்னேஷ் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே விக்னேஷின் உறவினர்கள் கடந்த சில மாதங்களாக சீனியர் மாணவர்கள் அவரை ராக்கிங் செய்ததாகவும் தற்போது அதில் ஏற்பட்ட பிரச்சனையில் சரமாரியாக தாக்கி உள்ளதாகவும் புகார் கூறினார்.

    உறவினர்கள் புகார்

    மாணவரின் தாய் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் அவரது தந்தை பிரிந்து சென்று விட்டார். இதனால் விக்னேஷ் அவரது பாட்டியின் பராமரிப்பில் உள்ளார். இதை அடுத்து விக்னேஷின் உறவினர்கள் அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரண நடத்தி விக்னேசை தாக்கிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்த போது ஏற்கனவே மாணவருக்கு பலமுறை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்ததும், தற்போது நடைபெற்ற ரத்ததான முகாமில் அதிக நபரை அழைத்து வந்து விக்னேஷ் ரத்த தானம் செய்ய வைத்ததும் இதனால் ஏற்பட்ட போட்டியில் அவரை சீனியர் மாணவர்கள் தாக்கியதும் தெரிய வந்தது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. 

    • பல்லுயிர், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் குறித்து தேவையான விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
    • 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை ஈடுபடுத்தலாம்.

    திருப்பூர் :

    இளைய தலைமுறையினர் தங்கள் மாநிலத்தின் பல்லுயிர், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் குறித்து தேவையான விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.அதற்காக, மிஷன் இயற்கை திட்டம் பள்ளிகளில் உள்ள சுற்றுசூழல் மன்றங்கள் வாயிலாக செயல்படுத்தப்படுவதால், மாணவர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதோடு சுற்றுச்சூழல் மன்ற நடவடிக்கைகளை வலுப்படுத்த உதவும்.

    இதற்காக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கான செயல்முறை பயிற்சி நிறைவடைந்த நிலையில், சுற்றுச்சூழல் ஆசிரியர்களுக்கு, இத்திட்டத்திற்கான வழிகாட்டு பயிற்சிகள் இணையவழியில் நடந்தது. நேரடியாக பயிற்சி வரும் 21-ந் தேதி முதல் 24ந் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன்கீழ் ஒவ்வொரு பள்ளிகளிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை ஈடுபடுத்தலாம். பள்ளி வாரியாக, 5 மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் பெயர்களை சுற்றுச்சூழல் ஆசிரியர் மற்றும் 'WWF india' வின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 10ந் தேதி வரை வாரத்தில் 5 மணி நேரம் மாணவர்கள், ஆசிரியர்கள் இதுசார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.இதன் வீடியோ ,அறிக்கைகள் அடிப்படையில் சிறப்பாக செயல்படும் 5 பள்ளிகள் மற்றும் 25 மாணவர்களுக்கு 2023 பிப்ரவரி மாதம் மாநில விருது வழங்கப்படும் என திருப்பூர் மாவட்ட கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    • மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி கிறிஸ்தியாநகரம் டி.டி.டி.ஏ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
    • மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிதல், அவர்களை அன்புடன் அரவணைத்து பள்ளியில் சேர்த்தல் குறித்து விரிவாக பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடியில் தமிழ்நாடு ஓருங்கிணைந்த பள்ளிக் கல்வி மையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி கிறிஸ்தியாநகரம் டி.டி.டி.ஏ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிதல், அவர்களை அன்புடன் அரவணைத்து பள்ளியில் சேர்த்தல், அரசின் திட்டங்களை அவர்களுக்கு கிடைப்பது குறித்து விரிவாக பேசினார்.உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், பள்ளித் தலைமையாசிரியர் லிவிங்ஸ்டன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சாந்தி, பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரணி முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.இதில் தி.மு.க. நிர்வாகிகள் அன்வர்சலீம், ஹீபர், கணேசன், சங்கர், மாவட்ட பிரதிநிதிகள் அரிகிருஷ்ணன், முபாரக், திரவியம், மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை சிறப்பாசிரியர் இம்மானுவேல் மனாசே, எங்ஸ்டன், ஜெபஸ்டின் செய்திருந்தனர்.

