search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவி செய்வது.
    • பல்வேறு வகையான செய்முறை பயிற்சிகள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு.

    நன்னிலம்:

    நன்னிலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் நிலைய அலுவலர் (பொ) ஜெகதீசன் தலைமையில் மாப்பிள்ளைக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ,-மாணவிகளுக்கு பேரிடர் கால விழிப்புணர்வுப் பயிற்சி நடைபெற்றது.

    பேரிடர் காலத்தில் இள வயதினரான மாணவ-மாணவிகள் தங்களையும், தங்களது பெற்றோ ர்களையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் அருகில் உள்ள மக்களுக்கு எவ்வாறு தங்களால் இயன்ற உதவியைச் செய்வது. தங்களையும் பாதுகாத்துக் கொண்டு பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவி செய்வது போன்ற பல்வேறு வகையான செய்முறைப் பயிற்சிகள் மூலம் மாணவர்களளுக்கு விழிப்புணர்வு ஏற்படு த்தப்பட்டது.

    தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் உள்ள உபகரணங்களை பேரிடர் காலங்களில் எவ்வாறு உபயோகப்படுத்துவது. தீயணைப்புத் துறை, காவல்துறை, வருவாய் துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளுக்கு எவ்வாறு தகவல் தெரிவிப்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வுப் பயிற்சிகள் நடத்தப்பட்டது.

    மாப்பிள்ளைக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பேரிடர்கால விழிப்புணர்வுப் பயிற்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள், மேலாண்மைக் குழு உறுப்பி னர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் மருதவாணன் தலைமையில் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மாணவர்கள் 6 போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம்.
    • தருமபுரம் ஆதீனம் மாணவர்களை பாராட்டி அருளாசி வழங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாணவர்களுக்கிடையே போட்டி நடைபெற்றது.

    இந்தப் போட்டியில் குருஞான சம்பந்த மிஷன் மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 6 போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

    அவர்களை பள்ளியின் புரவலர் தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசீக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பாராட்டி அருளாசி வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆட்சி மன்ற குழுவின் தலைவர் ஸ்ரீமத் சிவகுருநாதன் தம்பிரான் சுவாமிகள், துணைத் தலைவர் முருகேசன், நிர்வாக செயலர் பாஸ்கர், செயலாளர் பாஸ்கர், முதல்வர் சரவணன், போட்டிக்கு தயார் செய்த ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூரில் மொத்தமாக 440 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
    • கல்விக்கடன் பெற பெற்றோர்களுடன் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி படிப்பிற்கான கல்விக்கடன் பெற சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் முன்னோடி வங்கி மூலம் முகாம் நிறைவடைந்தது.

    2 நாட்களாக நடந்த இந்த முகாமில் திருப்பூர் மாவட்ட முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கல்விக்கடன் பெற பெற்றோர்களுடன் மாணவர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் வங்கி உள்ளிட்ட 18 வங்கிகள் கலந்துகொண்டன. திருப்பூரில் மொத்தமாக 440 மாணவர்கள் கலந்துகொண்ட இந்த முகாமில் 325 மாணவர்களுக்கு ரூ.10.39 கோடி அளவில் கடன் ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது. மேலும் அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களான தாட்கோ, மாவட்ட தொழில் மையத்தின் கடன் திட்டங்கள், பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வங்கிகள் அதனை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி சாலையோர வியாபாரிகளுக்கான விண்ணப்பங்களை விரைந்து பரீசிலனை செய்து கடன் வழங்க அறிவுறுத்தினார். மேலும் அரசின் காப்பீடு திட்டங்கள் குறித்தும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் மீதான குறைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. முகாமில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரீசிலனை செய்யப்பட்டு விரைந்து கல்விக்கடன் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • 3 மாணவர்களும், இம்மாதம் கோவையில் நடைபெறும் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
    • குமரி மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகள் மற்றும் ஸ்கேட்டிங் கிளப்களில் பயிற்சி பெறும் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சுங்கான்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தேசிய அளவில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடத்துவதற்கு தகுதியான 200 மீட்டர் ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் உள்ளது. இது தென் தமிழகத்தில் மிகப்பெரிய மைதானம் ஆகும். இம்மைதானத்தில் மாநில அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் பங்குபெற தகுதியான போட்டியாளர்களை குமரி மாவட்ட அளவில் தேர்வு செய்யும் தகுதி சுற்று நடைபெற்றது.