    • முக்கிய வீதிவழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
    • மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில பேரணி.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்று திறனாளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது

    நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜி.ராணி தலைமை வகித்தார்.

    அம்மாபேட்டைஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர் வெங்கடேஷ்குமார், அரிமாசங்க தலைவர் முரளி,ரெட்கிராஸ் சங்க தலைவர் சேவியர், மனவலகலை மன்றம் ராமநாதன், பள்ளிதலைமை ஆசிரியர் கண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழிப்புணர்வு பேரணியை அரிமா சங்க மாவட்ட தலைவர் நைனா குணசேகரன், தொடங்கி வைத்தார். பேரணி பள்ளியில் இருந்து தொடங்கி முக்கிய வீதிவழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

    மாற்று திறனாளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து ஒருங்கிணைந்து செயல்படும்விதமாக இந்த பேரணி நடைபெற்றது.

    இதில் பள்ளி ,மேற்பார்வையாளர் செல்லையன், ஆசிரியர் முருகேசன்,வார்டு உறுப்பினர் தீபா, மேலாண்மைக்குழுதுணை தலைவர் நதியா, மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலை என மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர்.
    • 18 வயது பூர்த்தியான கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரையும் விடுபடாமல், வாக்காளராக பதிவு செய்யவேண்டும்.

    திருப்பூர்

    வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறை திருத்தம் பணிகள் கடந்த 9ந் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இளம் வாக்காளர்களை அதிக எண்ணிக்கையில் பட்டியலில் சேர்க்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இது குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார்.துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அம்பாயிரநாதன், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலை என மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர்.

    18 வயது பூர்த்தியான கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரையும் விடுபடாமல், வாக்காளராக பதிவு செய்யவேண்டும்.வரும் 2023 ஏப்ரல் ,ஜூலை, அக்டோபர் 1-ந் தேதிகளில் 18 வயது பூர்த்தி அடையும் மாணவர்களையும் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்கச் செய்ய வேண்டும்.இப்பணிக்கு கல்லூரி முதல்வர்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என கூட்டத்தில் கலெக்டர் வினீத் அறிவுறுத்தினார்.

    • இப்பணிக்கு கல்லூரி முதல்வர்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என கூட்டத்தில் கலெக்டர் வினீத் அறிவுறுத்தினார்.
    • திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலை என மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறை திருத்தம் பணிகள் கடந்த 9ந் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இளம் வாக்காளர்களை அதிக எண்ணிக்கையில் பட்டியலில் சேர்க்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இது குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார்.துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அம்பாயிரநாதன், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலை என மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர்.

    18 வயது பூர்த்தியான கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரையும் விடுபடாமல், வாக்காளராக பதிவு செய்யவேண்டும்.வரும் 2023 ஏப்ரல் ,ஜூலை, அக்டோபர் 1-ந் தேதிகளில் 18 வயது பூர்த்தி அடையும் மாணவர்களையும் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்கச் செய்ய வேண்டும்.இப்பணிக்கு கல்லூரி முதல்வர்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என கூட்டத்தில் கலெக்டர் வினீத் அறிவுறுத்தினார்.

    • மன்னார்குடி சாலை ரெயில்வே கேட் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
    • பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளியில் மாற்றுத்தி றனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இதில் தலைமையாசிரியர் அமுதரசு தலைமை தாங்கி னார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மங்கள் அன்பழகன் பேரணியை தொடங்கி வைத்தார்.

    பேரணி பள்ளியிலிருந்து புறப்பட்டு மன்னார்குடி சாலை ரெயில்வே கேட்டு சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

    பேரணியில் மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பது, தொடர்ந்து கற்றலில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் ஆசிரியர் பயிற்றுநர் ஸ்ரீதரன் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல்,ஆலங்காடு அரசு உயர்நிலைப்ப ள்ளியிலும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா, ஆசிரியர் பயிற்றுநர் ஸ்ரீதரன் மற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

    ×