    சென்னை தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஸ்கேட்டிங் கிளப் -ம் இணைந்து குமரி மாவட்ட அளவில் 5 பிரிவுகளில் ஸ்கட்டிங் போட்டிகளை நடத்தின. குமரி மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகள் மற்றும் ஸ்கேட்டிங் கிளப்களில் பயிற்சி பெறும் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    வின்ஸ் பள்ளி மாணவர்களும் பங்கேற்று மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றனர். மாணவர்கள் பிபின்குமார், பபின்குமார், ஹாட்ரியல் வின்சென்ட் ஆகியோர் வயது அடிப்படையிலான போட்டிகளில் வெற்றி பெற்றனர்.

    3 மாணவர்களும், இம்மாதம் கோவையில் நடைபெறும் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் கோப்பை, பதக்கம் சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார். மேலும் அவர்கள் மாநில அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி ஊக்கப்படுத்தினார்.

    போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கன்னியாகுமரி மாவட்ட ஸ்கேட்டிங் கிளப் செயலாளர் குமார் ஜேசுராஜன் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டுதல் குறித்து விழிப்புணர்வு.
    • போதை பொருள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்து ஆசிரியர் பேசினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்பு துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் காவல்துறையின் சார்பில் மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டுதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    தலைமையாசிரியர் ஆனந்தன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் கவிநிலவன் முன்னிலை வகித்தார்.

    ஆசிரியர் அறிவழகன் வரவேற்றார்.வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் குணசேகரன் பள்ளியில் பயிலும் மாணவ -மாணவிகளுக்கு உறுதிமொழி படித்து ஏற்க செய்தார். முடிவில் ஆசிரியர் ரெங்கசாமி நன்றி கூறினார்.

    இதே போல்வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் எழிலரசன் தலைமை வகித்தார்.

    ஆசிரியர் ஆதவன் வரவேற்றார். போதைப் பொருள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்து ஆசிரியர் நாகராஜன் பேசினார்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் இங்கர்சால் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். முடிவில் ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • பிளஸ் 2வில் ஒரு ஒன்றியத்துக்கு 50 மாணவர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • நடப்பாண்டு பிளஸ் 1 மாணவருக்கும் பயிற்சி வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி வழங்குகிறது. பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் பிளஸ் 1ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், பிளஸ் 1 மாணவர்கள், 10-ம்வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    பிளஸ் 2வில் ஒரு ஒன்றியத்துக்கு 50 மாணவர்களும், பிளஸ் 1ல் ஒரு ஒன்றியத்துக்கு 20 மாணவர்களும் என ஒன்றியத்துக்கு 70 மாணவர் தேர்வு செய்து பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை பிளஸ் 2 மாணவருக்கு மட்டுமே நீட் பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு பிளஸ் 1 மாணவருக்கும் பயிற்சி வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒன்றியத்துக்கு ஒரு பள்ளியை தேர்வு செய்து சனிக்கிழமை தோறும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். நவம்பர் மூன்றாவது வாரம் பயிற்சி வகுப்பு துவங்கும். தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு வழியிலும் தனித்தனியே பயிற்சி அளிக்கப்படும். நேரடி வகுப்புகளாக நடத்தப்படும். மாணவரின் வருகை மற்றும் மதிப்பெண் பதிவுகள் கவனத்தில் கொள்ளப்படும் என்றனர்.

    • கவன சிதறல்களுக்கு ஆளாகாமல் சரியான முறையில் தோ்ச்சி பெற்று வாழ்வின் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும் என்றாா்.
    • முடிவில் சா்வதேச வணிகம் துறைத் தலைவா் பாலமுருகன் நன்றி கூறினாா்.

    அவினாசி:

    அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு, கல்லூரி விளையாட்டு வீரா்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கல்லூரி முதல்வா் ஜோ.நளதம் பேசுகையில், மாணவா்கள் தெளிவான இலக்கினை வைத்துக்கொண்டு தொடா்ச்சியான உழைப்பை செலுத்த வேண்டும். கவன சிதறல்களுக்கு ஆளாகாமல் சரியான முறையில் தோ்ச்சி பெற்று வாழ்வின் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும் என்றாா்.

    சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவிநாசி சக்திவேல் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் சக்திவேல், சுய தொழில் செய்வதில் உள்ள சிறப்பம்சங்கள், சுயதொழில் செய்வதற்கான அரசு வழங்கும் சலுகைகள், தொழிலில் ஏற்படும் சவால்களை எப்படி சமாளிப்பது, சமகால நவீன தொழில்நுட்பங்களை தெரிந்துகொள்வது குறித்து விளக்கிப் பேசினாா்.முடிவில் சா்வதேச வணிகம் துறைத் தலைவா் பாலமுருகன் நன்றி கூறினாா்.

    • காலை, மதியம் என இரு பகுதிகளாக நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி.
    • கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தி இலக்குகளை அடைய மாணவர்களுக்கு அறிவுரை.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் அமைந்துள்ள வேலம்மாள் தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வகையில் ஃப்ரஷர்ஸ் டே வெகுவிமர்சையாக நடைபெற்றது.

    காலை மற்றும் மதியம் என இரு பகுதிகளாக நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளில், சிறப்பு விருந்தினர்களாக ஜோஹோ ஸ்கூல் ஆஃப் லேர்ணிங் தலைவர் ராஜேந்திரன் தண்டபாணி, வழக்கறிஞர் அருள்மணி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரை நிகழ்த்தினர். 


    கல்லூரியின் இயக்குனர் எம்.வி.எம் சசிகுமார், கல்லூரியின் முதல்வர் முனைவர் என்.பாலாஜி சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தனர். வேலம்மாள் கல்விக் குழுமத்தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம், இயக்குனர் எம்.வி.எம். சசிகுமார் , ஆலோசகர்கள் பேராசிரியர். கே.ரசாக் மற்றும் வாசு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து பங்கேற்றனர்.

    மாணாக்கர்கள் தவறான பாதையில் சென்றுவிடாமல் மிகுந்த ஒழுக்கத்துடன் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தி தங்கள் இலக்குகளை அடைய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் எஸ். சௌந்தரராஜன் நன்றி தெரிவித்தார். 

    • தேவார பாடசாலை மாணவர்கள் வடமொழியிலும், தமிழிலும் திருமுறைகள் ஓதினார்கள்.
    • 18 ஆயிரம் பக்கங்கள் உரையுடன் கூடிய பன்னிரு திருமுறை நூல் மறுபதிப்பு பணி தொடக்கம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோவில் அருகே உள்ள ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி சுவாமிகள் நிலையத்திற்கு மணிப்பூர் மாநில ஆளுனர் இல.கணேசன், அவரது அண்ணன் கோபாலன் மற்றும் குடும்பத்தினர் வந்தனர்.

    அவரை கட்டளை தம்பிரான் மற்றும் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து ஆளுனர் இல.கணேசன், அவரது அண்ணன் மற்றும் குடும்பத்தினர் சீர்காழி மடத்தில் தங்கி கோவில் திருப்பணிகளை கண்காணித்து வரும் தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றார். அப்போது ஆளுனர் இல.கணேசன் தருமபுரம் ஆதீனம் சார்பில் 18 ஆயிரம் பக்கங்கள் உரையுடன் கூடிய பன்னிரு திருமுறை நூல் மறுபதிப்பு பணியை தொடங்கி வைத்தார்.

    தருமை ஆதீனம் வேத சிவாகமம் பாடசாலை மற்றும் தேவார பாடசாலை மாணவர்கள் வடமொழியிலும், தமிழிலும் திருமுறைகள் ஓதினார்கள். அதனைக் கேட்டு அவர்களை வணங்கி மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது ம.தி.மு.க மாவட்ட செயலாளர் மார்கோனி, விதிபி. பள்ளி செயலர் சாமிநாதன், கோயில் சொத்து பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி பாலசுப்ரமணியன், கோயில் கணக்கர் செந்தில், வி.எச்.பி நிர்வாகி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • கன்றுகள் நட்டு மரமாகும் வரை பராமரிக்க வேண்டும்.
    • மரக்கன்றுகள் நட்டு சிறந்த முறையில் பராமரித்து வரும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் வீட்டுக்கு ஒரு விருட்சம் மரக்கன்றுகள் வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தலைமை ஆசிரியர் மகேஸ்வரி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமமூர்த்தி, பேராவூரணி லயன்ஸ் சங்க தலைவர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி கலந்துரையாடினார். கன்றுகள் நட்டு மரமாகும் வரை பராமரிக்க வேண்டும். இதன் மூலம் பசுமை புரட்சி ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.

    மரக்கன்றுகள் நட்டு சிறந்த முறையில் பராமரித்து வரும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, 2-ம் பரிசாக 2 பேருக்கு ரூ.2000 3-ம் பரிசாக 3 பேருக்கு ரூ.1000 என மொத்தம் 6 பேருக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என தலைமை ஆசிரியர் அறிவித்தார்.

    நிகழ்ச்சியில் கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் ராதிகாமைக்கேல், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ பிரபாகரன், பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, செல்வேந்திரன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி, ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பசுமை பூமி வேளாண்மை சமூக நல அறக்கட்டளை சார்பில் 1000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் கிராமத்தில் தாய் தந்தையரை இழந்து, மூளை நரம்பியலால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சகோதரியுடன் வசித்து வந்த பாண்டிமீனா என்ற ஏழை மாணவிக்கு சாலை வசதியுடன் கூடிய கான்கிரீட் வீடு பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் சொந்த நிதி, தன்னார்வலர்கள் உதவியுடன் ரூ.6 லட்சம் செலவில் கட்டி கொடுத்து திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி கண்ணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
    • பெங்களூரு, கேரளாவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

    திருப்பூர் :

    இக்னீஷியா என்கிற பெயரில் தேசிய அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான போட்டி தொடங்கியுள்ளது.

    இதனை அடல் இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி தொடங்கி வைத்தார். அப்பேரல் பேஷன் டிசைன் துறை தலைவர் அருந்ததிகோஷல் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன், வாழ்த்தி பேசினார். பெங்களூரு, கேரளாவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

    முதல் நாள் முக ஓவியம், சிகை அலங்காரம், காய், பழங்களில் அலங்காரம் செய்தல், படத்தொகுப்பு, ஓவியம், மின்னணு கழிவுகளில் புதிய கண்டுபிடிப்பு, கழிவு பொருட்களில் கலை பொருட்கள் தயாரிப்பு, மெஹந்தி, நகத்தில் ஓவியம் தீட்டுதல், விளம்பர படம், குறும்படம் தயாரிப்பு உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.2-ம் நாள் பேஷன் ஷோ, குழு நடனம், தனிநபர் நடன போட்டிகள் நடைபெற்றன.

    அனைத்து வகை இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும் கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    திருப்பூர் மாவட்ட அளவிலான போட்டிகள் அங்கேரிபாளையம் ரோடு, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வாய்ப்பாட்டிசை (செவ்வியல்), வாய்ப்பாட்டிசை, கருவி இசை (தாள வாத்தியம்), கருவி இசை (மெல்லிசை), நடனம் (செவ்வியல்), பாராம்பரிய நாட்டுப்புறக்கலை, காட்சிக்கலை (2டி), காட்சிக்கலை, மூன்று பரிமாணங்கள் (3டி), ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. மொத்தம், 430 பேர் பங்கேற்றனர். இறுதிநாளன்று நடனம் மற்றும் நாடகம் போட்டி நடந்தது.பாரம்பரியம் மற்றும் கிராமிய நடனத்தில் 120 பேரும், நாடகத்தில் 35 பேரும் பங்கேற்றனர்.

    • தமிழக அரசின் “நான்முதல்வன்” திட்டத்தின் கீழ் எச்.சி.எல். தொழில் நுட்பநிறுவனம் மூலம் பயிற்சி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
    • சிறப்பு முகாம் காலை 10மணிக்கு தொடங்கும்.

    திருப்பூர் :

    தமிழக அரசால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில், 2021 மற்றும் 2021 -2022 ம் கல்வியாண்டில் 12 ம் வகுப்பு முடித்த மாணவர்களில் கணிதம் மற்றும் வணிக கணிதத்தில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தமிழக அரசின் "நான்முதல்வன்" திட்டத்தின் கீழ் எச்.சி.எல். தொழில் நுட்பநிறுவனம் 'Tech Bee"- Early Career Training Programமூலம் பயிற்சி அளித்து முழுநேர பணிவாய்ப்பு மற்றும் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி வாய்ப்பினை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதன்படி, பள்ளி மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு கீழ்க்கண்ட பட்டியல் படி சிறப்பு முகாம் பள்ளி மாணவர்களுக்கு நடைபெறவுள்ளது.வருகிற 7-ந்தேதி திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி, 8-ந்தேதி பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 9-ந்தேதி தாராபுரம் என்.சி.பி.நகரவை மேல்நிலைப்பள்ளி, 10-ந்தேதி உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. காலை 10மணிக்கு முகாம் தொடங்கும். இத்தகவலை கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். 

    ×